கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

இந்தியாவின் எஸ்யூவி செக்மெண்ட்டில் மிக நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கும் நிறுவனம் மஹிந்திரா. பொலிரோ, ஸ்கார்பியோ ஆகிய கார்கள், இந்திய எஸ்யூவி செக்மெண்ட்டில், மஹிந்திராவின் ஆதிக்கத்தை பறைசாற்றுகின்றன. இப்படிப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எஸ்யூவி வகை கார்தான் எக்ஸ்யூவி300 (XUV300). இதனை டெஸ்ட் டிரைவ் செய்த அனுபவத்தை இந்த செய்தியின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

டிசைன் மற்றும் ஸ்டைல்:

சாங்யாங் டிவோலி எஸ்யூவி (Ssangyong Tivoli SUV) காரை அடிப்படையாக கொண்டுதான் எக்ஸ்யூவி300 உருவாக்கப்பட்டுள்ளது. சாங்யாங் என்பது தென் கொரியாவில் இயங்கி வரும் மஹிந்திராவின் துணை நிறுவனங்களில் ஒன்றாகும். டிவோலி காரின் பெரும்பாலான டிசைன் அம்சங்கள், எக்ஸ்யூவி300 காரிலும் அப்படியே உள்ளன. ஆனால் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

கடந்த சில மாதங்களுக்கு முன், சாங்யாங் ரெக்ஸ்டன் என்ற எஸ்யூவி காரானது, அல்டுராஸ் ஜி4 என்ற பெயரில், மஹிந்திரா பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது. அப்போது அல்டுராஸ் ஜி4 காரின் டிசைனில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதே பாணியில் தற்போது எக்ஸ்யூவி300 காரின் டிசைனிலும் மஹிந்திரா சில மாறுதல்களை செய்துள்ளது.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

புதிய எக்ஸ்யூவி300 காரின் முன்பக்க டிசைன் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட அதன் உடன்பிறப்பான எக்ஸ்யூவி500 போலவே உள்ளது. இதன் முன்பக்க க்ரில் மற்றும் லைட்டிங் செட் அப் ஆகியவற்றில் இந்த குடும்ப டிசைனை தெளிவாக காண முடிகிறது. எக்ஸ்யூவி300 காரின் க்ரில்லுக்கு நடுவில் மஹிந்திரா பேட்ஜ் இடம்பெற்றுள்ளது. அதன் இருபுறமும் தலா 3 செங்குத்தான க்ரோம் வரிசைகள் இடம்பெற்றுள்ளன.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

இதன்மூலம் Toothy Look எனப்படும் பற்களை வெளியே காட்டுவது போன்ற தோற்றத்தில் க்ரில் காட்சியளிக்கிறது. புதிய எக்ஸ்யூவி300 காரின் முன்பக்கத்தை போன்று அதன் பக்கவாட்டு தோற்றமும் அமர்க்களப்படுத்துகிறது. இதன் பின்பக்கத்தில் டெயில் லைட்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. மிகவும் தனித்துவமான பேட்டர்னில் அவை டிசைன் செய்யப்பட்டுள்ளன.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

பின்பக்க நம்பர் பிளேட்டுக்கு மேற்புறத்தின் நடுவில் பெரிய அளவிலான மஹிந்திரா பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பின்பக்க பூட் லிட்டில் (Boot lid) எக்ஸ்யூவி300 மற்றும் வேரியண்ட் பேட்ஜ்கள் இடம்பெற்றுள்ளன. முன்பக்க பம்பரை போன்று பின்பக்க பம்பரும் சில்வர் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

காக்பிட்:

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் இன்டீரியர்கள், கருப்பு மற்றும் பெய்கி வண்ண ட்யூயல்-டோன் தீமில் வடிவமைக்கப்பட்டுள்ளன. காருக்கு உள்ளே நுழையும்போது ஒருவித மன நிறைவை தரும் வகையில் அவை அமைந்துள்ளன. முன்பகுதியில் உள்ள கிளவ் பாக்ஸில் செல்போன் மற்றும் சிறிய பொருட்களை வைத்து கொள்ள முடியும்.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

முன்பக்க ஏர் வெண்ட்கள் டிரைவர் மற்றும் ஃப்ரண்ட் பாசஞ்சரை நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் டிஸ்ப்ளேவிற்கு கீழே கிளைமேட் கண்ட்ரோலுக்கான கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. எக்ஸ்யூவி300 காரின் Leather-wrapped Steering Wheel பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

ஸ்டியரிங் வீலின் இடது பக்கத்தில் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமிற்கான கண்ட்ரோல்கள் இடம்பெற்றுள்ளன. செல்போன் அழைப்புகளை செய்யவும்/எடுக்கவும் இது டிரைவரை அனுமதிக்கிறது என்பதும் குறிப்பிடத்தகுந்த விஷயம். க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டமிற்கான பட்டன்கள் வலது பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

ஸ்பீடோமீட்டர் மற்றும் ரெவ் கவுன்டர் என 2 அனலாக் டயல்களை உள்ளடக்கியதாக இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நிறங்களை காரின் உரிமையாளர்கள் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். இதற்காக வெள்ளை, ஸ்கை ப்ளூ, ப்ளூ, மஞ்சள் மற்றும் சிகப்பு என 5 நிறங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

ஸ்டீரியோ மற்றும் இன்போடெயின்மெண்ட்:

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில், 7 இன்ச் டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் மஹிந்திராவின் ப்ளூ சென்ஸ் ஆப் வசதிகளும் இடம்பெற்றுள்ளன. மஹிந்திராவின் சொந்த தயாரிப்பான ப்ளூ சென்ஸ் ஆப் பயன்படுத்தினால், ஸ்மார்ட் வாட்ச் மூலமாக இன்போடெயின்மெண்ட் டிஸ்ப்ளேவை கட்டுப்படுத்த முடியும்.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

ஆடியோ முதல் கிளைமேட் கண்ட்ரோல் வரை அனைத்தையும் கட்டுப்படுத்த ப்ளூ சென்ஸ் ஆப் காரின் உரிமையாளர்களை அனுமதிக்கிறது. அத்துடன் வாகனத்தின் ஆவணங்களையும் பார்த்து கொள்ள முடியும். சர்வீஸ் செய்ய வேண்டிய நேரங்களையும் இந்த ஆப் காரின் உரிமையாளர்களுக்கு நினைவுபடுத்துகிறது.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

எக்ஸ்யூவி300 காரின் இன்போடெயின்மெண்ட் டிஸ்ப்ளே 3டி மேப்கள் உடனான சாட்டிலைட் நேவிகேஷன் வசதியையும் வழங்குகிறது. ரியர் வியூ கேமராவிற்கான டிஸ்ப்ளே ஆகவும் இது செயல்படுகிறது.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

சௌகரியம்:

நீண்ட தூரம் அல்லது குறுகிய தூரம் எதுவானாலும் எக்ஸ்யூவி300 கார் சௌகரியமாகவே உள்ளது. முன்பக்க இருக்கைகள் மிகவும் பெரியதாக உள்ளன. முன்பக்க இருக்கைகளை போல் பின்பக்க இருக்கைகளும் மிகவும் சௌகரியமாக வழங்கப்பட்டுள்ளன. Legroom எனப்படும் கால்களை வைப்பதற்கான இடவசதியும் அருமையாக உள்ளது.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

பின்பக்க இருக்கைகளில் 3 பேர் சௌகரியமாக அமர்ந்து பயணம் செய்ய முடியும். சப் 4 மீட்டர் காம்பேக்ட் செக்மெண்ட்டில் சன்ரூஃப் உடன் வரும் இரண்டாவது எஸ்யூவி கார் எக்ஸ்யூவி300தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

இன்ஜின் மற்றும் பெர்ஃபார்மென்ஸ்:

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில், 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினானது 5,000 ஆர்பிஎம்மில் 110 பிஎச்பி பவரையும், 2,000-3,500 ஆர்பிஎம்மில் 200 என்எம் டார்க் திறனையும் (செக்மெண்ட்டில் சிறந்தது) வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

அதே நேரத்தில் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினானது, 3,750 ஆர்பிஎம்மில் 115 பிஎச்பி பவரையும், 1,500-2,500 ஆர்பிஎம்மில் 300என்எம் டார்க் திறனையும் உருவாக்கி சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லும் திறன் மிக்கது.

2 இன்ஜின்களும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளன. அறிமுகம் ஆகும்போது இந்த டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்படவுள்ளது.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

இந்தியாவின் சப் 4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் டீசல் இன்ஜின் அதிக சக்தி வாய்ந்த இன்ஜின்களில் ஒன்றாக திகழ்கிறது. இதன் கியர் பாக்ஸ் மிகவும் மென்மையாக உள்ளது. பிரேக்குகள் என எடுத்து கொண்டால், 4 சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் (செக்மெண்ட்டில் முதல் முறை) வழங்கப்பட்டுள்ளது.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

சாங்யாங் டிவோலி காரில் உள்ள அதே அடிப்படையான சஸ்பென்ஸன் செட் அப்பைதான், எக்ஸ்யூவி300 காரிலும் மஹிந்திரா நிறுவனம் வைத்துள்ளது. ஆனால் இந்திய சாலைகளுக்கு ஏற்ப சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்த விஷயமாகும். ஒட்டுமொத்தத்தில் எக்ஸ்யூவி300 கையாள்வதற்கு மிகவும் எளிதாக உள்ளது.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

டைமன்ஸன்:

நீளம்: 3,995 எம்எம்

அகலம்: 1,821 எம்எம்

உயரம்: 1,617 எம்எம்

வீல் பேஸ்: 2,600 எம்எம்

டயர் சைஸ்: 215/55 ஆர்17

எரிபொருள் டேங்க்: 42 லிட்டர்கள்

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

பாதுகாப்பு அம்சங்கள்:

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில், பாதுகாப்பு அம்சங்களுக்கும் பஞ்சமில்லை. இதில், மொத்தம் 7 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த செக்மெண்ட்டில் ஒரு காரில் இவ்வளவு ஏர் பேக்குகள் வழங்கப்படுவது இதுதான் முதல் முறை. இதுதவிர ஏபிஎஸ் உடனான இபிடி, ஹில் ஹோல்டு அஸிஸ்ட், இஎஸ்பி, ஃப்ரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் வியூ பார்க்கிங் கேமரா, 4 சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் என பாதுகாப்பு அம்சங்கள் நீண்டு கொண்டே செல்கிறது. அத்துடன் ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்ஸ், மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர்கள் மற்றும் சன்ரூஃப், கீ லெஸ் என்ட்ரி என ஏராளமான வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

மைலேஜ்:

எக்ஸ்யூவி300 காரின் பெட்ரோல் வேரியண்ட் ஒரு லிட்டருக்கு 17 கிலோ மீட்டர்களும், டீசல் வேரியண்ட் ஒரு லிட்டருக்கு 20 கிலோ மீட்டர்களும் மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எரிபொருள் டேங்க்கின் கொள்ளளவு 42 லிட்டர்கள்.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

பூட் ஸ்பேஸ்:

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் பூட் ஸ்பேஸ் 257 லிட்டர்கள். என்றாலும் பின்பக்க இருக்கைகளை 60:40 என்ற விகிதத்தில் மடித்தால், பூட் ஸ்பேஸை 625 லிட்டர்களாக அதிகரிக்க முடியும்.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

டிரைவ்ஸ்பார்க் கருத்து:

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில், விசாலமான இட வசதியுடன், ஏராளமான சிறப்பம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இதன் Build Quality அருமையாக உள்ளது. இதுதவிர சக்தி வாய்ந்த இன்ஜின்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில், கபில்தேவை போன்று இதனை மிகச்சிறந்த ஆல் ரவுண்டர் என குறிப்பிடலாம்.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

எதிர்பார்க்கப்படும் விலை:

மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் வரும் 14ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் விலை 8-11 லட்ச ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

போட்டியாளர்கள்:

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியிடும். எனவே இந்த கார்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra XUV300 Review, First Drive Performance, Specifications, Features, Images. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X