புதிய டொயோட்டா லிவா கார்... எவ்வாறு மேம்பட்டுள்ளது என பார்ப்போமா?

Written By:

இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்த முதல் ஹேட்ச்பேக் ரக கார் மாடல் லிவா. 2011ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா லிவா கார் மீது ஏக எதிர்பார்ப்பு இருந்தது உண்மை. ஆனால், அந்த எதிர்பார்ப்பை டொயோட்டா லிவா பொய்க்க செய்தது. மாருதி ஸ்விஃப்ட் போன்ற ஜாம்பவான் மாடல்களை எதிர்கொள்ள திராணி இல்லாமல், இந்த கார் சொதப்பி வந்தது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் விதத்தில் புதிய மாறுதல்களுடன் மேம்படுத்தப்பட்டு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

பெங்களூரில் உள்ள டொயோட்டா ஆலையில் நடந்த அறிமுக நிகழ்ச்சியின்போது, அங்குள்ள டெஸ்ட் டிராக்கில் டொயோட்டா லிவா காரின் டீசல் மாடலை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, இந்த காரில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மற்றும் இதர அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

டிசைன் அம்சங்கள்

டிசைன் அம்சங்கள்

டொயோட்டா எட்டியோஸ் செடான் காரின் ஹேட்ச்பேக் என்பதால், அந்த காரில் நாம் ஏற்கனவே பார்த்த மாறுதல்கள்தான் இந்த காரிலும் நிகழ்ந்துள்ளது. முகப்பு க்ரில் அமைப்பும், பம்பர் டிசைன் பொலிவை கூட்டுகிறது. பக்கவாட்டில் வித்தியாசங்கள் இல்லை.

புதிய டொயோட்டா லிவா கார் எவ்வாறு மேம்பட்டுள்ளது?

ஆனால், புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. டெயில் லைட்டும், பின்புற பம்பரும் மாற்றங்களை சந்தித்திருக்கின்றன. பழைய மாடலைவிட புதிய மாடல் சற்று சிறப்பான தோற்றத்திற்கு மாறியிருக்கிறது. புதிய வண்ணங்களும் மெருகு சேர்க்கிறது.

புதிய டொயோட்டா லிவா கார் எவ்வாறு மேம்பட்டுள்ளது?

இன்டீரியரின் பெரும்பான்மையான பகுதிகளை யானை தந்த வண்ண கலவை ஆக்கிரமித்திருக்கிறது. மேலும், கருப்பு வண்ண பாகங்கள் அழகு சேர்க்கின்றன. இருக்கைகள் யானை தந்த வண்ணமும், சாம்பல் வண்ணத்திலுமாக பார்ப்பதற்கே மென்மையான உணர்வை தருகின்றன.

புதிய டொயோட்டா லிவா கார் எவ்வாறு மேம்பட்டுள்ளது?

டிசைன் மாறுதல்களுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் டிஜிட்டல் மற்றும் அனலாக் டயல்களுடன் கவர்கிறது. இதன் விளக்கு பிரகாசத்தை தேவையான அளவு கூட்டிக் குறைக்க முடியும். பழைய மாடல் போன்றே, டேஷ்போர்டின் மையமாக அமைந்திருப்பது சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.

புதிய டொயோட்டா லிவா கார் எவ்வாறு மேம்பட்டுள்ளது?

இதன் செக்மென்ட்டில் சிறப்பான வசதிகளை பெற்றிருக்கிறது. 2 டின் மியூசிக் சிஸ்டம், பவர் விண்டோஸ், எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட சைடு மிரர்கள், பின்புற இருக்கைக்கு நடுவில் ஆர்ம்ரெஸ்ட், ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி, 5 இருக்கைகளுக்கும் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஹெட்ரெஸ்ட் போன்றவை மிக முக்கிய அம்சங்கள்.

புதிய டொயோட்டா லிவா கார் எவ்வாறு மேம்பட்டுள்ளது?

போட்டியாளர்களை ஒப்பிடும்போது இந்த காரின் இடவசதியும் சிறப்பாக இருக்கிறது. அடுத்து காரின் NVH லெவல் என்று குறிப்பிடப்படும் காரின் அதிர்வுகள் மற்றும் சப்தம் கேபினுக்குள் அதிகம் தெரியாத வகையில், கூடுதல் சப்த தடுப்பு அமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்டிருப்பது இதன் விசேஷ அம்சம். இதனால், பயணத்தின்போது அருமையான உணர்வை தருகிறது.

புதிய டொயோட்டா லிவா கார் எவ்வாறு மேம்பட்டுள்ளது?

பழைய லிவா காரில் இருந்த அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 1.4 லிட்டர் டீசல் எஞ்சினும்தான் இந்த புதிய மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 79 பிஎச்பி பவரையும், 104என்எம் டார்க்கையும் வழங்கும். டீசல் மாடல் 67 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் வழங்கும். இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய டொயோட்டா லிவா கார் எவ்வாறு மேம்பட்டுள்ளது?

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.16 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 23.59 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. குறைந்த தூரமே ஓட்ட முடிந்ததால், சரியான மைலேஜ் விபரத்தை பெறமுடியவில்லை. ஆனால், நடைமுறையில் டீசல் மாடல் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் குறையாமல் கொடுக்கும் என நம்பலாம்.

புதிய டொயோட்டா லிவா கார் எவ்வாறு மேம்பட்டுள்ளது?

புதிய டொயோட்டா லிவா காரின் சஸ்பென்ஷன் மேம்படுத்தப்பட்டு இருப்பதால், சிறந்த கையாளுமையை தருகிறது. வளைவுகளில் திருப்பும்போது நம்பிக்கையான உணர்வுடன் திருப்ப முடிகிறது.

புதிய டொயோட்டா லிவா கார் எவ்வாறு மேம்பட்டுள்ளது?

அதேநேரத்தில், ரொம்பவே சொகுசான உணர்வை தரவில்லை. தோற்றத்தில் மெருகேறியிருந்தாலும், எஞ்சின் சொதப்புகிறது. ஆரம்ப வேகத்தில் பிக்கப் சிறப்பாக தெரிந்தாலும், வேகம் எடுக்கும்போது பவர் போதுமானதாக இல்லை என்பது ஏமாற்றமான விஷயம்.

புதிய டொயோட்டா லிவா கார் எவ்வாறு மேம்பட்டுள்ளது?

பாதுகாப்பு அம்சங்களுக்கு டொயோட்டா எப்போதுமே முன்னுரிமை அளித்துவருகிறது. அந்த வகையில், அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக் பவரை சரியான விகிதத்தில் செலுத்தும் இபிடி தொழில்நுட்பமும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது.

புதிய டொயோட்டா லிவா கார் எவ்வாறு மேம்பட்டுள்ளது?

அத்துடன், ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணிக்காக இரண்டு உயிர் காக்கும் காற்றுப் பைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பின் இருக்கையில் மும்முனை சீட் பெல்ட்டுகள், சைல்டு சீட் பொருத்துவதற்கான பிடிமான அமைப்பு போன்றவையும் இந்த காரை பாதுகாப்பு விஷயத்தில் சிறந்த மாடலாக முன்னிறுத்துகிறது.

புதிய டொயோட்டா லிவா கார் எவ்வாறு மேம்பட்டுள்ளது?

எமது டெஸ்ட் டிரைவின்போது இதன் பிரேக் சிஸ்டம் மிக சிறப்பாக இருந்ததை உணர முடிந்தது. மணிக்கு 100 கிமீ வேகத்தில் சடன் பிரேக் அடித்தபோதுகூட மிகச் சிறப்பான நிறுத்துதல் திறனை இந்த காரின் பிரேக் சிஸ்டம் வழங்கியது. இதனால், ஒவ்வொரு பயணமும் நம்பிக்கையாகவும், பாதுகாப்பாகவும் அமையும்.

மதிப்பு?

மதிப்பு?

புதிய மாற்றங்கள் மற்றும் வசதிகள் இந்த காரின் மதிப்பை நிச்சயம் உயர்த்தும் விஷயங்கள்தான். மேலும், கொடுக்கும் பணத்திற்கு சிறந்த அம்சங்களையும், பாதுகாப்பையும் பெற்றிருக்கிறது. இருப்பினும், தனி நபர் வாடிக்கையாளர்களை வளைக்க டிசைனில் இன்னமும் மாறுதல்களும், கூடுதல் வசதிகளும் தேவைப்படுவதையும் சொல்லியாக வேண்டும்.

புதிய டொயோட்டா லிவா விலை விபரம்

புதிய டொயோட்டா லிவா விலை விபரம்

பெட்ரோல் வேரியண்ட்டுகள்

லிவா GX: ரூ. 5,64,127

லிவா V: ரூ. 5,88,188

லிவா VX: ரூ. 6,39,231

டீசல் வேரியண்ட்டுகள்

லிவா GXD: ரூ. 6,94,053

லிவா VD: ரூ. 7,11,614

லிவா VXD: ரூ. 7,53,657

குறிப்பு: அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.

புதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் கார் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் கார் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

English summary
Read in Tamil: The Etios Liva has always been a quite hatchback in terms of private ownership one could say. It was never appreciated as much as it deserved, and people shied away from the Liva because it was a huge hit with the taxi industry. Now, Toyota has changed the way the Liva will be looked at — or has it? Let's find out.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more