மொத்த வித்தையும் காட்டி பிஎம்டபிள்யூ இறக்கும் புதிய 7 சீரிஸ் கார்- சிறப்பு தகவல்கள்

Posted By:

வடிவமைப்பு, தொழில்நுட்பம் என அனைத்து விஷயங்களிலும் தான் கற்ற மொத்த வித்தையையும் காட்டி பிஎம்டபிள்யூ உருவாக்கியிருக்கும் புதிய கார் மாடல் 7 சீரிஸ். புதிய தலைமுறை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த கார் வடிவத்தில் பழைய மாடலின் பரிமாணங்களுடன் ஒத்துப்போகிறது.

ஆனால், தோற்றத்திலும், வசதிகளிலும் பல விதங்களில் மேம்படுத்தப்பட்டு புத்தம் புதிய மாடலாக தயாராகியுள்ளது. இந்த காரில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

இலகு எடை

இலகு எடை

பழைய மாடல்களின் மிகப்பெரிய குறையாக இருந்தது அதன் ஹெவி வெயிட்தான். இந்த பிரச்னைக்கு முதல்முறையாக முற்றுப்புள்ளி வைத்துளது பிஎம்டபிள்யூ. இந்த புதிய 7 சீரிஸ் கார் மாடலை கார்பன் ஃபைபர், அலுமினியம், மெக்னீசியம் போன்றவற்றில் தயாரான பாகங்களின் மூலம் எடையை வெகுவாக குறைத்துள்ளனர். இதன்மூலம், புதிய மாடலின் எடை 130 கிலோ வரை குறைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், இந்த ரகத்தில் இலகுவான மாடல் என்ற பெருமையை பெறுகிறது.

இரு மாடல்கள்

இரு மாடல்கள்

இந்த புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் ஜி11 மற்றும் ஜி12 என்ற இரு குறியீட்டுப் பெயர்களில் தற்போது அழைக்கப்படுகிறது. இதில், ஜி12 மாடல் கூடுதல் நீள வீல் பேஸ் கொண்டதாக இருக்கும். இது வட அமெரிக்காவில் மட்டுமே விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

வடிவம்

வடிவம்

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் 5,238மிமீ நீளம் கொண்டது. இந்த காரின் வீல்பேஸ் 3,210மிமீ. அதுதவிர, 1,479 மிமீ உயரத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாதாரண வீல் பேஸ் கொண்ட மாடல் 5,098மிமீ நீளமும், 3,070மிமீ வீல்பேஸும் உடையது.

லேசர் ஹெட்லைட்

லேசர் ஹெட்லைட்

பிஎம்டபிள்யூ ஐ8 காருக்கு அடுத்து, புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில் லேசர் ஹெட்லைட் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும், இந்த லேசர் ஹெட்லைட் சிஸ்டம் காரின் முகப்புத் தோற்றத்திற்கு நச்சென்ற அழகை கொடுப்பதுடன், முந்தைய 7 சீரிஸ் தலைமுறை மாடல்களிலிருந்து வேறுபடுத்துகிறது. இதுதவிர, இரட்டை சிறுநீரக வடிவ ரேடியேட்டர் க்ரில் அமைப்பு ஹெட்லைட்டுடன் இணைந்து தோரணம் கட்டப்பட்டிருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில் ஒபல் ஒயிட் மெரினோ என்ற உயர்வகை லெதர் மற்றும் கருப்பு வண்ண இன்டிரியர் பினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. ஐ- ட்ரைவ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. இந்த சிஸ்டத்தை தொடுதிரை வசதி மட்டுமின்றி, கையசைவுகள் மூலமும் கட்டுப்படுத்தும் வசதியுடன் வருகிறது. எம் ஸ்போர்ட்ஸ் பேக்கேஜ் மாடலில் பேங்க் அண்ட் ஒலுஃப்சென் சவுண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த காரின் பின்புற இருக்கைகளின் பயணிகளுக்காக 9.2 இன்ச் டிவி திரைகள் இருக்கும்.

ஸ்மார்ட் கீ

ஸ்மார்ட் கீ

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வெளியிலிருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் பார்க்கிங் செய்யக்கூடிய ஸ்மார்ட் கீ ஒன்றும் இந்த காருக்கு வழங்கப்படும். இதனால், நெருக்கடியான இடங்களில் கூட எளிதாக பார்க்கிங் செய்ய முடியும். பிஎம்டபிள்யூ ஐ8 கார் போன்றே இந்த காருக்கும் ஸ்மார்ட் கீ கொடுக்கப்பட உள்ளது.

ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம்

ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம்

இந்த காரில் ஏர் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். காரின் எடைக்கு தகுந்தவாறும், டிரைவிங் முறை தேர்வுக்கு தகுந்தவாறும் தானியங்கி முறையில் செயல்பாட்டை மாற்றிக் கொள்ளும் டைனமிக் டேம்பர் சிஸ்டம் இருக்கும்.. மேலும், இந்த காரில் மற்றொரு தொழில்நுட்ப அம்சம் 4 சக்கரங்களுக்குமான ஆக்டிவ் ஸ்டீயரிங் சிஸ்டம். இது 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் இணைந்து செயலாற்றும்.

 எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் 740ஐ வேரியண்ட்டில் புதிய 3.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு எஞ்சின் இடம்பெற்றிருக்கும். 750ஐ மாடலில் 445 எச்பி பவரை அளிக்க வல்ல 4.4 லிட்டர் வி8 எஞ்சின் இடம்பெற உள்ளது. இதற்கடுத்து, ஒரு ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட மாடல் நிலைநிறுத்தப்பட உள்ளது. தற்போதைய காரின் 760ஐ மாடலின் வி12 எஞ்சினும் புதிய மாடலில் டாப் வேரியண்ட்டாக விற்பனைக்கு வர இருக்கிறது. டீசல் மாடலிலும் அறிமுகம் செய்யும் திட்டம் பிஎம்டபிள்யூவுக்கு உள்ளது.

 அறிமுகம் எப்போது?

அறிமுகம் எப்போது?

தற்போது இந்த காரின் படங்களும், சில விபரங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன. வரும் செப்டம்பரில் நடக்க உள்ள பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த 6 மாதங்களிலிருந்து 12 மாதங்களுக்குள் உலகின் பல்வேறு நாடுகளில் 2016ம் ஆண்டு மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது.

 
English summary
German luxury car maker BMW has introduced its flagship 7-Series sedan, which may be similar in size and…in looks to the outgoing F01 codenamed car, but it's really a completely new model.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark