டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

2019ம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட ஹெக்டர் எஸ்யூவி கார் மூலமாக இந்திய மார்க்கெட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை எம்ஜி நிறுவனம் பெற்றது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி கார் 4 வேரியண்ட்கள் மற்றும் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளையும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி பெற்றுள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

விலையும் மிக சவாலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி பெற்றுள்ளது. ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு வந்து ஒரு ஆண்டு கடந்து விட்ட நிலையில், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன், ஹெக்டர் ப்ளஸ் காரை எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

அடிப்படையில் 6 சீட்டர் காரான எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி, வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் டிசைன் மாற்றங்களுடன் வந்துள்ளது. இதன் மூலம் 5 சீட்டர் காரான எம்ஜி ஹெக்டருடன் ஒப்பிடும்போது, ஹெக்டர் ப்ளஸ் தனித்து நிற்கிறது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் டீசல் மாடலை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.

புனேவில் வைத்து அந்த காரை நாங்கள் ஓட்டி பார்த்தோம். இதில், கிடைத்த சாதக, பாதகங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டிசைன் மற்றும் ஸ்டைலிங்:

டிசைன் மற்றும் ஸ்டைலிங்கை பொறுத்தவரை எம்ஜி நிறுவனம் ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி காரில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. எம்ஜி ஹெக்டர் 5 சீட்டர் காரை போலவே, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரும் நன்றாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. எம்ஜி நிறுவனம் அதன் மற்ற கார்களை காட்டிலும் ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி காருக்கு பிரீமியமான லுக்கை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி காரானது, அகலம், உயரம் மற்றும் வீல்பேஸ் ஆகிய பரிமாணங்களை 5 சீட்டர் ஸ்டாண்டர்டு ஹெக்டர் காருடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த காரின் அகலம், உயரம் மற்றும் வீல்பேஸ் முறையே 1,835 மிமீ, 1,760 மிமீ மற்றும் 2,720 மிமீ. ஆனால் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் நீளம் 65 மிமீ அதிகரித்துள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

5 சீட்டர் ஹெக்டரின் நீளம் 4,655 மிமீ மட்டுமே. ஆனால் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி காரின் நீளம் 4,720 மிமீ என்பது குறிப்பிடத்தக்கது. காரை பார்த்த உடனே அனைவரும் கவனிக்கும் முதல் விஷயமாக இது உள்ளது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் முன்புறம், க்ரோம் பதிக்கப்பட்ட புதிய க்ரில் அமைப்பை பெற்றுள்ளது. ஹெக்டருடன் ஒப்பிடும்போது இதில் எம்ஜி நிறுவனம் மாறுதல்களை செய்துள்ளது.

எம்ஜி ஹெக்டர் காரின் முன்பக்க க்ரில்லை சுற்றிலும் க்ரோம் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் ஹெக்டர் ப்ளஸ் காரில் அது போல் இல்லை. அதேபோல் பம்பர்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. க்ரில்லின் மையத்தில் எம்ஜி நிறுவனத்தின் பேட்ஜ் கம்பீரமாக வீற்றுள்ளது. அதன் கீழே டிரைவிங் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக கேமரா வழங்கப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

அத்துடன் ஸ்கஃப் பிளேட் (Scuff Plate), ஏர் டேம் ஆகியவையும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி காரின் பக்கவாட்டு பகுதியும் மிகவும் அருமையாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. அது வலுவானதாகவும் தோற்றமளிக்கிறது. ஏ பில்லரில் இருந்து டி பில்லர் வரை வழங்கப்பட்டுள்ள குரோம் பட்டையும் காருக்கு கவர்ச்சி சேர்க்கிறது.

மேலும் டோர் ஹேண்டில்களிலும் குரோம் பூச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர ஃபுட்போர்டிலும் குரோம் வேலைப்பாடுகளை காண முடிகிறது. இதில், எம்ஜி என்ற பெயரும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் ரூஃப் ரெயில்கள் மிகவும் வலுவாக உள்ளன. ஷார்க் ஃபின் ஆன்டெனாவையும், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் கார் பெற்றுள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் பின்பகுதியானது, ரீ-டிசைன் செய்யப்பட்ட பம்பர், எல்இடி டெயில் லேம்ப்கள், ரீ-டிசைன் செய்யப்பட்ட பூட் லிட் மற்றும் எலெக்ட்ரானிக் டெயில்கேட் ஆகியவற்றை பெற்றுள்ளது. ஸ்கஃப் பிளேட்டுக்கு கீழாக காலை ஸ்வைப் செய்வதன் மூலம் டெயில்கேட்டை திறக்க முடியும் என்பது உண்மையிலேயே அட்டகாசமான ஒரு வசதிதான்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இன்டீரியர்

ஹெக்டர் ப்ளஸ் காரில், சௌகரியமான மற்றும் கவர்ச்சிகரமான இன்டீரியரை எம்ஜி வழங்கியுள்ளது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் டேஷ்போர்டு உயர்தரமான மெட்டீரியல்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் லெதரும் வழங்கப்பட்டுள்ளது. இது காருக்கு பிரீமியம் உணர்வை கொடுக்கிறது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி காரில் லெதர் சுற்றப்பட்ட மல்டிஃபங்ஷனல் ஸ்டீயரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இது நமக்கு திடமான உணர்வை வழங்குகிறது. வால்யூம் கண்ட்ரோல், காலிங் ஃபங்ஷன்கள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. டேஷ்போர்டின் இரண்டு பக்கமும் கிடைமட்டமாக இரண்டு ஏர் கண்டிஷனிங் வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

அத்துடன் 10.4 இன்ச் டன் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தின் இரு பக்கமும் செங்குத்தாக 2 வெண்ட்கள் உள்ளன. எளிமையான மற்றும் திறன்மிக்க லேஅவுட்டை பெற்றுள்ளதால், டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கிறது. எம்ஜி நிறுவனத்தின் ஐ-ஸ்மார்ட் கனெக்டட் டெக்னாலஜியின் புதிய வெர்ஷனை இந்த சிஸ்டம் பெற்றுள்ளது. இந்த ஐ-ஸ்மார்ட் கனெக்டட் டெக்னாலஜி, 55க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் வசதிகளை வழங்குகிறது.

ஜியோஃபென்சிங், வாய்ஸ் அஸிஸ்டண்ட் மற்றும் எமர்ஜென்ஸி கால் போன்றவை முக்கியமான வசதிகள். 8 இன்ஃபினிட்டி ஸ்பீக்கர்கள் மற்றும் ட்வீட்டர்களுடன் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி வந்துள்ளது. அவை மிகவும் அருமையாக உள்ளன. எந்த வால்யூம் வைத்தாலும் நாங்கள் கேட்டது இசை மட்டும்தான். தேவையில்லாத அதிர்வுகள் இல்லை.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த காரின் முன்வரிசை இருக்கைகளை மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். ப்ரவுன் லெதருடன் வரும் அவை மிகவும் சௌகரியமாக உள்ளன. இந்த காரின் இரண்டாவது வரிசையில் மிகவும் சௌகரியமான கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளை நகர்த்த முடியும் என்பதுடன் சாய்ந்து கொள்ளவும் முடியும்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

அத்துடன் இந்த இருக்கைகளுக்கு என தனியாக ஆர்ம் ரெஸ்ட்களும் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு கேப்டன் இருக்கைகளுக்கு இடையே தாராளமாக வெற்றிடம் உள்ளது. குழந்தைகள் இதன் வழியாகவே மிக எளிதாக மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கு சென்று விட முடியும். மூன்றாவது வரிசை இருக்கைகள் குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கு இடையே குறைந்த அளவுதான் லெக்ரூம் உள்ளது. எனவே பெரியவர்கள் அமர்ந்தால் நெருக்கடியாகவும், சௌகரியம் இல்லாத உணர்வும் ஏற்படலாம். இந்த இருக்கைகளை 50:50 என்ற விகிதத்தில் மடித்து கொள்ள முடியும். தேவைக்கு ஏற்ப இந்த இருக்கைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

மூன்றாவது வரிசை இருக்கைகளில் ஏர் கண்டிஷனிங் கண்ட்ரோல்களும் உள்ளன. ட்யூயல் பேன் பனரோமிக் சன்ரூஃப்பை, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி காரின் ஹைலைட்டாக குறிப்பிடலாம். பட்டனை தொடுவதன் மூலமாக ரூஃப்பை திறக்க முடியும். ஆனால் இரண்டு கட்டங்களாகதான் அது திறக்கும். முதலில் பாதி சன்ரூஃப் திறந்து விடும். பட்டனை மீண்டும் புஷ் செய்தால்தான் அடுத்த பாதி திறக்கும்.

சன்ரூஃப்பை திறந்து வைத்து கொண்டு, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி காரை ஓட்டுவது குதூகலமான உணர்வை தருகிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

நடைமுறை பயன்பாடு, சௌகரியம் மற்றும் பூட் ஸ்பேஸ்

பொதுவாக எஸ்யூவி கார்கள் என்றாலே நடைமுறை பயன்பாட்டிற்கு உகந்ததாகதான் வடிவமைக்கப்படும். அவை போதுமான சௌகரியத்தையும் வழங்கும். பூட் ஸ்பேசும் தேவையான அளவிற்கு இருக்கும். இதை எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி காரும் உறுதி செய்கிறது. இந்த எஸ்யூவியின் டிரைவர் மற்றும் முன்பக்க பாசஞ்சர் இருக்கைகள் உண்மையிலேயே மிகவும் சௌகரியமாக உள்ளன.

அவை தொடைக்கு நல்ல சப்போர்ட்டையும் வழங்குகின்றன. 2வது வரிசை இருக்கைகளை பொறுத்த அளவில் சௌகரியத்திற்கு பஞ்சமே இல்லை. அவற்றின் சொந்த ஆர்ம்ரெஸ்ட்களும், இரு கேப்டன் இருக்கைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியும், பயணிகளுக்கு அதிக சுதந்திரத்தையும், தாராளமான இட வசதியையும் வழங்குகின்றன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

ஆனால் மூன்றாவது வரிசை இருக்கைகளில் லெக் ரூம் குறைவாகதான் உள்ளது. ஏற்கனவே சொன்னதுபோல், குழந்தைகளுக்காக அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி சிறிய பூட்டைதான் பெற்றுள்ளது. அதன் பூட் கெப்பாசிட்டி 155 லிட்டர்கள் மட்டுமே. ஆனால் ஹெக்டர் 5 சீட்டர் மாடலின் பூட் கெப்பாசிட்டி 587 லிட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் மூன்றாவது வரிசை இருக்கைகளை மடித்து வைத்து கொள்ளும்பட்சத்தில், பூட் ஸ்பேஸ் கணிசமாக அதிகரிக்கிறது. இதன் மூலம் நீங்கள் அதிக லக்கேஜை காரில் ஏற்றி செல்ல முடியும். முன் வரிசை பயணிகள் காரில் ஏறி, இறங்குவது சுலபமாக உள்ளது. ஆனால் இருக்கைகள் போதுமான அளவிற்கு தள்ளப்படவில்லை என்றால், இரண்டாவது வரிசை பயணிகள் ஏறி, இறங்குவது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.

மூன்றாவது வரிசை இருக்கைகளை பொறுத்தவரை குழந்தைகள் ஏறி, இறங்குவது மிகவும் சுலபம். ஆனால் பெரியவர்கள் என்றால் ரொம்பவே கஷ்டம்தான்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இன்ஜின் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் டிரைவிங் அனுபவம்

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி கார் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இதில், முதலாவது 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின். இது பெட்ரோல்-ஹைப்ரிட் வேரியண்ட்டாகவும் கிடைக்கிறது. 2 பெட்ரோல் வேரியண்ட்களும், 141 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும்தான் வெளிப்படுத்துகின்றன.

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டிசிடி ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. எனினும் ஹைப்ரிட் வேரியண்ட், 6 ஸ்பீடு மேனுவல் ஆப்ஷனுடன் மட்டும்தான் கிடைக்கிறது. இரண்டாவது இன்ஜின் ஆப்ஷன், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் இந்த இன்ஜின் கிடைக்கிறது. குறைந்த அளவு நேரம் மட்டுமே இருந்ததால், டீசல் மாடலை மட்டும்தான் நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். ஆனால் அதன் பவர் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் எங்களை வெகுவாக கவர்ந்தது. அதே சமயம் ஏற்கனவே ஓட்டியதை போன்ற உணர்வை இந்த டீசல் இன்ஜின் உடனடியாக தந்து விடுகிறது.

இதற்கு காரணம் உள்ளது. இது ஃபியட் நிறுவனத்தின் இன்ஜின் ஆகும். எம்ஜி நிறுவனத்தின் 5 சீட்டர் ஹெக்டர் உள்பட மற்ற கார்களிலும் இந்த இன்ஜின் வழங்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில், இந்த இன்ஜினின் பெர்ஃபார்மென்ஸ் பெரிதாக மாறவில்லை. தினசரி நகரங்களிலும் ஓட்டுவதற்கும், நெடுஞ்சாலைகளில் லாங் டிரிப் அடிப்பதற்கும் என இரண்டிற்கும் பவர் டெலிவரி பொருந்துகிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

1,700 ஆர்பிஎம் என்ற ஆரம்ப நிலையிலேயே, பெரும்பான்மையான டார்க் வெளிப்படுகிறது. சிட்டி டிராபிக்கில், வேகமாகவும், எளிதாகவும் ஓவர்டேக் செய்ய இது உதவுகிறது. கிளட்ச்சை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் இலகுவான உணர்வை தருகிறது. ஆனால் நின்று நின்று செல்லும் சிட்டி டிராபிக்கில் இது கொஞ்சம் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். பழகுவதற்கு சிறிது நேரம் ஆகும்.

கியர் ஷிப்ட்கள் ஸ்மூத்-ஆக உள்ளன. கியரை மாற்றும்போது அதிக நேரம் எடுப்பதில்லை. 5 சீட்டர் ஹெக்டர் எஸ்யூவி காருடன் ஒப்பிடும்போது, ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி காரில், சஸ்பென்ஸன் இன்னும் மென்மையாக உள்ளது. இதன் மூலம் ஹெக்டர் ப்ளஸ் காரில் பிரீமியமான சவாரி உங்களுக்கு கிடைக்கும். குண்டும், குழியுமான சாலைகள் மற்றும் கடினமான நிலப்பரப்புகளை ஹெக்டர் ப்ளஸ் எளிதாக கடக்கிறது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி காரின் பிரேக்கிங் அற்புதமாக உள்ளது. இந்த காரின் நான்கு சக்கரங்களிலும், டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 1,700 கிலோ எடை கொண்ட இந்த பிரம்மாண்ட எஸ்யூவியை அவை விரைவாக நிறுத்தி விடுகின்றன. எனவே நம்பிக்கையுடன் ஓட்ட முடிகிறது. இந்த காரின் ஸ்டியரிங் இலகுவாக உள்ளது.

நெருக்கமான கார்னர்களிலும், நகர போக்குவரத்து சூழல்களிலும் ஓட்டுவதற்கு நன்றாக உள்ளது. எனினும் கொஞ்சம் பாடி ரோல் இருப்பதை எங்களால் உணர முடிந்தது.

Engine Specs Petrol Petrol Hybrid Diesel
Engine CC 1541 1541 1956
No.Of Cylinders 4 4 4
Power (bhp) 141 141 168
Torque (Nm) 250 250 350
Transmission 6-MT/7-DCT 6-MT 6-MT
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

வசதிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள்

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி கார் அட்டகாசமான வசதிகளுடன் வந்துள்ளது. இதில், ஒரு சில முக்கியமான வசதிகளை நீங்கள் கீழே காணலாம். இதில், பெரும்பாலான வசதிகள் ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  • ரிமோட் கீலெஸ் எண்ட்ரி
  • ரெக்லைன் மற்றும் ஸ்லைடு ஃபங்கஷன்களுடன் இரண்டாவது வரிசை கேப்டன் இருக்கைகள்
  • மூன்றாவது வரிசை 50:50 ஸ்பிளிட் இருக்கைகள்
  • இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை ஏசி வெண்ட்கள்
  • ஸ்டோரேஜ் உடன் டிரைவருக்கு ஆர்ம்ரெஸ்ட் & 12V பவர் அவுட்லெட்
  • மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம்கள்
  • முன் மற்றும் பின் பகுதியில் ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட்கள்
  • கூல்டு க்ளவ் பாக்ஸ்
  • டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

    பாதுகாப்பு வசதிகளிலும் எம்ஜி குறைவைக்கவில்லை. இந்த செக்மெண்ட்டில் ஒரு காரில் நீங்கள் என்னென்ன பாதுகாப்பு வசதிகளை எதிர்பார்ப்பீர்களோ? அவை அனைத்தும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவற்றை கீழே காணலாம்.

    • அதிகபட்சமாக 6 ஏர்பேக்குகள்
    • எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம்
    • இபிடி உடன் ஏபிஎஸ்
    • ரியர் பார்க்கிங் சென்சார்கள்
    • 360 டிகிரி கேமரா (ஷார்ப் வேரியண்ட்டில் கிடைக்கிறது)
    • ஐசோபிக்ஸ் சைல்டு சீட் ஏங்கர்கள்
    • ஹை-ஸ்பீடு வார்னிங் சிஸ்டம்
    • கார்னரிங் ஃபாக் லேம்ப்ஸ்
    • டிராக்ஸன் கண்ட்ரோல்
    • டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

      வேரியண்ட்கள், கலர்கள் மற்றும் விலை

      ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் ஆகிய 4 வேரியண்ட்களில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் கார் கிடைக்கிறது. பேஸ் பெட்ரோல் வேரியண்ட்டின் விலை 13.49 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதே சமயம் டாப் எண்ட் ஷார்ப் டீசல் ட்ரிம்மின் விலை 18.54 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை இந்திய எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

      ஸ்டேரி ஸ்கை ப்ளூ, க்ளாசே ரெட், பர்கண்டி ரெட், ஸ்டேரி பிளாக், கேண்டி ஒயிட் மற்றும் அரோரா சில்வர் என 6 வண்ணங்களில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் கார் கிடைக்கும்.

      டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

      போட்டியாளர்கள்

      எம்ஜி நிறுவனம் தெரிவிக்கும் தகவல்களின்படி, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காருக்கு, ஹெக்டர் ப்ளஸ் நேரடி போட்டியாளராக இருக்கும். அத்துடன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டாடா கிராவிட்டாஸ் போன்ற 6 மற்றும் 7 சீட்டர் எஸ்யூவி கார்களுக்கும் இது போட்டியை கொடுக்கும்.

      Competitors/Specs MG Hector Plus Toyota Innova Crysta Tata Gravitas
      Engine 1.5 Petrol/2.0 Diesel 2.7 Petrol/2.4 Diesel 2.7 Diesel
      Power (bhp) 141/168 164/148 170
      Torque (Nm) 250/350 245/343 350
      Transmission 6-MT/DCT 5-MT/6-MT/AT 6-MT/6-AT
      Price (ex-showroom) Rs 13.49-18.54 Lakh Rs 15.67 - Rs 24.68 Lakh *TBA
      டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

      தீர்ப்பு

      13.49 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் கார், நன்றாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுவதற்கும் நன்றாக உள்ளது. அத்துடன் சௌகரியமான கேபினையும் பெற்றுள்ளது. இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகளுடன், விசாலமான கேபின் கொண்ட ஒரு காரை எதிர்பார்ப்பவர்களுக்கு இது நல்ல தேர்வு. இதெல்லாம் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில், 15.66 லட்ச ரூபாய்க்கு (எக்ஸ் ஷோரூம்) வழங்கப்படுகிறது.

      எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் மூன்றாவது வரிசை, பெரியவர்களுக்கு அவ்வளவு சௌகரியமாக இல்லை. என்றாலும் குழந்தைகளை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். ஒட்டுமொத்தமாக பார்த்தால், பிரீமியம் இன்டீரியர் மற்றும் நுட்பமான டிசைன் மாற்றங்களுடன், ஹெக்டர் காரின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்தான் ஹெக்டர் ப்ளஸ்!

Most Read Articles
English summary
MG Hector Plus SUV First Drive Review: Performance, Specs, Features, Images. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X