Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ப்பா.. என்னா ஸ்டைலு!! 22 இன்ச்சில் அலாய் சக்கரங்களுடன் 2020 மஹிந்திரா தார்!
2020 மஹிந்திரா தார் வாகனம் ஒன்று 22 இன்ச் சக்கரங்களுடன் அசத்தலான தோற்றத்திற்கு மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை வாகனத்தை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார் மிக பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் தான் இந்த வாகனம் தற்சமயம் விற்பனைக்கு கிடைக்கிறது.

இதனால் தங்களது நகரங்களில் கிடைக்காவிட்டாலும் தார் மீதான ஆர்வம் வாடிக்கையாளர்கள் மத்தியில் குறைந்தப்பாடில்லை. அதேநேரம் மஹிந்திரா நிறுவனமும் தனது பங்கிற்கு தாரின் தயாரிப்பு பணிகளை அதிகரித்து வருகிறது.

இந்திய சாலைகளில் இயங்கும் இரண்டாம் தலைமுறை தாரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தாரை கஸ்டமைஸ்ட் செய்யவும் உரிமையாளர்கள் மறக்கவில்லை. இதற்கு உதாரணமாக கடந்த 1 மாதத்தில் சில மாடிஃபை தார் வாகனத்தை பற்றி நமது செய்திதளத்தில் பார்த்துள்ளோம்.

முன்னதாக வாடிக்கையாளர் ஒருவர் தாருக்கு சந்தைக்கு பிறகான 20 இன்ச்சில் சக்கரங்களை பொருத்தி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது மற்றொரு 2020 தார் 22-இன்ச், மெஷின்-கட், விக்டர் சக்கரங்களுடன் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது.

இந்த சக்கரங்கள் தாரின் அழகை கூட்டுவது மட்டுமின்றி வாகனத்திற்கு நேர்த்தியான தோற்றத்தையும் வழங்குகின்றன. இந்த சக்கரங்களில் குறைந்த பரிணாம அளவுகளை கொண்ட டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு இந்த டயர்கள் போதுமானதாக இருக்காது என்பது எங்களது கருத்து.

இந்த குறிப்பிட்ட மாடிஃபை தார் மேற்கூரையை மாற்றக்கூடிய வெர்சனாகும். 2020 தார் மாற்ற முடியாத நிரந்தர மேற்கூரை வெர்சனிலும் விற்பனை செய்யப்படுகிறது. மாற்றக்கூடிய வெர்சன் என்பதால் இந்த மாடிஃபை தாரில் ரோல்-கேஜ்ஜையும் பார்க்க முடிகிறது.

மேற்கூரை போல் பின் இருக்கை வரிசையையும் வாடிக்கையாளர்கள் வழக்கமாக கார்களில் வழங்கப்படுவதை போன்றும் அல்லது நேருக்கு நேர் பார்க்கப்பட்ட விதத்திலும் (தயாரிப்பில் உள்ளது) பெறலாம். 2020 மஹிந்திரா இரு விதமான என்ஜின் தேர்வுகளில் கிடைக்கின்றன.

இதில் ஒன்றான 2.0 லிட்டர் ‘எம்ஸ்டாலியோன்' பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க் திறனையும் (னேனுவல் கியர்பாக்ஸில் 300 என்எம்), மற்றொன்றான 2.2 லிட்டர் ‘எம்ஹாவ்க்' டீசல் என்ஜின் 130 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

அதேபோல் ட்ரான்ஸ்மிஷனுக்கும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என்ற இரு கியர்பாக்ஸ் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. 2எச், 4எச் மற்றும் 4எல் என்ற ட்ரைவ் மோட்களுடன் வாகனத்தில் 4-சக்கர ட்ரைவ் சிஸ்டம் நிலையாக வழங்கப்படுகிறது. 3-கதவுகளுடன் இந்தியாவில் கிடைக்கும் ஒரே எஸ்யூவி மாடல் மஹிந்திரா தார் என்பது குறிப்பிடத்தக்கது.