அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள சி கிளாஸ் காரை டிரைவ்ஸ்பார்க் குழு ஓட்டிப்பார்த்தது, இந்த கார் குறித்த விமர்சனத்தை இங்கே காணலாம் வாருங்கள்

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

ஆட்டோமொபைல் துறையில் வெற்றிக்கதைகள் கட்டுக்கட்டாக இருக்கிறது. ஒரு கார் டிசைன் செய்யப்பட்டு மார்கெட்டிற்கு வந்து மக்களிடம் வெற்றிபெறுவது என்பது சாதாரண விஷயம் அதற்குப் பின்னால் பல ஆய்வு, உழைப்பு என விஷயங்கள் இருக்கிறது. இப்படி வெற்றிபெற்ற கதைகள் பல கட்டுகள் இருக்கும் நிலையில் அதில் பாதி கட்டு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கட்டுகள் தான். அந்நிறுவனத்தின் பெரும்பாலான கார்கள் வெற்றி தான். அதுவும் அந்நிறுவனம் வெளியிட்ட C கிளாஸ் கார்கள் எல்லாம் வெற்றியின் அடையாளம் தான்.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

1993ம் ஆண்டு பென்ஸ் நிறுவனம் தனது C கிளாஸ் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அன்று முதல் அந்த கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதன் பின்பு அந்த கார் 5 தலை முறை மாற்றங்களைச் சந்தித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு அந்த காரின் ஆறாவது தலை முறை சி களாஸ் கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

இந்த கார் சர்வதேசச் சந்தையில் அறிமுகப்படுத்தும்போது இந்த காரை "பேபி s கிளாஸ்" என மக்கள் இதற்குச் செல்ல பெயர் வைத்தார். இந்த கார் தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த காரை டிரைவ்ஸ்பார்க் ரிவியூ குழு ஓட்டிப்பார்த்த ரிவியூ செய்துள்ளோம். இந்த 6வது தலைமுறை C கிளாஸ் கார் எப்படி இருக்கிறது. இது உண்மையில் பேபி s கிளாஸ் என்ற பெயருக்கு ஏற்ற காரா? மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வெற்றிக் கதைகளில் இந்த காரும் பங்குபெறுமா? வாருங்கள் பார்க்கலாம்

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

டிசைன் மற்றும் ஸ்டைல்

இந்த காரின் டிசைனை பொருத்தவரை வரை பழைய 5வது தலைமுறை காரில் உள்ள டிசைன் மொழியே பெரும்பாலான இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் மட்டுமே டிசைனில் மாற்றப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட டிசைனும் s கிளாஸ் காரில் உள்ள ஒரு டிசைனை ஒத்து மாற்றப்பட்டுள்ளது. Cகிளாஸ் காரை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு s கிளாஸ் டிசைன் பிடித்திருந்ததால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ் லைன் அப்பில் உள்ள மற்ற செடான் கார் லுக்கிலேயே உள்ளது. இந்த காரின் பின்பக்க டிசைன் ஐகானிக் டிசைனில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வளைவு வடிவங்கள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பின்பக்க விளக்கில் எல்இடி பொருத்தப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள கேஸ்கேடின் அந்த காருக்கு மேலும் அழகூட்டுகிறது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

இந்த காரின் பூட் லிட் சிறப்பான வளைவு வடிவத்தைப் பெற்றுள்ளது பின்பக்கம் வழக்கமான இடத்தின் பென்ஸ் லோகோ கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் வேரியண்ட் பேட்ஜிங் காரின் பூட்டின் இடது புறம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்க பம்பர் பெரியதாகவும், காரின் பாடியுடன் சேர்ந்தவாரும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. பின்பக்கம் இரண்டு எக்ஸாட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு எக்ஸாட்ஸ்களும், க்ரோம் பட்டையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பின்புறம் சாய்வாக அமைக்கப்பட்டுள்ள ரூஃப் லைன் காருக்கு டிராமாடிக் ஃசோபஸ்டிகேட்டட் டிசைன் லுக்கை தருகிறது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

இந்த காரின் 17 இன்ச் 5 ஸ்போர்க் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இது பக்கவாட்டிலிருந்து இந்த காரை காண்பவர்கள் கண்களைக் கவரும் வகையில் இதன் டிசைன் உள்ளது. இதில் டாப் மாடலான C300d கார் ஸ்போர்ட்டியர் ஏஎம்ஜி-லைன் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்போட்டியர் அலாய் வீல் கள் இந்த காருக்கான சைடு புரோபைல் லுக்கை மிக எடுப்பாகக் காட்டியுள்ளது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

பென்ஸ் நிறுவனம் இந்த காரின் குறைவான டிசைன் மொழியைக் கையாண்டுள்ளது. இந்த காரின் கேரக்டரை லைனில் முக்கியமானது காரின் ஸோல்டர் லைன் அது மிக அம்சமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் டோர் ஹேண்டில்கள் கணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதின் மேலே ஜன்னல் அருகே க்ரோம் பட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

புதிய C கிளாஸ் கார் பழைய கார் பழைய காரை விட 65 மிமீ நீளம் அதிகம் கொண்டது. இந்த காரின் முன்பக்க டிசைன் மொழியை பார்க்கும் போது. எல்இடி ஹெட்லைட்களுடன் ஒரு எல்இடி டிஆர்எல் வழங்கப்பட்டுள்ளது. E கிளாஸ் காரில் 2 எல்இடி டிஆர்எல்களும், S கிளாஸ் காரில் 3 எல்இடி டிஆர்எல்களும் வழங்கப்பட்டுள்ளன.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

இந்த காரின் கிரில்லை பொறுத்தவரை மெர்சிடிஸ் நின் தனித்துவமான ஸ்டார் ஸ்டட் கிரில்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மத்தியில் பென்ஸ் லோகோவும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்க டிசைனில் முக்கியமான பானட் டிசைன். இதில் கொடுக்கப்பட்டுள்ள லைன்கள் இந்த காருக்கு ஒரு மஸ்குலர் லுக்கை வழங்குகிறது. காரின் மற்ற பகுதிகளில் இந்த மஸ்குலர் லுக் இல்லை. மற்ற பகுதிகள் சிம்பிள், ஸ்லீக், எலெகென்ட் டிசைன பெற்றுள்ளது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

இந்த காரின் முன்பக்க பம்பர்கள் டிசைனில் முன்பக்க டிசைனில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. கீழ்ப் பகுதியில் உள்ள ஸ்கார்ஃப் பிளேட்டில் சில்வர் ஃபினிஷ் சிறப்பான லுக்கை தருகிறது. மொத்தத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மனிமல் டிசைன் மற்றும் மற்றும் பழைய காரிலிருந்த மினிமல் மாற்றங்கள் எனப் பழைய லுக்கையும் மாற்றாமல் புதிய லுக்கிற்காக சில மாற்றங்களை மட்டும் செய்ததற்காக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தைப் பாராட்டலாம்

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

உட்புற கட்டமைப்பு

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்களில் மார்டனான் உட்புற கட்டமைப்பை நாம் எதிர்பார்க்கலாம். அதன் படி அலுமினியம் பட்டன்கள், ஹப்டிக் டச் பேனல்கள், பெரிய திரை மற்றும் லைட்கள் காருக்குள் பயணிப்பவர்களுக்கு நல்ல ஃபீலை ஏற்படுத்துகிறது. கதவுகளின் ஹேண்டில்கள் நீங்கள் வேறு காருக்குள் நுழையும் அனுபவத்தைத் தருகிறது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

இந்த காரின் ஸ்டியரிங் வீல் அட்டகாசமான உணர்வைத் தருகிறது. இது முழுவதும் லெதர்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அதிலேயே பல கண்ட்ரோல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முக்கியமான இன்ஃபோடெயின்மெண்ட் கண்ட்ரோலும் அதிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டியரிங்கிலேயே கொடுக்கப்பட்டுள்ள டச் பேட்கள் டிரைவருக்கு இன்போடமெண்ட்டின் பெரும்பாலான பகுதியை கண்ட்ரோல் செய்யும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

ஸ்டியரில் வீலுக்கு பின்னால் 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது.. இது S கிளாஸ் காரின் மாடலிலிருந்து இந்த காருக்கு கொண்டு வரப்பட்ட விஷயம். இந்த ஸ்கிரீனில் பல முக்கியமான தகவல்கள் வருகிறது. உதாரணமாக ஸ்பீடு, இன்ஜின் ஸ்பீடு, டிரைவ் மோட்கள், கியர் போசிஷன்கள், எரிபொருள் எஃபிசியேன்சி, மேலும் இதன் லேஅவுட்டை டிரைவர்களே மாற்றியமைத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

இந்த காரின் மத்தியில் 11.9 இன்ச் அளவிலான பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. வெர்டிகல் பேசிஷனில் இந்த டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதுவும் S கிளாஸ் காரில் உள்ள டிசைன் கதான் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது சற்று பெரிதாக இருப்பதாக உணர முடிகிறது. பொதுவாக இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் டேஷ்போர்டின் டிசைனை பொருத்தியே அமைக்கப்படும். ஆனால் இதில் இது தனியான யூனிட் போல இருக்கிறது. மேலும் இது டிரைவர் சுலபமாகப் பார்க்கச் சற்று சாய்வாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

இந்த காரின் உட்கட்டமைப்பு MBUX பிளாட்ஃபார்மில் அமைக்கப்பட்டுள்ளதால் கனெக்டெட் கார் வசதி உள்ளது. இது வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதியையும் கொண்டுள்ளது. இந்த காரின் இன்ஃபோடெயின்மெண்ட் பயோமெட்ரிக் பாதுகாப்பு வசதியுடன் இருக்கிறது. அதாவது அதில் பதிவு செய்யப்பட்ட கைரேகை உள்ளவர்கள் கைரேகையோ குரலையோ பயன்படுத்தித் தான் அதைப் பயன்படுத்த முடியும்.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

இந்த காரின் ஏசி வென்ட்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இது அலுமினியம் பிரஷ்டு லுக் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யும் போது அருமையான உணர்வைத் தருவது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

இந்த காரின் சென்டர் கன்சோலை பொறுத்தவரை மினிமல் டிசைன் மொழி கையாளப்பட்டுள்ளது. கியர் லிவர் மற்றும் மற்ற கண்ட்ரோல்களுடன் அட்டகாசமான டிசைன பெற்றள்ளது. இதில் உள்ள டவுள் ஸோப் கிளைமேட் கண்ட்ரோல் கேபினை விரைவாகக் குளுமையாக்குவதோடு அதை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டதுடனேயே கண்ட்ரோல் செய்யும் வசதியும் உள்ளது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

சென்டர் கண்சோலில் உள்ள ஆர்ம் ரெஸ்ட் கீழே சில ஸ்டோரேஜ் இடங்கள் உள்ளன. ஆர்ம் ரெஸ்ட்களிலும் சீட்களில் பயன்படுத்தப்பட்ட அதே லெதரே இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த காரை வாங்கும்போது அவர்களுக்கு மூன்று உட்புற கலர் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேக்சியாட்டோ பேஜ், சியன்னா பிரெளன், மற்றும் கருப்பு ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

உட்புற கட்டமைப்பைப் பொருத்தவரை எல்லாம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் உட்புற லைட்டிங்கள், டிரைவிங் மோட் மூலம் மாறும் லைட்டிங்கள், எனப் பல குறிப்பிடவேண்டிய சூப்பரான அம்சங்கள் இந்த காரில் உள்ளது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

கம்ஃபோர்ட் மற்றும் பூட் ஸ்பேஸ்

கம்ஃபோர்ட் என்ற வார்த்தைக்குப் பதில் வேறு வார்த்தை எழுத வேண்டும் என்றால் நாம் யோசிக்காமல் மெர்சிடிஸ் பென்ஸ் என்ற வார்த்தையை எழுதி விடலாம். அந்நிறுவனம் அந்த நிறுவனங்களால் கார்களின் பயணிப்பவர்களுக்குத் தேவையான ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துச் பார்த்து செய்கிறது. இதனால் இந்த நிறுவனத்தின் எல்லா கார்களும் கம்ஃபோர்ட்டான காராகவே மார்கெட்டில் விற்பனையாகிறது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

இதற்காக இந்த காரின் சீட்டில் பயன்படுத்தப்பட்ட லெதர் முதல் எல்லாம் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் கம்ஃபோர்ட் எந்த அளவிற்கு இருக்கும் என்றால் கார் வேகமாகச் செல்லும் போதும் டிரைவர் மற்றும் பயணிப்பவர்கள் ஒரு இன்ச் கூட நகராத படி காரின் சொகுசு விஷயங்களை வடிவமைத்துள்ளனர்.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

காரின் பின்புறத்தைப் பொறுத்தவரைப் பயணிகளுக்கான ஏசி வென்ட் தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இது சென்டர் கன்சோலில் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏசி வென்ட்களிலும் கிளைமேட் கண்ட்ரோல்கள் உள்ளன. அதனால் பின்புறமும் சரியான தட்ப வெட்ப நிலையைப் பராமரிக்க முடியும்.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ள டூயல் பேன் பானரோமிக் சன் ரூப் காருக்குள் நல்ல காற்றோட்டமான ரிலாக்ஸான சூழ்நிலையை உருவாக்குகிறது. ஆனால் பின்பக்க சீட்டின் இடவசதி அளவை விட முன்புற சீட்டின் இடவசதி அளவு சிறியதாக அமைக்கப்பட்டுள்ளது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

இந்த காரின் கேபி ஹோல்ஸ், கிளவ் பாக்ஸ், சென்டர் கன்சோல், டோர்பேனல் ஆகியவை தேவையான இடத்தில் சரியான அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இது தன் வேலைகளை மிகச் சரியாகச் செய்யும்படி டிசைன் செய்யப்பட்டுள்ளது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

இந்த காரின் பூட் பகுதியைப் பொறுத்தவரை, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மொத்தம் 455 லிட்டர் பூட் வசதியை வழங்கியுள்ளது. இது சாதாரண பூட் வசதி தான். இந்த செக்மெண்ட்காரில் இதை விட அதிக பூட் வசதி கொண்ட கார்கள் இருக்கிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

இன்ஜின் மற்றும் செயல் திறன்

இந்த பகுதியில் தான் மெர்சிடிஸ் நிறுவனம் தன் கெத்தை காட்டுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அருமையான டிரைவிங் அனுபவத்தை வழங்குவதில் பெயர் பெற்ற நிறுவனம். இந்நிறுவனம் பவர்ஃபுல் இன்ஜின் உடன் பின்பக்க வீல் டிரைவ் ஆப்ஷனை வழங்குகிறது. இந்த காரின் பெட்ரோல் இன்ஜின் உடன் அப்டேட் செய்யப்பட்ட பவர்டெரைன் பொருத்தப்பட்டுள்ளது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

இந்த காரில் இரண்டு டீசல் இன்ஜின் மற்றும் ஒரு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. பேஸ் மாடலான C200 இன்ஸ் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் வருகிறது. அது பழைய காரில் 1.5 லிட்டர் இன்ஜினாக இருந்தது. புதிய காரின் பவரை பொறுத்தவரை 204 பிஎச்பி மற்றும் 300என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

அடுத்த ஆப்ஷனாக C220d காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 200 பிஎச்பி மற்றம் 440 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதே இன்ஜின்தான் டாப் ஸ்பெக் மாடலிலும் உள்ளது. ஆனால் அந்த காரில் இது 265 பிஎச்பி மற்றும் 550 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

இந்த மூன்று இன்ஜின்களும் 9 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ்களுடன் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் உடன் வருகிறது. ஹைபிரிட் சிஸ்டத்திற்காக ISG எனப்படும் இன்டர்கிரேட்டட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் என்ற கருவி பொருத்தப்பட்டுள்ளது. இது இன்ஜினிற்கு கூடுதலாக 20 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனைக் கொடுக்கிறது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் C300d என்ற காரை பெர்ஃபாமென்ஸ் காராக அறிமுகப்படுத்துகிறது. மற்ற இரண்டு வேரியண்ட்களின் பெர்ஃபாமென்ஸ் இந்த காரை ஒப்பிடும் சற்று குறைவு தான். இந்த மூன்று கார்களிலும் இன்ஜின் சத்தம் வெளியில் அவ்வளவாகக் கேட்கவேயில்லை. கார் ஸ்டார்ட்டில் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதே தெரியாத அளவிற்கு காரின் இன்ஜின் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

இந்த காரின் ஆக்ஸிலரேஷனை பொருத்தவரை முதலில் குறைவாக இருக்கிறது. மிட்ரேஜ் வந்த பின்பு சற்று வேகமாக ஆக்ஸிலரேட் ஆக துவங்குகிறது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை 7.3 நொடியில் செல்கிறது. வேகமாகச் செல்லும் போது இந்த காரின் பெர்ஃபாமென்ஸ் இந்த மிக அற்புதமாக இருக்கிறது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

இந்த காரின் 9ஜி ட்ரோனிக் டிரான்ஸ்மிஷன் கியர் பொருத்தப்பட்டுள்ளது. இது இந்த இன்ஜினிற்கு மிகப்பொருத்தமான கியர் பாக்ஸாக உள்ளது. கியரை மாற்றுவது எளிமையாக நடக்கிறது. டிரைவரின் இன்புட்களுக்கு ஏற்ப கியர் தானாக மாறுகிறது. அதே நேரத்தில் வரிசையாக கியர் மாறால் எப்படி டிரைவ் செய்யப்படுகிறதோ அதற்குத் தகுந்தார் போல ஓரிரு கியர்களை ஸ்கிப் செய்யவும் செய்கிறது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

தற்போது உள்ள c கிளாஸ் காரில் ஸ்டியரிங்கில் சற்று மாற்றம் தேவை என தற்போது பயன்படுத்தி வருபவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அது இந்த காரின் மாற்றப்பட்டுள்ளது.மிக துல்லியமாக்க இந்த கார் ஸ்டியரிங் வேலை செய்கிறது.ஒரு இடத்தில் கூட பழைய காரில் உள்ள டிஸ்கனெக்ஷன் ஃபீல் வரவில்லை.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

புதிய c கிளாஸ் காரில் சஸ்பென்சனும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பழைய காரிலிருந்து இன்னும் நல்ல சஸ்பென்சன் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. கரடு முரடான ரோடுகளில் கூட காருக்குள் அதிர்வுகள் தெரியவில்லை. இது காருக்குள் பயணிப்பவர்களுக்குச் சிறப்பான அனுபவத்தை வழங்கியுள்ளது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் C200 கார் லிட்டருக்கு 16.9 கி.மீ மைலேஜை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் இது நல்ல ரோடுகளில் கிடைக்கலாம். பெரும்பாலாலும் அதிக வேகத்தில் செல்லும்போது கிடைக்கலாம் ஆனால் உண்மையில் அதை விடக் குறைவாகக் கிடைக்கும். மொத்தத்தில் இந்த காரில் ஒட்டு மொத்தமாக பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்கிறது. சஸ்பென்சன் சிறப்பாக இருக்கிறது. கம்ஃபோர்ட் அளவும் சிறப்பாக இருக்கிறது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

பாதுகாப்பு மற்றும் முக்கிய அம்சங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பாதுகாப்பு அம்சங்களுக்குப் பெயர் போன கார். அந்நிறுவனத்தின் எல்லா கார்களுமே சிறப்பான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் இந்நிறுவனம் 1981ம் ஆண்டே தனது s கிளாஸ் காரில் ஏர் போக்கை பொருத்தியிருந்தது. அன்று முதல் இன்று வரை சிறப்பான ஏர்பேக்கை வைத்து வருகின்றனர்.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

2022 மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் காரின் பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரை இந்த காரில் ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட் உடன் கூடிய அட்டென்ஷனவ் அசிஸ்ட் பொருத்தப்பட்டுள்ளது. ஆக்டிவ் பிளைன்ட் ஸ்பாட் அசிஸ்ட், ஆக்டிவ் ஸ்டிரிங் அசிஸ்ட், ஆக்டிவ் லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் ஹைபீம் அசிஸ்ட், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல்,

8 ஏர்பேக்கள், அண்ட்டி விபிளாஷ் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

இந்த காரின் முக்கிய அம்சங்களாக 11.9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட், இரண்டாம் தலைமுறை MBUX கனெக்ட்டிவிட்டி சூட், 12.3 இன்ச் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்பிளே, ஆம்பியன்ட் லைட்டிங், லெதர் சீட்ஸ், உட்புறத்திற்கான பல கலர் ஆப்ஷன்கள், டூயல் பேன் சன் ரூஃப், இரண்டு சோன் கிளைமேட் கண்ட்ரோல் ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

இந்த கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் 6 கலர் ஆப்ஷன்களுடன் வருகிறது. - C200, C220d, C300d ஆகிய கலர் ஆப்ஷன்களும், மோஜி சில்வர், செலட்டின் க்ரே, ஹைடெக் சில்வர், மேனுஃபாக்தர் ஓப்பலைட் ஓயிட், காவன்சைட் ப்ளு, ஓப்சிடன் பிளாக் ஆகிய ஆப்ஷன்கள், உள்ளன.

அடேங்கப்பா இந்த பென்ஸ் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரிவியூ

மொத்தத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் இந்த கார் மூலம் தங்கள் நிறுவன தயாரிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். சிறப்பான டெக்னாலஜி வசதி, மினிமலான தொழிற்நுட்ப வசதி, என மனதை ஈர்க்கும் தொழிற்நுட்பத்தை இதில் புகுத்தியுள்ளது. இந்த காரில் குறைகளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வெற்றிக் கதைகளில் ஒன்றாக நிச்சயம் சேரும் என நம்பலாம்.

Most Read Articles

English summary
Mercedes Benz launched 2022 c class car in India find the review here
Story first published: Monday, May 9, 2022, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X