புதிய மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட்: சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

Written By:

காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் போட்டியாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை பார்த்து சுதாரித்துக் கொண்ட மாருதி, தனக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வரும் டிசையர் காருக்கு புதுப்பொலிவு கொடுத்து களமிறக்கியுள்ளது.

வாடிக்கையாளர்கள் பார்க்கும் முதல் விஷயமான மைலேஜ், க்ரோம் அலங்காரங்கள், கூடுதல் வசதிகளை கொடுத்து டிசையரை மேலும் மதிப்படைய காராக மாற்றி அறிமுகம் செய்திருக்கிறது மாருதி. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் புதிய வசதிகள், மாற்றங்கள் மற்றும் இதர விஷயங்களை இந்த சிறப்பு பார்வை செய்தித் தொகுப்பில் காணலாம்.

டிசையர் சிறப்பம்சங்கள்

டிசையர் சிறப்பம்சங்கள்

டிசையர் காரில் இருக்கும் சிறப்பம்சங்களையும், அதற்குரிய அதிகாரப்பூர்வ படங்களுடன் அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

முகப்பு

முகப்பு

புதிய டிசையர் காரின் முகப்பில் மிகப்பெரிய மாற்றம் க்ரில் அமைப்பு. முன் இருந்த கருப்பு நிற ஜன்னல் க்ரில்லை எடுத்துவிட்டு முப்பரிமாண தோற்றத்திலான புதிய க்ரோம் பட்டையை பொருத்தியிருக்கின்றனர். மாலை தொங்கவிட்டது போன்ற அந்த க்ரில்லின் நடுவில் சுஸுகியின் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. மிட்வேரியண்ட் மற்றும் டாப் வேரியண்ட்டுகளில் மட்டுமே இந்த க்ரில் அமைப்பு. ஆரம்ப வேரியண்ட்டுகளில் கருப்பு நிற பட்டை கொடுக்கப்பட்டுள்ளது.

ஹெட்லைட்

ஹெட்லைட்

மிட் வேரியண்ட் மற்றும் டாப் வேரியண்ட் மாடல்களின் ஹெட்லைட் ஹவுசிங் கருப்பு நிற டின்ட் செய்யப்பட்டுள்ளது. இது டிசையர் தோற்றத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் அம்சமாக இருக்கும். ஆரம்ப வேரியண்ட்டுகளில் இந்த ஸ்மோக்டு ஹெட்லைட் ஆப்ஷன் கிடையாது.

ரியர் வியூ கண்ணாடி

ரியர் வியூ கண்ணாடி

எலக்ட்ரானிக் ஃபோல்டிங் ரியர் வியூ கண்ணாடி கொடுக்கப்பட்டுள்ளது. இது ஓட்டுனருக்கு ரியர் வியூ கண்ணாடியை எளிதாக அட்ஜெஸ்ட் செய்ய உதவும்.

 க்ரோம் அலங்காரம்

க்ரோம் அலங்காரம்

புதிய டிசையர் காரின் பம்பர் டிசைன் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், பனி விளக்கு அறைகளில் சில்வர் நிற அலங்காரம் கொடுக்கப்பட்டுள்ளது.

அலாய் வீல்

அலாய் வீல்

புதிய மோஷன் தீம் அலாய் வீல் டிசைன் கவர்வதாக இருக்கிறது. டாப் வேரியண்ட்டில் மட்டுமே அலாய் வீல் செட் கிடைக்கும்.

பின்புற தோற்றம்

பின்புற தோற்றம்

பின்புற பம்பர் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. மற்றபடி, முந்தைய மாடலுக்கும் இந்த புதிய மாடலுக்கும் பின்புறத் தோற்றத்திலும், பக்கவாட்டுத் தோற்றத்திலும் அதிக வித்தியாசங்கள் இல்லை.

பார்க்கிங் சென்சார் சிஸ்டம்

பார்க்கிங் சென்சார் சிஸ்டம்

டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டாப் வேரியண்ட்டில் பார்க்கிங் சென்சார்கள் நிரந்தர ஆக்சஸெரீயாக இடம்பெற்றிருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

பீஜ் மற்றும் கருப்பு நிற இன்டிரியர் கவர்வதாக இருக்கிறது. பாகங்களின் தரமும் தக்க வைக்கப்பட்டுள்ளது. ஹெட்ரெஸ்ட், பின்புற இருக்கை பயணிகளுக்கான ஆர்ம் ரெஸ்ட் போன்ற வசதிகளை தொடர்ந்து பெற்றிருக்கிறது. புதிய மற்றும் சிறப்பு வசதிகளை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

புஷ் பட்டன் ஸ்டார்ட்

புஷ் பட்டன் ஸ்டார்ட்

மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் குறிப்பிட்டுக் கூற வேண்டிய முக்கிய சிறப்பு வசதி புஷ் பட்டன் ஸ்டார்ட். பாக்கெட்டில் சாவி இருந்தாலே, ஒரு பட்டனை அழுத்தி கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்துவிட முடியும். இந்த வசதி டாப் வேரியண்ட்டில் மட்டுமே ஸ்டான்டர்டு ஆக்சஸெரீயாக வழங்கப்படுகிறது.

புளூடூத் மியூசிக் சிஸ்டம்

புளூடூத் மியூசிக் சிஸ்டம்

தற்போது வழங்கப்படும் மியூசிக் சிஸ்டம் புளூடூத் மூலம் இணைப்பு ஏற்படுத்தும் வசதி கொண்டதாக வந்திருக்கிறது முக்கிய வசதியாக கூறலாம்.

கன்ட்ரோல் சுவிட்சுகள்

கன்ட்ரோல் சுவிட்சுகள்

ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் இருக்கின்றன. அதுதவிர, மொபைல்போன் அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கான பேடில் ஷிப்ட்டர் போன்ற சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அலங்கார மரத் தகடுகள்

அலங்கார மரத் தகடுகள்

டேஷ்போர்டில் அலங்காரமான தோற்றத்தை தரும் சிறிய மரத்திலான தகடுகள் கொடுக்கப்பட்டிருப்பதை காணலாம். இது பேஸ் வேரியண்ட்டில் மட்டும் கிடையாது. மற்ற வேரியண்ட்டுகளில் இருக்கின்றன.

சாக்கெட்

சாக்கெட்

முன் இருக்கைகளுக்கு இடையில் ஒரு 12 வோல்ட் சாக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புற பயணிகள் மொபைல்போன்களை எளிதாக சார்ஜ் செய்து கொள்வதற்கு இது ஏதுவாக இருக்கும்.

 எஞ்சின்

எஞ்சின்

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. பெட்ரோல் எஞ்சினின் அதிகபட்ச சக்தியை வெளிப்படுத்தும் திறன் சற்று குறைக்கப்பட்டு எரிபொருள் சிக்கனம் கூடுதலாக தரும் வகையில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும். டீசல் மாடலில் இருக்கும் 1.3 லிட்டர் எஞ்சின் 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வழங்கும். டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

போட்டியாளர்கள் எளிதாக நெருங்க முடியாத அளவிற்கான அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட மாடலாக டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வந்திருக்கிறது. பெட்ரோல் மாடலின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் லிட்டருக்கு 20.85 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 18.5 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டீசல் மாடல் லிட்டருக்கு 26.59 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால், இந்தியாவின் மிக அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையையும் டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெற்றுள்ளது.

 பிரேக்குகள்

பிரேக்குகள்

முன்புறத்தில் வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் டிரம் பிரேக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இவை சிறப்பான செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று மாருதி தெரிவிக்கிறது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் மெக்ஃபர்ஷன் ஸ்ட்ரட் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் டார்சன் பீம் சஸ்பென்ஷன் அமைப்பும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

டயர்கள்

டயர்கள்

பேஸ் மற்றும் மிட் வேரியண்ட்டுகளில் 14 இஞ்ச் டயர்களும், டாப் வேரியண்ட்டில் அலாய் வீல்கள் கொண்ட 15 இஞ்ச் டயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் டேங்க்

எரிபொருள் டேங்க்

இந்த காரில் 42 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் தொட்டி இருக்கிறது. இது நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவாக இருக்கும்.

புதிய வண்ணங்கள்

புதிய வண்ணங்கள்

ஏற்கனவே இருந்த வெள்ளை, சில்வர், கருப்பு, நீலம் தவிர்த்து, புதிதாக பழுப்பு, அரக்கு மற்றும் புதிய ஆல்ப் ப்ளூ ஆகிய வண்ணங்களில் வந்துள்ளது. சிவப்பு நிறம் நீக்கப்பட்டுவிட்டது.

விலை விபரம்

விலை விபரம்

பெட்ரோல் வேரியண்ட்டுகள்

டிசையர் LXi - ரூ.5.07 லட்சம்

டிசையர் Lxi(O) - ரூ.5.20 லட்சம்

டிசையர் VXi - ரூ.5.85 லட்சம்

டிசையர் ZXi - ரூ.6.80 லட்சம்

டீசல் வேரியண்ட்டுகள்

டிசையர் LDi - ரூ.5.99 லட்சம்

டிசையர் VDi - ரூ.6.85 லட்சம்

டிசையர் ZDi - ரூ.7.81 லட்சம்

[அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகள்]

டெலிவிரி எப்போது?

டெலிவிரி எப்போது?

ஏற்கனவே 8,000க்கும் அதிகமான கார்களை உற்பத்தி செய்து வைத்துக் கொண்டுதான் மாருதி நிறுவனம் நேற்று விலை உள்ளிட்ட விபரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. எனவே, முன்பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும் என்று டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
English summary
For every feature of the all-new Dzire, inspires desires in others. Be it stunning good looks or pampering coziness matched by power & efficiency, anyone who sees it will want to get their hands on it.
Story first published: Tuesday, February 24, 2015, 12:46 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark