2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 W11 Automatic மாடல், விலை அதிகமாக இருந்தாலும், கம்பீரமான தோற்றத்தாலும், தொழில்நுட்ப வசதிகளாலும் வலுவான போட்டியாளராக களத்தில் இருக்கிறது. உட்புறத்தில் அதிக சப்தம், பிளாஸ்டிக் தர

இந்திய எஸ்யூவி மார்க்கெட்டின் சூப்பர்ஸ்டார் மாடல் மஹிந்திரா எக்ஸ்யூவி500. வயசானாலும், அந்த ஸ்டைலும், மவுசும் குறையவில்லை என்பது போல, அறிமுகம் செய்யப்பட்டு 7 ஆண்டுகள் ஆன போதிலும், அவ்வப்போது கெட்டப்பில் சிறிய மாறுதல்களுடன் வாடிக்கையாளர்களை வசீகரித்து வருகிறது. அந்த வகையில், அண்மையில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடல் கெட்டப்பில் சிறிய மாறுதல்களுடன் மார்க்கெட்டிற்கு வந்தது. இந்த புதிய மாடல் எந்தெந்த விதத்தில் மாறி இருக்கிறது என்பதை எமது குழு நடத்திய டெஸ்ட் டிரைவின் மூலமாக இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

2011ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி500, கடந்த 2015ல் இடைசீர்த்திருத்த மாடலாக வந்தது. அதைத்தொடர்ந்து, தற்போது புதிய மாற்றங்களுடன் களமிறங்கி இருக்கிறது. குறிப்பாக, ஸ்டைலில் மிக கவனமாக சிறிய மாற்றங்களை செய்துள்ளனர். அத்துடன், தொழில்நுட்ப வசதிகளிலும் மேம்பட்டுள்ளது.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முகப்பு டிசைன்

முகப்பில் க்ரில் அமைப்பு பெரிதாக மாற்றப்பட்டுள்ளது. அதில், ஆறு வரிசைகளில் தலா 4 க்ரோம் வில்லைகள் கொடுக்கப்பட்டு பிரிமீயம் மாடலுக்கு உரிய அந்தஸ்துடன் மாற்றப்பட்டு இருக்கிறது. க்ரில் அமைப்புக்கு கீழே ஏர் டேம் பகுதியை மிக வலிமையான ப வடிவிலான க்ரோம் பட்டை மூலமாக பிரித்துக் காட்டப்பட்டு இருக்கிறது. க்ரில் அமைப்புக்கு இருபுறத்திலும் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், கார்னரிங் லைட்டுகள், பகல்நேர விளக்குகளுடன் ஒரே அறையாக இருக்கிறது. பனி விளக்குகள் டிசைனும் மாறிவிட்டது. பம்பர் வலிமையான தோற்றத்தை தக்க வைக்கிறது.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைனில் பெரிய மாற்றங்கள் இல்லை. எனினும், புதிய 18 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் கவர்ச்சியை கூட்டுகிறது. பின்புற வீல் ஆர்ச் புடைப்பாக இருப்பதுடன், முன்புற வீல் ஆர் முன்புற பம்பருடன் இணைந்து பக்கவாட்டில் பிரம்மாண்டமான தோற்றத்தை தருகிறது. டி பில்லர் கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு உடல் அமைப்பிலிருந்து கூரையை தனித்து காட்டுகிறது.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புற டிசைன்

பின்புறத்தில் முக்கிய மாற்றமாக செங்குத்தாக இருந்த டெயில் லைட் க்ளஸ்ட்டர் முக்கோண வடிவில் மாறி இருக்கிறது அடுத்து நம்பர் பிளேட்டுக்கு மேல்புறத்தில் க்ரோம் பட்டை கொடுக்கப்பட்டு அதில் லோகோ வீற்றிருக்கிறது. ரூஃப் ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், பம்பர் அமைப்பு மேலும் பெரிதாகி இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் பிரம்மாண்டத்தை தக்க வைத்துள்ளது.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

உட்புற வடிவமைப்பு

உட்புறத்தில் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. உயர்தர உணர்வை அளிக்கும் லெதர் பயன்படுத்தப்பட்டுள்ளன. டேஷ்போர்டில் லெதர் பயன்படுத்தப்பட்டு இருப்பதும், சென்ட்ரல் கன்சோல் பகுதியானது பளபளப்பான கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு இருப்பதும் முக்கிய மாற்றங்கள். ஸ்டீயரிங் வீல் என அனைத்தின் டிசைனில் பெரிய மாற்றங்கள் இல்லை. சென்ட்ரல் கன்சோலில் இருக்கும் சுவிட்சுகளின் தரம் மேம்பட்டதாக இருந்திருக்கலாம்.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. சென்ட்ரல் கன்சோல் மேல்புறத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த திரை மூலமாக பல்வேறு ஒருங்கிணைந்த வசதிகளை பெற முடியும். ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலியை சப்போர்ட் செய்கிறது. ஆப்பிள் கார் ப்ளே செயலியை சப்போர்ட் செய்யாது. அர்கமீஸ் நிறுவனம் ட்யூனிங் செய்து கொடுத்த 6 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம் சிறந்த ஒலிதரத்தை வழங்குகிறது. ஆனால், இதன் விலையிலான மாடல்களை ஒப்பிடும்போது ஆகச் சிறந்தது என்று சொல்ல முடியாது.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இரண்டு குடுவைகளுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், தகவல்களை பெறுவதற்கான சிறிய மின்னணு திரையுடன் டிசைனை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன் இருக்கை

டேன் வண்ண லெதர் இருக்கைகள் அமர்வதற்கு சொகுசாகவும், சவுகரியமாகவும் இருக்கிறது. விலை உயர்ந்த கார்களில் இருப்பது போன்ற உணர்வை இந்த இருக்கைகள் மூலமாக உணர முடிகிறது. ஓட்டுனர் இருக்கைக்கு மட்டும் எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதி உள்ளது.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இரண்டாவது வரிசை இருக்கை

இரண்டாவது வரிசை இருக்கையானது சமமாகவும், அதிக சொகுசாகவும் இருக்கிறது. நீண்ட தூர பயணங்களின்போது இந்த இருக்கைகள் நிச்சயமாக சிறந்த பயண அனுபவத்தை வழங்கும். சில கார்களில் டிரான்ஸ்மிஷன் அமைப்பு காரணமாக, தரை தளத்தில் புடைப்பாக இருக்கும். இதனால், நடுவில் அமர்ந்து செல்பவர்களுக்கு சவுகரியமான உணர்வு இருக்காது.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சமமான தரை தளம்

ஆனால், இதன் தரை தளம் சமமாக இருப்பது பெரிய ப்ளஸ். அத்துடன், ஏசி வென்ட்டுகள் பி பில்லரில் கொடுக்கப்பட்டுவிட்டதால், மூன்று பேர் வசதியாக அமர்ந்து செல்லலாம். இரண்டு பேர் அமர்ந்து செல்லும்போது நடுவில் பாட்டில் ஹோல்டர்கள் கொண்ட ஆர்ம் ரெஸ்ட் இருப்பதால் அதிக சவுகரியத்தை உணர முடியும்.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மூன்றாவது வரிசை இருக்கை

காரின் பிரம்மாண்டத்திற்கு தக்கவாறு, முன்புற, பின்புற இருக்கைகள் சவுகரியத்தை அளித்தாலும் மூன்றாவது வரிசை இருக்கை என்பது பெரியவர்களுக்கு நெருக்கடியாகவே தெரிகிறது. சிறியவர்கள் வசதியாக அமர்ந்து செல்ல முடியும். ஆளை வைத்து எடை போடாதே, என்பது போலவே இதன் மூன்றாவது வரிசை அமைப்பு இருக்கிறது.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கதவுகள், டேஷ்போர்டு, கியர் லிவருக்கு பின்னால் உள்ள பகுதி, ஆர்ம் ரெஸ்ட் போன்ற பல இடங்களில் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. கூல்டு க்ளவ் பாக்ஸ் வசதியும், கியர் லிவருக்கு பின்னால் உள்ள ஆர்ம் ரெஸ்ட் பகுதியில் பொருட்களை வைப்பதற்கான பாதுகாப்பான ஸ்டோரேஜ் வசதிகள் உள்ளன.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த பிரம்மாண்ட எஸ்யூவியில் உடைமைகள் அல்லது பொருட்கள் வைப்பதற்கான இடவசதி மிக மிக குறைவு. எனினும், மூன்றாவது வரிசையை இரண்டு பிரிவுகளாக மடக்கும் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. நீண்ட தூர டிரிப் செல்லும்போது மூன்றாவது வரிசையில் ஒரு பகுதி இருக்கையையாவது மடக்கினால் மட்டுமே ஓரளவு லக்கேஜ் எடுத்துச் செல்ல முடியும்.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் பனோரமிக் சன்ரூஃப் கொடுக்கப்பட்டு இருக்கிறது. காருக்குள் அதிக வெளிச்சத்தை தருவதுடன், இயற்கை காற்றை விரும்பும்போது பெறுவதற்கும் உதவும். மேலும், இது ஒரு புதுவிதமான பயண அனுபவத்தை வழங்கும்.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின்

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் அதே 2.2 லிட்டர் எம்-ஹாக் டீசல் எஞ்சின்தான் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், எஞ்சினின் அதிகபட்ச சக்தியை வெளிப்படுத்தும் திறன் 140 பிஎச்பி என்ற அளவிலிருந்து 155 பிஎச்பி என்ற அளவிற்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, டார்க் திறன் 330 என்எம் என்ற அளவிலிருந்து 360 என்எம் என்ற அளவிற்கு கூடி இருக்கிறது. நாம் டெஸ்ட் டிரைவ் செய்த மாடல் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல். இந்த எஸ்யூவி 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

செயல்திறன்

இதன் எஞ்சின் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் டர்போசார்ஜர் துணையுடன் இயங்குகிறது. ஆரம்ப நிலையில் டர்போலேக் குறைவாக தெரியும் விதத்தில், இந்த எஞ்சினில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எஞ்சின் 1,400 ஆர்பிஎம் என்ற அளவில் தொடும்போது டர்போசார்ஜர் துணை சேர்கிறது. 1,800 ஆர்பிஎம் என்ற அளவில் எஞ்சின் அற்புதமான செயல்திறனை வெளிக்காட்டுகிறது. 4,000 ஆர்பிஎம் வரை வலுவான செயல்திறனை இதன் எஞ்சின் வெளிப்படுத்துவதால் நெடுஞ்சாலை பயணங்களில் அசத்துகிறது.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்

எஞ்சின் செயல்திறனை முழுமையாக காட்டத்துவங்குவதற்கு இணையாக, இதன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சக்தியை சிந்தாமல், சிதறாமல் சக்கரங்களுக்கு கடத்துகிறது. இந்த காரின் சிறப்பான விஷயங்களில் ஒன்று இதன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஓட்டுதல் தரம்

எஸ்யூவி மாடல்களில் பெரிய அளவில் ஓட்டுதல் தரத்தை எதிர்பார்க்க இயலாது. இந்த எஸ்யூவியின் சஸ்பென்ஷன் அமைப்பில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. பாடி ரோல் அதிகம் இருப்பதை உணர்ந்து, இந்த காருக்கு ரோல் பார் அமைப்பு மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை சேர்த்தே வழங்குகிறது மஹிந்திரா. எனவே, தொழில்நுட்பத்தை நம்பி, இந்த காரை இயக்க வேண்டும். பழைய மாடலில் இருப்பது போன்று, அதே அளவிற்கான பாடி ரோல் தெரிகிறது. ஆனால், பள்ளம் மேடான சாலைகளை அனாயசமாக கடக்கிறது.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஸ்டீயரிங் சிஸ்டம்

குறைவான வேகத்தில் செல்லும்போது ஸ்டீயரிங் வீல் கடினமாக இருப்பதால் பழகும் வரை சோர்வு தட்டும். அதேபோன்று, நாம் நினைக்கும் இடத்தில் கட் அடிக்கும் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்கும் என்பதால் கவனம் அதிகம் தேவையாக இருக்கிறது. துல்லியமாக இல்லை.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சப்த தடுப்பு

மற்றொரு விஷயம், இந்த காரின் சப்த தடுப்பு மிகச் சிறப்பானதாக கூற முடியாது. ஆக்சிலரேஷனை அதிகரிக்கும்போது அதிர்வுகள் அதிகம் தெரிகிறது. அத்துடன், காரின் உட்புறத்திலும் அதிர்வுகளும், சப்தங்களும் சற்றே அதிகம்தான் என்பதை கூற வேண்டும்.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மைலேஜ்

இந்த பிரம்மாண்ட எஸ்யூவி எமது டெஸ்ட் டிரைவின்போது, நகர்ப்புற பயன்பாட்டில் லிட்டருக்கு 9.5 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் செல்லும்போது லிட்டருக்கு 13.5 கிமீ மைலேஜையும் கொடுத்தது. இந்த எஸ்யூவியில் 70 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. ஓட்டுதல் முறையை பொறுத்து ஃபுல் டேங்க் அடித்தால், 700 கிமீ தூரத்துக்கு குறையாமல் செல்ல முடியும்.

Model W11 AT
Engine 2.2-litre Diesel
Displacement (CC) 2179
Power (bhp) 155
Torque (Nm) 360
Transmission 6-speed automatic
Mileage (km/l) 14
Tyre 235/60R18
Acceleration (seconds) Under 12
2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முக்கிய வசதிகள்

விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் ஆட்டோமேட்டிக் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் வசதி, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் வசதி, ஸ்மார்ட் கீ உள்ளிட்ட விசேஷ தொழில்நுட்ப வசதிகளை அளிக்கிறது. ஃபாலோ மீ ஹெட்லைட்டுகளும் உள்ளன. விபத்து ஏற்பட்டால் அவசர உதவி மையங்களுக்கு நேரடியாக தகவல் அனுப்பும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் ஸ்மார்ட்வாட்ச் சாதனம் மூலமாக பல வசதிகளை கட்டுப்படுத்த இயலும். புளூசென்ஸ் என்ற மஹிந்திராவின் பிரத்யேக செயலி மூலமாக இந்த வசதி அளிக்கப்படுகிறது. கதவுகளை மூடி, திறப்பது, ஏசியை கட்டுப்படுத்துவது, அவசரகால உதவி பெறுவது, இருப்பிடத்தை அறிவது உள்ளிட்ட எண்ணற்ற வசதிகளை இதன் மூலமாக கட்டுப்படுத்த முடியும்.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பாதுகாப்பு வசதிகள்

இந்த எஸ்யூவியின் விலை உயர்ந்த மாடலில் ஆறு ஏர்பேக்குகள், இபிடி.,நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஆல் வீல் டிரைவ் லாக் சிஸ்டம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இது நிச்சயம் இந்த காருக்கு அதிக மதிப்பை தரும் விஷயமாக இருக்கும்.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வேரியண்ட்டுகள், வண்ணத் தேர்வுகள்

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியானது W5, W7, W9, W11, W11(O) ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் ஜி வேரியண்ட்டில் கிடைக்கிறது. இந்த எஸ்யூவி ஓபுலண்ட் பர்ப்புள், லேக் சைடு பிரவுன், பியர்ல் ஒயிட், மிஸ்ட்டிக் காப்பர், மூன்டஸ்ட் சில்வர், க்ரிம்ஸன் ரெட் மற்றும் வல்கானோ பிளாக் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வாரண்டி

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு மூன்று ஆண்டுகள் அல்லது 1,00,000 கிமீ தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது. கூடுதலாக நான்காம் ஆண்டுக்கான வாரண்டி 1.20 லட்சம் கிமீ அல்லது 1.5 லட்சம் கீமீ என்ற இரண்டு திட்டங்களில் விருப்பத்தின் பேரில் பெற்றுக் கொள்ளலாம்.

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

போட்டியாளர்கள்

டாடா ஹெக்ஸா, ஹூண்டாய் க்ரெட்டா, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, ஜீப் காம்பஸ் ஆகிய எஸ்யூவி மாடல்களை விலை மற்றும் ரக அடிப்படையில் போட்டி போடுகிறது புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி.

Model Displacement (CC) Power/Torque (bhp/Nm) Mileage (km/l)
XUV500 W11 AT 2179 155/360 14
Tata Hexa XT 4X4 2179 153.86/400 17
Innova Crysta VX 8S 2393 147.8/343 13.5
2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

நாம் டெஸ்ட் டிரைவ் செய்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் W11 Automatic மாடலானது ரூ.19.26 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. கிட்டத்தட்ட ரூ.22 லட்சம் மதிப்புடையதாக விற்பனையில் உள்ளது.

இந்த மாடல் விலை அதிகமாக இருந்தாலும், கம்பீரமான தோற்றத்தாலும், தொழில்நுட்ப வசதிகளாலும் தொடர்ந்து தன்னை மதிப்பு மிக்க மாடலாக நிலைநிறுத்திக் கொண்டு வலுவான போட்டியாளராக களத்தில் இருக்கிறது. உட்புறத்தில் அதிக சப்தம், பிளாஸ்டிக் தரம் உள்ளிட்டவற்றில் சிறிய குறைகள் இருந்தாலும், தனக்கான தனி வாடிக்கையாளர் வட்டத்தை தொடர்ந்து தக்க வைக்கும்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா
English summary
The Mahindra XUV500 is a seven-year-old vehicle and it needed an update because of the growing number of SUV buyers in the country. Mahindra has really done a great job by tweaking all the three: exteriors, interiors and the engine and the XUV500 W11 AT comes at a price tag of Rs 19,26,000 lakh ex-showroom, which is not on the cheap side. Besides the small drawbacks such as plastic quality and engine noise, the flagship product from Mahindra will keep on dominating the Indian SUV market just like always.
Story first published: Friday, November 2, 2018, 17:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X