புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அம்பாசடர், மாருதி 800, ஆல்ட்டோ வரிசையில் இந்தியர்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்ட பிராண்டு பெயர் சான்ட்ரோ. ஊர் பேர் தெரியாத தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்துக்கு இந்தியாவில் அடையாளத்தை கொடுத்த மாடல் சான்ட்ரோ. பல குடும்பத்தினரின் முதல் கார் மாடல் என்பதால், இந்தியர்களின் எமோஷனலான மாடலாகவும், குடும்ப உறுப்பினர் போலவும் பாவிக்கப்பட்டு வருகிறது.

1998ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சான்ட்ரோ கார் இரண்டு தலைமுறை மாடல்களை கடந்து மூன்றாம் தலைமுறை மாடலாக அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பழைய சான்ட்ரோ கார்களின் நன்மதிப்பை இந்த புதிய மாடல் தக்க வைக்குமா? நடைமுறை பயன்பாட்டில் இந்த புதிய சான்ட்ரோ காரின் சாதக, பாதகங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சில ஆண்டுகளுக்கு முன் உற்பத்தியில் இருந்து விலக்கப்பட்டபோது சான்ட்ரோ ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இந்த சூழலில், சான்ட்ரோ பிராண்டில் புதிய மாடல் வருவதாக வெளியானத் தகவல் சான்ட்ரோ ரசிகர்களுக்கும், பட்ஜெட் கார் பிரியர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த கார் வடிவமைப்பு, வசதிகள், நடைமுறை பயன்பாட்டில் எப்படி இருக்கிறது என்பதை தொடர்ந்து காணலாம்.

முகப்பு டிசைன்

முகப்பு டிசைன்

முந்தைய சான்ட்ரோ மாடல்களிருந்து முற்றிலும் வேறுபட்ட வடிவமைப்பு. ஆனால், ஹூண்டாய் ஐ10, கிராண்ட் ஐ10 கார்களின் வடிவமைப்பு தாத்பரியங்களை ஆங்காங்கே காண முடிகிறது. முகப்பில் மிக பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் இரு மருங்கிலும் பனி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஹெட்லைட் க்ரில் அமைப்புக்கு மேலாக பானட்டை ஒட்டி பொருத்தப்பட்டு இருக்கிறது. பம்பர் அமைப்பு மிக எளிமையாகவும், கச்சிதமாகவும் பொருந்தியுள்ளது. மிக எளிமையான முக வெட்டுடன் டிசைன் செய்யப்பட்டு இருக்கறது.

 பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டில் ஷோல்டர் லைன் பின்புற ஜன்னலின் கீழ்பாகத்தில் சற்று தாழ்ந்து செல்கிறது. பாடி லைனில் வழக்கம்போல் கைப்பிடிகள் இடம்பெற்றுள்ளன.முன்புற வீல் ஆர்ச் சரியான அளவிலும், பின்புற வீல் ஆர்ச்சானது பின்புறம் வரை மடிப்புடன் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. டாப் வேரியண்ட்டில் கூட அலாய் வீல்கள் இல்லை என்பது ஏமாற்றமே.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

பின்புறத்தில் முக்கிய விஷயமாக பார்க்கப்படும் டெயில் லைட்டுகள் காருக்கு மிக கச்சிதமான அளவில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், டெயில் லைட் க்ளஸ்ட்டர் டிசைன் எதிர்பார்ப்பை பொய்க்க செய்துவிட்டது.

பம்பரில் கருப்பு வண்ண பிளாஸ்டிக் பாகம் ஆக்கிரமித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த காரின் டிசைன், ஆஹா, ஓஹோ என்று சொல்ல முடியாது. ஆனால், மோசம் என்று சொல்ல இயலாத வகையில் சராசரியாக உள்ளது. பட்ஜெட் காரில் ரொம்ப எதிர்பார்க்கக்கூடாது என்பதை சொல்லும் விதத்தில் உள்ளது.

இன்டீரியர்

இன்டீரியர்

உட்புற டிசைன் மிகச் சிறப்பாகவும், தரமாகவும் இருப்பதால், வெளிப்புற வடிவமைப்பு குறித்த சிறிய ஏமாற்றத்தை உட்புற வடிவமைப்பு நொடியில் மறக்கடித்து விடுகிறது. வழக்கம்போல் மிக தரமான பாகங்களை உட்புறத்தில் பயன்படுத்தி சபாஷ் வாங்குகிறது ஹூண்டாய்.

அதாவது, இதன் ரகத்திலான கார்களை ஒப்பிடுகையில் சிறப்பாக கூற முடியும். இரட்டை வண்ண டேஷ்போர்டு மற்றும் சென்ட்ரல் கன்சோல் பகுதி சிறப்பாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. புரொப்பெல்லர் போன்ற வடிவமைப்பிலான ஏசி வென்ட்டுகள் பென்ஸ் கார்களை நினைவூட்டுகின்றன.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இந்த காரின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் முதலில் அரை வட்ட வடிவிலான டாக்கோமீட்டர், அடுத்து பெரிய டயலுடன் ஸ்பீடோமீட்டர், அதனைத் தொடர்ந்து 2.5 அங்குல மின்னணு திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. மின்னணு திரை மூலமாக ஓடிய தூரம், நிகழ்நேர எரிபொருள் செலவு, சராசரி மைலேஜ், ட்ரிப் மீட்டர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்.

இதர வசதிகள்

இதர வசதிகள்

இந்த காரில் கியர் லிவருக்கு பின்புறத்தில் பவர் விண்டோஸ் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பவர் விண்டோஸுக்கு கதவுகளில் தனித்தனி கன்ட்ரோல் சுவிட்சுகள் இல்லை. கிளவ் பாக்ஸ் பெரியதாகவும், போதுமானதாகவும் இருக்கிறது. ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் வைப்பதற்கான இடவசதியும், பொருட்களை வைப்பதற்கான சிறிய பாக்கெட்டும் கதவுகளில் உள்ளன.

இடவசதி

இடவசதி

பழைய சான்ட்ரோ கார் போன்றே, டால் பாய் டிசைன் கான்செப்ட்டில்தான் இந்த கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், உட்புறத்தில் விசாலமான உணர்வை தருகிறது. முன் இருக்கைகளும், பின் இருக்கைகளிலும் போதுமான ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் வசதியை உணர முடிகிறது.

முன் இருக்கைகள்

ஓட்டுனர் இருக்கையிலிருந்து சாலையை பார்ப்பதற்கு இதன் அகலமான விண்ட் ஷீல்டு கண்ணாடி மிக சிறப்பான பார்வையை வழங்குகிறது. ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி இல்லை. ஸ்டீயரிங் வீல் அட்ஜெஸ்ட்மென்ட் வசதியும் இல்லை. முன்பக்க பயணி இருக்கை சொகுசான உணர்வை தருகிறது.

 இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இந்த காரின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் முதலில் அரை வட்ட வடிவிலான டாக்கோமீட்டர், அடுத்து பெரிய டயலுடன் ஸ்பீடோமீட்டர், அதனைத் தொடர்ந்து 2.5 அங்குல மின்னணு திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. மின்னணு திரை மூலமாக ஓடிய தூரம், நிகழ்நேர எரிபொருள் செலவு, சராசரி மைலேஜ், ட்ரிப் மீட்டர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்.

பின் இருக்கை

பின் இருக்கை

பின் இருக்கையில் சராசரியான உடல் பருமன் உள்ள மூன்று பெரியவர்கள் அமர்ந்து செல்ல முடியும். உயரமானவர்களுக்கும் போதுமான ஹெட்ரூம் இடவசதி இருப்பது இந்த காரின் பெரிய பிளஸ் பாயிண்ட்டாக கூற முடியும். இருக்கைகள் உயரமாக இருப்பதால், கால்களை 90 டிகிரியில் வைத்துக் கொள்ள முடிவதால் தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. நடுவில் அமர்ந்திருப்பவருக்கு ரியர் ஏசி வென்ட் சற்றே நெருக்கடியா இருக்கலாம்.

ரொம்ப ஈஸி

இந்த காரின் கதவுகளை அதிக அளவு திறக்க முடிவதும், சரியான உயரத்தில் தரை தளம் கொடுக்கப்பட்டு இருப்பதும் இருக்கைகளில் ஏறி அமர்வதற்கும், இறங்குவதும் எளிதாக இருக்கிறது. குறிப்பாக, முதியோர்கள், பெண்கள் எளிதாக ஏறி, இறங்க முடியும் என்பதும் இந்த காரின் மிக முக்கிய அம்சமாக கூறலாம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

செயல்திறன்

இந்த காரின் எஞ்சின் சீரான செயல்திறனை வெளிப்படுத்துகிறது. இதன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மிக மென்மையான கியர் மாற்றத்தை தருவதுடன், க்ளட்ச் இயக்குவதற்கு மிக இலகுவாக இருப்பதால், பம்பர் டூ பம்பர் டிராஃபிக்கில் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கிறது. 90 கிமீ வேகம் வரை இந்த எஞ்சின் மிக மென்மையான சீரான செயல்திறனை வெளிப்படுத்துகிறது. இந்த வேகத்தை கார் தாண்டும்போது எஞ்சின் திணற துவங்குவதுடன், அதிர்வுகளும் தெரிய துவங்குகிறது.

ஏஎம்டி கியர்பாக்ஸ்

ஏஎம்டி கியர்பாக்ஸ்

ஹூண்டாய் நிறுவனத்தின் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வந்திருக்கும் முதல் கார் மாடல் சான்ட்ரோ. இதன் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஹெட் நோட் எனப்படும் கியர் மாற்றத்தின்போது தென்படும் அதிர்வு மிக குறைவாக இருக்கிறது. சிறிது நாட்கள் ஓட்டி பழகினால் அதுவும் மறைந்து போகும் விதத்தில், சிறப்பானதாக இருக்கிறது. மேனுவலாக கியரை மாற்றி ஓட்ட முடிவதும் சிறப்பு. ஏஎம்டி மாடலில் எஞ்சின் செயல்திறன் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே இருப்பதையும் கூற வேண்டும்.

மைலேஜ்

இந்த காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் லிட்டருக்கு 17 கிமீ மைலேஜை தருகிறது. இது பட்ஜெட் கார்களில் கிடைக்கும் சராசரியான அளவுதான்.

ஓட்டுதல் தரம்

ஓட்டுதல் தரம்

நகர்ப்புறத்துக்கான மாடலாக இருப்பதால், இதன் ஸ்டீயரிங் சிஸ்டம் மிக இலகுவாக உள்ளது இந்த காரின் சஸ்பென்ஷன் அமைப்பு மென்மையானதாகவே ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. நடுத்தர வேகத்தில் அதிக நிலைத்தன்மையுடன் செல்கிறது. ஆனால், அதிவேகத்தில் இதன் மென்மையான சஸ்பென்ஷன் காரணமாக நிலைத்தன்மை குறைவாக இருப்பதுடன், வளைவுகளில் அதிவேகத்தில் திரும்பும்போது சிறிய அளவில் பாடி ரோல் இருக்கிறது.

ஏசி சிஸ்டம்

ஏசி சிஸ்டம்

இந்த காரில் ஏசி சிஸ்டம் மிகச் சிறப்பாக இருக்கிறது. விரைவான குளிர்ச்சியை கேபினுக்குள் பரப்புகிறது. குறிப்பாக, பேஸ் மாடல் தவிர்த்து, பிற வேரியண்ட்டுகளில் பின் இருக்கை பயணிகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டு இருப்பதால் விரைவான குளிர்ச்சியை பெற முடிகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஓட்டுனருக்கான ஏர்பேக் மற்றும் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்ஷனலாக முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக் அஸ்ட்டா வேரியண்ட்டில் மட்டுமே பெற முடியும். அதேபோன்று, ரியர் வியூ கேமராவும் அந்த வேரியண்ட்டில் மட்டுமே ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. அனைத்து வேரியண்ட்டுகளிலும் ட்யூவல் ஏர்பேக்குகள் இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

பிரேக் சிஸ்டம்

இது சிட்டி கார் என்ற முத்திரையுடன் பார்க்கப்படுவதால், நகர்ப்புறத்தில் இதன் பிரேக் சிஸ்டம் போதுமானதாகவே கூறலாம். ஆனால், அதிவேகத்தில் செல்லும்போது இந்த காரின் பிரேக் சிஸ்டத்தின் செயல்திறன் எதிர்பார்த்த அளவு இல்லை. அவசரத்தில் பிரேக் பிடிக்கும்போது அதிக நம்பிக்கையை கொடுக்கவில்லை. எனவே, பழகும்வரை கவனமாக கையாள வேண்டும்.

பூட் ரூம் இடவசதி

பூட் ரூம் இடவசதி

இந்த காரில் 235 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. இரண்டு பெரிய சூட்கேஸ்களை வைப்பதற்கான வசதியுடன் மிக சிறப்பான இடவசதியை அளிக்கிறது. இந்த காரின் பின் இருக்கையை மொத்தமாக மடக்கி வைத்துக் உடைமைகளை வைப்பதற்கான இடவசதியை அதிகரிக்க முடியும். பின் இருக்கையை இரண்டு பிரிவாக மடக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

வண்ணத் தேர்வுகள்

வண்ணத் தேர்வுகள்

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ஸ்டார் டஸ்ட், ஃபியரி ரெட், தைபூன் சில்வர், மேரியானா புளூ, போலார் ஒயிட், இம்பீரியல் பீஜ் மற்றும் டயானா க்ரீன் ஆகிய 7 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது டயானா க்ரீன் சிறப்பு வண்ண தேர்வாகவும், உட்புறம் முழுவதும் கருப்பு வண்ண இன்டீரியருடன் கிடைக்கும்.

விலை விபரம்

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் 5 வேரியண்ட்டுகளில் ரூ.3.89 லட்சம் முதல் ரூ.5.45 லட்சம் வரையிலான விலையிலும், ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலின் மேக்னா வேரியண்ட் ரூ.5.18 லட்சத்திலும், ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் ரூ.5.46 லட்சம் விலையிலும் கிடைக்கும். சிஎன்ஜி மாடலின் மேக்னா வேரியண்ட் ரூ.5.23 லட்சத்திலும், ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் ரூ.5.64 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

சிறப்பான இன்டீரியர், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற சிறந்த தேர்வாக வந்துள்ளது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார். சான்ட்ரோ பிராண்டிற்கான நன்மதிப்பு, ஹூண்டாய் பிராண்டின் தரமான இன்டீரியர், மறுவிற்பனை மதிப்பு போன்றவற்றில் போட்டியாளர்களைவிட நிச்சயம் ஒருபடி மேலே நிற்கும். புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார். பட்ஜெட் காரை தேர்வு செய்ய விரும்புவோருக்கு புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் நிச்சயம் சிறந்த தேர்வு என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Most Read Articles
English summary
Here are our thoughts on the New Hyundai Santro car. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X