மாருதி க்ராண்ட் விட்டாரா ரிவியூ... இவ்ளோ மைலேஜ் தருதா? அதான் எல்லாரும் போட்டி போட்டுகிட்டு புக் பண்றாங்க!

அது 2009ம் ஆண்டு. மாருதி சுஸுகி நிறுவனம் க்ராண்ட் விட்டாரா காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனால் 2.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்த அந்த காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே கடந்த 2015ம் ஆண்டு க்ராண்ட் விட்டாரா காரின் விற்பனையை மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்தி விட்டது.

7 ஆண்டுகள் கடந்து விட்டன. தற்போது மீண்டும் க்ராண்ட் விட்டாரா என்ற பெயரில் புதிய மிட்-சைஸ் எஸ்யூவியை மாருதி சுஸுகி அறிமுகம் செய்துள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் போன்ற கார்களுக்கு போட்டியாக மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கொண்டு வரப்பட்டுள்ளது. டொயோட்டா நிறுவனத்தின் உதவியுடன் க்ராண்ட் விட்டாரா காரை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புத்தம் புதிய மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரை உதய்பூரில் வைத்து நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். இந்த கார் ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? இதன் டிசைன் அம்சங்கள் மற்றும் என்னென்ன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன? என்பது போன்ற அனைத்து தகவல்களையும் விரிவாக தெரிந்து கொள்வதற்கு தொடர்ந்து படியுங்கள்.

மாருதி க்ராண்ட் விட்டாரா ரிவியூ... இவ்ளோ மைலேஜ் தருதா? அதான் எல்லாரும் போட்டி போட்டுகிட்டு புக் பண்றாங்க!

டிசைன்

க்ராண்ட் விட்டராவும், ஹைரைடரும் வெவ்வேறு பிராண்டுகளின் கீழ் பிறந்த உடன்பிறப்புகளாக இருக்கலாம். ஆனால் ஹைரைடரிடம் இருந்து க்ராண்ட் விட்டாரா காரை வேறுபடுத்தி காட்டுவதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளது.

மாருதி க்ராண்ட் விட்டாரா ரிவியூ... இவ்ளோ மைலேஜ் தருதா? அதான் எல்லாரும் போட்டி போட்டுகிட்டு புக் பண்றாங்க!

இந்த காரின் முன் பகுதியில் பெரிய க்ரில் வழங்கப்பட்டுள்ளது. அதன் மேலே சுஸுகி பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக செல்லும் க்ரோம் பட்டையுடன், எல்இடி பகல் நேர விளக்குகளும், இன்டிகேட்டர்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பெரிய க்ரில் அமைப்பின் பக்கவாட்டில் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாருதி க்ராண்ட் விட்டாரா ரிவியூ... இவ்ளோ மைலேஜ் தருதா? அதான் எல்லாரும் போட்டி போட்டுகிட்டு புக் பண்றாங்க!

புதிய மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் பெரும்பாலான வேரியண்ட்களில் 17 இன்ச் ட்யூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் சிக்மா மற்றும் டெல்டா வேரியண்ட்களில் 17 இன்ச் ஸ்டீல் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின் பகுதியை பொறுத்தவரையில் மைய பகுதியில் சுஸுகி லோகோ கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் எல்இடி பிரேக் லைட்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு கீழே Grand Vitara பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது.

மாருதி க்ராண்ட் விட்டாரா ரிவியூ... இவ்ளோ மைலேஜ் தருதா? அதான் எல்லாரும் போட்டி போட்டுகிட்டு புக் பண்றாங்க!

இன்டீரியர்

வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் பவர்ட்ரெயின் ஆப்ஷனை பொறுத்து, 2 விதமான இன்டீரியர் தீம்கள் அடிப்படையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் கிடைக்கும். இந்த காரின் மைல்டு ஹைப்ரிட் மாடல்களில், கருப்பு மற்றும் போர்டாக்ஸ் கலர் இன்டீரியர் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சில்வர் வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மறுபக்கம் இந்த காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடல்களில், முழுவதும் கருப்பு கலர் இன்டீரியர் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் ஷாம்பெயின் கோல்டு கலரில் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாருதி க்ராண்ட் விட்டாரா ரிவியூ... இவ்ளோ மைலேஜ் தருதா? அதான் எல்லாரும் போட்டி போட்டுகிட்டு புக் பண்றாங்க!

இந்த காரின் இன்டீரியரில் பெரும்பாலான பகுதிகளில் மாருதி சுஸுகி நிறுவனம் சாஃப்ட் டச் மெட்டீரியல்களை பயன்படுத்தியுள்ளது. இது பிரீமியமான உணர்வை தருகிறது. இருந்தாலும் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ள ஹார்டு பிளாஸ்டிக்குகளின் தரம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். எனினும் இந்த காரின் முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள் வழங்கப்பட்டிருப்பது சிறப்பான ஒரு விஷயம்.

இந்த காரின் டேஷ்போர்டின் மைய பகுதியில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. க்ராண்ட் விட்டாரா காரின் கனெக்டட் கார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்வதற்கும் இந்த திரையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். சுஸுகி கனெக்ட் செயலி மூலமாக 40க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் வசதிகளை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

மாருதி க்ராண்ட் விட்டாரா ரிவியூ... இவ்ளோ மைலேஜ் தருதா? அதான் எல்லாரும் போட்டி போட்டுகிட்டு புக் பண்றாங்க!

இன்ஃபோடெயின்மெண்ட் திரைக்கு கீழாக ஹெச்விஏசி சிஸ்டத்திற்கான கண்ட்ரோல்கள், 12V சாக்கெட், யூஎஸ்பி போர்ட்கள் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் வசதிக்கான ட்ரே ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் பனரோமிக் சன்ரூஃப், ஆம்பியண்ட் லைட்டிங், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் எளிதான பார்க்கிங்கிற்காக 360 டிகிரி கேமரா ஆகிய வசதிகளையும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் பெற்றுள்ளது.

அத்துடன் இந்த காரில் ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ஹில் டெசண்ட் கண்ட்ரோல் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

மாருதி க்ராண்ட் விட்டாரா ரிவியூ... இவ்ளோ மைலேஜ் தருதா? அதான் எல்லாரும் போட்டி போட்டுகிட்டு புக் பண்றாங்க!

இன்ஜின்

1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், மூன்று சிலிண்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களுடன் க்ராண்ட் விட்டாரா கார் கிடைக்கும். இதில், 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் இன்ஜின் பிரெஸ்ஸா போன்ற மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்ற கார்களிலும் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 101.6 பிஹெச்பி பவரையும், 117 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் பேடில் ஷிஃப்டர்களுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் சுஸுகி ஆல்-க்ரிப் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. ஃப்ரண்ட் வீல் டிரைவ் மேனுவல் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 21.1 கிலோ மீட்டர் மைலேஜையும், ஆல் வீல் டிரைவ் மேனுவல் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 19.38 கிலோ மீட்டர் மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 20.58 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்க கூடியவை.

மாருதி க்ராண்ட் விட்டாரா ரிவியூ... இவ்ளோ மைலேஜ் தருதா? அதான் எல்லாரும் போட்டி போட்டுகிட்டு புக் பண்றாங்க!

மறுபக்கம் இந்த காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் டொயோட்டா நிறுவனத்துடையது. இந்த இன்ஜின் 91.1 பிஹெச்பி பவரையும், 122 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் மோட்டார் 79 பிஹெச்பி பவரையும், 141 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. எனினும் ஒருங்கிணைந்த பவர் அவுட்புட் 114 பிஹெச்பி ஆகும். இந்த இன்ஜினுடன் eCVT கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்ஜின் சக்தி, முன் பக்க சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. இந்த ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 27.97 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் (இங்கே கூறப்பட்டிருக்கும் மைலேஜ் விபரங்கள் அராய் அமைப்பின் சான்றின்படி என்பது குறிப்பிடத்தக்கது).

இந்த காரின் நீளம் 4,345 மிமீ, அகலம் 1,795 மிமீ, உயரம் 1,645 மிமீ. அதே நேரத்தில் இந்த காரின் வீல்பேஸ் நீளம் 2,600 மிமீ ஆக உள்ளது. இந்த காரின் டிஸ்க் பிரேக்குகள் போதுமான அளவிற்கு ஸ்டாப்பிங் பவரை வழங்குகின்றன.

மாருதி க்ராண்ட் விட்டாரா ரிவியூ... இவ்ளோ மைலேஜ் தருதா? அதான் எல்லாரும் போட்டி போட்டுகிட்டு புக் பண்றாங்க!

ஓட்டுதல் அனுபவம்

முதலில் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடல்கள் பற்றி பேசி விடலாம். இவி மோடில், அமைதி சூழ்ந்துள்ளது. மறுபக்கம் நார்மல் மற்றும் ஈக்கோ மோடில் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் மந்தமாக இருக்கிறது. ஆனால் பவர் மோடில் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் மைல்டு ஹைப்ரிட் இன்ஜின் மாடல்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே மைலேஜ் விஷயத்தில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளன. எனவே சக்தி குறைவாக உள்ளதை போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படலாம். எனினும் சுஸுகி ஆல்-க்ரிப் ஆல்-வீல் டிரைவ் வசதியுடன் கூடிய மாடலை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் என்றால், இந்த சக்தி குறைவு என்பது ஒரு பொருட்டாகவே இருக்காது. ஏனெனில் இந்த ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உண்மையிலேயே மிகவும் சிறப்பாக உள்ளது.

மாருதி க்ராண்ட் விட்டாரா ரிவியூ... இவ்ளோ மைலேஜ் தருதா? அதான் எல்லாரும் போட்டி போட்டுகிட்டு புக் பண்றாங்க!

ஸ்னோ, ஆட்டோ, லாக் மற்றும் ஸ்போர்ட் என இதில் 4 மோடுகள் வழங்கப்படுகின்றன. க்ரிப் குறைவாக உள்ள மேற்பரப்புகளில் ஸ்னோ மோடை பயன்படுத்தலாம். உண்மையில் இந்த ஸ்னோ மோடு சிறப்பாக செயலாற்றுகிறது. அதே நேரத்தில் உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு ஸ்போர்ட் மோடு ஏற்றது. சஸ்பென்ஸனை பொறுத்தவரையில், மிதமான வேகத்தில் செல்லும்போது பட்டு போல் மென்மையாக உள்ளது. ஆனால் மோசமான சாலைகளில் வேகமாக செல்லும்போது கேபினில் அதிர்வுகளை உணர முடிகிறது. அதேபோல் சற்று பாடி ரோலையும் உணர முடிகிறது. ஆனால் கார்னர்களிலும் நீங்கள் ஓரளவிற்கு சிறப்பான வேகத்தில் செல்ல முடியும்.

மாருதி க்ராண்ட் விட்டாரா ரிவியூ... இவ்ளோ மைலேஜ் தருதா? அதான் எல்லாரும் போட்டி போட்டுகிட்டு புக் பண்றாங்க!

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காருக்கு தற்போது முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. தற்போது வரை 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

Most Read Articles

English summary
Maruti suzuki grand vitara review design features engine mileage
Story first published: Sunday, September 18, 2022, 10:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X