விலை உயர்ந்த கார்களில் தனித்து தெரியும்... மஸராட்டி லீவாண்ட்டே எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

இத்தாலி கார்களுக்கு என ஒரு புகழ் உள்ளது. செயல்திறனிலும், ஒருவரை ஈர்க்கும் தன்மையிலும் அவை தனித்துவம் வாய்ந்தவை. இந்த கார்கள் நம்மை கண் இமைக்காமல் பார்க்க செய்து விடும். இத்தகைய கார்களை தயாரித்து வரும் சிறப்பு வாய்ந்த நிறுவனங்களில் மஸராட்டியும் ஒன்று.

மஸராட்டி கார்களை ஓட்டுவது உங்களுக்கு உற்சாகமான அனுபவத்தை தரும். அந்த அனுபவம் சமீபத்தில் எங்களுக்கு கிடைத்தது. ஆம், மஸராட்டி லீவாண்ட்டே (Maserati Levante) காரை நாங்கள் ஓட்டி பார்த்தோம். மஸராட்டி நிறுவனத்திடம் இருந்து வெளிவந்த முதல் எஸ்யூவி கார் என்ற பெருமை லீவாண்ட்டேவிற்கு உள்ளது. இந்த காரை பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

விலை உயர்ந்த கார்களில் தனித்து தெரியும்... மஸராட்டி லீவாண்ட்டே எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

டிசைன்

முதலில் மஸராட்டி லீவாண்ட்டே எஸ்யூவி காரின் டிசைன் பற்றி பார்த்து விடலாம். இந்த காரின் அனைத்து பக்கங்களிலும் இத்தாலி ஸ்டைல் நன்றாக தெரிகிறது. இது சராசரியான எஸ்யூவி கிடையாது. செயல்திறன் மிக்க கார்களை தயாரிக்கும் வம்சாவழி கொண்ட ஒரு நிறுவனத்தில் இருந்து லீவாண்ட்டே வந்துள்ளது. எனவே எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் ஸ்போர்ட்டியாக காட்சியளிக்கிறது.

இந்த காரின் முன் பகுதியில் செங்குத்தான 8 ஸ்லாட்களை கொண்ட க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் நடுவே மிகவும் புகழ்பெற்ற மஸராட்டி நிறுவனத்தின் திரிசூல வடிவ லோகோ இடம்பெற்றுள்ளது. அத்துடன் அடாப்டிவ் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப்களையும் இந்த கார் பெற்றுள்ளது. அத்துடன் வட்ட வடிவ பனி விளக்குகளும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. அதை சுற்றிலும் க்ரோம் உள்ளது. ஆனால் பனி விளக்குகள் 'டல்' ஆக தெரிகின்றன. அதே சமயம் இந்த காரின் பானெட் நீளமாக இருப்பதுடன், லைன்களையும் பெற்றுள்ளது. இது ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்குகிறது. இதன் முன் பகுதியிலும் மஸராட்டி லோகோவை காண முடிகிறது.

விலை உயர்ந்த கார்களில் தனித்து தெரியும்... மஸராட்டி லீவாண்ட்டே எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

இனி பக்கவாட்டு பகுதிக்கு நகர்வோம். இங்கே 20 இன்ச் மல்டி ஸ்போக் அலாய் வீல்கள் கவனம் ஈர்க்கின்றன. அதே சமயம் முன் பக்க ஃபெண்டரின் மீது 3 ஏர் இன்டேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அழகிற்காக மட்டுமே இவை வழங்கப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஏர் இன்டேக்குகளுக்கு அப்படியே கீழாக GranSport வேரியண்ட் பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது.

விலை உயர்ந்த கார்களில் தனித்து தெரியும்... மஸராட்டி லீவாண்ட்டே எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்த காரின் மேற்கூரையானது, பின் பகுதியில் தாழ்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 'D' பில்லரில் மேலும் ஒரு மஸராட்டி திரிசூல லோகோ வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் டோர் ஹேண்டில்களில் வழங்கப்பட்டுள்ள க்ரோம் பூச்சுக்களும் பக்கவாட்டு பகுதியில் கூடுதல் அழகை சேர்க்கின்றன.

அதே சமயம் இந்த காரின் பின் பகுதியும், நேர்த்தியாகவும், ஸ்போர்ட்டியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கே ஸ்டைலான ஸ்பிளிட் டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. பின் பக்க விண்டுஷீல்டிற்கு கீழே மஸராட்டி என ஸ்டைலாக எழுதப்பட்டுள்ளது. அதற்கு கீழே க்ரோம் பட்டை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் டெயில்கேட்டின் கீழே வலது பக்கத்தில் Levante பேட்ஜூம், இடது பக்கத்தில் Q4 பேட்ஜூம் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை உயர்ந்த கார்களில் தனித்து தெரியும்... மஸராட்டி லீவாண்ட்டே எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்டீரியர்

பொதுவாக இத்தாலி நிறுவனங்கள் இன்டீரியரை எளிமையாக வழங்காது. சொகுசான, பகட்டான என்பது போன்ற வார்த்தைகளே மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இந்த வகையில் மஸராட்டி லீவாண்ட்டே காரின் இன்டீரியரும் மிகவும் அற்புதமாக உள்ளது. இந்த காரின் இன்டீரியரை பொறுத்தவரை சிகப்புதான் முக்கியமான நிறமாக உள்ளது. இந்த காரின் உள்ளே சென்றதும், பிரீமியமான மற்றும் சொகுசான உணர்வு உங்களுக்கு ஏற்படும் என்பது உறுதி.

விலை உயர்ந்த கார்களில் தனித்து தெரியும்... மஸராட்டி லீவாண்ட்டே எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

டேஷ்போர்டில் அனலாக் கடிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கீழே 8.4 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் இதர வசதிகளுடன் இது வருகிறது. கிட்டத்தட்ட காரின் அனைத்து செயல்பாடுகளையும் இந்த டச்ஸ்க்ரீன் மூலமாக கட்டுப்படுத்தலாம்.

இந்த ஸ்க்ரீனின் பக்கவாட்டில் இருபுறமும் செங்குத்தான இரண்டு ஏர் கண்டிஷனிங் வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர டேஷ்போர்டின் வலது மற்றும் இடது பக்கங்களில் மேலும் இரண்டு வெண்ட்கள் கிடைமட்டமாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சமச்சீரற்ற அமைப்பு உங்களுக்கு வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் இது இத்தாலியன் கார். அவர்கள் எப்போதுமே வழக்கத்தை பின்பற்ற விரும்ப மாட்டார்கள்.

இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு கீழே ஏர் கண்டிஷனிங் மற்றும் க்ளைமேட் கண்ட்ரோலுக்கான கண்ட்ரோல்கள் உள்ளன. இந்த கார் 2-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோலுடன் வருகிறது. இந்த கண்ட்ரோல்கள் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக உள்ளன. அதே சமயம் ஸ்விட்ச்களும் பிரீமியமான உணர்வை தருகிறது. டச்ஸ்க்ரீன் மூலமாகவும் க்ளைமேட் கண்ட்ரோலை கட்டுப்படுத்த முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

விலை உயர்ந்த கார்களில் தனித்து தெரியும்... மஸராட்டி லீவாண்ட்டே எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே சமயம் இந்த காரில் அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த 7.0 இன்ச் ஸ்க்ரீன் காரை பற்றிய பல்வேறு தகவல்களை வழங்குகிறது. இதன் பக்கவாட்டில் இருபுறமும் இரண்டு பெரிய அனலாக் டயல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை ஸ்பீடோமீட்டர் மற்றும் டேக்கோமீட்டர் ஆகும்.

இந்த காரின் வாடிக்கையாளர்கள் ஹார்மன் கார்டன் மற்றும் பாவர்ஸ் & வில்கின்ஸ் ஆடியோ சிஸ்டங்களை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இவை இரண்டுமே சிறப்பானவைதான். அருமையான ஒலி தரத்தை வழங்க கூடியவை.

விலை உயர்ந்த கார்களில் தனித்து தெரியும்... மஸராட்டி லீவாண்ட்டே எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே சமயம் இந்த காரின் இருக்கைகள் ஸ்போர்ட்டியாக இருப்பதுடன், சௌகரியமாகவும் உள்ளது. இந்த இரண்டு அம்சங்களும் சரி அளவில் கலந்த கலவையாக இருக்கைகள் இருக்கின்றன. இருக்கைககளில் வெண்டிலேட்டட் மற்றும் ஹீட்டட் வசதிகளும் உள்ளன.

விலை உயர்ந்த கார்களில் தனித்து தெரியும்... மஸராட்டி லீவாண்ட்டே எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

பின் இருக்கைகளிலும் கூட இதே அளவிற்கான சௌகரியம் கிடைக்கிறது. ஆனால் வெண்டிலேட்டட் மற்றும் ஹீட்டட் வசதிகள் இல்லை. இங்கு மூன்று பேர் அமர முடியும் என்றாலும் கூட, இரண்டு பேர் அமர்ந்தால் அதிகபட்ச சௌகரியத்தை பெறலாம். மைய பகுதியில் கப்ஹோல்டர்கள் உடன் மடித்து வைக்க கூடிய ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. பின் வரிசை பயணிகளுக்கும் கீழே ஏசி வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு மேலாக செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

விலை உயர்ந்த கார்களில் தனித்து தெரியும்... மஸராட்டி லீவாண்ட்டே எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

சௌகரியம், நடைமுறை பயன்பாடு & பூட் ஸ்பேஸ்

கிராண்ட் டூரிங் கார்களுடன் மஸராட்டி நிறுவனத்திற்கு நல்ல வரலாறு உள்ளது. இந்த கார்களில் தொலைதூர பயணங்களையும் சௌகரியமாக மேற்கொள்ளலாம். எனவே சௌகரியமான கார்கள் எப்படி இருக்க வேண்டும்? என்பது மஸராட்டி நிறுவனத்திற்கு நன்கு தெரியும். அதற்கு ஏற்ப லீவாண்ட்டே காரையும் மஸராட்டி நிறுவனம் மிகவும் சௌகரியமாக உருவாக்கியுள்ளது. இந்த விஷயத்தில் மஸராட்டி நிறுவனம் மிகவும் அருமையாக வேலை செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இருக்கைகள் மிகவும் சௌகரியமாக உள்ளன. இருக்கைகளில் குறையை கண்டறிவது மிகவும் கடினமான காரியம். லெக்ரூம், ஹெட்ரூம் ஆகியவையும் சிறப்பாக இருக்கின்றன.

நடைமுறை பயன்பாடு என பார்த்தாலும், மஸராட்டி லீவாண்ட்டே அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் உள்ளது. முன் பகுதியில் உள்ள சென்டர் கன்சோலில், உங்கள் வாலெட் மற்றும் செல்போன்களை வைத்து கொள்வதற்கான இடவசதி உள்ளது. அத்துடன் சென்டர் ஆர்ம்ரெஸ்ட்டிலும் கூலிங் வசதியுடன் நல்ல இடவசதி வழங்கப்பட்டுள்ளது. கூலிங் வசதியை ஆன் அல்லது ஆஃப் செய்வதற்கு அதன் உள்ளே சிறிய ஸ்விட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் டோர் பேனல்களில் உள்ள பாட்டில் ஹோல்டர்கள் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாம்.

விலை உயர்ந்த கார்களில் தனித்து தெரியும்... மஸராட்டி லீவாண்ட்டே எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

இரண்டாவது வரிசை இருக்கைகள் உயர்ந்து இருக்கும்போது இந்த காரின் பூட் ஸ்பேஸ் 580 லிட்டர்கள். ஆனால் இருக்கைகளை மடக்கி வைத்து கொண்டால், பூட் ஸ்பேஸ் 1,625 லிட்டர்களாக உயர்ந்து விடும்.

Dimensions Maserati Levante 350 GranSport
Length 5,003mm
Width 1,968mm
Height 1,679mm
Wheelbase 3,004mm
Boot Space 580-litres
விலை உயர்ந்த கார்களில் தனித்து தெரியும்... மஸராட்டி லீவாண்ட்டே எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்ஜின் செயல்திறன் & ஓட்டுதல் அனுபவம்

மஸராட்டி லீவாண்ட்டே காரின் 350 கிராண்ஸ்போர்ட் வேரியண்ட்டை நாங்கள் ஓட்டினோம். இதில், 3.0 லிட்டர், ட்வின்-டர்போ வி6 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இங்கே 350 என்பது, 350 பிஎஸ் பவர் அவுட்புட்டை குறிக்கிறது. இந்த கார் 5,750 ஆர்பிஎம்மில் 345 பிஎச்பி பவரை வெளிப்படுத்த கூடியது. அதே நேரத்தில் இந்த இன்ஜின் 1,750 - 4,750 ஆர்பிஎம்மில் 500 என்எம் டார்க் திறனை வழங்கும். இது ஃபெராரி இன்ஜினை அடிப்படையாக கொண்டது.

இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு இஸட்எஃப் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. க்யூ4 இன்டலிஜெண்ட் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக, நான்கு சக்கரங்களுக்கும் இன்ஜின் சக்தி செலுத்தப்படுகிறது. இந்த காரின் செயல்திறன் மிகவும் அருமையாக உள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 6 வினாடிகளில் எட்டி விடுகிறது. அதே சமயம் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 251 கிலோ மீட்டர்கள்.

விலை உயர்ந்த கார்களில் தனித்து தெரியும்... மஸராட்டி லீவாண்ட்டே எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

நார்மல், ஸ்போர்ட் மற்றும் Increased Control & Efficiency (I.C.E) என மூன்று டிரைவிங் மோடுகள் உடன் மஸராட்டி லீவாண்ட்டே வருகிறது. இதில், நகர பகுதிகளில் ஓட்டுவதற்கு நார்மல் மோடு சிறந்தது. ஆனால் ஏர் சஸ்பென்ஸன் பெரிய அளவிற்கு சிறப்பாக இல்லை.

இதற்கு அடுத்தபடியாக ஸ்போர்ட் மோடில், எக்ஸாஸ்ட் சத்தம் அதிகமாகவும், சிறப்பாகவும் உள்ளது. ஆனால் இந்த மோடில் சாலையில் உள்ள குழிகளை அதிகமாக உணர முடிகிறது. ஆனால் வளைவுகளில் சிறப்பாக செயல்படுகிறது. பாடி ரோல் என எடுத்து கொண்டால், செடான் கார்களை போன்று இருக்கிறது. அதே சமயம் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் சிறப்பாக இருப்பதுடன், பேடில் ஷிஃப்டர்கள் மூலமாக கியர்களை மாற்றுவதும் நன்றாக உள்ளது.

இதுதவிர மற்றொரு மோடும் உள்ளது. இது கஸ்டமைசேஷனுக்கு உங்களை அனுமதிக்கிறது. சென்டர் கன்சோலில் உள்ள பட்டனில் I.C.E என குறிப்பிடப்பட்டுள்ளது. Increased Control & Efficiency என்பதுதான் இதன் விரிவாக்கம். இந்த காரின் செட்டிங்குகளை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வாய்ப்பை இது வழங்குகிறது. அதாவது சஸ்பென்ஸன் மற்றும் ஸ்டியரிங் வீல் ஆகியவற்றை உங்கள் தேவைக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். முழுக்க முழுக்க ஓட்டுனரின் தேவைக்கு ஏற்ற வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

விலை உயர்ந்த கார்களில் தனித்து தெரியும்... மஸராட்டி லீவாண்ட்டே எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

இதுதவிர ஆஃப் ரோடு மோடையும் மஸராட்டி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த மோடில், சஸ்பென்ஸன் தனது அதிகபட்ச உயரத்திற்கு மேலே தூக்கி கொள்கிறது. கரடு, முரடான சாலைகளை சுலபமாக எதிர்கொள்வதற்கு இது உதவி செய்கிறது. ஆனால் இந்த காரை ஆஃப் ரோடு பயணங்களுக்கு கொண்டு செல்ல யாராவது விரும்புவார்களா? என்பது சந்தேகம்தான். நார்மல், ஸ்போர்ட் மற்றும் I.C.E மோடுகளில், க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 207 மிமீ. ஆஃப் ரோடு மோடில் இது 247 மிமீ-ஆக உயர்ந்து விடுகிறது. இந்த காரில் ஸ்போர்ட் ஸ்கைஹூக் அடாப்டிவ் சஸ்பென்ஸன் வழங்கப்பட்டுள்ளது. இது கார் செல்லும் நிலப்பரப்பிற்கு ஏற்ப அட்ஜெஸ்ட் ஆகி கொள்ளும். இந்த காரின் எடை சுமார் 2,100 கிலோ ஆகும். இருந்தாலும் கூட கார்னர்களில், ஸ்போர்ட்ஸ் காரை போல் இது செயல்படுகிறது. குறிப்பாக ஸ்போர்ட்ஸ் மோடில்.

விலை உயர்ந்த கார்களில் தனித்து தெரியும்... மஸராட்டி லீவாண்ட்டே எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

பாதுகாப்பு மற்றும் முக்கியமான வசதிகள்

இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை உயர்ந்த எஸ்யூவி கார்களில் ஒன்றாக, மஸராட்டி லீவாண்ட்டே உள்ளது. அதற்கு ஏராளமான வசதிகளுடன் இந்த கார் வருகிறது. அத்துடன் இந்த காரில் பாதுகாப்பு வசதிகளும் நிறைந்துள்ளன.

மஸராட்டி லீவாண்ட்டே 350 க்ரான்ஸ்போர்ட் முக்கியமான வசதிகள்

 • அடாப்டிவ் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப்கள்
 • கீலெஸ் எண்ட்ரி & கோ
 • கால் அசைவு மூலமாக இயக்க கூடிய வசதியுடன் எலெக்ட்ரிக் டெயில்கேட்
 • க்யூ4 இன்டலிஜெண்ட் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்
 • ஸ்கைஹூக் அடாப்டிவ் சஸ்பென்ஸன்
 • பிரீமியம் ஆடியோ சிஸ்டம்
 • ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல்
 • ஸ்டியரிங் வீலில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கான கண்ட்ரோல்கள்
 • டிரைவிங் மோடுகள்
 • இதுபோல் இன்னும் பல்வேறு வசதிகளை இந்த கார் பெற்றுள்ளது.

  மஸராட்டி லீவாண்ட்டே 350 க்ரான்ஸ்போர்ட் பாதுகாப்பு வசதிகள்

  • அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்
  • சர்ரவுண்டு-வியூ கேமரா
  • ஆக்டிவ் பிளைண்ட் ஸ்பாட் அஸிஸ்ட்
  • ஹில் டெசண்ட் கண்ட்ரோல்
  • ஏர்பேக்குகள்
  • இபிடி உடன் ஏபிஎஸ்
  • மஸராட்டி லீவாண்ட்டே 350 வேரியண்ட்கள்

   க்ரான்லூஸோ மற்றும் க்ரான்ஸ்போர்ட் என மொத்தம் 2 வேரியண்ட்களில் மஸராட்டி லீவாண்ட்டே 350 கார் கிடைக்கிறது.

   மஸராட்டி லீவாண்ட்டே 350 போட்டியாளர்கள்

   பிஎம்டபிள்யூ எக்ஸ்7, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் உள்ளிட்ட கார்களுடன் மஸராட்டி லீவாண்ட்டே 350 போட்டியிடுகிறது.

   விலை உயர்ந்த கார்களில் தனித்து தெரியும்... மஸராட்டி லீவாண்ட்டே எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

   டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

   இந்த செக்மெண்ட்டில் மஸராட்டி லீவாண்ட்டே 350 மிகவும் பிரபலமான கார் கிடையாது. ஆனால் விலை உயர்ந்த கார்களுக்கு மத்தியில் தனித்து தெரிய வேண்டுமென்றால், இது நிச்சயம் சிறந்த தேர்வாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #மஸராட்டி #maserati
English summary
Maserati Levante 350 GranSport Review: Design, Interior, Engine Performance & Driving Impressions. Read in Tamil
Story first published: Thursday, July 29, 2021, 13:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X