மாருதி டிசையர் பழசு Vs புதுசு - 12 வித்தியாசங்கள்!

Written By:

அடுத்த மாதம் 16ந் தேதி விற்பனைக்கு வர இருக்கும் புதிய மாருதி டிசையர் கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த காருக்கு முன்பதிவு அமோகமாக இருப்பதாகவும் டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், விற்பனையில் இருந்து விலக்கப்படும் பழைய மாடலுக்கும், தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய மாடலுக்கும் இடையிலான வித்தியாசங்களை காணலாம்.

புதிய பிளாட்ஃபார்ம்

புதிய பிளாட்ஃபார்ம்

மூன்றாம் தலைமுறை மாடலாக வெளிவந்திருக்கும் புதிய மாருதி டிசையர் கார் HEARTECT என்ற புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மாருதி பெலினோ, இக்னிஸ் கார்களில் இருப்பது போன்றே இலகுவான அதேசமயம், மிக வலிமையான புதிய சேஸி அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, புதிய மாருதி டிசையர் காரின் எடை 85 கிலோ குறைந்துள்ளது.

எடை குறைவு

எடை குறைவு

பழைய கார் 940 மற்றும் 1,070 கிலோ எடை கொண்டதாக இருந்த நிலையில் , புதிய கார் 855 கிலோ மற்றும் 940 கிலோ எடை கொண்டதாகவும் இருக்கிறது. இதனால், சிறப்பான செயல்திறன், அதிக மைலேஜ், சிறந்த கையாளுமை உள்ளிட்ட பல அனுகூலங்களை பெற முடியும்.

பரிமாணம்

பரிமாணம்

பழைய மாருதி டிசையர் கார் 3,995மிமீ நீளமும், 1,695மிமீ அகலமும், 1,555 மிமீ உயரமும் கொண்டது. புதிய மாருதி டிசையர் கார் நீளத்தில் மாற்றம் இல்லை. ஆனால், அகலம் 1,735மிமீ ஆக அதிகரிக்கப்பட்டும், உயரம் 1,515மிமீ ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது.

இடவசதி

இடவசதி

புதிய மாருதி டிசையர் காரின் அகலம் 40 மிமீ வரையிலும், வீல் பேஸ் 20 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, பின் இருக்கையில் அமர்ந்து இருப்பவர்களுக்கு கூடுதல் இடவசதி கிடைக்கும். பழைய மாடல் போன்று இல்லாமல் நெருக்கடி சற்றே குறைந்துள்ளது.

 டிசைன்

டிசைன்

மிரட்டலான தோற்றத்திற்காக முகப்பு, கூரை போன்றவற்றின் டிசைன் கூர்மையான தோற்றத்துடன் இருந்தன. தற்போது கூரை மற்றும் முகப்பு பகுதி மென்மையானதாகவும், சீரான வடிவமைப்புடன் மாறி இருக்கிறது. முறுக்கல் இல்லாமல் முழுமையான செடான் கார் மாடலாக மாற முனைந்துள்ளது.

கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

தற்போது விற்பனையில் இருந்து விலகும் மாடல் 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கும் நிலையில், புதிய மாடல் 7மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைக்கப்பட்டு 163மிமீ கொண்டதாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, கூரையில் செய்யப்பட்டு இருக்கும் டிசைன் மாறுதல்கள் மூலமாக ஒட்டுமொத்த உயரம் 40 மிமீ குறைக்கப்பட்டு இருக்கிறது.

 டேஷ்போர்டு

டேஷ்போர்டு

டேஷ்போர்டு டிசைனில் மாற்றங்கள் இல்லை. அதேநேரத்தில், அதில் இடம்பெற்றிருக்கும் ஏசி வென்ட்டுகள், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சென்டர் கன்சோல் ஆகியவை மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இதனால், புதிய மாடலின் டேஷ்போர்டு புதுப்பொலிவு பெற்றிருக்கிறது.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இதுவரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வெளிச் சந்தையில் வாங்கி பொருத்தும் நிலை இருந்தது. ஆனால், புதிய மாடலின் சென்டர் கன்சோலில் முக்கிய மாற்றமாக 7 இன்ச் அளவுடைய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட சாஃப்ட்வேர்களை இது சப்போர்ட் செய்யும்.

 புது ஐயிட்டங்கள்

புது ஐயிட்டங்கள்

இதுவரை இல்லாத விஷயங்களாக எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், தட்டையான அடிப்பாகத்துடன் ஸ்டீயரிங் வீல், பின்புற பயணிகளுக்கான தனி ஏசி வென்ட்டுகள், 15 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள் போன்ற புதிய விஷயங்கள் புதிய மாருதி டிசையர் காரில் இடம்பெற்று இருக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் இல்லை. தற்போதைய மாடலில் இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தொடர்ந்து பயன்படுத்தப்படும். காரின் எடை குறைந்துள்ளதால் செயல்திறன் மேலும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியர்பாக்ஸ் ஆப்ஷன்

கியர்பாக்ஸ் ஆப்ஷன்

பெட்ரோல், டீசல் மாடல்களில் அனைத்து வேரியண்ட்டுகளிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்கும். அதேபோன்று, 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

காரின் எடை வெகுவாக குறைந்திருப்பதால், பழைய மாடலைவிட அதிக மைலேஜ் கொண்ட காராக இருக்கும். மேலும், இதன் செக்மென்ட்டிலேயே வழக்கம்போல் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையுடன் களமிறங்கும் வாய்ப்புள்ளது.

பூட் ரூம்

பூட் ரூம்

பழைய மாடலில் 316 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான பூட்ரூம் இடவசதி இருந்தது. இது பெரிய குறை. தற்போது இந்த குறையும் களையப்பட்டு இருக்கிறது. தற்போது 376 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியுடன் வருகிறது.

 பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

தற்போது டாப் வேரியண்ட்டில் மட்டுமே ஏர்பேக் பற்றி பேச முடியும். ஆனால், புதிய மாருதி டிசையர் காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற அடிப்படை பாதுகாப்பு வசதிகள் நிரந்தரமாக வழங்கப்பட உள்ளது. முன்புற கிராஷ் டெஸ்ட் சோதனையிலும் வெற்றி பெறும் தகுதியுடன் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.

விலை வித்தியாசம்

விலை வித்தியாசம்

தற்போதைய மாடலைவிட புதிய மாருதி டிசையர் காரின் டாப் வேரியண்ட் ரூ.40,000 வரை கூடுதல் விலை கொண்டதாக விற்பனைக்கு வரும் என்பது கணிப்பு. அதற்கு ஏற்ப பல கூடுதல் வசதிகளை இந்த டாப் வேரியண்ட் பெற்றிருக்கிறது.

முன்பதிவு

முன்பதிவு

புதிய மாருதி டிசையர் காருக்கு ரூ.11,000 முன்பணத்துடன் மாருதி டீலர்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. அடுத்த மாதம் இறுதியில் புதிய மாருதி டிசையர் கார் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும். முன்பதிவு சிறப்பாக இருப்பதால், இப்போதே 6 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

English summary
Maruti Dzire Old Vs New: Comparison
Story first published: Wednesday, April 26, 2017, 16:44 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark