மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Written By:

ரேஸ் கார்களில் இருப்பது போன்ற சக்திவாய்ந்த எஞ்சின், கோடீஸ்வர வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் சொகுசு அம்சங்கள் என இரண்டையும் கலந்து கட்டி, ஒரு அசத்தலான செடான் காரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் மஸேரட்டி நிறுவனருக்கு உதித்தது. அந்த எண்ணத்தில் உருவானதுதான் மஸேரட்டி குவாட்ரோபோர்ட்டே.

1963ம் ஆண்டு டூரின் மோட்டார் ஷோவில் உலகின் அதிவேக 4 கதவுகள் கொண்ட கார் மாடலாக இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் மிக நீண்ட பாரம்பரியத்துடன், பல தலைமுறைகளை கடந்து தற்போது நவீன யுக மாடலாக வலம் வருகிறது.

இந்த ஸ்போர்ட்ஸ் செடான் காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் டீம் பெற்றது. பெங்களூரில் இருந்து நந்தி ஹில்ஸ் வரை இந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்ததில் யாம் பெற்ற அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மஸராட்டி குவாட்ரோபோர்ட்டேவுடன் ஒரு நாள்...!!

கவனத்தை ஈர்க்கும் டிசைன், வியக்க வைக்கும் செயல்திறன், பார் போற்றும் ரேஸ் வரலாறு என இத்தாலிய கார்கள் என்றாலே, அதனுள் ஏதேனும் ஒரு சிறப்பு விஷயம் இல்லாமல் இருக்காது. அந்த வகையில், நூற்றாண்டுக்கும் மேலாக பாரம்பரியத்தை கொண்ட மஸராட்டி நிறுவனம் ரேஸ் கார் தயாரிப்பில் கில்லி.

4, 6 8, 16 சிலிண்டர்களுடன் கூடிய மிக சக்திவாய்ந்த ரேஸ் கார்களையும், ஸ்போர்ட்ஸ் கார்களையும் உருவாக்கி உலகையே தன் பால் ஈர்த்து வருகிறது மஸேரட்டி.

மஸராட்டி குவாட்ரோபோர்ட்டேவுடன் ஒரு நாள்...!!

கடந்த 1963ம் ஆண்டு டூரின் மோட்டார் ஷோவில் உலகின் அதிவேகமான 4 சீட்டர் கார் மாடலாக குவாட்ரோபோர்ட்டே காரை அறிமுகப்படுத்தி ஆட்டோமொபைல் உலகையே அதிர வைத்தது மஸேரட்டி.

செடான் வகை காரில் ரேஸ் கார் எஞ்சினை பொருத்தி, ஆட்டோமொபைல் உலகின் புரட்சிகரமான முதல் கார் மாடலாக குவாட்ரோபோர்ட்டோ ஸ்போர்ட்ஸ் செடான் கார் மாடலை மஸராட்டி அறிமுகப்படுத்தியது.

புரட்சிகரமான நுட்பத்தில் வந்த இந்த கார் தலைமுறைகளை தாண்டி மேம்பட்டு வந்து மிக நீண்ட பாரம்பரியத்துடன் செயல்திறன் கார் விரும்பிகளை ஈர்த்து வருகிறது. அந்த எதிர்பார்ப்புகளை இந்த கார் பூர்த்தி செய்ததா என்பதை இந்த செய்தியில் காணலாம்.

 டிசைன்

டிசைன்

இந்த காரின் டிசைன் மிகச் சிறப்பானதாகவும், ஆளுமை நிறைந்ததாகவும் இருக்கிறது. பார்ப்போரை திரும்பி பார்க்க வைக்கும் டிசைன். ஜெர்மனி போட்டியாளர்களிடமிருந்து வேறுபட்டு மிகவும் தனித்துவமான டிசைனுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

முத்தாய்ப்பான லோகோ

முத்தாய்ப்பான லோகோ

காரின் முகப்பு கம்பீரமாக இருப்பதுடன், சூலாயுதம் போல குத்திட்டு நிற்கும் மஸேரட்டி லோகோதான் முத்தாய்ப்பான விஷயம். எல்லோரின் பார்வையும் நேராக அந்த லோகோவை நோக்கி பாய்கின்றன. பக்கவாட்டில் 20 இன்ச் ஃபோர்ஜ்டு அலாய் வீல்கள் கம்பீரத்தை கூட்டுகின்றன. பின்புறத்தில் இரட்டை குழாய் அமைப்புடன் கூடிய சைலென்சர்கள் மிகச் சிறப்பானது.

இன்டீரியர்

இன்டீரியர்

உட்புறத்தில் கார்பன் ஃபினிஷிங் அலங்காரம் மற்றும் மரத்தகடுகள் பதிக்கபப்பட்டு கவர்கிறது. 10 இன்ச் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முட்டை வடிவ கடிகாரம் போன்றவை முக்கிய விஷயங்கள். அதேநேரத்தில், மெர்சிடிஸ் எஸ் க்ளாஸ், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் போன்ற கார்களுடன் ஒப்பிடும்போது, இந்த காரின் இன்டீரியர் இன்னும் மேம்பட்டு இருக்கலாம் என்ற ஏக்கம் எம் மனதில் எழுந்தது.

ஏனெனில், ஜெர்மானிய சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் டிசைன்,செயல்திறன், சொகுசு வசதிகள் என அனைத்திலும் கவனம் செலுத்துவர். ஆனால், இத்தாலிய தயாரிப்பாளர்களுக்கு டிசைனை விட செயல்திறன் மட்டுமே குறிக்கோளாக கொண்டு கார் தயாரிப்பில் ஈடுபடுகிறவர்கள். எமது இந்த கூற்றை இந்த கார் எந்தளவு பூர்த்தி செய்தது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

தாராள இடவசதி

தாராள இடவசதி

உட்புறத்தில் மிக விசாலாமான இடவசதியை பெற்றிருக்கிறது. குறிப்பாக, பின்புற இருக்கைகள் மிக மிக தாராள இடவசதியை வழங்குகின்றன. உயர்தர இருக்கைகள் உன்னதமான அனுபவத்தை வழங்குகின்றன.

எஞ்சின்

எஞ்சின்

மஸராட்டி குவாட்ரோபோர்ட்டோ காரில் இருக்கும் 3.8 லிட்டர் வி8 எஞ்சின் ஃபெராரி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 523 பிஎச்பி பவரையும், 710 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக எஞ்சின் ஆற்றல் கடத்தப்படுகிறது.

ஆட்டோமேட்டிக் வசதி தவிர்த்து, மேனுவல் கியர்பாக்ஸ் மூலமாகவும், பேடில் ஷிஃப்ட் மூலமாகவும் கியர் மாற்றம் செய்வதற்கான வசதி உள்ளது.

இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை வாய்ந்தது. மணிக்கு 350 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

சைலென்சர் சப்தம்

சைலென்சர் சப்தம்

இந்த எஞ்சினை ஸ்டார்ட் செய்தவுடன் சைலென்சரின் சப்தம் இது ஒரு செடான் கார் என்ற பார்வையை மறக்கடிக்கிறது. ஆக்சிலரேட்டரை முறுக்கியவுடன், ரேஸ் கார்களுக்கே உரிய உறுமலுடன் தனது ரீங்காரத்தை துவங்கியது.

ஆக்சிலரேட்டரை கொடுக்க கொடுக்க நம் எதிர்பார்ப்புகளை விஞ்சி சாலையில் சிட்டு போல பறக்கத் துவங்கிவிடுகிறது. இதன் செயல்திறனுக்கு தக்கவாறு, ஸ்டீயரிங்கும் மிகுந்த நம்பிக்கையுடன் வேகத்தை கட்டுப்படுத்தி ஓட்டுவதற்கு துணை புரிகிறது.

 டிரைவிங் மோடுகள்

டிரைவிங் மோடுகள்

இந்த காரில் 5 விதமான டிரைவிங் மோடுகள் இருக்கின்றன. ஆட்டோ நார்மல், ஆட்டோ ஸ்போர்ட், மேனுவல் நார்மல், மேனுவல் ஸ்போர்ட் மற்றும் ஐ.சி.இ ஆகியவற்றை விருப்பம்போல் தேர்வு செய்து கொள்ளலாம். சாதாரண மோடில், மென்மையான சஸ்பென்ஷன் அமைப்புடன், மிக சொகுசான பயணத்தை வழங்கும். அதாவது, தினசரி பயன்பாட்டிற்கு இது ஓகே.

மஸராட்டி குவாட்ரோபோர்ட்டேவுடன் ஒரு நாள்...!!

அடுத்து, செயல்திறன் விரும்பிகளுக்கு ஸ்போர்ட் மோடு சிறப்பானது. அதிகபட்ச செயல்திறனை வெளிக்காட்டுகிறது. வலிமையான சஸ்பெஷன் அமைப்பு, மிகந்த நிலைத்தன்மையுடன் கார் செல்லும்.

மஸராட்டி குவாட்ரோபோர்ட்டேவுடன் ஒரு நாள்...!!

ஐ.சி.இ மோடில் வைக்கும்போது அதிக எரிபொருள் சிக்கனத்துடன், சீரான செயல்திறனை வழங்கும். அதாவது, டர்போசார்ஜரின் ஓவர்பூஸ்ட் இயக்கத்தை தவிர்ப்பதுடன், சைலென்சரின் ஸ்போர்ட் ஃப்ளாப்புகளை 5,000 ஆர்பிஎம் வரை மூடி வைத்திருக்கும்.

கையாளுமை, ஓட்டுதல் தரம்

கையாளுமை, ஓட்டுதல் தரம்

இந்த கார் ஓர் உண்மையான ஸ்போர்ட்ஸ் செடான் வகை கார் மாடலாகவும், தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற கார் மாடலாகவும் இருக்கிறது. சற்றே நீளமான கார் என்பதால், ஓட்டும்போது சற்று கவனம் எடுக்க வேண்டியிருக்கிறது. இந்த காரின் கையாளுமைக்கும், சொகுசுக்கும் வலு சேர்ப்பது இந்த காரின் பிரத்யேகமான சஸ்பென்ஷன் அமைப்புதான்.

விசேஷ சஸ்பென்ஷன்

விசேஷ சஸ்பென்ஷன்

ஆம். இந்த காரில் ஸ்கைஹூக் சஸ்பென்ஷன் சிஸ்டம் இருக்கிறது. கார் எந்த சாலை நிலையிலும், எந்த வேகத்தில் சென்றாலும் அதனை சென்சார்கள் மற்றும் கம்ப்யூட்டர் உதவியுடன் உடனுக்குடன் உணர்ந்து கொண்டு சீரான பயண அனுபவத்தை வழங்குகிறது.

காரின் ஒவ்வொரு சக்கரத்தின் அசைவுகள், காரின் உடற்கூடு செயல்பாடு போன்றவற்றை துல்லியமாக கணித்து சஸ்பென்ஷன் டேம்பரை தானியங்கி முறையில் கட்டுப்படுத்தி மிகச் சிறப்பான கையாளுமையை தருகிறது. இதன்மூலமாக, இந்த காரை மிக நம்பிக்கையான உணர்வுடன் ஓட்ட முடிகிறது.

பிரேக் செயல்திறன்

பிரேக் செயல்திறன்

இந்த காரில் முன்புறத்தில் 245/40 R20 டயர்களும், பின்புறத்தில் 285/40 R20 டயர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த டயர்கள் வளைவுகளிலும், பிரேக் பிடிக்கும்போதும் மிகச் சிறப்பான செயல்திறனை தருகின்றன. இதனால், இந்த கார் மிகவும் சிறப்பான கையாளுமை மற்றும் பாதுகாப்பான உணர்வுடன் ஓட்ட முடிகிறது.

எடை விரவும் தன்மை

எடை விரவும் தன்மை

மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே ஜிடிஎஸ் காரில் 50:50 என்ற விகிதத்தில் எடை விரவும் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இதனால், பிரேக் பிடிக்கும்போதும், காரை அதிரடியாக நிறுத்தும்போதும் கார் மிகுந்த கட்டுக்கோப்புடன் செலுத்த வைக்கிறது. மொத்தத்தில் 5.26 மீட்டர் நீளமும், 1,900 கிலோ எடையும் கொண்ட இந்த கார் மிகச் சிறப்பான நிலைத்தன்மையும், சரி விகிதத்தன்மையும் கொண்ட செடான் கார் மாடலாக குறிப்பிடலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

டிரைவ்ஸ்பார்க் கருத்து

போர்ஷே பனமிரா, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் போன்ற கார்களுடன் ஒப்பிடும்போது தனித்துவமான டிசைன் மற்றும் சொகுசு விஷயங்கள் இந்த காரில் இல்லை. அதேநேரத்தில், ரேஸ் பாரம்பரியத்திலிருந்து பிறந்த சக்திவாய்ந்த எஞ்சின், தனித்துவமான ஸ்டைல் இந்த காருக்கு தனி வாடிக்கையாளர் வட்டத்தை பெற்றுத் தந்து வருகிறது.

 எடிட்டர் கருத்து

எடிட்டர் கருத்து

தலைமுறைகளை தாண்டி ஓட்டுனர்களை கவரும் மஸராட்டி பிராண்டின் முத்தாய்ப்பான கார் மாடல் குவாட்ரோபோர்ட்டோ ஜிடிஎஸ். இந்த காரின் செயல்திறனும், சைலென்சர் சப்தமும் அலாதியான அனுபவத்தை வழங்கியது. இத்தாலிய பொறியியலில் உருவான சிறந்த கார் மாடலாகவே கூறலாம்.

உங்களுக்கு தெரியுமா?

உங்களுக்கு தெரியுமா?

குவாட்ரோபோர்ட்டே: குவாட்ரோபோர்ட்டே என்றால் இத்தாலிய மொழியில் 4 கதவுகள் என்று பொருள். அதாவது, 4 கதவுகளுடன் வடிவமைக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் ரக சொகுசு கார் என்பதை குறிக்கிறது. ஜெர்மானியர்களோ அல்லது இந்தியர்களோ 4 கதவுகள் என்று கார்களுக்கு பெயர் வைப்பார்களா என்று தெரியாது. பெயர் வைப்பதிலும் கூட இத்தாலியர்கள் ரொம்ப கூல்தான் போலிருக்கிறது.

ஜிடிஎஸ்: இதனை ஆட்டோமொபைல் துறையினர் வெவ்வேறு விதமாக குறிப்பிடுவதுண்டு. இங்கு ஜிடிஎஸ் என்பது கிராண்ட் டூரர் ஸ்போர்ட் என்பதை குறிக்கிறது. அதேநேரத்தில், ஃபெராரி நிறுவனத்தினர் கிராண்ட் டூரிஷ்மோ ஸ்பைடர் என குறிப்பிடுகின்றனர். ஜிடி என்பது கிரான் டூரிஷ்மோ என்ற குறிக்கிறது. கிரான் டூரிஷ்மோ என்றால் அதிவேகத்தில் அதிக தூரம் பயணிக்கும் கார் என்பது பொருளாகிறது.

மஸராட்டி: இந்த நிறுவனம் கார் தயாரிப்புக்கு முன்னர் ஸ்பார்க் ப்ளக் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. மஸராட்டி நிறுவனத்தின் லோகோ மஸராட்டி நிறுவனத்தின் பிறப்பிடமான போலோக்னோவில் உள்ள நெப்டியூன் சிலையை தழுவி வடிவமைக்கப்பட்டது. இந்த நிறுவனம் 1914ம் ஆண்டு துவங்கப்பட்டது. மஸராட்டி பிரதர்ஸ் துவங்கிய இந்த நிறுவனம் ஓர்சி குடும்பம், சிட்ரோயன், அலிசான்ட்ரோ டி டோமசோ மற்றும் ஃபியட் ஆகிய 5 உரிமையாளர்களின் கைகளுக்கு மாறிவிட்டது.

Words: Jobo Kuruvilla

English summary
Maserati Quattroporte GTS Review. The Quattroporte is one of the fastest four-door saloons in the world, but is it still truly a unique car?

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark