மாருதி விட்டாரா பிரெஸ்ஸா Vs ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்: ஒப்பீடு

By Saravana

4 மீட்டருக்கும் குறைவான நீளமுடைய எஸ்யூவி மார்க்கெட்டில் சில ஆண்டுகளுக்கு முன் களமிறங்கிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மிகப்பெரிய ஹிட் அடித்தது. அசத்தலான டிசைன், ஏராளமான தொழில்நுட்ப வசதிகள், மூன்றுவிதமான எஞ்சின் ஆப்ஷன்கள் என அனைத்திலும் நிறைவானதாகவும், விலையிலும் சவாலானதாகவும் வந்தததே அமோக வரவேற்பை பெற்றதற்கு காரணம்.

இந்த வரவேற்பை பார்த்து, 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவிகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனாலும், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு மிகச்சரியான போட்டியாளராக எந்த மாடலும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த குறையை போக்கும் விதத்தில், நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி, தனது முதல் காம்பேக்ட் எஸ்யூவி மாடலான விட்டாரா பிரெஸ்ஸாவை சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக அறிமுகம் செய்தது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு சரிசமமான போட்டியாளராக கருதக்கூடிய புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

 டிசைன்: மாருதி பிரெஸ்ஸா

டிசைன்: மாருதி பிரெஸ்ஸா

வாடிக்கையாளர்களை எளிதாக கவரும் டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது. பெரிய க்ரோம் பட்டையுடன் கூடிய முகப்பு க்ரில் அமைப்பு, புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், பகல் நேர விளக்குகள், ஸ்கிட் பிளேட்டுகள், பெரிய ஏர்டேம் என எஸ்யூவி மாடல் என்பதை முகப்பு உணர்த்துகிறது. பக்கவாட்டில் பிளாஸ்டிக் பட்டைகள் கொண்ட வீல் ஆர்ச், கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்ட பில்லர்கள், பின்புறத்தில் மிகவும் கூர்மையான அமைப்புடைய கூரை, கச்சிதமான டெயில் லைட்டுகள், ஸ்கிட் பிலேட்டுகள் போன்றவை மிகச் சிறப்பான தோற்ற வசீகரத்தை தருகிறது. டாப் வேரியண்ட் இரட்டை வண்ணக் கலவையில் வருவதும் கவர்ச்சிக்கு கூடுதல் வலுசேர்க்கும் அம்சம்.

டிசைன்: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

டிசைன்: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

நாம் முதல் பார்வையிலேயே சொன்னது போல சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய எஸ்யூவி மாடல் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட். சிறிய கண்களை போன்று அழகு தரும் ஹெட்லைட்ஸ், அதற்கு நடுவில் மெல்லிய க்ரோம் கம்பியுடன் கூடிய க்ரில், அதற்கு கீழே மிகப்பெரிய க்ரில் அமைப்பு ஆகியவையும் சிறப்பான முக வசீகரத்தை தருகிறது. பக்கவாட்டிலும் மிக சரியான விகிதத்தில் வடிவமைக்கப்பட்ட காம்பேக்ட் எஸ்யூவியாக இருக்கிறது. பின்புறத்திலும் டிசைனில் அசத்துகிறது. டெயில் கேட்டின் கைப்பிடி, வலது புற டெயில் லைட் க்ளஸ்ட்டரிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டும் டிசைனில் குறை சொல்ல முடியாத மாடல் என்றாலும், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சற்றே கண் முன்னே நிற்கிறது.

எஞ்சின்: மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

எஞ்சின்: மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலில் மட்டுமே வருகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மாடலில் இல்லாதது ஏமாற்றமே.

எஞ்சின்: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

எஞ்சின்: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி 124 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 110 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 1.5 லிட்டர் எஞ்சின் என இரண்டு விதமான பெட்ரோல் மாடல்களில் கிடைக்கிறது. தவிரவும்,99 பிஎச்பி பவரையும், 205 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலிலும் கிடைக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, 1.5 லிட்டர் பெட்ரோல் மாடல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் கிடைக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் லிட்டருக்கு 18.88 கிமீ மைலேஜையும், 1.5 லிட்டர் மாடல் லிட்டருக்கு 15.8 கிமீ மைலேஜையும் தரும் என தெரிவிக்கப்படுகிறது. டீசல் மாடல் லிட்டருக்கு 22.7 கிமீ மைலேஜ் தரும் என்று ஃபோர்டு தெரிவிக்கிறது. அதேநேரத்தில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிகிறது. எனவே, மைலேஜில் பிரெஸ்ஸா முன்னிலை பெறும் என்பதோடு, இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் எஸ்யூவி மாடல்களில் ஒன்றாகவும் இருக்கும்.

 கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

இந்திய சாலைகளுக்கு தரை இடைவெளி மிக முக்கியம். அந்த வகையில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 198மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸும், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி 200மிமீ தரை இடைவெளியையும் கொண்டுள்ளன. இரண்டிற்கும் இடையே இந்த விஷயத்தில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இரண்டுமே சிறப்பாக இருக்கின்றன.

பூட் ரூம்

பூட் ரூம்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் 346 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதி இருக்கும் நிலையில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் 378 லிட்டர் கொள்ளளவு உடைய பூட் ரூம் உள்ளது. ஈக்கோஸ்போர்ட்டைவிட விட்டாரா பிரெஸ்ஸா கூடுதல் கொள்ளளவு கொண்ட பூட்ருமை பெற்றிருக்கிறது.

சிறப்பம்சங்கள்: மாருதி பிரெஸ்ஸா

சிறப்பம்சங்கள்: மாருதி பிரெஸ்ஸா

மாருதி பிரெஸ்ஸாவில் இருளை உணர்ந்து தானாக இயங்கும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், மழையை உணர்ந்து இயங்கும் ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேரை சப்போர்ட் செய்யும் இன்ஃபோட்யின்மென்ட் சிஸ்டம் போன்றவை இடம்பெற்றுள்ளன.

சிறப்பம்சங்கள்: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

சிறப்பம்சங்கள்: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், 2 டின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டில்ட் மற்றும் டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங், ஃபோர்டு சிங்க் தொழில்நுட்பம் போன்றவை முக்கியமானவையாக குறிப்பிடலாம்.

பாதுகாப்பு: மாருதி பிரெஸ்ஸா

பாதுகாப்பு: மாருதி பிரெஸ்ஸா

மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் இபிடி.,நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும், பேஸ் மாடலில் ஓட்டுனருக்கான ஏர்பேக்கும் வழங்கப்படும். டாப் வேரியண்ட்டுகளில் டியூவல் ஏர்பேக்குகள் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்ற பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும்.

பாதுகாப்பு: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

பாதுகாப்பு: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எமர்ஜென்சி அசிஸ்ட் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில், எமர்ஜென்சி அசிஸ்ட் தொழில்நுட்பம் விபத்துக்கிளின்போது அவசர உதவியை உடனே பெற வழிவகுக்கும். பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் இரண்டுமே ஒன்றையொன்று சளைத்தவை இல்லை என்று கூறலாம்.

 பரிந்துரை

பரிந்துரை

இரண்டுமே தம் தம் விதத்தில் சிறப்பான மாடலாக இருக்கின்றன. ஆனால், மாருதியின் வலுவான சர்வீஸ் நெட்வொர்க், குறைவான பராமரிப்பு செலவு போன்றவை ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மீதான கவனத்தை குறைக்கும். அத்துடன், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டீசல் மாடலுடன் ஒப்பிடும்போது, மாருதி பிரெஸ்ஸாவின் விலை விலை நிச்சயம் கணிசமாக குறைவாக இருக்கும் என்று நம்பலாம். மேலும், மாருதி பிரெஸ்ஸாவில் எண்ணற்ற நவீன தொழில்நுட்ப வசதிகளும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும். எனவே, இந்த போட்டியில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டைவிட மாருதி பிரெஸ்ஸாவின் மீதான கவனம் கூடுதலாகும் என்று நிச்சயம் கூறலாம். மாருதி என்ற ஒற்றை மந்திரச் சொல் போதாதா, வாடிக்கையாளர்களை வளைக்க...!!

Most Read Articles
English summary
The Maruti Brezza compact suv was unveiled during the 2016 Indian Auto Expo, and Maruti has a clear goal to lead the segment. So how do the Vitara Brezza and Ford EcoSport fair against each other? Let's find out.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X