புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இந்திய மார்க்கெட்டில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என எம்ஜி (MG - Morris Garages) நிறுவனம் முடிவு செய்தபோது, அனைத்து விஷயங்களையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என விரும்புவதாக கூறியது. சொன்னது போலவே இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என்ற பெருமையுடன் ஹெக்டர் எஸ்யூவியை கடந்த ஜூன் மாதம் எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இந்திய மார்க்கெட்டில் எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் கார் இதுதான். எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி வழக்கமான பெட்ரோல், டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. மிக சவாலான விலையில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்திய சூழலில், தற்போது இந்தியாவில் தனது இரண்டாவது தயாரிப்பை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது எம்ஜி நிறுவனம். இதில், என்ன வித்தியாசம்? என்ற உங்களுடைய கேள்விக்கு முதலில் பதில் சொல்லி விடுகிறோம். இது ஒரு எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார். இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் தனது அடுத்த தயாரிப்பாக களமிறக்குகிறது எம்ஜி.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இந்தியாவில் எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் தயாரிப்பு இது. 'இந்தியாவின் முதல் ப்யூர் எலெக்ட்ரிக் இன்டர்நெட் கார்' என்ற பெருமையுடன் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வரவுள்ளது. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வரும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரானது முதலில் ஐந்து நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர் மற்றும் அகமதாபாத் ஆகியவைதான் அந்த 5 நகரங்கள். இதன்பின் இந்தியாவின் மற்ற நகரங்களுக்கும் படிப்படியாக விற்பனை விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு சமீபத்தில் கிடைத்தது. எம்ஜி நிறுவனம் தனக்கே உரிய பாணியில், இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் பல்வேறு அதிநவீன வசதிகளை வாரி வழங்கியுள்ளது.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

சரி, எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஓட்டுவதற்கு எப்படி இருக்கிறது? இந்திய மார்க்கெட்டில் தற்போது எலெக்ட்ரிக் காரை வாங்குவது சரியாக இருக்குமா? என்பது உள்பட உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் இந்த செய்தி விடை காண்கிறது. முதலில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் டிசைன் மற்றும் ஸ்டைலில் இருந்து தொடங்கலாம்.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

டிசைன் & ஸ்டைல்

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி முதல் பார்வையிலேயே ஆளை அசத்துகிறது. எம்ஜி நிறுவனத்திற்கே உரிய ஒமேகா வடிவ எல்இடி டிஆர்எல்கள் உடன் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வருகிறது. லண்டன் ஐ-ஆல் ஈர்க்கப்பட்டு, இதன் எல்இடி ஹெட்லேம்ப்களை டிசைன் செய்திருப்பதாக எம்ஜி கூறுகிறது. லண்டன் ஐ என்பது, தேம்ஸ் நதியின் தென் கரையில் அமைந்துள்ள ஒரு வீல்.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் வியூ பாயிண்ட்களில் இதுவும் ஒன்று. இதனை மனதில் வைத்து எல்இடி ஹெட்லேம்ப்களை டிசைன் செய்திருப்பதன் மூலம் இங்கிலாந்திற்கு மரியாதை செய்துள்ளது எம்ஜி நிறுவனம். இந்த ஹெட்லேம்ப்கள் உங்களுக்கு பார்க்கும் சக்தியை அதிகமாக வழங்க கூடிய திறன் வாய்ந்தவையாக உள்ளன.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இரு முனைகளிலும் உள்ள ஹெட்லேம்ப்களுக்கு நடுவே, குரோம் வேலைப்பாடுகளுடன் கூடிய குழிவான க்ரில் வழங்கப்பட்டுள்ளது. இதன் நடுவே எம்ஜி நிறுவனத்தின் லோகோ வழங்கப்பட்டுள்ளது. இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை பார்த்த உடனேயே ஒருவர் கவனிக்கும் முதல் விஷயம் நிச்சயம் அதன் க்ரில் அமைப்பாகதான் இருக்கும்.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

சக்தி வாய்ந்த காந்தப்புலத்தால் கேலக்ஸி இணைக்கப்பட்டிருப்பதை இது குறிக்கிறது என எம்ஜி நிறுவனம் கூறுகிறது. முன் பக்க க்ரிலை சுற்றிலும் மெல்லிய குரோம் பட்டை வழங்கப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப்கள் உடன் இணையும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் முன் பகுதிக்கு இது பிரிமீயமான உணர்வை கொடுக்கிறது.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இனி எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் பக்கவாட்டு பகுதிக்கு செல்வோம். இதன் பக்கவாட்டு பகுதி குறைந்தபட்ச ஸ்டைலிங் உடன் மிகவும் தெளிவாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவியின் நீளம் முழுமைக்கும் வலுவான சோல்டர் லைன் வழங்கப்பட்டுள்ளது. இது ஹெட்லேம்ப்களில் தொடங்கி, ரியர் டெயில்லைட்களுடன் இணைகிறது.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. டச்சு கிளாசிக் விண்டுமில்களால் ஈர்க்கப்பட்டு, தனித்துவமான முறையில் இதன் சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மின்சார மாடல் என்பதால், இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், சுத்தமான ஆற்றல் கூறுகளை எம்ஜி நிறுவனம் சேர்த்துள்ளது.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இதன் 17 இன்ச் அலாய் வீல்கள் காற்றாலைகளை குறிக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருப்பது அதற்கு ஒரு உதாரணம். இனி அப்படியே இந்த காரின் பின்பகுதிக்கு நகர்வோம். இதன் எல்இடி டெயில்லைட்கள் 'பிக் டிப்பர்' என கூறப்படுகின்றன. உர்ஸா மேஜர் நட்சத்திர கூட்டத்தில் உள்ள 7 பிரகாசமான நட்சத்திரங்களால் ஈர்க்கப்பட்டு இது டிசைன் செய்யப்பட்டுள்ளது.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

பிரகாசமான டெயில்லைட்கள் தவிர, பூட் உடன் கூடிய சிறிய ஸ்பாய்லர், ரியர் பம்பரின் இரு முனைகளிலும் ரெஃப்லெக்டர்கள் ஆகியவற்றையும் இந்த காரின் பின் பகுதி பெற்றுள்ளது. இதன் பூட் லிட்டின் நடுவே எம்ஜி லோகோ இடம்பெற்றுள்ளது. அத்துடன் அதன் கீழாக ‘Internet Inside' மற்றும் ‘ZS EV' பேட்ஜ்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இன்டீரியர் & நடைமுறை பயன்பாடு

இனி எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் கேபினுக்குள் நுழைவோம். இதன் டேஷ்போர்டில் கருப்பு நிற தீம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வழங்கப்பட்டுள்ள சில்வர் நிற ஹைலைட்களும் கூடுதல் சிறப்பை சேர்க்கின்றன. சாஃப்ட்-டச் பிரிமீயம் மெட்டீரியல்களுடன் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை எம்ஜி வழங்குகிறது.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் டேஷ்போர்டு சற்றே தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் விண்டோ பெரிதாக இருப்பதால், வெளிப்புறத்தை நன்கு காண முடிகிறது. மேலும் இரு முனைகளிலும் வட்ட வடிவ ஏசி வெண்ட்களுடனும் டேஷ்போர்டு வருகிறது. அதே சமயம் நடுவில் உள்ள வெண்ட்கள் செவ்வக வடிவில் உள்ளன. சென்டர் கன்சோலுடன் அவை நன்றாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இந்த காரின் ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. அதன் நடுவே எம்ஐடி கொடுக்கப்பட்டுள்ளது. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் சென்டர் கன்சோல், அதன் டிரைவருக்கு சற்று நெருக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டிரைவரால் அனைத்து கண்ட்ரோல்களையும், வசதிகளையும் பயன்படுத்த முடியும்.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் 3-ஸ்போக் ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. ஆடியோ மற்றும் இதர வசதிகளுக்கான கண்ட்ரோல்கள் இதில் உள்ளன. ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், எம்ஜி நிறுவனத்துடைய ஐ-ஸ்மார்ட் 2.0 கனெக்டட் டெக்னாலஜி வசதி வழங்கப்படுகிறது. இது ஹெக்டர் காரில் நாம் பார்த்த ஸ்மார்ட் கனெக்டிவிட்டி வசதியின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த எஸ்யூவியின் இருக்கைகள் பிரிமீயம் உணர்வை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சௌகரியமான பயணத்திற்கு அவை உதவுகின்றன.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

டிரைவர் மற்றும் முன்பக்க பாசஞ்சர் இருக்கைகளில், தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரின் டிரைவர் இருக்கையை மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். முன் பக்க பாசஞ்சர் மற்றும் டிரைவருக்கு சென்ட்ரல் ஆர்ம்ரெஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் ஸ்டோரேஜ் கம்பார்ட்மெண்ட்டும் உள்ளது.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இனி இந்த எஸ்யூவியின் பின் இருக்கைகளுக்கு நகர்வோம். பின் இருக்கைகளும் சௌகரியமான பயணத்தை வழங்க கூடியவையே. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஃப்ளாட் ஆன தரையுடன் வருகிறது. இதன்மூலம் நல்ல லெக்ரூம் கிடைப்பதால், பின் இருக்கைகளில் மூன்று பயணிகள் சௌகரியமாக அமர்ந்து பயணம் செய்ய முடியும். பின் இருக்கைகளில் நல்ல ஹெட்ரூமும் இருக்கிறது.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் கேபின் காற்றோட்டமாக இருக்கிறது. பெரிய பனரோமிக் சன் ரூஃப் மற்றும் பெரிய விண்டோக்கள் வழங்கப்பட்டிருப்பதே இதற்கு காரணமாக உள்ளது. ஆனால் பின் இருக்கை பயணிகளுக்கு சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்படாதது வருத்தமான விஷயம். நீண்ட தூர பயணங்களின்போது, இது ஒரு குறையாக தெரியும்.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

ஆனால் நடைமுறை பயன்பாட்டில் முன் மற்றும் பின் இருக்கைகளில் சௌகரியமான பயணத்தை நிச்சயம் வழங்கும். கூடுதல் சௌகரியத்திற்காக பின் பகுதியிலும் ஏசி வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக வாடிக்கையாளர்கள் முக்கியமாக எதிர்பார்க்கும் விஷயம் பூட் ஸ்பேஸ் எவ்வளவு என்பதாகதான் இருக்கும்.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

448 லிட்டர்கள் என்ற போதுமான பூட் ஸ்பேஸ் உடன் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை எம்ஜி நிறுவனம் வழங்குகிறது. அதே சமயம் பின் இருக்கைகளை 60:40 என்ற விகிதத்தில் மடித்து வைத்து கொள்வதன் மூலம் பூட் ஸ்பேஸை இன்னும் அதிகரித்து கொள்ள முடியும். எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் டைமன்சன்களை நீங்கள் கீழே காணலாம்.

Length (mm) 4314
Width (mm) 1809
Height (mm) 1644
Wheelbase (mm) 2585
Ground Clearance (mm) 161
Boot Space (litres) 448
புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

வேரியண்ட்கள், முக்கிய வசதிகள் & பாதுகாப்பு

எக்ஸைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் என 2 வேரியண்ட்களில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கிடைக்கும். இரண்டு வேரியண்ட்களிலும் பல்வேறு வசதிகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் சில முக்கிய வசதிகளை கீழே காணலாம்.

 • 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம்
 • ஐ-ஸ்மார்ட் 2.0, ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ
 • புஷ்-பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப்
 • பிஎம் 2.5 ஏர் ஃபில்டர்
 • பனரோமிக் சன் ரூஃப்
 • மழை வந்தால் தானாக இயங்கும் முன் பக்க வைப்பர்
 • 3-லெவல் KERS (Kinetic Energy Recovery System)
 • டில்ட் ஸ்டியரிங்
 • மூன்று டிரைவிங் மோடுகள்: ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்
 • மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மற்றும் மடிக்ககூடிய ஓஆர்விஎம்கள்
 • 6 ஸ்பீக்கர்கள் (எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டில் மட்டும்)
 • ப்ளூடூத் மற்றும் யூஎஸ்பி கனெக்ஸன் போர்ட்கள்
புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பாதுகாப்பு வசதிகள்:

 • 6 ஏர்பேக்குகள்
 • இபிடி உடன் ஏபிஎஸ்
 • எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்
 • ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட்
 • ஹில் டெசன்ட் கண்ட்ரோல்
 • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்
 • முன் மற்றும் பின் பகுதியில் சீட் பெல்ட் ரிமைண்டர்
 • ரியர் பார்க்கிங் கேமரா
 • ஐசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்கள்
 • எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்

பெர்ஃபார்மென்ஸ் மற்றும் ரேஞ்ச்:

இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 44.5kWh லித்தியம் அயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன் மின் மோட்டார் அதிகபட்சமாக 3500 ஆர்பிஎம்மில் 141 பிஎச்பி பவரையும், 5000 ஆர்பிஎம்மில் 353 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 8.3 வினாடிகளில் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி எட்டி விடும் என எம்ஜி கூறுகிறது.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இந்த காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 340 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும். இது அராய் சான்று வழங்கிய ரேஞ்ச் ஆகும். இதன் மின் மோட்டாரில் இருந்து டார்க் கிட்டத்தட்ட உடனடியாக கிடைப்பதால், ரெஸ்பான்ஸிவ் ஆக இருக்கும் உணர்வை இந்த எஸ்யூவி உடனே தந்து விடுகிறது. இந்த எஸ்யூவியை முன்னோக்கி செலுத்துவதற்கு போதுமான பவரும் இருக்கிறது.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இந்த எஸ்யூவியின் எலெக்ட்ரிக் பவர்டிரெய்னில் இருந்து அதிகபட்ச சக்தியை பெறுவதற்கு, ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய டிரைவிங் மோடுகள் உதவி செய்கின்றன. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், பேட்டரி தொகுப்பானது கேபின் ஃப்ளோருக்கு கீழாக வைக்கப்பட்டுள்ளது. இது கையாளுமையில் உதவி செய்கிறது.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

வளைவுகளில் திரும்பும்போதாகட்டும் அல்லது நேரான சாலைகளில் அதிவேகத்தில் செல்லும்போதாகட்டும் இந்த கார் உறுதியுடன் இருப்பதை நீங்கள் ஓட்டும்போது உணரலாம். ஆனால் குறைவான சென்டர் ஆஃப் கிராவிட்டி காரணமாக, சிறிய அளவில் பாடி ரோல் இருக்கிறது.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகள் அல்லது நெடுஞ்சாலைகள் என எதுவாயினும், கிட்டத்தட்ட அனைத்து சூழ்நிலைகளிலும், நம்பிக்கையுடன் காரை ஓட்டும் வகையில் அதன் ஸ்டியரிங் வீல் உள்ளது. இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் சஸ்பென்ஸன், இந்திய டிரைவிங் சூழ்நிலைகளுக்கு நன்கு பொருந்துகிறது. குண்டும், குழியுமான சாலைகளை இந்த எஸ்யூவி எளிதாக கடக்கிறது.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இந்த காரின் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்லும் பெரிதாக குறை சொல்ல ஒன்றுமில்லை. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின், மோட்டார், பேட்டரி, பவர், டார்க், டிரான்ஸ்மிஷன் மற்றும் ரேஞ்ச் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அட்டவணையை கீழே காணலாம்.

Electric Motor

3-Phase Permanent Magnet
Battery 44.5kWh Lithium-ion
Power (bhp)

141 @ 3500rpm
Torque (Nm)

353 @ 5000rpm
Transmission Automatic
Range (km)

340
0-100km/h

8.3 seconds (Claimed)
புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

விலை மற்றும் கலர் ஆப்ஷன்கள்

இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் விலையை எம்ஜி நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில்தான் விலை அறிவிக்கப்படவுள்ளது. பெரும் ஆவலை தூண்டியுள்ள இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய மார்க்கெட்டில் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

தொடக்கத்தில் பெங்களூர், ஐதராபாத், அகமதாபாத், டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட இந்தியாவின் ஐந்து நகரங்களில் மட்டுமே எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கிடைக்கும். இந்த ஐந்து நகரங்களிலும் எம்ஜி இஸட்எஸ் காருக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. ஆன்லைன் மூலமாகவோ அல்லது தேர்ந்து எடுக்கப்பட்ட டீலர்கள் மூலமாகவோ 50,000 ரூபாய் முன்பணம் செலுத்தி புக்கிங் செய்யலாம்.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடன், ஃபெர்ரிஸ் ஒயிட், கோபன்ஹகன் ப்ளூ மற்றும் கரண்ட் ரெட் ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கிடைக்கும்.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

வாரண்டி மற்றும் சார்ஜிங் வசதிகள்

இந்திய மார்க்கெட்டில் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் லான்ச் உடன் சேர்த்து, ‘eShield' வாரண்டி பேக்கேஜையும் எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. புதிய எம்ஜி ‘eShield' அனைத்து தனிநபர் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. இதில், 5 ஆண்டுகள்/அன்லிமிடெட் கிலோ மீட்டர்கள் வாரண்டி அடங்கும்.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இதனுடன் சேர்த்து எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு ஐந்து ஆண்டுகளுக்கான ஆர்எஸ்ஏ (RSA -Road-Side Assistance), சார்ஜிங் கட்டமைப்புகளை பயன்படுத்தி கொள்ளும் வசதி ஆகியவையும் வழங்கப்படும். இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு கிடைக்கவுள்ள ஐந்து நகரங்களில், எம்ஜி நிறுவனம் ஏற்கனவே சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைத்துள்ளது.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகமாகவுள்ள 5 நகரங்களிலும், தேர்ந்து எடுக்கப்பட்ட டீலர்ஷிப்களில் சூப்பர்-ஃபாஸ்ட் 50kW சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை 24x7 என்ற வீதத்தில், அனைத்து நேரங்களிலும் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தி கொள்ள முடியும். அதே சமயம் வாடிக்கையாளர்களுக்கு ஏசி ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படும்.இதனை வீடு அல்லது அலுவலகத்தில் இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தால் சார்ஜிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள இடங்களின் நகர வாரியான பட்டியலை கீழே காணலாம்.

டெல்லி

எம்ஜி குர்கான் (32 மைல்ஸ்டோன், எக்ஸ்பீரியன் சென்டர், செக்டார் 15, எச்எச்-8, குர்கான்)

எம்ஜி லாஜ்பத் நகர் (இசி, ஏ-14, ரிங் ரோடு, லாஜ்பத் நகர்-IV, புது டெல்லி)

எம்ஜி டெல்லி மேற்கு சிவாஜி மாக் (பிளாட் எண்.31, சிவாஜி மாக்), எம்ஜி நொய்டா (டி-2, செக்டார் 8, நொய்டா)

பெங்களூர்

எம்ஜி பெங்களூர் எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி (195/6/2, வார்டு எண்.192, பாரத்தேனா அக்ரஹாரா, லவா குஷா நகர், ஓசூர் ரோடு, பெங்களூர்)

எம்ஜி பெங்களூர் ஓஆர்ஆர் (ஸ்ரீ புவனேஸ்வரி ஒக்கலிகர் சங்கம், சர்வே எண் 102-1, பி நாராயணபுரா, ஓஆர்ஆர், பெங்களூர்)

மும்பை

எம்ஜி மும்பை மேற்கு (ஜேவிஎல்ஆர், ஜோகேஸ்வரி குகைகள் சாலை, குபா டெக்கி, ஜோகேஸ்வரி கிழக்கு, மும்பை)

எம்ஜி தானே (ஷாப் எண்.16ஏ, தோஸ்தி இம்பீரியா, கோட்பந்தர் ரோடு, தானே மேற்கு, தானே)

அகமதாபாத்

எம்ஜி அகமதாபாத் எஸ்ஜி ஹைவே (பிளாட் எண்.2), தரை தளம், அகமதாபாத் எஸ்ஜி ஹைவே, மகர்பா, அகமதாபாத், குஜராத்)

ஐதராபாத்

எம்ஜி ஐதராபாத் பஞ்ஞாரா ஹில்ஸ் (ரோடு எண்.12, டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் எதிரில், பஞ்ஞாரா ஹில்ஸ், ஐதராபாத், தெலங்கானா)

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

போட்டியாளர்கள்

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடன், கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு லான்ச் செய்யப்பட்ட ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் எம்ஜி இஸட்எஸ் நேரடியாக மோதும். தற்போதைய நிலையில் இந்திய மார்க்கெட்டில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு இருக்கும் ஒரே போட்டியாளர் ஹூண்டாய் கோனா மட்டும்தான்.

எனினும் எதிர்காலத்தில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடனும் எம்ஜி இஸட்எஸ் போட்டியிடும். எம்ஜி இஸட்எஸ் மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கு இடையோன ஒப்பீட்டை கீழே காணலாம்.

Model/Specifications MG ZS EV Hyundai Kona EV
Electric Motor 3-Phase Permanent Magnet Permanent Magnet Synchronous Motor
Battery 44.5kWh Li-ion 39.2kWh Li-ion
Power (bhp) 141 134
Torque (Nm) 353 395
Price NA* Rs 23.71 Lakh
புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி அனைவரையும் ஈர்க்க கூடிய ஒரு வாகனமாக உள்ளது. இதன் டிசைன் அருமையாக இருப்பதுடன், நல்ல டிரைவிங் அனுபவத்தை வழங்கியுள்ளது. வழக்கமான எஸ்யூவி டிசைன், பிரிமீயமான இன்டீரியர்கள் மற்றும் நல்ல செயல்திறன் கொண்ட பவர்டிரெய்ன் ஆகியவை இணைந்து, இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ற தயாரிப்பாக எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரை மாற்றுகின்றன.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற கட்டமைப்பு வசதிகள் தற்போதுதான் இந்தியாவில் வளர தொடங்கியுள்ளன. இந்த விஷயத்தில் இந்தியா வளர வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. இருந்தபோதும் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை எம்ஜி நிறுவனம் துணிந்து களமிறக்குகிறது.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

எனினும் இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ற வகையில் எம்ஜி நிறுவனம் விலை நிர்ணயத்தை மட்டும் சரியாக செய்து விட்டால் போதும். மிகவும் சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டால், இந்தியாவின் மின்சார வாகன செக்மெண்ட்டில், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி புதிய அத்தியாத்தை எழுதும் என்பதில் சந்தேகமில்லை!!

Most Read Articles

English summary
MG ZS Electric SUV First Drive Review : Features, Performance, Range, Charging, Specs. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more