கூடுதல் அம்சங்களுடன் வருகிறது மாருதியின் புதிய சியூவி கார் இக்னிஸ்!

By: Gopi

கார் விற்பனையில் முதலிடத்தையும், மக்களின் நம்பிக்கையையும் இணைந்தே பெற்றுள்ள மாருதி நிறுவனம், தனது புதிய காம்பேக்ட் சியூவி ரக காரை களமிறக்கத் திட்டமிட்டுள்ளது.

இக்னிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த கார் இந்த ஆண்டு இறுதிக்குள் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி இக்னிஸ்

கடந்த ஆண்டில் டோக்கியோ மோட்டார் ஷோவிலும், சில மாதங்களுக்கு முன்பு இந்திய ஆட்டோ எக்ஸ்போவிலும் மாருதி இக்னிஸ் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டபோதே, பரவலான வரவேற்பை அது பெற்றது.

கிராஸ்ஓவர் யுடிலிட்டி வெஹிக்கிள் எனப்படும் சியூவி ரக கார்களில் தற்போது மகிந்திரா கேயூவி 100 மாடல் மட்டுமே சந்தையில் உள்ளது. அந்த மாடல் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அதற்குப் போட்டியாக வரவுள்ளது மாருதி இக்னிஸ்.

மாருதி இக்னிஸ் 1

குஜராத்தில் உள்ள சனந்த் பகுதியில் அமைந்திருக்கும் சுஸுகி தொழிற்சாலையில் அந்தக் கார்களை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாருதியின் தயாரிப்புகளில் பெரும்பாலனவை ஹிட்டடித்துள்ளன. ஒவ்வொன்றிலும் சில புதுமைகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களை வசப்படுத்தி வருகிறது மாருதி நிறுவனம். அந்த வகையில் இக்னிஸ் மாடலிலும் பல சிறப்பம்சங்கள்ள் புகுத்தப்படவுள்ளன.

அவற்றைப் பார்க்கலாம்...

இக்னிஸ் காரின் முற்பகுதி மிகவும் இலகுவான எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரெஸ்ஸா மாடலைப் போலவே பாக்ஸ் வடிவிலான முகப்பை இக்னிஸ் கொண்டுள்ளது. இதைத் தவிர பகல் வேளைகளில் பயன்படும் ஒளிரக்கூடிய விளக்குகளும் முகப்பு விளக்குகளுடன் இணைக்கப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பு.

மாருதி இக்னிஸ் 3

முற்பகுதியின் கிரில்லைப் பொருத்தவரை வேறு எந்த மாடலின் சாயலும் இல்லாமல் தனித்துவமான வடிவத்தை அது கொண்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் எனப்படும் சாலைக்கும் காரின் அடித்தளத்துக்கும் இடையேயான இடைவெளி 180 மில்லி மீட்டராக இருப்பது இக்னிஸ் காரின் பக்கம் வாடிக்கையாளர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு சிறப்பம்சமாகும்.

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 1.3 லிட்டர் டீடல் எஞ்சினும் பொருத்தப்பட்டு இரு வகையில் இக்னிஸ் மாடல் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் எஞ்சினைப் பொருத்தவரை 83 பிஎச்பி பவரையும்ம, 115 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. டீசல் எஞ்சினில், 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் உள்ளது.

மாருதி இக்னிஸ் 4

குடும்பத்துடன் பயணிக்கும்போது, சில உடைமைகளை எடுத்துச் செல்லும் வசதி காரில் இருக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு. அதைக் கருத்தில் கொண்டு, சுமார் 258 லிட்டர் கொள்ளளவு வரையில் உடைமைகளை வைத்துச் செல்வதற்கான பூட் ஸ்பேஸ் வசதி இக்னிஸில் உள்ளது (பூட்ஸ்பேஸை 415 லிட்டர் கொள்ளளவு வரை அதிகரித்துக் கொள்ளும் வசதியும் உண்டு).

5 கியர்கள் கொண்ட இக்னிஸ் காரில் ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷனும் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தவிர ஏர்பேக், 4 பவர் விண்டோஸ், யுஎஸ்பி மற்றும் புளூடூத் இணைப்பு வசதி, உள்ளிட்டவையும் இக்னிஸில் உள்ளன.

மைலேஜ் மற்றும் விலை எவ்வளவு?

வாடிக்கையாளர்கள் கேட்கும் முக்கியமான கேள்விகள் இரண்டு. ஒன்று மைலேஜ் மற்றொன்று விலை. மைலேஜைப் பொருத்தவரை, பெட்ரோல் எஞ்சின் கார் லிட்டருக்கு 20 கிலோ மீட்டர் பயணிக்கும் என்றும், டீசல் எஞ்சின் கார் லிட்டருக்கு 25 கிலோ மீட்டர் பயணிக்கும் என்று மாருதி உத்தரவாதம் அளிக்கிறது.

மாருதி இக்னிஸ் 5

விலையை எடுத்துக் கொண்டால், ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சம் வரை மாருதி இக்னிஸ் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகேந்திரா கேயூவி 100-இன் விற்பனையை முறியடித்து இக்னிஸ் சக்கைப்போடு போடுமா? என்பது வாடிக்கையாளர்கள் தரும் வரவேற்பில்தான் உள்ளது.

English summary
Maruti Ignis To Be Manufactured In Sanand — Here’s Our First Look Review.
Please Wait while comments are loading...

Latest Photos

 
X