பாஜக.,வின் பிரம்மாஸ்திரம் நரேந்திர மோடி கார்- சிறப்பு பார்வை

பாஜக.,வின் பிரதம வேட்பாளராக வர்ணிக்கப்பட்டு வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தற்போது தேசிய அரசியலில் தனது கவனத்தை தீவிரமாக திருப்பியுள்ளார். குஜராத் அரசியல் தலைவர்களை கவனிப்பதை விட அவர் தேசிய தலைவர்களை தனது மேடை பேச்சுகளில் போட்டுத் தாக்கி வருகிறார்.

மாநில தலைவர் அந்தஸ்திலிருந்து தேசிய தலைவர் அந்தஸ்துக்கு மாறிக் கொண்டு வரும் மோடியிடம் மாறாத ஒன்று அவரது கார். ஆம், அஸ்தஸ்து மாறும்போது மறக்காமல் காரை மாற்றும் அரசியல் தலைவர்கள் உள்ள இந்த காலக்கட்டத்தில் தனது காரை அவர் இதுவரை மாற்றவில்லை. நீண்டகாலமாக அவர் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரையே பயன்படுத்தி வருகிறார். அரசு பணிகள், பிரச்சாரம், தனிப்பட்ட பயணம் என அனைத்துக்கும் துணைவி இல்லாத மோடிக்கு துணை நிற்பது அவரது ஸ்கார்ப்பியோ கார்தான்.

ஸ்கார்ப்பியோ சூப்பர்

ஸ்கார்ப்பியோ சூப்பர்

நெடுந்தூர, குறைந்த தூர பயணங்களுக்கு ஏற்றதாக இந்த காரை மோடி கருதுகிறார். சிறந்த எஞ்சின், இருக்கை அமைப்பு என அனைத்தும் அவரை கவர்ந்துவிட்டது.

எளிமையான தலைவர்

எளிமையான தலைவர்

எளிமையான தலைவர்களின் ஒருவர் நரேந்திர மோடி. இது அவரது வாழ்க்கை முறையையும், காரையும் பார்த்தாலே தெரியும்.

ஸ்கார்ப்பியோ

ஸ்கார்ப்பியோ

மஹிந்திராவுக்கு புதிய முகவரி ஏற்படுத்திக் கொடுத்த எஸ்யூவி ஸ்கார்ப்பியோ. நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற மிகச் சரியான விலையில் கிடைக்கும் சிறந்த எஸ்யூவியாக குறிப்பிடலாம். இன்றும் மாதத்திற்கு சராசரியாக 4,000 ஸ்கோர்ப்பியோ கார்களை மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது.

அரசியல்வாதிகளின் கார்

அரசியல்வாதிகளின் கார்

அரசியல்வாதிகளின் காராக இருந்து வந்த டாடா சஃபாரியை ஓரம் கட்டிய கார் ஸ்கார்ப்பியோதான். 2002ம் ஆண்டில் மார்க்கெட்டுக்கு வந்தது. 2006ம் ஆண்டில் ஸ்கார்ப்பியோவின் மேம்படுத்தப்பட்ட மாடலும், 2007ல் பிக்கப் டிரக் மாடலும், 2008ல் ஆட்டோமேட்டிக் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டன.

 புல்லட் புரூப் வசதி

புல்லட் புரூப் வசதி

தீவிரவாதிகளின் அச்சுறுத்தலால் நரேந்திர மோடியின் ஸ்கார்ப்பியோ காரில் குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

ஸ்கார்ப்பியோவில் 120 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்களில் கிடைக்கிறது.

 இடவசதி

இடவசதி

ஸ்கார்ப்பியோவின் மிக முக்கிய பலம் தாராள இடவசதியை அளிப்பதுதான். மொத்தம் 16 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

 மைலேஜ்

மைலேஜ்

ஸ்கார்ப்பியோ மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் நகர்ப்புற டிரைவிங்கில் 10.5 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலை டிரைவிங்கில் 15.4 கிமீ மைலேஜையும் ஆட்டோமேட்டிக் மாடல் நகர்ப்புறத்தில் 9.6 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் 13 கிமீ மைலேஜையும் தருவதாக மஹிந்திரா தெரிவிக்கிறது.

அலாய் வீல்

அலாய் வீல்

காரின் தோற்றத்திற்கு அழகு தரும் வகையிலான 16 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஸ்கார்ப்பியோ 16 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

 வசதிகள்

வசதிகள்

கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, 2 டின் ஆடியோ சிஸ்டம், சன் வைசர், எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்டபிள் ரியர் வியூ மிரர் ஆகிய வசதிகள் உள்ளன.

 பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்ஸ், சிறப்பான ஹெட்லைட் ஆகிய பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.2009ம் ஆண்டு இந்த பாதுகாப்பு வசதிகள் ஸ்கார்ப்பியோவில் அறிமுகம் செய்யப்பட்டது.

Most Read Articles
English summary
Narendra Modi - The Gujarat Chief Minister is known for his powerful vibrancy. We take a corner side look at Narendra Modi's powerful vibrant Mahindra Scorpio. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X