புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் டாடா சஃபாரி பெயருக்கு தனி மதிப்பு இருந்து வருகிறது. 1998ம் ஆண்டு முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட டாடா சஃபாரி, லைஃப் ஸ்டைல் எஸ்யூவி என்ற புதிய ரகத்திற்கு அடித்தளமிட்டது. அவ்வப்போது மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்களுடன் வந்த டாடா சஃபாரி, நவீன யுக எஸ்யூவி கார்களின் வருகையால் மார்க்கெட் இழந்தது.

கடந்த 2019ம் ஆண்டு டாடா சஃபாரி விற்பனையில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், முற்றிலும் புதிய சஃபாரி எஸ்யூவியை மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது டாடா மோட்டார் நிறுவனம். இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி மாடலை டெஸ்ட் டிரைவ் வாய்ப்பு டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு கிடைத்தது. பெங்களூரில் இருந்து குனிகல் அருகில் உள்ள பெட்டேடா ரங்கநாத சுவாமி மலைப்பகுதி வரை 200 கிமீ தூரத்திற்கு டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். பெங்களூர் நகரப்பகுதி, நெடுஞ்சாலை மற்றும் சிறிய மலைக்குன்று பகுதிகளில் வைத்து சோதனை செய்தோம். அப்போது இந்த புதிய டாடா சஃபாரி குறித்து எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

லேண்ட்ரோவர் பிளாட்ஃபார்ம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இங்கிலாந்தை சேர்ந்த லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டி8 என்ற எஸ்யூவி கட்டமைப்புக் கொள்கையை தழுவி உருவாக்கப்பட்ட ஒமேகாஆர்க் என்ற புதிய பிளாட்ஃபார்மில் இந்த புதிய சஃபாரி உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஏற்கனவே விற்பனையில் உள்ள ஹாரியர் எஸ்யூவியின் அடிப்படையிலான 7 சீட்டர் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முகப்பு டிசைன்

டாடா ஹாரியர் எஸ்யூவியின் அடிப்படையிலான மாடல் என்பதால் முகப்பில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. முகப்பு பிரம்மாண்டமாக இருக்கிறது. பானட்டை ஒட்டி இண்டிகேட்டருடன் கூயி எல்இடி பகல்நேர விளக்குகள் உள்ளது. அம்புகுறி வடிவிலான க்ரோம் அலங்கார பாகங்களுடன் கூடிய க்ரில் அமைப்பு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இரண்டு அறைகளுடன் கூடிய ஸினான் எச்ஐடி புரொஜெக்டர் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் பம்பரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு கீழாக பனிவிளக்கு அறை உள்ளது. பம்பருக்கு கீழாக சில்வர் வண்ண ஸ்கிட் பிளேட்டும் இதன் முக்கிய அம்சமாக இருக்கிறது.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டில் சி பில்லர் வரை ஹாரியர் எஸ்யூவி டிசைனை பிரதிபலித்தாலும், முற்றிலும் புதிய மாடலாக தெரிகிறது. ஹாரியர் எஸ்யூவி பின்புறம் தாழ்ந்து கூபே போன்று இருக்கும். ஆனால், சஃபாரியில் கூரை அமைப்பு சதுர வடிவில் தோற்றமளிக்கிறது.

பக்கவாட்டில் கருப்பு வண்ண ரியர் வியூ மிரர்கள், 18 அங்குல மெஷிட் கட் அலாய் வீல்கள், கருப்பு நிற பாடி கிளாடிங் சட்டங்கள், பிரம்மாண்ட வீல் ஆர்ச்சுகள், பழைய சஃபாரி எஸ்யூவியை நினைவூட்டும் வகையில் பெயர் பதிக்கப்பட்ட ரூஃப் ரெயில்கள், சில்வர் வண்ண ஆகியவற்றுடன் சி பில்லரில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹாரியர் எஸ்யூவியைவிட நீளம் மற்றும் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜன்னல்களுக்கு கீழாக க்ரோம் லைன் இருப்பதும் கவர்ச்சியாக உள்ளது.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புற டிசைன்

பின்புறத்தில் புதிய எல்இடி டெயில்லைட் க்ளஸ்ட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், பின்புறம் ஹாரியர் இருந்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இரண்டு எல்இடி டெயில் க்ளஸ்ட்டர்களை இணைக்கும் விதத்தில், பளபளப்பு மிகுந்த கருப்பு பட்டை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. நம்பர் பிளேட்டுக்கு கீழாக சஃபாரி பெயர் பதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் மிக பிரம்மாண்டமானத் தோற்றத்துடன் வசீகரிக்கிறது புதிய டாடா சஃபாரி.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்டீரியர்

புதிய டாடா சஃபாரியின் இன்டீரியர் மிகவும் பிரிமீயமாக இருக்கிறது. இரட்டை வண்ணத்தில் காட்சியளிக்கிறது. ஹாரியர் எஸ்யூவியின் அடிப்படையிலான அதே டேஷ்போர்டு அமைப்புதான். மென்மையான பிளாஸ்டிக் பாகங்கள், மரத் தகடுகளுடன் அலங்கார வேலைப்பாடுகளுடன் கவர்கிறது. ஸ்டீயரிங் வீல், ஏசி வென்ட்டுகளில் சில்வர் தகடு அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆயிஸ்டர் ஒயிட் என்ற விசேஷ வெள்ளை வண்ண லெதர் இருக்கைகள் உள்ளன. 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என இரண்டு மாடல்களிலும் ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கான இருக்கைகள் மிக சொகுசான உணர்வை தருகிறது. ஓட்டுனர் இருக்கைக்கு லம்பார் சப்போர்ட் மற்றும் எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதி உள்ளது. முன்புறத்தில் வென்டிலேட்டட் வசதியுடன் இருக்கைகள் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும், வெள்ளை வண்ண இருக்கைகள் என்பதால் சீக்கிரமே அழுக்கடையும் வாய்ப்பு இருப்பதால், கூடுதல் பராமரிப்பு தேவைப்படும்.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எலெக்ட்ரிக் சன்ரூஃப்

எலெக்ட்ரிக் பனோரமிக் சன்ரூஃப் மிக முக்கிய அம்சமாக இருக்கிறது. மொத்தத்தில் உட்புறம் மிக விசாலமான உணர்வை தருகிறது.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இடவசதி

முன்வரிசை மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கு போதுமான ஹெட்ரூம், லெக்ரூம் இடவசதி உள்ளது. கேப்டன் இருக்கை வசதி கொண்ட 6 சீட்டர் மாடலில் இடவசதி மிகச் சிறப்பாகவே கூறலாம். கால் தொடைகளுக்கும் நல்ல சப்போர்ட் இருக்கிறது. சாய்மான வசதியும் உள்ளது.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மூன்றாவது வரிசை இருக்கைகள்

மூன்றாவது வரிசை இருக்கைகள் எதிர்பார்த்த அளவு இடவசதி இல்லை என்றே கூறலாம். பெரியவர்களுக்கு போதுமான லெக் ரூம் இல்லை. நெருக்கடியான உணர்வை தருகிறது. இதனால், சிறியவர்களுக்கே மூன்றாவது வரிசை இருக்கை சவுகரியமாக இருக்கும். மூன்றாவது வரிசையில் தனி ஏசி வென்ட்டுகள் உள்ளன. இந்த காரில் போதுமான ஸ்டோரேஜ் அறைகள் இருப்பது முக்கிய அம்சமாக குறிப்பிட வேண்டும்.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

டாடா ஹாரியர் எஸ்யூவியில் இருக்கும் அதே 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்தான் இதிலும் உள்ளது. தொடுதிரை சிறப்பான இயக்கத்தை தருகிறது. இயக்குவதற்கும் எளிதாக உள்ளது. இந்த காரில் டாடா நிறுவனத்தின் புதிய ஐரா கனெக்டெட் கார் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. காரின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் வசதி, கார் எங்கு செல்கிறது என்பதை நிகழ்நேர முறையில் கண்காணிக்கும் வசதி, வாய்ஸ் கமாண்ட் வசதி, ரிமோட் முறையில் காரின் வெளியில் இருந்தவாறே முக்கிய வசதிகளை கட்டுப்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

'செமி டிஜிட்டல்' இன்ஸ்ட்ரூெமென்ட் க்ளஸ்ட்டர்

செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் தகவல்களை பெறுவதற்கு ஓட்டுனருக்கு எளிதாக இருக்கிறது. ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் பிரிமீயம் கார் என்பதை காட்டும் வகையில் உள்ளது.இந்த எஸ்யூவியில் ஸ்மார்ட்ஃபோன் அழைப்புகளையும், ரேடியோவை கட்டுப்படுத்துவதற்கான சுவிட்சுகள் ஸ்டீயரிங் வீலில் உள்ளன. வயர்லெஸ் சார்ஜர் இல்லை என்பது ஒரு குறை. இந்த எஸ்யூவியில் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் சிஸ்டம் மிகச் சிறப்பான வசதியாக உள்ளது.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த எஸ்யூவியில் 9 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் குறை சொல்ல முடியாத அளவு சிறப்பான ஒலி தரத்தை வழங்குகிறது.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம். இதன் ஏசி சிஸ்டம் மிகச் சிறப்பான குளிர்ச்சியை கேபினுக்குள் தக்க வைக்க உதவுகிறது. இந்த எஸ்யூவியில் ஏராளமான ஸ்டோரேஜ் அறைகள் இருப்பது நீண்ட தூர பயணங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். இரண்டாவது, மூன்றாவது வரிசைகளிலும் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர்கள் உள்ளன.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

உடைமைகளுக்கான இடவசதி

இந்த எஸ்யூவியில் மூன்றாவது வரிசை இருக்கையை 50:50க்கு என்ற விகிதத்திலும், 7 சீட்டர் மாடலில் இரண்டாவது இருக்கையை 60:40 என்ற விகிதத்திலும் மடக்கி வைக்க முடியும். இதன்மூலமாக, பூட்ரூம் இடவசதியை 1,658 லிட்டர்கள் வரை அதிகரிக்க முடியும். மொத்ததில், இன்டீரியர் மிகவும் பிரிமீயமாகவும், அதிக ஸ்டோரேஜ் வசதிகளுடன் கவர்கிறது.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின் மற்றும் செயல்திறன்

டாடா ஹாரியர் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 2.0 லிட்டர் க்ரையோடெக் டீசல் எஞ்சின்தான் புதிய டாடா சஃபாரி எஸ்யூவியிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. பிஎஸ்-6 தரத்திற்கு இணையான இந்த எஞ்சின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கொடுக்கப்பட உள்ளது.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பழைய சஃபாரி எஸ்யூவியில் 4 வீல் டிரைவ் சிஸ்டம்தான் மிக முக்கிய அம்சமாக இருந்தது. ஆனால், இந்த புதிய மாடலில் 2 வீல் டிரைவ் சிஸ்டம் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்படவில்லை என்பது சஃபாரியை எதிர்பார்த்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமான விஷயமாக இருக்கும்.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டாடா சஃபாரி எஸ்யூவியின் எஞ்சின் மிகச் சிறப்பான பவர் டெலிவிரியை வழங்குகிறது. மிகவும் மென்மையாகவும், சீரான பவர் டெலிவிரியை வழங்குகிறது. 1,800 ஆர்பிஎம் தாண்டும்போது அதிக பவர் டெலிவிரியை வெளிப்படுத்துவதுடன் ஓட்டுதல் அனுபவத்தை மேம்படுத்துகிறது. ஹாரியர் எஸ்யூவியைவிட சஃபாரி எஸ்யூவி சற்றே கூடுதல் எடை கொண்டதாக இருந்தாலும், அந்த கூடுதல் சுமையை எளிதாக சமாளித்து திக்கு திணறல் இல்லாத ஓட்டுதல் அனுபவத்தை வழங்குகிறது. குறிப்பாக, நடுத்தர நிலைகளில் எஞ்சின் செயல்திறன் மிக அருமையாக உள்ளது. இதனால், நெடுஞ்சாலைகளில் ஓவர்டேக் செய்வதற்கு எளிதாக இருக்கிறது. ஏற்றமான மலைச்சாலைகளிலும் திக்கு திணறல் இல்லாமல் அனாயசமாக செல்கிறது.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த எஸ்யூவியின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு மாடல்களையும் ஓட்டி பார்த்தோம். இதன் எஞ்சினுக்கு ஜாடிக்கு ஏற்ற மூடி போல இருக்கிறது மேனுவல் கியர்பாக்ஸ். அதிர்வுகள் இல்லாமல் கியர் மாற்றம் விரைவாக நடப்பதுடன், இலகுவான க்ளட்ச் இருப்பதால் நகர்ப்புறத்திலும் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கிறது. இந்த பிரம்மாண்ட எஸ்யூவியை கையாள்வதற்கு இதுவும் துணைபுரிகிறது.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிரைவிங் மோடுகள்

மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்று டிரைவிங் மோடுகள் உள்ளன. ஈக்கோ மற்றும் சிட்டி டிரைவிங் மோடுகளில் அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற வாய்ப்பு கிடைக்கிறது. ஸ்போர்ட் மோடில் வைத்து ஓட்டும்போது அதிக செயல்திறனை வெளிப்படுத்துகிறது. இதன் ஸ்போர்ட் டிரைவிங் மோடில் மாற்றினால், அபரிமிதமான பிக்கப் கிடைப்பதால், உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்குகிறது.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சிறப்பான அனுபவத்தை வழங்கினாலும், சற்றே மந்தமாக தெரிகிறது. ஆக்சிலரேட்டரை அதிகமாக கொடுக்கும்போது எதிர்பார்த்த அளவு விரைவாக செல்ல முடியாத நிலையை உணர முடிகிறது. எனினும், ஆசுவாசமான ஓட்டுதல் அனுபவத்தை தருகிறது. அதேநேரத்தில், ஸ்போர்ட் மோடில் வைத்து ஓட்டும்போது கூடுதல் உற்சாகத்தை வழங்குவது சிறப்பான விஷயமாக குறிப்பிடலாம்.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்

இந்த எஸ்யூவியில் டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டமும் உள்ளது. நார்மல், ரஃப் மற்றும் வெட் என மூன்று விதமான நிலைகளில் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதால், எந்தவொரு சாலைகளையும் எளிதில் எதிர்கொள்ளும் வாய்ப்பை இது வழங்கும்.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சஸ்பென்ஷன், பிரேக்குகள் மற்றும் கையாளுமை

புதிய டாடா சஃபாரி எஸ்யூவி 7 சீட்டர் மாடலாக இருந்தாலும், மிகச் சிறப்பான கையாளுமையையும், நிலைத்தன்மையையும் வழங்குகிறது. ஸ்டீயரிங் வீல் போதுமான நம்பிக்கையை தருவதால், மூன்று இலக்க வேகத்திலும் நம்பிக்கையுடன் செலுத்த முடிகிறது. அதேபோன்று, நகர்ப்புறத்திலும் ஓட்டுவதற்கு ஸ்டீயரிங் வீல் சிறப்பாக இருக்கிறது.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கார் மூன்று இலக்க வேகத்தை தொடும்போது, ஸ்டீயரிங் சிஸ்டம் போதுமான இறுக்கத்தை பெறுவதும் ஓட்டுனருக்கு அதிக நம்பிக்கையை வழங்குகிறது. அதிவேகத்தில் இந்த எஸ்யூவியை தடம் மாறுவதற்கும் சிறப்பானதாக இருக்கிறது. நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்லும்போது வளைவுகளில் சிறிய அளவிலான பாடி ரோல் இருக்கிறது. ஆனால், இந்த பிரம்மாண்ட எஸ்யூவிக்கு இது மிகப்பெரிய பிரச்னையாக கூற முடியாது. சஸ்பென்ஷன் அமைப்பு அதிக நிலைத்தன்மையை வழங்குவதற்கு உதவி செய்யும் அதே நேரத்தில், சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் வகையிலும் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், பள்ளம், மேடுகளை அனாயசமாக கடக்கிறது. இந்த எஸ்யூவியின் பிரேக் சிஸ்டம் மிகச் சிறப்பானதாக குறிப்பிட வேண்டும். சரியான இடத்தில் வாகனத்தை கணித்து நிறுத்துவதற்கு உதவுகிறது.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மைலேஜ்

புதிய டாடா சஃபாரி எஸ்யூவியை பெங்களூரில் உள்ள போக்குவரத்து மிகுந்த நகரச் சாலைகள், நெடுஞ்சாலை மற்றும் ஏற்றமான மலைச்சாலைகளில் வைத்து சோதனை செய்தோம். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு மாடல்களையும் தனித்தனியே டெஸ்ட் டிரைவ் செய்ததால், சரியான மைலேஜை பெற இயலவில்லை. விரைவில் இந்த காரை முழுமையாக டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்போது சரியான மைலேஜ் அளவை வழங்குகிறோம்.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வேரியண்ட்டுகள், வண்ணத் தேர்வுகள் விபரம்

புதிய டாடா சஃபாரி எஸ்யூவி XE, XM, XT, XT+, XZ மற்றும் XZ+ ஆகிய வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. இதில், XM, XZ மற்றும் XZ+ ஆகிய வேரியண்ட்டுகளில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்பட உள்ளது. அனைத்து வேரியண்ட்டுகளிலும் 7 சீட்டர் இருக்கை வசதி கொடுக்கப்பட உள்ளது. XZ+ வேரியண்ட்டில் மட்டும் ஆப்ஷனலாக 6 சீட்டர் மாடல் கொடுக்கப்பட உள்ளது.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய டாடா சஃபாரி எஸ்யூவி ராயல் புளூ, ஆர்கஸ் ஒயிட், டேடோனா க்ரே ஆகிய வண்ணத் தேர்வுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த மாதம் விலை அறிவிக்கப்பட உள்ளது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிகளுக்கு நேரடி போட்டியாக இருக்கும். விரைவில் வர இருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ஜீப் காம்பஸ் எஸ்யூவிகளின் 7 சீட்டர் மாடல்களுக்கும் போட்டியை கொடுக்கும்.

புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிரைவ்ஸ்பார்க் கருத்து

டாடா மோட்டார் நிறுவனத்தின் மிகவும் விலை உயர்ந்த மாடலாக புதிய சஃபாரி எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. பழைய பெயரில் வந்தாலும், முற்றிலும் புதிய மாடலாக உருவாக்கப்பட்டு இருப்பதுடன், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வாடிக்கையாளர்களை கவரும். இந்த எஸ்யூவியில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் இல்லாதது ஏமாற்றமான விஷயம். இந்த எஸ்யூவிக்கு போட்டியாளர்களைவிட மிக சவாலான விலை நிர்ணயிக்கப்பட்டால், நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த 7 சீட்டர் மிட்சைஸ் எஸ்யூவி தேர்வுகளில் முக்கியமானதாக புதிய டாடா சஃபாரி மாறும் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
2021 Tata Safari Review: Tata Motors is all set to introduce its new flagship SUV model, the Safari in the Indian market. Ahead of its arrival, we got behind the wheel to check out, if the new Safari lives up to its iconic nameplate, which promises to create a new benchmark for SUVs in the indian market. Read further for more details on the 2021 Tata Safari. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X