இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சாதாரண சொகுசு கார்களின் அடிப்படையிலான அதிசெயல்திறன் மிக்க மாடல்கள் M என்ற பெர்ஃபார்மென்ஸ் பிராண்டில் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரிந்ததே. அந்த வகையில், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் வெற்றிகரமான 3 சீரிஸ் சொகுசு காரின் அடிப்படையிலான M வரிசை கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வந்த ஏழாவது தலைமுறை 3 சீரிஸ் சொகுசு காரின் அடிப்படையிலான செயல்திறன் மிக்க மாடலாக வர இருக்கும் இந்த காரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய கார் குறித்த கிடைத்த அனுபவங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வெளிப்புற டிசைன்

புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காரின் முகப்பில் எம் வரிசை மாடல் என்பதற்கான எந்த விசேஷ அம்சங்களும் இல்லை. இது சற்று ஏமாற்றம் அளித்தாலும், பக்கவாட்டில் எம் பேட்ஜ் மற்றும் புதிய சக்கரங்கள் இடம்பெற்றிருப்பது தனித்துவப்படுத்துகிறது.

இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன்புற டிசைன்

முன்புறத்தில் எஞ்சின் பகுதிக்கு காற்றை செலுத்துவதற்கான ஆக்டிவ் ஏர் வென்ட்டுகளுடன் கூடிய வசீகரமான க்ரில் அமைப்பு இடம்பெற்றுள்ளது. தேவைப்படும்போது, இந்த க்ரில் அமைப்பில் உள்ள ஏர் வென்ட்டுகள் மூடிக்கொள்வதால், அதிக ஏரோடைனமிக்ஸை பெறுவதால், செயல்திறன் மேம்படும். மேலும், க்ரில் அமைப்பு விசேஷ சில்வர் பாகங்களுடன் சிறப்பாக தோற்றமளிக்கிறது.

இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லேசர் எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை காரின் தோற்ற வசீகரத்தை கூட்டுவதுடன், மிகவும் பிரகாசமான ஒளியை வழங்குவதால், இரவு நேரப் பயணங்களை பாதுகாப்பாகவும் மாற்றுகிறது. முன்புறத்தில் மிகவும் முரட்டுத்தனமான பம்பர் அமைப்பு இதனை பெர்ஃபார்மென்ஸ் காருக்குரிய தோரணையை வழங்குகிறது.

இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டு டிசைன்

இந்த காரின் பக்கவாட்டு ஃபென்டர் அமைப்பில் சிறிய எம் பேட்ஜ் பொருத்தப்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ எம் பிரிவு உருவாக்கி இருக்கும் விசேஷ இரட்டை வண்ணத்திலான 18 அங்குல மல்டிஸ்போக் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. நாங்கள் ஓட்டிய சன்செட் ஆரஞ்ச் வண்ணத் தேர்விற்கு, சக்கரங்கள் முழுவதும் கருப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருந்தால், இன்னமும் கார் அதிக வசீகரமாக இருந்திருக்கும்.

இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கார் ஜன்னல்களை சுற்றிலும் க்ரோம் அலங்காரம் எதுவும் இல்லை. பில்லர்கள், ஜன்னல்களை சுற்றிலும் கருப்பு வண்ணப்பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது. பெரிய சன்ரூஃப் மற்றும் ஷார்க் ஃபின் ஆன்டென்னா இந்த காரின் மதிப்பையும், வசீகரத்தையும் கூட்டுகிறது. பக்கவாட்டில் பெரிய அளவிலான பாடி லைன்கள் கொடுக்கப்படவில்லை.

இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புற டிசைன்

பின்புறத்தில் மெல்லிய வடிவமைப்பிலான எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்புறத்தில் முக்கிய விஷயமாக M340i மற்றும் XDrive பேட்ஜுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இரட்டை குழல் புகைப்போக்கி குழல்கள் உள்ளன. ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா கெயிட் லைட் வசதியுடன் உள்ளது. இந்த ரியர் பார்க்கிங் கேமரா மிகவும் துல்லியமாக இருப்பது மிகச் சிறந்த விஷயமாக குறிப்பிடலாம். மொத்தத்தில் இந்த கார் வடிவமைப்பில் மிகச் சிறப்பாகவே உள்ளது.

இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்டீரியர் மற்றும் வசதிகள்

புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் உட்புறம் முழுவதுமாக கருப்பு வண்ணத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பிரஷ்டு சில்வர் பாகங்கள் மற்றும் அல்கான்ட்ரா அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை காரின் உட்புறத்தை பிரிமீயமாக காட்டுகிறது. இந்த காரின் டேஷ்போர்டின் மையத்தில் 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இந்த சாதனத்தின் தொடு உணர் செயல்பாடு மிகவும் திருப்திகரமாக அமைந்தது.

இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மேலும், 12.3 அங்குல திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இந்த காரில் இடம்பெற்றுள்ளது. டிரைவிங் மோடுகளுக்கு தக்கவாறு இந்த திரை அமைப்பில் மாறுதல்கள் நிகழ்கிறது. மேலும், உரிமையாளர் அல்லது ஓட்டுபவர் விருப்பத்தின் பேரில் இந்த திரையில் சில மாறுதல்களை செய்து கொள்வதற்கான வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது. இந்த காரில் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே திரையும் உள்ளது. போன் அழைப்புகள் குறித்த தகவல் உள்ளிட்டவற்றை ஓட்டுபவர் கவனம் பிறழாமல் பார்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரின் ஸ்டீயரிங் வீலில் எம் பிரிவு தயாரிக்கும் விசேஷ லெதர் உறை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது கைகளுக்கு அதிக பிடிப்பை வழங்குகிறது. ஆனால், அடிப்பாகம் தட்டையான ஸ்டீயரிங் வீல் இல்லாதது பெரிய ஏமாற்றமாக உள்ளது. ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் இருப்பதுடன், இயக்குவதற்கும் எளிதாக உள்ளது. மேலும், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை இயக்குவதற்கான கட்டுப்பாட்டு வசதியை இந்த சுவிட்சுகள் அளிக்கின்றன.

இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரின் உட்புறத்தில் ஏராளமான ஸ்டோரேஜ் வசதி இருக்கின்றன. டோர் பேனல்கள், சென்டர் கன்சோல் பகுதிக்கு கீழே ஸ்டோரேஜ் வசதி உள்ளன. இந்த காரில் 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் உள்ளது. வயர்லெஸ் சார்ஜர் வசதியும் குறிப்பிட்டு கூற வேண்டிய விஷயம்.

இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரின் முன்புறத்தில் ஸ்போர்ட்ஸ் வகையிலான இருக்கைகள் சிறப்பானதாக உள்ளன. எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியும் உள்ளன. ஓட்டுனர் இருக்கைக்கு மட்டும் மெமரி வசதி உள்ளது. காரின் ஓட்டுனர் இருக்கை மிகச் சிறப்பாக உள்ளது. ஆனால், போதுமான அளவு மிருதுவானத் தன்மை இல்லாதது குறையாக இருக்கிறது. நீண்ட தூர பயணங்களின்போது அவ்வப்போது நிறுத்தி ஓய்வு எடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். சீட்பெல்ட்டுகளில் எம் தையல்வேலைப்பாடு மதிப்பை கூட்டுகிறது.

இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன்புற இருக்கைகளை விட பின்புறத்தில் உள்ள இருக்கைகள் மிக சொகுசாக இருக்கின்றன. போதுமான அளவு தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. இரண்டு கப் ஹோல்டர்கள் கொண்ட ஆர்ம் ரெஸ்ட்டும் நீண்ட தூர பயணங்களின்போது கைகளுக்கு ஓய்வான அனுபவத்தை தரும். பின்புறத்தில் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்தை கட்டுப்படுத்துவதற்கான திரை மற்றும் டைப் சி சார்ஜர் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் 440 லிட்டர்கள் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. நான்கு பேர் பயணிக்கும்போது அவர்களது உடைமைகளுக்கு இது போதுமானதாக இருக்கம். தவிரவும், பின் இருக்கைகளை 60:40 என்ற விகிதத்தில் மடக்கி வைக்கும் வசதியும் உள்ளது.

இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின் மற்றும் கையாளுமை

பொதுவாகவே எம் வரிசை கார்கள் ஓட்டுதல் தரத்திற்கு பெயர் பெற்றவை. இந்த காரில் 6 சிலிண்டர்கள் கொண்ட3.0 லிட்டர் ட்வின் ஸ்க்ரோல் டர்போசார்ஜர் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 385 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் சக்தி செலுத்தப்படுகிறது. பேடில் ஷிஃப்ட் வசதி மூலமாக மேனுவலாக கியர் மாற்றி ஓட்டும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த கார் செயல்திறனில் மிகச் சிறப்பாக இருக்கிறது. சாதாரண க்ரூஸ் செய்து ஓட்டும்போது, ஆக்சிலரேட்டரை கொடுத்து விரட்டும்போது ஓட்டுபவருக்கு உற்சாகத்தை வரவழைக்கிறது இதன் செயல்திறன். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 4.4 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது.

இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் புகைப்போக்கி சப்தம் அலாதியாக உள்ளது. இதில், ஈக்கோ, புரோ மற்றும் கம்ஃபோர்ட் மோடுகளில் அதிர்வுகள், சப்தங்களும் கேபினுக்குள் அதிகம் கேட்கவில்லை. ஸ்போர்ட் மோடில் வைத்து இயக்கும்போது, புகைப்போக்கி சப்தம் அலாதியாக எழுகிறது. ஒவ்வொரு முறையும் 4,000 ஆர்பிஎம் என்ற வேகத்தில் எஞ்சின் சுழலும்போதும், கியரை குறைக்கும்போதும் இந்த அலாதியான சப்தத்தை கேட்பது ஆனந்தமான உணர்வை அள்ளித் தருகிறது.

இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஒவ்வொரு டிரைவிங் மோடிலும் எஞ்சின் செயல்திறனில் குறிப்பிடத்தக்க மாற்றம் உள்ளது. குறிப்பாக, ஸ்போர்ட் மோடில் வைத்து இயக்கும்போது எஞ்சின் மட்டுமின்றி ஸ்டீயரிங் வீல் மற்றும் சஸ்பென்ஷன் ஆகியவை இறுக்கமாக மாறுவதால், நம்பிக்கையுடன் ஓட்டுவதற்கு துணை நிற்கிறது. எஞ்சின் செயல்திறன் மிக அலாதியாக இருப்பது சிறப்பானதாக குறிப்பிடலாம்.

இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த கார் பெர்ஃபார்மென்ஸ் வகையில் வருவதால், இயல்பாகவே சஸ்பென்ஷன் கடினமான வகையிலேயே இருக்கிறது. ஆனால், ஈக்கோ, புரோ மற்றும் கம்ஃபோர்ட் மோடில் சற்று இறுக்கம் தளர்ந்து பயணத்தை ஆசுவாசப்படுத்துகிறது. இந்த கார் எக்ஸ்ட்ரைவ் ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் பெற்றுள்ளது.

இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிராக்ஷனை கன்ட்ரோல் சிஸ்டத்தை அணைத்துவிட்டு, வேகமாக வளைவுகளில் திரும்பினாலும் கூட மிகச் சிறப்பான திருப்புதல் திறனை வழங்குகிறது. எஞ்சின், சஸ்பென்ஷன், ஸ்டீயரிங் வீல் உள்ளிட்டவை இணைந்து இந்த காரை மிகச் சிறந்த கையாளுமையை வழங்கும் காராக முன்னிறுத்துகிறது. சறுக்கிச் செல்வதற்கான வாய்ப்பையும் இந்த கார் வழங்கும்.

இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் எம் பிரிவு தயாரிக்கும் காலிபர்கள் பொருத்தப்பட்ட பிரேக் சிஸ்டமும், மிச்செலின் டயர்களும் சிறந்த தரைப்பிடிமானத்தையும், நிறுத்துதல் திறனையும் வழங்குகிறது. அதிவேகத்திலும் காரை நம்பிக்கையுடன் நிறுத்துவதற்கு பிரேக் சிஸ்டம் உதவுகிறது.

இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இது செயல்திறன் மிக்க மாடல் என்பதால் மைலேஜை பற்றி பேதுவது உசிதமாக இருக்காது. அதேநேரத்தில், ஈக்கோ மோடில் வைத்து இயக்கும்போது சராசரியாக லிட்டருக்கு 10 கிமீ வரை மைலேஜ் பெறும் வாய்ப்பு இருக்கிறது. ஸ்போர்ட் மோடில் வைத்து இயக்கினால் லிட்டருக்கு 6 முதல் 7 கிமீ மைலேஜை வழங்கலாம்.

இந்தியர்களின் கைகளுக்கு சவால்... புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிரைவ்ஸ்பார்க் கருத்து

புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ கார் மிகச் சிறந்த ஸ்போர்ட்ஸ் செடான் மாடலாக இந்திய வாடிக்கையாளர் தேர்வுக்கு வர இருக்கிறது. ரூ.65 லட்சம் முதல் ரூ.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் எம் பிராண்டு கார் மாடலாகவும் இது வர இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம். சொகுசு மற்றும் செயல்திறன் என இரண்டையும் கலந்து கட்டிய கார் மாடலை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த கார் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக அமையும். பெர்ஃபார்மென்ஸ் கார் விரும்பிகள் இந்த காரை ஓட்டும்போது நிச்சயம் ஏமாற்றமடைய மாட்டார்கள் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
We had a chance to drive the all-new BMW M340i xDrive for a couple of days and boy the car left us staggered. One more thing is that this is the first M car to be assembled in India. So, we took the car and went for a drive in the city and on the highway and here is what we have to say about it.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X