மைலேஜில் அசத்தும் இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்கள்!

Written By:

எம்பிவி ரகத்தை சேர்ந்த கார்களை வாங்குவோர்க்கும் பெரும் தயக்கத்தை தரும் விஷயம் மைலேஜ். அதிக முதலீடு செய்தாலும், மைலேஜ் குறைவாக இருந்தால் சமாளிக்க முடியாதோ என்ற அச்சம் காரணமாகவே இந்த கார்களை பெரும்பாலானோர் வாங்குவதர்கு அதிக தயக்கம் காட்டுகின்றனர்.

இதனை கருதியே பல முன்னணி நிறுவனங்கள் எம்பிவி கார்களை டீசல் மாடலில் மட்டுமே விற்பனை செய்கின்றன. இருப்பினும், மைலேஜ் குறையை போக்கும் விதத்தில், இப்போது ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையான மைலேஜ் தரும் எஞ்சின்களுடன் எம்பிவி கார்கள் விற்பனையில் உள்ளன. அராய் சான்றுபடி, மைலேஜில் டாப் 5 இடங்களில் இருக்கும் எம்பிவி கார்களின் விபரங்கள் இதோ உங்களுக்காக...

05. நிசான் எவாலியா - டீசல்

05. நிசான் எவாலியா - டீசல்

மைலேஜ்: 19.03 கிமீ/லி

பட்டியலில் 5வது இடத்தை நிசான் எவாலியா எம்பிவி கார் பெற்றிருக்கிறது. இடவசதியில் சிறந்த 7 சீட்டர் மாடல். ஆனால், கவர்ச்சியில்லாத தோற்றம், டிசைன் குறைபாடுகளால் இந்த காருக்கு போதிய வரவேற்பு இல்லை.

நிசான் எவாலியா தொடர்ச்சி...

நிசான் எவாலியா தொடர்ச்சி...

பெட்ரோல் மாடல் கிடையாது. இந்த எம்பிவி காரில் நம்பகத்தன்மை வாய்ந்த 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 85 பிஎச்பி பவரையும், 200என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.10.34 லட்சம் முதலான ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது. நிசான் எவாலியா காரை பட்டியலில் இருந்து ஒதுக்கினால், இதற்கடுத்த இடத்தில் 18.2 கிமீ மைலலேஜுடன் செவர்லே என்ஜாய் டீசல் மாடல் இடம்பிடிக்கும்.

04. டட்சன் கோ ப்ளஸ் [பெட்ரோல்]

04. டட்சன் கோ ப்ளஸ் [பெட்ரோல்]

மைலேஜ்: 20.6 கிமீ/லி

இந்த பட்டியலில் டீசல் மாடல்களுக்கு இணையான மைலேஜுடன் டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி கார் இடம்பெற்றிருக்கிறது. இது 7 சீட்டர் கார் என்று கூறி எம்பிவியாக விளம்பரம் செய்யப்பட்டாலும், இது ஒரு 5 சீட்டர் மாடலாகவே ஏற்றுக் கொள்ள முடியும். ஏனெனில், கடைசி வரிசை இருக்கை கணக்கில் சேர்க்க இயலாத அளவு இருப்பதே காரணம். அதிக பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு ஏற்ற ஒரு சிறந்த 5 சீட்டர் மாடலாக இதனை கூறலாம்.

டட்சன் கோ ப்ளஸ் தொடர்ச்சி...

டட்சன் கோ ப்ளஸ் தொடர்ச்சி...

இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த எஞ்சின் சிறப்பாக ட்யூனிங் செய்யப்பட்டிருப்பதால், மைலேஜிலும் பிக்கப்பிலும் சிறப்பாக இருக்கிறது. ரூ.4.85 லட்சம் முதலான ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது. மிக குறைவான விலையில் கிடைக்கும் ஓர் மினி எம்பிவி கார் மாடல் டட்சன் கோ ப்ளஸ்.

03. மாருதி எர்டிகா டீசல்

03. மாருதி எர்டிகா டீசல்

மைலேஜ்: 20.77 கிமீ/லி

அனைத்து அம்சங்களையும் ஒப்பீடு செய்து பார்க்கையில், தேர்வு செய்வதற்கு சிறந்த ஓர் காம்பேக்ட் எம்பிவி கார் மாடல். டிசைன், வசதிகள், மாருதி சர்வீஸ் கட்டமைப்பு, பராமரிப்பு செலவு, விலை என அனைத்திலும் ஒப்புக்கொண்டு மன நிறைவாக வாங்கலாம்.

மாருதி எர்டிகா தொடர்ச்சி...

மாருதி எர்டிகா தொடர்ச்சி...

இந்த காரில் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. மாருதி எர்டிகா டீசல் மாடல் ரூ.9.06 லட்சம் முதலான ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

02. ரெனோ லாட்ஜி டீசல் [85 பிஎஸ் மாடல்]

02. ரெனோ லாட்ஜி டீசல் [85 பிஎஸ் மாடல்]

மைலேஜ்: 21.04 கிமீ/லி

டஸ்ட்டருக்கு அடுத்து ரெனோவிடமிருந்து அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல் லாட்ஜி எம்பிவி கார். டீசல் மாடலில் மட்டுமே வந்திருக்கும் இந்த காரின் மிகப்பெரிய பலம் இடவசதி. டொயோட்டா இன்னோவாவுக்கு அடுத்து அதிக இடவசதியுடைய மாடல்.

ரெனோ லாட்ஜி தொடர்ச்சி...

ரெனோ லாட்ஜி தொடர்ச்சி...

ரெனோ லாட்ஜி எம்பிவி காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 85 பிஎஸ் மற்றும் 110 பிஎஸ் மாடல்களில் கிடைக்கிறது. இதில், அதிக மைலேஜ் தரும் மாடல் 85 பிஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பான இடவசதி, விலை, வசதிகள், செயல்திறன் போன்ற அம்சங்கள் வாடிக்கையாளர்களை கவரும். சென்னையில் ரூ.9.47 லட்சம் முதலான ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

01. ஹோண்டா மொபிலியோ டீசல்

01. ஹோண்டா மொபிலியோ டீசல்

மைலேஜ்: 24.5 கிமீ/லி

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் எம்பிவி கார் ஹோண்டா மொபிலியோ. டிசைன், வசதிகள், இடவசதியில் தன்னிறைவாக இருந்தாலும், விலையில் சற்று சொதப்பியதால், விற்பனை எதிர்பார்த்த அளவு அமையவில்லை. உட்புற டிசைனும் கவர்ச்சியாக இல்லாததும் காரணம்.

ஹோண்டா மொபிலியோ தொடர்ச்சி...

ஹோண்டா மொபிலியோ தொடர்ச்சி...

ஹோண்டா விற்பனையை பல மடங்கு உயர்த்திய, அதே 1.5 லிட்டர் ஐ- டிடெக் டீசல் எஞ்சின்தான் மொபிலியோவிலும் இருக்கிறது. பொதுவாக மைலேஜ் அதிகரிக்கும்போது செயல்திறனில் கார் தயாரிப்பாளர்கள் சமரசம் செய்து கொண்டு விடுவர். ஆனால், சிறப்பான மைலேஜ், அதிக செயல்திறன் கொண்டதாக இதன் எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில், ரூ.9.72 லட்சம் முதலான ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

 
மேலும்... #டாப் 5 #review
English summary
Most Fuel Efficient MPV Cars In India.
Story first published: Thursday, June 11, 2015, 12:07 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark