புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா காரின் விமர்சனம்!

Written By:

ரூ.20 லட்சம் வரையிலான கார் மார்க்கெட்டில் சொகுசு கார்களுக்கு இணையான டிசைனை தந்து வாடிக்கையாளர்களை திக்குமுக்காட வைப்பதில் ஹூண்டாய் எப்போதுமே நம்பர்-1. கடந்த சில ஆண்டுகளாக அந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு மாடலையும் பார்க்கும்போதும் டிசைனில் ஹூண்டாயை அடிப்பதற்கு இன்னொரு பிராண்டு பிறந்துதான் வர வேண்டும் என்று சொல்ல தோன்றுகிறது.

எலைட் ஐ20, க்ரெட்டா ஆகியவற்றை தொடர்ந்து, சமீபத்தில் விற்பனைக்கு வந்த அந்த நிறுவனத்தின் புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா கார் டிசைனிலும், வசதிகளிலும் நம்மை அசரடிக்கிறது. அந்த டெயில் லைட்டுக்கே காசு போச்சு என்று சினிமா விமர்சனம் பாணியில் சொல்ல வைக்கும் இந்த புதிய காரை பற்றிய சாதக, பாதகங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தலைமுறை மாற்றம்

தலைமுறை மாற்றம்

2004ம் ஆண்டில் மூன்றாம் தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா கார் இந்திய மண்ணில் அறிமுகமாகியது. அடுத்து, 4ம் தலைமுறை மாடல் இந்தியாவிற்கு இல்லை. 2012ம் ஆணடில் புளூயிடிக் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்ட 5ம் தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் 6ம் தலைமுறை மாற்றங்களுடன் வந்துள்ளது. இந்த காரின் டிசைன், வசதிகள், தொழில்நுட்ப அம்சங்களில் எவ்வாறு மேம்பட்டிருக்கிறது என்பதை சற்று விரிவாக தொடர்ந்து படிக்கலாம்.

டிசைன்

டிசைன்

ஹூண்டாய் நிறுவனத்தின் புளூயிடிக் 2.0 டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முகப்பை ஆக்கிரமித்திருக்கும் படுக்கை வாட்டு க்ரோம் பட்டைகளுடன் கூடிய அறுகோண வடிவ க்ரில் அமைப்பு ஆடி கார்களுக்கு சவால் விடுகிறது. அப்படியே ஹெட்லைட் பக்கம் பார்வையை திருப்பினால், அவ்வளவு நேர்த்தியான வடிவமைப்புடன் எம்மை அசரடிக்கிறது.

 புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா காரின் விமர்சனம்!

புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், எல்இடி பகல்நேர விளக்குகள், நச்சென்ற பனி விளக்குகள் என முகப்பு டிசைன் மேம்பட்டிருக்கிறது. பின்புறத்தை நோக்கி சரியும் கூரை அமைப்பு, புதிய அலாய் வீல்கள், க்ரோம் ஹேண்டில்கள் போன்றவை பக்கவாட்டில் பார்வைக்கு இலக்காகும் விஷயங்கள்.

 புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா காரின் விமர்சனம்!

பின்புறத்தில் எல்இடி விளக்குகள் கொண்ட டெயில் லைட்டின் டிசைன் வாடிக்கையாளர்களை அசந்து போக செய்யும். சாலையில் செல்லும்போது இந்த டெயில் லைட் டிசைன் தனிகவனத்தை பெறும் என்று அடித்து கூற முடியும். பம்பர் அமைப்பும் புளூயிடிக் 2.0 டிசைனில் வடித்தெடுக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது. மொத்தத்தில் அறுசுவை உணவை சாப்பிட்ட உணர்வை கண்களுக்கு தருகிறது.

 இன்டீரியர்

இன்டீரியர்

வெளிப்புற அழகிற்கு ஈடுகொடுக்கிறது இதன் தரமான கருப்பு ஆக்கிரமிப்பு நிறைந்த இன்டீரியர். டேஷ்போர்டு மிக நேர்த்தியாகவும், வசதிகள் நிறைந்ததாகவும் இருக்கிறது. அதாவது, ஓட்டுபவருக்கு உற்சாகத்தை தரும் விஷயங்கள் மிகுதியாகவே காணப்படுகிறது. டேஷ்போர்டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சாஃப்ட் டச் பிளாஸ்டிக் மிக மென்மையாக இருக்கிறது.

 புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா காரின் விமர்சனம்!

ஸ்பீடோமீட்டர், ஆர்பிஎம் மீட்டருக்கு அனலாக் டயல்கள் உள்ளன. அதற்கு நடுவில் இருக்கும் சிறிய திரையில் காரின் கதவு திறந்திருப்பது உள்ளிட்ட தகவல்களை தருகிறது. டேஷ்போர்டின் நடுநாயகமாக இடம்பெற்றிருக்கும் 8.0 இன்ச் டச்ஸ்கிரீன் திரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பிடித்துள்ளது.

 புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா காரின் விமர்சனம்!

மேப் மை இந்தியா வரைபட தகவல் சாஃப்ட்வேருடன் கூடிய சாட்டிலைட் நேவிகேஷன் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேரை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன. இதன் ஸ்டீயரிங் வீலில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் மூலமாக புளூடூத் தொடர்பு, ஆடியோ சிஸ்டம் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் டிரிப் கம்ப்யூட்டரை கட்டுப்படுத்த முடியும்.

 புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா காரின் விமர்சனம்!

டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் வசதியும், வெளிப்புற சீதோஷ்ணத்திற்கு தகுந்தாற்போல் குளிர்ச்சியை கேபினுக்குள் தக்க வைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. இந்த காரின் சிறப்புகளில் ஒன்று வென்டிலேடட் முன் இருக்கைகள். இருக்கையிலிருந்து காற்றை வழங்கும் தொழில்நுட்பம் இது. நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு இந்த வசதி மிக அவசியமானது. பின்புற இருக்கைகளுக்கு தனி ஏசி வென்ட் வசதியும் உள்ளது.

 புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா காரின் விமர்சனம்!

வென்டிலேட்டட் சீட் வசதி பொதுவாக 30 லட்ச ரூபாய்க்கும் அதிக விலையுடைய கார்களில் கிடைக்கும். ஆனால், இந்த வசதியை எலான்ட்ரா காரில் கொடுத்து அசத்தியிருக்கிறது ஹூண்டாய். இந்த காரில் 10 விதமான உயரத்தில் மாற்றிக் கொள்ளும் பவர் சீட் உள்ளது. ஆன்ட்டி பின்ச் வசதியுடன் கூடிய கண்ணாடி கூரை கொடுக்கப்பட்டிருக்கிறது.

 புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா காரின் விமர்சனம்!

கண்ணாடி கூரை மூடும்போது விரல் அல்லது கைகள் மாட்டிக் கொள்ளாமல் இருக்க இந்த வசதி. பாக்கெட்டில் சாவியை வைத்திருந்தாலே பட்டனை அழுத்தி காரை ஸ்டார்ட் செய்வதற்கான புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் அதேபோன்று, கதவுகளை தானாக திறக்கக்கூடிய கீ லெஸ் என்ட்ரி வசதிகளை தரும் ஸ்மார்ட் சாவியும் இந்த காரின் ஹைடெக் சமாச்சாரமாக இருக்கிறது.

இடவசதி

இடவசதி

அடுத்து இருக்கைகளின் வடிவமைப்பு நீண்ட தூர பயணங்களை சவுகரியமாக சமாளிக்க உதவும். மிக தாராளமான இடவசதியை உணர முடிகிறது. மேலும், காருக்குள் அதிர்வுகள் மிக குறைவாக இருப்பதும் இதன் மற்றொரு சிறப்பு. பழைய மாடலைவிட நீளத்தில் 20மிமீ, அகலத்தில் 25மிமீ வரை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால், கேபின் சிறப்பான இடவசதியை பெற்றிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

பெட்ரோல் மாடலில் 150 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க்கையும் அளிக்க வல்ல 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. பழைய பெட்ரோல் எஞ்சினைவிட, 3.4 பிஎச்பி பவரையும், 14.5 என்எம் டார்க்கையும் கூடுதலாக வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. டீசல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 126 பிஎச்பி பவரையும், 265 என்எம் டார்க்கையும் வழங்கும்.

கியர்பாக்ஸ்

கியர்பாக்ஸ்

பெட்ரோல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆட்டோமேட்டிக் மாடலில் Eco, Sport மற்றும் Normal என மூன்று விதமான செயல்திறனை தரும் விதத்தில் எஞ்சின் இயக்கத்தை விருப்பத்திற்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளும் வசதி இருக்கிறது.

 புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா காரின் விமர்சனம்!

எஞ்சின் திறன் மிக்கதாக இருந்தாலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் கியர் மாற்றம் சற்றே மெதுவாக இருப்பதால், பிக்கப் சற்று மந்தமாக தெரிகிறது. ஆனால், எஞ்சின் 2,000 ஆர்பிஎம் வேகத்தை தாண்டும்போது சிறப்பான செயல்திறனை காட்டுகிறது. இதன் ஈக்கோ டிரைவிங் மோடு சாவகசமான ஓட்டுதல் அனுபவத்தையும், ஸ்போர்ட் மோடு சற்றே கூடுதல் திறனையும் காட்டுகிறது.

மைலேஜ்

மைலேஜ்

ஹூண்டாய் எலான்ட்ரா காரின் பெட்ரோல் மாடலின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்கள் லிட்டருக்கு 14.62 கிமீ மைலேஜ் தரும் என்றும், டீசல் மாடலின் மேனுவல் மாடல் லிட்டருக்கு 22.54 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 16 கிமீ மைலேஜையும் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

 புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா காரின் விமர்சனம்!

நடைமுறையில் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 10 - 12 கிமீ மைலேஜ் வரையும், மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட டீசல் மாடல் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் வரையிலும் தரும் என்று நம்பலாம்.

கையாளுமை

கையாளுமை

இதன் சஸ்பென்ஷனும் மேம்படுத்தப்பட்டு இருப்பதால், அனைத்து சாலை நிலைகளிலும் சவுகரியமான பயணத்தை வழங்குகிறது. ஆனால், இது நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கான ரகத்தை சேர்ந்தது என்பதால், அதற்கேற்ற வசதிகளையும், அம்சங்களிலும் முன் நிற்கிறது. பழைய எலான்ட்ரா காரைவிட புதிய எலான்ட்ரா காரின் கையாளுமை இன்னும் சிறப்பாக இருக்கிறது.

 புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா காரின் விமர்சனம்!

இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 205/60 R16 டயர்கள் மிகச் சிறப்பான தரைப்பிடிப்பையும், நிறுத்துதல் திறனையும் வழங்குகிறது. குறிப்பாக, வளைவுகளில் நம்பிக்கையான உணர்வை தருவதில் எலான்ட்ரா சிறப்பாக இருக்கிறது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காரில் ஓட்டுனர் மற்றும் முன்புற பயணிக்கான இரண்டு உயிர் காக்கும் காற்றுப்பைகள் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பிடித்துள்ளது. அனைத்து சக்கரங்களுக்கும் சரியான விகிதத்தில் பிரேக்கிங் பவரை செலுத்தும் இபிடி தொழில்நுட்பத்துடன் இணைந்து செயலாற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் பாதுகாப்பான பயணத்திற்கு உறுதுணையாக இருக்கின்றன.

 புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா காரின் விமர்சனம்!

கார் சறுக்கிச் சென்று கவிழாமல் காக்கும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், மலைப் பகுதி மற்றும் சரிவான சாலைகளில் செல்லும்போது கார் பின்னோக்கி வருவதை தவிர்க்கும் ஹில் ஸ்டார்ட் கன்ட்ரோல் டாப் வேரியண்ட்டுகளில் பக்கவாட்டிற்கான கர்டெயின் ஏர்பேக்குகள் போன்றவையும் இதன் முக்கிய பாதுகாப்பு வசதிகளாக இருக்கின்றன.

பூட்ரூம்

பூட்ரூம்

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காரின் கேபின் இடவசதி சிறப்பாக இருக்கும் அதேநேரத்தில், பூட் ரூம் எனப்படும் பொருட்களை வைப்பதற்கான இடவசதியில் சற்று ஏமாற்றம் தருகிறது. ஆம், காம்பேக்ட் ரக செடான் கார்களை 400 லிட்டர் வரை பூட் ரூம் இடவசதியுடன் வரும் நிலையில், புதிய எலான்ட்ரா காரில் 420 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் இடவசதி உள்ளது.

 புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா காரின் விமர்சனம்!

இதன் நேர் போட்டியாளர்களான ஸ்கோடா ஆக்டேவியா 590 லிட்டர் பூட் ரூம் இடவசதியையும், ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா கார் 530 லிட்டர் பூட்ரூம் இடவசதியையும் ஒப்பிடும்போது பெருத்த ஏமாற்றம்.

எமது அபிப்ராயம்

எமது அபிப்ராயம்

டிசைன், இடவசதி, வசதிகள், தரம் என அனைத்திலும் சிறப்பாக இருப்பதோடு, ரூ.12.99 லட்சம் என்ற ஆரம்ப விலை என்பது மிட்சைஸ் செடான் கார் விரும்பிகளின் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் தருணமாகவே இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா காரின் விமர்சனம்!

செவர்லே க்ரூஸ், டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் போன்ற கார்களின் டிசைன் பழமையாகிவிட்ட நிலையில், சரியான நேரத்தில் இந்த புதிய தலைமுறை எலான்ட்ரா காரை ஹூண்டாய் களமிறக்கி இருக்கிறது. மாதத்திற்கு 350 முதல் 400 எலான்ட்ரா கார்களை விற்பனை செய்ய இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இதனை ஆமோதிக்கும் வகையிலேயே விற்பனையும் இருக்கிறது.

 புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா காரின் விமர்சனம்!
English summary
New Hyundai Elantra Review. Read the complete details in Tamil.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark