2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ

ஜப்பான் நாட்டை சேர்ந்த நிஸான், ஜிடி-ஆர் ஸ்கைலைன் போன்ற ஐகானிக் கார்கள் உலகளவில் விற்பனையில் இருப்பதற்கு காரணமாக உள்ள நிறுவனமாகும். இருப்பினும் இந்திய சந்தையில் நிலையான ஒரு இடத்தை பிடிக்க இந்நிறுவனம் போராடி கொண்டுதான் வருகிறது.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

இந்தியாவில் கால் பதித்ததில் இருந்து ஏகப்பட்ட புதிய தயாரிப்புகளை நிஸான் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் பெரும்பான்மையானவை செயல்திறனில் சிறப்பாக இருந்தாலும், பராமரிப்பு விஷயங்களில் கோட்டை விடுகின்றனர்.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

இந்த வகையில் இந்தியாவில் எஸ்யூவி கார்களின் ஆதிக்கம் துவங்கிய சில வருடங்களுக்கு முன்பு நிஸான் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கார் தான் கிக்ஸ். ஆரம்பத்தில் நிஸான் பிராண்டிற்கு கணிசமான விற்பனை எண்ணிக்கைகளை இந்த எஸ்யூவி கார் பெற்று கொடுத்தாலும், அதன்பின் எஸ்யூவி பிரிவிற்கு வந்த முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளினால் ஓரங்கட்டப்பட்டது.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

இதனை மனதில் வைத்தும் 2020ஆம் ஆண்டிற்காகவும் கிக்ஸ் எஸ்யூவியில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான ஆற்றல்மிக்க புதிய 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினை நிஸான் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் நிஸான், ரெனால்ட் மற்றும் டைம்லர் நிறுவனங்களின் கூட்டணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

புதிய ஆற்றல்மிக்க என்ஜின் மட்டும் தான் 2020 அப்டேட்டாக கிக்ஸிற்கு வழங்கப்பட்டுள்ளதா அல்லது தோற்றத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் இந்நேரம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும். 2020 நிஸான் கிக்ஸ் டர்போ-பெட்ரோல் காரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு நமது ட்ரைவ்ஸ்பார்க் தளத்திற்கு கிடைத்தது. இதன்மூலம் உங்களது சந்தேகத்திற்கான விடையினை இந்த செய்தியில் விரிவாக கொடுத்துள்ளோம். அவற்றை இனி பார்ப்போம்.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

டிசைன் & ஸ்டைல்

2020 நிஸான் கிக்ஸில் புதிய ஆற்றல்மிக்க என்ஜினை தவிர்த்து மற்ற அப்டேட்கள் அனைத்தும் குறைவாகவே உள்ளன என்பதை முதலில் கூறி கொள்கிறோம். இதனால் முந்தைய கிக்ஸ் காரின் தோற்றத்தில்தான் கிட்டத்தட்ட இந்த அப்டேட் வெர்சனும் காட்சியளிக்கிறது. குறிப்பாக டிசைனில் சிறிதளவு கூட மாற்றங்கள் கொண்டுவரப்படவில்லை.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

சரி, டர்போ கார் என்பதை குறிக்கும் விதமாக ‘TURBO' முத்திரையாவது வழங்கப்பட்டுள்ளதா என்று காரை சுற்றிலும் பார்த்தால் ஒரு ‘TURBO' முத்திரை கூட இல்லை. ஏனெனில் தோற்றத்தில் நிஸான் கிக்ஸ் எப்போதுமே அட்டாகாசமானதாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால்தான் இதன் தோற்றத்தில் தயாரிப்பு நிறுவனம் கை வைக்கவில்லை போல.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

முன்பக்கத்தில் மெஷ் க்ரில் அமைப்பின் மையத்தில் பிராண்டின் லோகோ பொருத்தப்பட்டுள்ளது. இந்த மெஷ் க்ரில்லை சுற்றிலும் தடிமனான க்ரோம் ஸ்ட்ரிப் வழங்கப்பட்டுள்ளது. இந்த க்ரோம் ஸ்ட்ரிப் தான் காரின் முன்புறத்திற்கு கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது. இவற்றுடன் பெரிய ஸ்விஃப்ட்பேக் ஹெட்லேம்ப்கள் க்ரில்லின் இரு முனைகளிலும் உள்ளன.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

இந்த ஹெட்லேம்ப் அமைப்பில் எல்இடி ப்ரோஜக்டர் யூனிட்கள் மற்றும் எல்இடி டிஆர்எல் விளக்குகள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. முன் பம்பரின் இரு முனைகளிலும் மூடுபனி மற்றும் கார்னரிங் விளக்குகளும், இவற்றிற்கு மத்தியில் ஏர் டேம்-மும் உள்ளது. இவை அனைத்திற்கும் கீழே காருக்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்கும் விதமாக கருப்பு நிற க்ளாடிங் மற்றும் சில்வர் நிறத்திலான ஸ்கிட் தட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

காரின் பக்கவாட்டு பகுதி வழக்கமான கருப்பு நிற க்ளாடிங் மற்றும் சக்கர வளைவுகளை தொடர்ந்துள்ளது. காரின் பக்கவாட்டிற்கு ஸ்டைலிஷான தோற்றத்தை 17 இன்ச்சில் ட்யூல்-டோன் அலாய் சக்கரங்கள் வழங்குகின்றன. இவை மட்டுமின்றி கருப்பு நிறத்திலான C-பில்லர், சில்வர் நிறத்தில் ரெயில்களை கொண்ட ஃப்ளோடிங்-மேற்கூரை உள்ளிட்டவற்றையும் இந்த டர்போ கார் கொண்டுள்ளது.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

பின்பக்கத்தில் சுற்றிலும்-வ்ராப் உடன் எல்இடி டெயில்லைட்கள், ஒருங்கிணைக்கப்பட்ட ப்ரேக் லைட் உடன் ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் நம்பர் தட்டிற்கு மேலே க்ரோம் ஸ்ட்ரிப் என ஏகப்பட்ட பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன. கருப்பு நிற க்ளாடிங்கை வழக்கம்போல் தொடர்ந்துள்ள பின் பம்பர், மையத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்கிட் தட்டு மற்றும் இரு முனைகளிலும் ஒளி பிரதிபலிப்பான்கள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

உட்புறம் & கேபின்

அப்படியே உட்புறத்திற்கு சென்றால், 2020 நிஸான் கிக்ஸ் பெரிய அளவில் எந்தவொரு மாற்றமுமின்றி வழக்கமான தோற்றத்திலேயே காட்சியளிக்கிறது. கருப்பு மற்றும் பழுப்பு நிற பாகங்களுடன் மொத்த கேபினும் ட்யூல்-டோன் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

ப்ரீமியம் தோற்றத்திற்காக டேஸ்போர்டு மிருதுவான பாகங்களுடன் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் உட்புற கேபினில் ஸ்டேரிங் சக்கரம், டேஸ்போர்டு, பக்கவாட்டு கதவு பேனல்கள், கியர் லிவர் மற்றும் மைய ஆர்ம்ரெஸ்ட் போன்ற பயணிகளால் அதிகளவில் தொடப்படும் பகுதிகள் அனைத்தும் லெதர் பாகங்களால் நேர்த்தியாக நிஸான் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

இருப்பினும் டேஸ்போர்டின் அடிப்பகுதி மற்றும் கதவு பேனல்கள் கீறல்கள் அடையக்கூடிய பிளாஸ்டிக்கிலேயே வழங்கப்பட்டுள்ளன. 3-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரமானது பெரிய அளவிலும், லெதரால் மூடப்பட்டும், ஸ்போர்டியான பண்பிற்காக சற்று தாழ்வாகவும் தட்டையாகவும் வழங்கப்பட்டுள்ளது.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

இந்த ஸ்டேரிங் சக்கரத்தில் ஆடியோ மற்றும் அழைபேசி அழைப்பிற்கான கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்டேரிங் சக்கரத்திற்கு அருகில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், செவ்வக வடிவில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய சிறிய திரை மற்றும் வேகமானி போன்றவை உள்ளன.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

டச்சோ மீட்டர், எரிபொருள் மற்றும் வெப்பநிலையை காட்டும் பாகங்கள் அனலாக் தரத்தில் ஓட்டுனருக்கு தகவல்களை வழங்கக்கூடிய திரைக்கு இருப்புறங்களிலும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் ஓடோமீட்டர், ட்ரிம் மீட்டர்கள் உள்பட சில தகவல்களை ஓட்டுனருக்கு வழங்கக்கூடிய சிறிய திரையும் எம்ஐடி திரைக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

2020 நிஸான் கிக்ஸின் மைய கன்சோல் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற மற்ற ஸ்மார்போன் இணைப்பு தேர்வுகளுடன் பிராண்டின் இணைப்பு கார் தொழிற்நுட்ப வசதியையும் கொண்ட 8 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. இந்த திரையை ரிவர்ஸ் பார்க்கிங் கேமிராவிற்கும் மாற்ற முடிகிறது.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

இருப்பினும் மற்ற எஸ்யூவி கார்கள் கொண்டுள்ள தொடுத்திரைகளுக்கு இணையாக அவ்வளவு அப்டேட்டாக இதன் தொடுத்திரை இல்லை. இருக்கைகள் மிகவும் சவுகரியமானதாக உள்ளன. முன் மற்றும் பின் இருக்கை வரிசைகள் கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

இந்த இருக்கைகள் சிறப்பான அளவிலான குஷின்கள், லம்பர் மற்றும் தொடையின் கீழ் சவுகரியம் உள்ளிட்டவற்றை கொண்டிருந்தாலும், இருக்கைகளை எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்ய முடியவில்லை. இவ்வளவு ஏன், ஓட்டுனர் இருக்கை கூட இந்த வசதியை கொண்டிருக்கவில்லை என்பது தான் ஆச்சிரியம்.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

பின் இருக்கை வரிசையில் கால்களை நன்கு நீட்டி மடக்கி கொள்ளும் அளவிற்கு போதுமான இட வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தலைக்களுக்கான இடமும் நன்கு அகலமானதாக வழங்கப்பட்டுள்ளதால் அதிகப்பட்சமாக மூன்று நபர்கள் பின் இருக்கை வரிசையில் அமரலாம். பின் இருக்கை பயணிகளுக்கு மையத்தில் ஆர்ம்ரெஸ்ட், ஏசி துளைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

கதவு பேனல்களில் க்ளோவ் பாக்ஸ் உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் துளை மற்றும் 12 வோல்ட் சாக்கெட் உடன் மைய கன்சோலில் சிறிய அளவிலான பொருட்களை வைப்பதற்கு ஏற்ற விதத்தில் காலி இடம் வழங்கப்பட்டுள்ளது. மொத்த கேபினையும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான கப்பி துளைகள் மற்றும் பின்கள் உடன் நிஸான் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

பின்பக்கத்தில் சுமைகளை வைப்பதற்கான சேமிப்பிடம் 400 லிட்டர் கொள்ளளவில் வழங்கப்பட்டுள்ளது. பின் இருக்கை வரிசையை மடக்கினால் கூடுதல் சேமிப்பிடம் கிடைக்கும் என்றாலும், பின் இருக்கை வசதியை 60:40 என்ற விகிதத்தில் பிரிக்கும் வசதி இல்லை.

Length (mm) 4384
Width (mm) 1813
Height (mm) 1669
Wheelbase (mm) 2673
Ground Clearance (mm) 210
Boot Space (Litres) 400
2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

வேரியண்ட்கள், சிறப்பம்சங்கள் & பாதுகாப்பு வசதிகள்

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி எக்ஸ்எல், எக்ஸ்வி, எக்ஸ்வி ப்ரீமியம் மற்றும் எக்ஸ்வி ப்ரீமியம் (ஒ) என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நான்கு வேரியண்ட்களும் அதிக அளவிலான வசதிகளுடனும் தொழிற்நுட்பங்களுடனும் வழங்கப்பட்டுள்ளன.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 17 இன்ச்சில் ட்யூல்-டோன் அலாய் சக்கரங்கள், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்புறம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகள், மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள், சாவி இல்லாமல் நுழைவதற்கு ஸ்மார்ட் கார்டு, 8 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இந்த வசதிகளில் அடங்குகின்றன.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

இவை மட்டுமின்றி என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான், க்ரூஸ் கண்ட்ரோல், சில கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம், கூல்டு க்ளோவ் பாக்ஸ், ரிமோட் என்ஜின் ஸ்டார்ட், 6 விதங்களாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கை, லெதர் இருக்கை உள்ளமைவு போன்றவையும் மேற்கூறப்பட்ட நான்கு வேரியண்ட்களில் வழங்கப்படுபவையாகும்.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

பாதுகாப்பிற்கு 2020 நிஸான் கிக்ஸில் பல எண்ணிக்கைகளில் காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வாகன நிலைப்பாட்டு நிர்வாகம், வேகத்தையும் விபத்தையும் உணர்ந்து செயல்படும் கதவு லாக், 360 டிகிரியில் கேமிரா, வழிகாட்டுதல்களுடன் ரிவர்ஸ் பார்க்கிங்கிற்கு சென்சார்கள் மற்றும் கேமிரா, அவசர கால ஸ்டாப் சிக்னல், ப்ரேக்கிங் உதவி, இம்மொபைலிஸர் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

என்ஜின் தேர்வுகள் & செயல்திறன்

2020 நிஸான் கிக்ஸ் இரு விதமான என்ஜின் தேர்வுகளில் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றான 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 105 பிஎச்பி மற்றும் 142 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. இரண்டாவது டர்போ வெர்சன்.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

இந்த டர்போ வெர்சனில் புதிய 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் அதிகப்பட்சமாக 5500 ஆர்பிஎம்-ல் 156 பிஎச்பி பவரையும், 1600 ஆர்பிஎம்-ல் 254 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

இவ்வளவு அதிகமான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய டர்போ பெட்ரோல் என்ஜின் இந்தியாவில் வேறெந்த எஸ்யூவி காரிலும் வழங்கப்படுவதில்லை. மேற்கண்ட ஆற்றல் அளவுகள் புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரொல் என்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்தக்கூடியதாகும். இந்த என்ஜின் நிஸான், ரெனால்ட் மற்றும் டைம்லர் நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவானது என்று முன்னரே கூறியிருந்தோம்.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

இந்த எச்ஆர்13 டிடிடி டர்போ என்ஜினில் பொருத்தப்பட்டுள்ள சிலிண்டர் கோட்டிங் தொழிற்நுட்பம் உராய்வை குறைக்கவும், சிறந்த செயல்திறனிற்காகவும் ஆர்35 ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ்காரில் இருந்து எடுக்கப்பட்டதாகும். மேலும் இந்த டர்போ என்ஜின் எலக்ட்ரிக் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய வாஷ் கேட், அதிக-அழுத்தம் கொண்ட நேரடி இன்ஜெக்‌ஷன் மற்றும் வெவ்வேறு விதமான கேம்ஸ் உள்ளிட்டவற்றை கொண்டதாக உள்ளது.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

இவை அனைத்தும் என்ஜினின் செயல்திறனை மேம்படுத்த உதவியாக இருக்கும். 2020 நிஸான் கிக்ஸ் டர்போ குறிப்பாக மிட்-ரேஞ்சில் சிறப்பான செயல்திறனை வழங்குவதாக உள்ளது. முதல் டர்போ பின்னடைவு 1750 ஆர்பிஎம் வரையில் உள்ளதால் அதை தாண்டி சென்றால் உண்மையில் பயணம் மிதப்பது போன்று உள்ளது.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

கிக்ஸ் டர்போ காரில் நிறைய பவர் ஆன் டேப்கள் உள்ளன. அவற்றை தட்டினால் நெடுஞ்சாலைகளில் மிகுந்த மகிழ்ச்சியான பயணம் கிடைக்கும். இந்த டர்போ கார் நெடுஞ்சாலைகளில் எந்தவொரு கியரிலும் பாதையில் இருந்து விலகி செல்கிறது. குறைவான கியர் மாற்றங்களில் மற்ற வாகனங்களை முந்துவது சிறப்பாக உள்ளது.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

பவர் நன்றாக 1750 ஆர்பிஎம்-ல் இருந்து 6000 ஆர்பிஎம்-மிற்கு உள்ளாக கிடைக்கிறது. 1750 ஆர்பிஎம்-மிற்கு கீழே போதிய ஆற்றல் கிடைப்பதில்லை. இந்த எஸ்யூவி காரில் க்ளட்ச் மெக்கானிசம் சவுகரியமானதாக இல்லை. அதேபோல் குறைந்த வேகத்தில் மேனுவலாக கியர் மாற்றவது கடினமானதாக உள்ளது.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

இவை மட்டுமின்றி ஸ்டேரிங் சக்கரத்தை திருப்புவதும் சற்று கடினமானதாக உள்ளது. ஆனால் இது சிறந்ததே. ஏனென்றால் குறைவான வேகத்திலும், அதி வேகத்திலும் இந்த ஸ்டேரிங் சக்கரம் ஒரு நம்பிக்கையை கொடுக்கும். சஸ்பென்ஷன் அமைப்புகள் சரியான அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அனைத்து அழுத்தங்களின்போதும் சிறப்பாக செயல்படுகின்றன.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

இந்த எஸ்யூவி காரின் 210மிமீ க்ரவுண்ட் க்ளியரென்ஸ் பெரும்பாலான சாலைகள் அனைத்திற்கும் ஏற்றதாக உள்ளது. ப்ரேக்கிங் அமைப்புகளிலும் எந்த குறையும் இல்லை. அவசர நேரத்திலும் சரியாக செயல்படுகின்றன. டயர்கள் உலர்ந்த சாலையிலும் சரி, ஈரமான சாலையிலும் சரி நன்றாகவே க்ரிப் ஆக உள்ளது. பயணங்களின்போது குலுக்கல்கள் பெரியதாக இல்லை, வளைவுகளிலும் நன்றாகவே இந்த கார் செயல்படுகிறது.

Engine 1.3-litre turbo-petrol
Displacement 1330cc
Power 156bhp @ 5500rpm
Torque 254Nm @ 1600rpm
Transmission 6MT/CVT
2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

விலை & நிறத்தேர்வுகள்

2020 நிஸான் கிக்ஸ் இரண்டு என்ஜின் தேர்வுகளுடன் விற்பனையை துவங்கியிருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தோம். இதில் ஆற்றல் குறைவான 1.5 லிட்டர் என்ஜின் உடன் வழங்கப்படும் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் வழங்கப்படும் நிஸான் கிக்ஸின் டர்போ வெர்சனின் விலை ரூ.11.85 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே இந்த டர்போ வெர்சனை டாப் ட்ரிம் சிவிடி ட்ரான்ஸ்மிஷன் உடன் ரூ.14.15 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில்தான் பெற முடியும். 2020 நிஸான் கிக்ஸ் 9 விதமான நிறத்தேர்வுகளில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

இதில் முத்தின் வெள்ளை, ப்ளேட் சில்வர், அலுமினிய க்ரே, அடர் நீலம், நைட் ஷேட் மற்றும் தீயின் சிவப்பு என்ற 6 விதமான சிங்கிள்-டோன் தேர்வுகளும், முத்தின் வெள்ளை/ஆன்யக்ஸ் கருப்பு, அலுமினிய க்ரே/ஆம்பர் ஆரஞ்ச் மற்றும் தீயின் சிவப்பு/ஆன்யக்ஸ் கருப்பு என்ற 3 ட்யூல்-டோன் தேர்வுகளும் அடங்குகின்றன. ஆனால் ட்யூல்-டோன் பெயிண்ட் தேர்வுகள் கிக்ஸின் டாப் எக்ஸ்வி ப்ரீமியம் (ஒ) ட்ரிம்மிற்கு மட்டும் தான் வழங்கப்படுகிறது.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

போட்டியாளர்கள் & ஒப்பிட்டு காணல்

2020 நிஸான் கிக்ஸ் டர்போ, விற்பனை போட்டி மிகுந்த மிட்-சைஸ் எஸ்யூவி கார் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நிஸான் கிக்ஸிற்கு கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கூட்டணி நிறுவனமான ரெனால்ட்டின் டஸ்டர் டர்போ உள்ளிட்டவை போட்டியாக உள்ளன. இவற்றில் செல்டோஸும் க்ரெட்டாவும் மிகுந்த பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கின்றன. இவற்றின் என்ஜின்கள் உடன் கிக்ஸின் புதிய டர்போ என்ஜினை ஒப்பிட்டு பார்க்கும் அட்டவணை இதோ...

Model/Specs Nissan Kicks Turbo Kia Seltos Hyundai Creta
Engine 1.3-litre turbo-petrol 1.4-litre T-GDI Petrol 1.4-litre T-GDI Petrol
Displacement 1330cc 1353cc 1353cc
Power 156bhp @ 5500rpm 140bhp @6000rpm 140bhp @6000rpm
Torque 254Nm @ 1600rpm 242Nm @ 1500rpm 242Nm @ 1500rpm
Transmission 6MT/CVT 6MT/7DCT 6MT/7DCT
2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

ட்ரைவ்ஸ்பார்க்கின் கருத்து

2020 நிஸான் கிக்ஸ் டர்போ இன்றைய மாடர்ன் காலக்கட்டத்தில் உண்மையில் அருமையான வெர்சனாகும். வசதிகள் அவ்வளவாக இல்லை, ஆனால் இந்த குறையை முழுவதுமாக ஆற்றல்மிக்க புதிய டர்போ என்ஜின் தீர்த்துவிடுகிறது. எஸ்யூவி கார்களுக்கு உண்டான நேர்த்தி இந்த வாகனத்தில் உள்ளதால் இதற்கு போட்டியாக உள்ள மற்ற எஸ்யூவி கார்களுக்கு மாற்றாக தாராளமாக 2020 நிஸான் கிக்ஸை வாங்கலாம். இதுதான் ட்ரைவ்ஸ்பார்க் தளத்தின் கருத்தாகும்.

2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில் புதிய டர்போ என்ஜின்... காசுகேற்ற வாகனம் தானா..? முழு விமர்சனம் இதோ..!

காரில் எங்களுக்கு பிடித்தவை

  • மிகவும் நல்ல மிட்-ரேஞ்ச் செயல்திறன்
  • விசாலமான உட்புற கேபின்
  • அருமையான சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேகிங் அமைப்புகள்
  • பிடிக்காதவை

    • மற்ற எஸ்யூவி கார்களை காட்டிலும் குறைந்த அளவிலான வசதி
    • நிஸானின் டீலர்கள் & சர்வீஸ் மையங்களை குறைக்கும் நடவடிக்கை
Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Kicks Turbo BS6 Review
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X