புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் - சிறப்பு பார்வை

By Saravana

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வர்த்தகத்திலும், பிராண்டு இமேஜுக்கு மிக முக்கியமான மாடல் பென்ஸ் சி கிளாஸ். அந்த முக்கியத்துவத்தை உணர்ந்து புதிய டிசைன் மற்றும் கூடுதல் சிறப்பு வசதிகளுடன் கூடிய சி கிளாஸ் கார் மாடலை சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது பென்ஸ் நிறுவனம்.

பெட்ரோல் எஞ்சின் மாடலில் மட்டும் இறக்குமதி மாடலாக வந்திருக்கும் புதிய பென்ஸ் சி கிளாஸ் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும். பென்ஸ் என்றாலே வெள்ளை வண்ணம்தானே என்ற முத்திரையையும் உடைக்கும் விதத்தில் சிறப்பான வண்ணங்களில் வந்திருக்கிறது புதிய சி கிளாஸ். இந்த காரில் இருக்கும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.


சிறப்பு பார்வை

சிறப்பு பார்வை

புதிய பென்ஸ் சி கிளாஸ் காரின் சிறப்பம்சங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

டிசைன்

டிசைன்

பென்ஸ் எஸ் கிளாஸ் காரின் சாயல் அதிகம் தெரிவதால் பேபி எஸ் கிளாஸ் என்றும் அழைக்கின்றனர். எஸ் கிளாஸ் காரில் இருப்பது போன்ற அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்டுகள், முகப்பு கிரில், பம்பர் போன்றவை மூலம் இளமை ததும்புகிறது. பம்பரில் குரோம் கம்பிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள் டிசைன் எஸ் கிளாஸ் காரை சட்டென நினைவூட்டிவிடுகிறது. இருப்பினும், பம்பர், டியூவல் எக்ஸ்சாஸ்ட் போன்றவை நாகரீத்தின் சின்னமாக மாறியிருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

வெளிப்புறத்தில் மட்டுமின்றி, இன்டிரியரிலும் எஸ் கிளாஸ் தாக்கம் இருக்கிறது. ஏசி வென்ட்டுகள், சீட் கன்ட்ரோல் பட்டன்கள் ஆகியவை ஒரே மாதிரி இருக்கின்றன. தற்போது மரப்பலகைகளால் அலங்கரிக்கப்பட்ட சென்டர் கன்சோல், 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் போன்றவை புதிதாக தெரிகின்றன.

டச்பேட்

டச்பேட்

ரோட்டரி வீல் மேலே டச்பேடு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பொழுதுபோக்கு சாதனங்களை எளிதாக இயக்க முடியும். இநத் காரில் 8.4 இஞ்ச் திரை கொடுக்கப்பட்டிருக்கிறது. இது டேஷ்போர்டு டிசைனுடன் சிறப்பாக ஒத்துப் போகிறது.

வசதிகள்

வசதிகள்

3 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், ரிவர்ஸ் கேமரா, சன்ரூஃப், சாட்டிலைட் நேவிகேஷன், மூன்று வண்ணங்களில் மாறும் எல்இடி ஆம்பியன்ட் லைட் செட்டிங், புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் 13 ஸ்பீக்கர்களுடன் கூடிய பர்ம்ஸ்டெர் மியூசிக் சிஸ்டம் போன்றவை குறிப்பிடத்தக்க வசதிகள்.

 அட்ஜெஸ்ட் இருக்கை

அட்ஜெஸ்ட் இருக்கை

முன் இருக்கையில் கால் கடுக்காமல் இருப்பதற்கு ஏதுவாக இருக்கையின் கீழ்பாகத்தை எலக்ட்ரானிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், நீண்ட தூர பயணங்களின்போது கால்களில் வலி ஏற்படாத வகையில் இருக்கும். இந்த செக்மென்ட்டிலேயே மிக அதிக வீல்பேஸ் கொண்ட மாடல் என்பதால், பின்புற இருக்கைகள் தாராள இடவசதியை அளிக்கின்றன. அதேவேளை, முன் இருக்கையில் இருக்கும் அளவுக்கு பின் இருக்கை வசதியாக இல்லை. அதேவேளை, சிறப்பான ஹெட்ரூம், லெக்ரூம் இடவசதி பின் இருக்கையில் உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய பென்ஸ் எஸ் கிளாஸ் கார் சி- 200 என்ற ஒரேயொரு பெட்ரோல் மாடலில் மட்டுமே வந்துள்ளது. இந்த காரில் 5,500 ஆர்பிஎம்.,மில் அதிகபட்சமாக 184 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் உள்ளது. 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பேடில் ஷிப்ட் வசதியும் உண்டு. புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி இருப்பது எஞ்சின் ஆயுளை வளர்க்கும் அம்சமாக கூறலாம்.

டிரைவிங் ஆப்ஷன்கள்

டிரைவிங் ஆப்ஷன்கள்

சாலை நிலை, போக்குவரத்துக்கு தக்கவாறு டிரைவிங் ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளும் வசதியும் உள்ளது. ஈக்கோ, கம்போர்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் ப்ளஸ் ஆகிய 4 விதமான டிரைவிங் ஆப்ஷன்களில் எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ளலாம். எஞ்சின் இயக்கம் மட்டுமின்றி, ஸ்டீயரிங், சஸ்பென்ஷன் போன்றவற்றிலும் மாறுதல்கள் செய்து கொள்ளும்.

பெர்ஃபார்மென்ஸ் & மைலேஜ்

பெர்ஃபார்மென்ஸ் & மைலேஜ்

இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 7.3 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்ச வேகம் மணிக்கு 235கிமீ. அராய் சான்றுபடி லிட்டருக்கு 14.74 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலைவிட லிட்டருக்கு 3 கிமீ வரை மைலேஜ் அதிகம் என்பதும் கவனிக்கத்த்தக விஷயம்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

7 ஏர்பேக்குகள், அட்டென்ஷன் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், இஎஸ்பி., சிஸ்டத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்றவை குறிப்பிடத்தக்கவையாக கூறலாம். யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் இந்த கார் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

விலை

விலை

ரூ.40.9 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். முந்தைய மாடல் ரூ.33.5 லட்சம் முதல் ரூ.38 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கொஞ்சம் காஸ்ட்லியாக வந்துள்ளது. டிசைன், கூடுதல் வசதிகள் போன்றவை விலையை ஒரு பொருட்டாக நினைக்க வைக்காது.

Most Read Articles
English summary
The Mercedes-Benz C-Class was launched today by the German carmaker, Mercedes. The C Class has been one of Mercedes' best selling product in India, for a long time now.The Mercedes-Benz C-Class boasts itself as the most technologically advanced car on the road in the Indian market today. 
Story first published: Friday, November 28, 2014, 14:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X