நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது இறக்கியதா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்தியாவில் மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர்  நிஸான் நிறுவனம் விற்பனைக்கு கொணடு வரும் புதிய கிக்ஸ் எஸ்யூவியை டெஸ்ட் டிரைவ் செய்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறோம்.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முக்கிய சிறப்பு

வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள மாடலைவிட இந்தியாவில் வர இருக்கும் மாடல் அளவில் பெரியது. இந்திய மாடல் 4,384 மிமீ நீளமும், 1,813 மிமீ அகலமும், 1,656 மிமீ உயரமும் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. வீல் பேஸும் 2,673 மிமீ ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. நீளத்தில் 89 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. நேர் போட்டியாளரான ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியை பெரிய கார் மாடலாக இருக்கிறது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முகப்பு டிசைன்

நிஸான் நிறுவனத்தின் சர்வதேச வடிவமைப்பு கொள்கையில் வர இருக்கும் முதல் மாடல் கிக்ஸ். முகப்பில் வி வடிவிலான க்ரோம் பட்டையுடன் கூடிய பெரிய க்ரில் அமைப்பு, பூமராங் வடிவில் அழகாக செதுக்கப்பட்ட ஹெட்லைட் க்ளஸ்ட்டரில் எல்இடி புரொஜெக்டர் விளக்குகள் உள்ளன. தவிரவும், பனி விளக்குகள், ஸ்கிட் பிளேட் ஆகியவை முகப்பை கவர்ச்சியாக காட்டுகிறது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டு டிசைன்

முகப்பை போலவே, பக்கவாட்டிலும் மிக கவர்ச்சியாக இருக்கிறது நிஸான் கிக்ஸ். கருப்பு வண்ணத்திலான பில்லர்கள், கூரை, சைடு மிரர்கள், வீல் ஆர்ச் சட்டங்கள் கண்ணை கவர்கின்றன. மெஷின் கட் அலாய் வீல்களும் கவர்ச்சியை ஒருபடி தூக்குகிறது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அசத்ததலான அலாய் வீல்கள்

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 17 அங்குல 5 ஸ்போக் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த எஸ்யூவி 210 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் பெற்றிருப்பதுடன் 5.2 மீட்டர் டர்னிங் ரேடியஸ் பெற்றிருக்கிறது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புற டிசைன்

பின்புறத்திலும் பூமராங் வடிவிலான டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள், வலிமையான கருப்பு வண்ண பம்பர் அமைப்பு, சில்வர் வண்ண ஸ்கிட் பிளேட் ஆகியவை இந்த எஸ்யூவியின் தோற்றத்திற்கு வலு சேர்க்கின்றன. ஒட்டுமொத்தத்தில் மிக கவர்ச்சியாக இருக்கிறது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்டீரியர்

வெளிப்புற தோற்றத்தை போலவே, புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் இன்டீரியரும் மிக கவர்ச்சியாக இருக்கிறது. டேஷ்போர்டு டிசைன் மிக நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கிறது. கருப்பு மற்றும் பழுப்பு வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டில் லெதர் ஃபினிஷ் சிறப்பாகவும், பிரிமீயமாகவும் காட்டுகிறது. கார்பன் ஃபைபர் போன்ற பேனல்கள் சுமாராக இருப்பது ஏமாற்றம்.

MOST READ: புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 360 டிகிரி கேமரா... கூடுதல் விபரங்கள் வெளியானது!

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

2019 நிஸான் அல்டிமா செடான் காரில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்தான் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் நிஸான் கனெக்ட் செயலிகளை சப்போர்ட் செய்யும்.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மியூசிக் சிஸ்டம்

நிஸான் கனெக்ட் செயலி மூலமாக, சர்வீஸ் புக் செய்வதற்கான வசதி, டோ செய்து எடுத்துச் செல்லப்படுவதை எச்சரிக்கும் வசதி, எஞ்சின், பேட்டரி, பிரேக் செயல்திறன் குறைபாடுகள் குறித்த தகவல்களை பெற முடியும். இதன் திரை இயக்குவதற்கு எளிதாகவும், துல்லியமாகவும் இருக்கிறது. இந்தத காரில் 4 ஸ்பீக்கர்கள், 2 ட்வீட்டர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டத்தின் ஒலி தரம் சிறப்பாகவே இருக்கிறது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஸ்டீயரிங் வீல்

லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் சிறப்பானதாக இருக்கிறது. பிடிப்பதற்கு இலகுவாகவும், பிடிமானமாகவும் இருப்பதும் நல்ல விஷயம். இந்த காரில் ஸ்டீயரிங் வீலில் இருக்கும் சுவிட்சுகள் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை இயக்குவதற்கானதாக உள்ளது. மொபைல்போன் அழைப்பு மற்றும் ஆடியோ சிஸ்டத்திற்கான கன்ட்ரோல் சுவிட்சுகள் ஸ்டீயரிங் வீல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது குழப்பம் தரலாம்.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இந்த காரில் டாக்கோமீட்டருக்கும், எரிபொருள் அளவு மானிக்கும் இரண்டு அனலாக் டயல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதன் நடுவில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் திரை உள்ளது. ஸ்பீடோமீட்டர் திரைக்கு மேலாக மல்டி இன்ஃபர்மேஷன் திரை இடம்பெற்றுள்ளது. இதன்மூலமாக, ஓடிய தூரம், டிரிப் மீட்டர், வாகனத்தின் சராசரி வேகம், மைலேஜ் உள்ளிட்ட பல தகவல்களை பெற முடிகிறது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன் இருக்கை

இந்த எஸ்யூவியில் இருக்கைகள் வசதியாகவும், சொகுசாகவும் இருக்கிறது. ஆனால், சராசரி உயரம் கொண்டவர்கள் கூட ஹெட்ரெஸ்ட்டை உயர்த்தி வைத்தே ஓட்ட வேண்டியும் இருக்கிறது. லெதர் இருக்கைகள் சொகுசாக இருக்கிறது. ஓட்டுனர் இருக்கையை 6 நிலைகளில் மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்ய முடியும். டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல் அட்ஜெஸ்ட் இல்லை.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஸ்டோரேஜ் வசதி

இன்டீரியரில் ஸ்டோரேஜ் வசதிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. கூல்டு க்ளவ் பாக்ஸ் அளவில் சிறியதாக இருக்கிறது. முன்புறத்தில் கப் ஹோல்டர்கள் இல்லை. ஆனால், டோர் பாக்கெட்டுகள் பெரிதாக இருப்பதால், ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில்களை வைக்க முடியும். ஒரே ஒரு யுஎஸ்பி போர்ட் மற்றும் பவர் சாக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின் இருக்கை

பின் இருக்கை போதுமான இடவசதியை அளிக்கிறது. உயரமானவர்கள் கூட அமர்வதற்கு போதுமான ஹெட்ரூம் மற்றும் கால் வைப்பதற்கான ஹெட்ரூம் இடவசதியை அளிப்பது சிறப்பு. ஆனால், இங்கேயும் ஹெட்ரெஸ்ட் உயரம் குறைவாக இருப்பது மைனஸ். ரியர் ஏசி வென்ட்டுகள் இருந்தாலும், மத்தியில் அமர்பவருக்கு பெரிய அளவில் இடைஞ்சல் இல்லை. பின் இருக்கையில் கப் ஹோல்டருடன் ஆர்ம் ரெஸ்ட் வசதியும் உள்ளது.

MOST READ: ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்தியாவுக்காக...

வெளிநாடுகளில் உள்ள மாடலைவிட பல மாற்றங்களை செய்துள்ளனர். குறிப்பாக, இந்தியாவில் பெண்கள் புடவை மற்றும் வேஷ்டி அணிந்து ஏறி, இறங்குவதற்கு ஏதுவாக கதவு மற்றும் வாயிற் அமைப்பில் மாற்றங்களை செய்துள்ளனர். இது நிச்சயம் வரவேற்கத்தக்க விஷயம்.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

360 டிகிரி கேமரா

இந்த எஸ்யூவியில் குறிப்பிடும்படியான வசதி, 360 டிகிரி கோணத்தில் காரை கண்காணித்து பார்க்கிங் செய்வதற்கான கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.20 லட்சத்திற்கு மேல் பட்ஜெட்டிலான கார்களிலேயே இது அரிதான விஷயமாக இருக்கிறது. இந்த கேமரா மூலமாக மிக எளிதாகவும், பாதுகாப்பாகவும் பார்க்கிங் செய்ய முடிகிறது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பூட்ரூம் இடவசதி

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 400 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி உள்ளது. மேலும், பின் இருக்கைகளை மடக்கும் வசதி இருந்தும், இரண்டு பிரிவுகளாக இருக்கைகளை மடக்க முடியாது குறை. ஆனால், பார்சல் டிரேயை உள்புறமாகவும் திறந்து பூட் ரூம் பகுதியில் உள்ள பொருட்களை எடுக்க இயலும்.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின்

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. பெட்ரோல் மாடலில் 104 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.5 லிட்டர் எஞ்சின் ஆப்ஷனில் வருகிறது. ஆனால், மீடியா டிரைவில் டீசல் எஞ்சின் மாடலை மட்டும் டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

செயல்திறன்

இந்த எஸ்யூவியில் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த டீசல் எஞ்சின் ஆரம்ப நிலையில் மிக சிறப்பான டார்க் திறனை வெளிப்படுத்துவதால் சிறப்பான பிக்கப்பை தருகிறது. டர்போ லேக் என்பதை உணர முடியாத அளவுக்கு ட்யூனிங் செய்யப்பட்டிருப்பதும் சிறப்பு.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஸ்டீயரிங் வீல் இயக்கம்

அதேபோன்று, ஸ்டீயரிங் வீல் குறைவாக வேகத்தில் இலகுவாகவும், அதிக வேகத்தில் இறுக்கம் அதிகமாக இருப்பதால் நம்பிக்கையுடன் ஓட்ட முடிகிறது. இதன் பிக்கப் மற்றும் இலகுவான ஸ்டீயரிங் வீல் நகர்ப்புறத்திற்கு தக்கவாறும், அதிவேகத்தில் செல்லும்போது ஸ்டீயரிங் ஃபீட் பேக் சிறப்பாக இருப்பதால் சிட்டி, ஹைவே என இரண்டிற்கும் ஏற்ற மாடலாக சொல்ல முடிகிறது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சஸ்பென்ஷன்

இந்த எஸ்யூவியின் சஸ்பென்ஷன் மென்மையாக இருக்கிறது. ஆனால், அதிக வேகத்தில் செல்லும்போதும் காருக்கு ஓரளவு நிலையான இயக்கத்தை தருவதில் பங்கு வகிக்கிறது. அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், மென்மையான சஸ்பென்ஷன் இருந்தாலும், பாடி ரோல் குறைவாக தெரிவதும் சிறப்பாக கூறலாம்.

MOST READ: அரிதிலும் அரிதாக பைக் விலையை குறைத்தது ஹார்லி டேவிட்சன்... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஓட்டுதல் தரம்

இந்த எஸ்யூவியின் ஸ்டீயரிங் வீல், சஸ்பென்ஷன், எஞ்சின் செயல்திறன் மிக சிறப்பாக இருக்கிறது. 80 - 90 கிமீ வேகத்தில் டாப் கியரில் செல்ல முடிகிறது. அதேபோன்றே, ஓவர்டேக் செய்வதற்கும் சிறப்பான மாடலாக கூற முடியும். இந்த டீசல் மாடலில் கேபினில் சப்த தடுப்பு அமைப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது. அதிர்வுகள் மற்றும் வெளிப்புற சப்தத்தை அதிகம் உணர முடியாத அளவுக்கு NVH அளவு இருப்பது இதன் ப்ளஸ் பாயிண்ட். கியர் மாற்றமும் துல்லியமாகவும், சிறப்பாகவும் இருக்கிறது. ஓட்டுதல் தரத்தில் இந்த செக்மென்ட்டில் சிறந்த மாடல்களில் ஒன்றாகவும் குறிப்பிட முடிகிறது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஈக்கோ டிரைவிங் மோடு

இந்த காரில் ஈக்கோ டிரைவிங் மோடு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதனை பயன்படுத்தும்போது எஞ்சின் செயல்திறன் குறைந்து அதிக எரிபொருள் சிக்கனத்திற்கு வழி வகுக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புறத்தில் இந்த ஈக்கோ டிரைவிங் மோடு பயன்படுத்தினால், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற வழிகிடைக்கும்.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மைலேஜ் விபரம்

மைலேஜ் குறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த எஸ்யூவி நெடுஞ்சாலையில் 14 முதல் 15 கிமீ சராசரி மைலேஜையும், நகர்ப்புறத்தில் 11 முதல் 12 கிமீ மைலேஜையும் வழங்கும்.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சாஃப்ட் ஆஃப்ரோடர்

இந்த எஸ்யூவியில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் இல்லை. ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வந்துள்ளது. எனினும், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மூலமாக மோசமான சாலைகளையும் எளிதாக கடந்து வரும். எனவே, சாஃப்ட் ஆஃப்ரோடு மாடலாக கூறலாம்.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
Engine Size 1.5-litre (1461cc)
Fuel Type Diesel
No. Of Cylinders In-line four
Power (bhp) 108 @ 3850rpm
Torque (Nm) 240 @ 1750rpm
Transmission 6-speed manual
Tyres (mm) 215/60 R17
Kerb Weight (kg) 1110 (approx.)
Fuel Tank Capacity (Litres) 50

உருவத்தில் பெருசு

இந்த ரகத்திலேயே மிக பெரிய எஸ்யூவி மாடலாக வந்துள்ளது. இந்த காரின் பரிமாணத்தை காட்டும், அட்டவணையை இங்கே பார்க்கலாம்.

Dimension Scale (mm)
Length 4384
Width 1813
Height 1656
Wheelbase 2673
Ground Clearance 210
நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வேரியண்ட்டுகள் மற்றும் எதிர்பார்க்கும் விலை

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி XE, XL மற்றும் XV ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. ரூ.11 லட்சம் முதல் ரூ.15 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி 11 விதமான வண்ணத் தேர்வுகளில் வெளிநாடுகளில் உள்ளது. இதில், கேயென் ரெட், பிரில்லியண்ட் சில்வர், கன் மெட்டாலிக், சூப்பர் பிளாக், ஆஸ்பென் ஒயிட், டீப் புளூ பியர்ல் 6 ஒற்றை வண்ணத்திலும், ஆஸ்பென் ஒயிட்- சூப்பர் பிளாக், கன் மெட்டாலிக் - மோனார்க் ஆரஞ்ச், கேயென் ரெட்- சூப்பர் பிளாக், டீப் புளூ பியர்ல் - ஃப்ரெஷ் பவுடர் மற்றும் மோனார்க் ஆரஞ்ச்- சூப்பர் பிளாக் ஆகிய 5 இரட்டை வண்ணக் கலவையிலும் அங்கு உள்ளது. இதில், குறைந்தது 7 வண்ணத் தேர்வுகள் இந்தியாவில் கிடைக்கும் என்று தெரிகிறது.

MOST READ: 5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 4 ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னரிங் விளக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முக்கிய அம்சங்கள்

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், மூடு லைட்டிங், கீ லெஸ் என்ட்ரி, க்ரூஸ் கன்ட்ரோல் வசதிகள் உள்ளன.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

போட்டியாளர்கள்

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியானது மிட் சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் களமிறங்க உள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி எஸ் க்ராஸ், ரெனோ கேப்ச்சர் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.

Specifications Nissan Kicks

Hyundai Creta Maruti S-Cross
Engine 1.5-litre diesel 1.4-litre diesel 1.3-litre diesel
Power (bhp) 108 89 89
Torque (Nm) 240 220 200
Transmission 6-speed MT 6-Speed MT 5-speed MT
Length (mm) 4384 4270 4300
நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

நிறை, குறைகள்

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியானது கவர்ச்சியான டிசைன், சிறந்த இன்டீரியர் அமைப்பு, அதிக வசதிகள், இந்த காரின் சிறப்பான விஷயங்கள். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இப்போதைக்கு இல்லை என்பதுடன், மிக நெருக்கமாக அமைக்கப்பட்ட பெடல்கள், இருக்கை அமைப்பு, ஸ்டோரேஜ் வசதிகள் குறைவு ஆகியவை இதன் மைனஸான விஷயங்கள்.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது சுருதியை குறைத்ததா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

இந்தியாவில் நீண்ட இடைவெளிக்கு நிஸான் களமிறக்க இருக்கும் புதிய கிக்ஸ் எஸ்யூவி குறிப்பிட்ட ஒரு விதத்தில் சிறந்த காராக இல்லாமல், ஒட்டுமொத்தத்தில் இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தக்க சிறந்த பேக்கேஜ் காராக நிலைநிறுத்தப்பட இருக்கிறது. நிச்சயம் விலை என்பது இந்த காரின் வெற்றியை நிர்ணயிக்கும் விஷயம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், செக்மென்ட் லீடர் ஹூண்டாய் க்ரெட்டா காரை எதிர்த்து நின்று மல்லுக்கட்டும் அளவுக்கு தனித்து குறிப்பிட்டு சொல்லக்கூடிய விஷயங்கள் இல்லை. அதேபோன்று, இதுபோன்ற சிறந்த மாடல்களை கொணடு வந்தாலும், விற்பனைக்கு பிந்தைய சேவையில் நிஸான் நிறுவனம் அதிக கவனம் செலுத்தினால், இந்த மாடல்கள் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும்.

Most Read Articles

Tamil
மேலும்... #நிஸான்
English summary
We drive the all-new Nissan Kicks — the "Progressive SUV" — through the salt marshes of the Rann of Kutch in Gujarat to find out!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more