2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கடந்த 2014ம் ஆண்டு நிஸான் நிறுவனம் டட்சன் பிராண்டில் முதலாவதாக கோ ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. பெரிய ஹேட்ச்பேக் கார் போல தோற்றத்துடன் மிக குறைவான விலையில் வந்தததால் அதிக ஆவல் எழுந்தது. ஆனால், விற்பனைக்கு பிந்தைய சேவை மற்றும் குறைவான சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவை இந்த காருக்கு பின்னடவை தந்தது. எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை.

2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

போதாக்குறைக்கு குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் மிக மோசமான பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றது. கட்டுமானத் தரம் மிக மோசமாக இருப்பதாகவும், டட்சன் பிராண்டு கார்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று குளோபல் என்சிஏபி அமைப்பு நிஸான் இந்தியா நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியது. இதனால், டட்சன் கோ காரின் விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டது.

இந்த சூழலில், பல்வேறு சிறப்பம்சங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் 2018ம் ஆண்டு மாடல்களாக அண்மையில் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டன. அப்போது, புதிய கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களை டிரைவ்ஸ்பார்க் டீம் டெஸ்ட் டிரைவ் செய்தது. அதில், கோ காரின் டெஸ்ட் டிரைவ் அனுபவத்தை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முகப்பு டிசைன்

முதல்பார்வையிலேயே புதிய டட்சன் கோ கார் வசீகரமாக மேம்பட்டிருப்பதை காண முடிந்தது. அறுகோண வடிவ க்ரில் அமைப்பு மறுவடிவமைப்பு பெற்றிருக்கிறது. வலிமையான க்ரோம் பட்டை க்ரில் அமைப்பை சுற்றிலும் கொடுக்கப்பட்டு இருப்பது அதிக கவர்ச்சியாக தெரிகிறது. அத்துடன், பம்பர் அமைப்பு சிறப்பாக டிசைந் செய்யப்பட்டிருப்பதுடன், செங்குத்தான எல்இடி பகல்நேர விளக்குகள் முத்தாய்ப்பான விஷயமாக இருக்கிறது. ஹெட்லைட் க்ளஸ்ட்டரில் சிறிய மாறுதல்களும் தென்படுகின்றன.

2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டில் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை. பாடி கலரிலேயே சைடு மிரர்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, பழைய மாடலில் இருந்த 13 அங்குல ஸ்டீல் வீல்களுக்கு பதிலாக, அட்டகாசமான புதிய 14 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது காரின் மதிப்பை வெகுவாக உயர்த்துகிறது.

2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புறத்திலும் டிசைனில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால், டெயில் லைட் க்ளஸ்ட்டரில் சிறிய மாற்றங்களுடன் இடம்பெற்றிருக்கிறது. அத்துடன், டெயில் கேட் முடிவில் க்ரோம் பட்டையுடன் முடிகிறது. ரியர் வைப்பரும் உள்ளது. பம்பரும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு காரின் தோற்றம் பெரிதாக தெரிகிறது. மொத்தத்தில் ஒட்டுமொத்த தோற்றமும் வசீகரமாக இருக்கிறது.

2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்டீரியர்

இந்த காரில் உட்புறத்தில்தான் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புத்தம் புதிய டேஷ்போர்டில் பியானோ பிளாக் மற்றும் சில்வர் அலங்கார வேலைப்பாடுகள் வெகுவாக கவரும் வகையில் உள்ளன. விலை உயர்ந்த ஹேட்ச்பேக் கார்களில் இடம்பெறுவது போன்ற உணர்வை இந்த காரின் புதிய டேஷ்போர்டு அமைப்பும், அலங்கார வேலைப்பாடுகளும் தருகின்றன.

2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்ஃபோடயெின்மென்ட் சிஸ்டம்

இந்த காரில் முக்கிய சிறப்பம்சமாக, 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. பிளாபுங்கட் நிறுவனத்திடமிருந்து இந்த இன்ஃபோடெயின்மென்ட் சப்ளை பெறப்படுகிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும்.

இது நிச்சயம் புதிய கோ காருக்கு பிரிமீயமான ஆக்சஸெரியாக இருப்பதுடன், வாடிக்கையாளருக்கு சிறந்த மதிப்பை தரும் விஷயமாக இருக்கிறது. அனைத்து செயலிகளையும் இயக்குவதற்கு எளிதாகவும் இருக்கிறது. முழுவதுமான எச்டி திரை இருப்பதும், இதன் தொடுதிரை துல்லியமாக இயங்குவதும் திருப்தியை தருகின்றன. ஆனால், மேனுவல் கன்ட்ரோல் இல்லை. யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் போர்ட்டுகளை சப்போர்ட் செய்கிறது.

2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

தற்போது அனலாக் டாக்கோமீட்டர் மற்றும் அனலாக் ஸ்பீடோமீட்டர் டயல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்து, ஓடிய தூரம், ட்ரிப் மீட்டர் உள்ளிட்ட தகவல்களை பெறுவதற்கான மின்னணு திரை இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் இடம்பெற்றுள்ளது.

2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கியர் லிவர் டேஷ்போர்டை ஒட்டி கீழே பொருத்தப்பட்டு இருக்கிறது. வழக்கமான இடத்தில் இல்லாதது சற்று உறுத்தலாக தெரிகிறது. அதேநேரத்தில், பழைய மாடலில் இருந்தது போல இல்லாமல், வழக்கமான டிசைனில் ஹேண்ட் பிரேக் லிவர் கொடுக்கப்பட்டு இருப்பது ஆறுதலான விஷயம்.

2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் பிளாஸ்டிக் தரம் சுமார். சென்ட்ரல் கன்சோல் மற்றும் கதவுகளில் கார்பன் ஃபைபர் போன்ற தோற்றத்தை தரும் பிளாஸ்டிக் பாகங்கள் பொருத்தப்பட்டு இருப்பது மதிப்பை உயர்த்தும் விஷயமாக இருக்கிறது. சில இடங்களில் பேனல்கள் அதிக இடைவெளியுடன் இருப்பதையும் காண முடிகிறது. எனினும், பழைய மாடலைவிட ஃபிட் அண்ட் ஃபினிஷ் தரம் மேம்பட்டிருக்கிறது.

2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன் இருக்கை

முன்புறத்தில் ஓட்டுனர் மற்றும் பயணி இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி வழங்கப்படவில்லை. அதேபோன்று, தொடைகளுக்கு போதுமான சப்போர்ட் கிடைக்கவில்லை. எனினும், இருக்கை அகலமாக இருப்பதால் அமர்வதற்கு வசதியாக இருக்கிறது.

2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின் இருக்கை

பின் இருக்கையில் மூன்று பெரியவர்கள் அமர்ந்து செல்ல முடியும் என்றாலும், நீண்ட தூர பயணங்களின்போது நெருக்கடியான உணர்வை தரும். இருக்கை தட்டையான அமைப்பை பெற்றிருப்பதும் இது நகர்ப்புறத்தில் குறைந்த தூர பயன்பாட்டிற்கு மட்டுமானதாக நினைத்து வடிவமைத்துள்ளது தெரிகிறது. இந்த காரில் 265 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இருக்கிறது. இது போதுமானதாக இருக்கும்.

2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின்

இந்த காரில் 3 சிலிண்டர் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 68 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

செயல்திறன்

இந்த காரில் ஆரம்ப நிலை செயல்திறன் சுணக்கமாக இருக்கிறது. ஆனால், 2,000 ஆர்பிஎம் வேகத்திற்கு மேல் எஞ்சின் சுழலும்போது மிகச் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகிறது. நடுத்தர நிலையில், சீரான பவரை வெளிப்படுத்துவதுடன் இந்த 3 சிலிண்டர் எஞ்சின் அதிர்வுகள் குறைவாக இருப்பது சிறப்பாக கூறலாம்.

2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கியர்பாக்ஸ் செயல்பாடு

இந்த காரின் கியர்பாக்ஸ் சிறப்பாக இருந்தால் எஞ்சின் செயல்திறனை இன்னும் முழுமையாக உணர்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். கியர் ரேஷியோ நெருக்கமாக இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்ற உணர்வு ஏற்படுகிறது. அதிவேகத்தில் ஸ்டீயரிங் சிஸ்டத்தின் செயல்பாடு துல்லியமாக இல்லை.

2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் சிஸ்டம்

இந்க காரின் சஸ்பென்ஷன் சிறப்பாக இருக்கிறது. பள்ளம் மேடான சாலைகளை எளிதாகவே கடந்து செல்கிறது. அதேபோன்று, பிரேக்கிங் சிஸ்டமும் நன்றாக இருக்கிறது. இது இரண்டும் இந்த காருக்கு சிறப்பு சேர்க்கும் விஷயமாகவே கூற முடியும்.

நகர்ப்புற டிராஃபிக்கில் இந்த கார் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கிறது. ஆரம்ப நிலையில் எஞ்சின் சுணக்கமாக இருப்பது சில வேளைகளில் ஏமாற்றத்தை தருகிறது. நடுத்தர வேகத்தில் கையாளுமை நன்றாகவே உள்ளது. இந்த கார் 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருப்பதால், வேகத்தடைகள் மற்றும் பள்ளம் மேடுகளை கண்டு அஞ்சாமல் ஓட்ட முடிகிறது.

2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வண்ணத் தேர்வுகள்

புதிய டட்சன் கோ கார் ரூபி, பிரான்ஸ், கிரே, ஆம்பர் ஆரஞ்ச், கிறிஸ்டல் சில்வர் மற்றும் ஓபல் ஒயிட் ஆகிய 5 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது இதில், ஆம்பர் ஆரஞ்ச் வண்ணம் தனித்துவமான தேர்வாக இருக்கும்.

2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வேரியண்ட்டுகள், விலை

புதிய டட்சன் கோ கார் D, A, A(O), T மற்றும் T(O) ஆகிய 5 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. ரூ.3.29 லட்சம் முதல் ரூ.4.89 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய டட்சன் கோ கார் தேர்வு செய்யும் வாய்ப்பள்ளது.

Variant Price
Datsun GO D Rs 3.29 Lakhs
Datsun GO A Rs 3.99 Lakhs
Datsun GO A(O) Rs 4.29 Lakhs
Datsun GO T Rs 4.49 Lakhs
Datsun GO T(O) Rs 4.89 Lakhs
2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முக்கிய அம்சங்கள்

புதிய டட்சன் கோ காரில் ஏராளமான புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமானவற்றை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

  • 7.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி
  • ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள்
  • ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் சென்சார்
  • எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள்
  • பவர் விண்டோஸ்
  • புளூடூத் வசதி
  • வாய்ஸ் கமாண்ட் வசதி
2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு தரத்தில் மோசமாக சொல்லப்பட்ட இந்த காரில், தற்போது இரண்டு ஏர்பேக்குகளும், இபிடி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது நிச்சயம் காரின் மதிப்புக்கு வலு சேர்க்கும். எனினும், கட்டுமானத் தரம் மேம்படுத்தப்பட்டு விட்டதா என்பது குறித்து டட்சன் எதையும் கூறவில்லை. கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தினால் மட்டுமே அதன் விபரத்தை தெரிந்து கொள்ள முடியும்.

2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வாரண்டி

புதிய டட்சன் கோ காருக்கு ஓர் ஆண்டுக்கான வாரண்டி வழங்கப்படுகிறது. இரண்டு மற்றும் மூன்றாவது ஆண்டுக்கான வாரண்டி திட்டங்களும் உள்ளன. வரம்பில்லா கிலோமீட்டர் தூரத்திற்கான கூடுதல் வாரண்டி காலத்தை டட்சன் வழங்குகிறது. இதில், சாலை அவசர உதவி திட்டம் மற்றும் பழுதான சமயத்தில் அருகிலுள்ள டட்சன் ஷோரூமுக்கு கட்டணம் இல்லாமல் டோ செய்து எடுத்து செல்லும் வசதிகள் கொடுக்கப்படுகின்றன.

2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

போட்டியாளர்கள்

பட்ஜெட் மார்க்கெட்டில் பெரிய கார் போன்ற தோற்றத்தை பெற்றிருக்கும் டட்சன் கோ கார் தற்போது சிறப்பம்சங்களில் வெகுவாக மேம்பட்டுள்ளது. ரெனோ க்விட், மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான் மற்றும் சான்ட்ரோ கார்களுடன் போட்டி போடுகிறது.

Data Datsun GO Renault Kwid 1.0 Maruti Suzuki Alto K10
Displacement 1198 999 998
No. Of Cylinders 3 4 4
Power (bhp) 67 67 67
Torque (Nm) 104 91 90
Mileage (km/l) 20.1 23.01 24.07
Boot Space (lts) 365 300 177
Starting Price Rs 3.29 Lakhs Rs 3.85 Lakhs Rs 3.31 Lakhs
2018 டட்சன் கோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

புதிய டட்சன் கோ கார் பட்ஜெட் செக்மென்ட்டில் சிறப்பான மாடலாக மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. பழைய மாடலைவிட அதிக தொழில்நுட்ப அம்சங்களுடன் ஓர் சிறந்த பேக்கேஜாக இந்த காரை கொடுக்க டட்சன் பொறியாளர்கள் முயன்றுள்ளது தெரிகிறது. நகர்ப்புறம் மற்றும் நெடுஞ்சாலையில் சற்றே தாராள இடவசதி கொண்ட காரை விரும்பும் பட்ஜெட் கார் வாங்க விரும்புவோர் இந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்து முடிவு செய்யலாம். முதல்முறை கார் வாங்குபவர்களுக்கு இது நிச்சயம் சிறந்த தேர்வாக அமையும்.

Tamil
மேலும்... #டட்சன்
English summary
Datsun first launched the GO hatchback in India almost four years ago. During its initial launch in 2014, the GO hatchback was pitched to be one of the better-selling models in the small budget car segment of the Indian market. However, the hatchback failed to create an impression in the market, receiving lacklustre response.
Story first published: Saturday, November 3, 2018, 15:58 [IST]
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more