ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் புகழ்பெற்ற அடையாளமான ரேஞ்ச்ரோவரின் நான்காவது காரான புதிய ரேஞ்ச் ரோவர் வெலர் பி250 எஸ்யூவி காரினை நமது டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. இந்த புதிய டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்த அனுபவத்தை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

உலக மக்களிடையே புகழ் பெற்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லேண்ட்ரோவர் நிறுவனம் பல்வேறு ஸ்போர்ட்ஸ் மற்றும் அதிநவீன எஸ்யூவி கார்களை தயாரித்து வருகிறது. உலக அளவில் தனது எஸ்யூவி கார்கள் வியபாரத்தினை நிலைநிறுத்திய லேண்ட் ரோவர் நிறுவனம் ரேஞ்ச் ரோவர் என்ற ப்ராண்டின் கீழ் புதிய எஸ்யூவி கார்களை தயாரிக்க ஆரம்பித்தது.

ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி கார்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை தொடர்ந்து லேண்ட் ரோவர் நிறுவனம் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

லேண்ட்ரோவர் நிறுவனம் ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் எஸ்யூவி காரினை இந்திய வியாபார சந்தையில் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்கு களம் இறக்கியது.இங்கிலாந்தில் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் நிர்வாகியும் டாடா நிறுவன தலைவருமான ரத்தன் புதிய வெலர் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தார். எவோக், ஸ்போர்ட், ஜாகுவார் எஃப்-பேஸ் வரிசையில் நான்காவதாக வெலர் எஸ்யூவியினை லேண்ட் ரோவர் நிறுவனம் களம் இறக்கியுள்ளது.

ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ரேஞ்ச் ரோவர் வெலர் எஸ்யூவி காரின் பி250 வேரியண்ட்டினை மஹாராஷ்ட்ரா மாநிலம் நவிமும்பையில் நமது டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. இதில் இந்த எஸ்யூவி காரில் உள்ள சிறப்பு அம்சங்கள், என்ஜின் செயல்திறன் மற்றும் வடிவமைப்பை குறித்து கண்டறிந்தோம்.

ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிசைன்:

ரேஞ்ச் ரோவர் வெலர் எஸ்யூவி கார் லேண்ட் ரோவர் கார்களின் பாரம்பர்ய டிசைனில் இருந்து முற்றிலும் மாறுபட்டு மென்மையான கர்வ் வடிவில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. வெலர் கார் எஸ்யூவி கார்களில் தனித்தன்மையான டிசைனை பெற்றுள்ளது. மற்ற லேண்ட் ரோவர் கார்களின் பாக்ஸ் வடிவமைப்பினை போல இல்லாமல் அழகான வளைந்த தோற்றத்தினை கொண்டுள்ளது.

ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

2018ம் ஆண்டு உலக கார் விருதுகளில் ரேஞ்ச் ரோவர் வெலர் எஸ்யூவி கார் "உலகின் மிக அழகிய கார்" என்ற விருதினை பெற்றுள்ளது. இதன் முன்பக்கத்தில் அறுங்கோண க்ரில் வழங்கப்பட்டுள்ளது அதன் மேல் பாரம்பரிய ரேஞ்ச் ரோவர் பெயர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் க்ரில்லின் நடுவே கிரோம் கோட்டிங் செய்யப்பட்ட லேண்ட் ரோவர் பேட்ச் உள்ளது.

ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதில் உள்ள மேட்ரிக்ஸ் லேசர் எல்இடி ஹெட்லாம்புகள் நேர்த்தியான பகல் நேர விளக்குகளுடன் இடம்பெற்றுள்ளது. வெலர் எஸ்யூவி காரின் பெரும்பாலான டிசைன் நேரான வடிமைப்பை பெற்றாலும் இதன் பின்புறத்தில் கர்வ் டிசைன் கையாளப்பட்டுள்ளது, இதன் கர்வ் வடிவிலான பின்புறத்தில் உள்ள டைல் லெம்ப் U வடிவில் இடம்பெற்றுள்ளது. இதன் ரியர் வடிவமைப்பு ரேஞ்ச் ரோவரின் புதிய டிஸ்கவரி மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ் கார்களை காட்டிலும் சிறப்பாக உள்ளது.

ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வெலர் எஸ்யூவி காரில் 19இன்ச் 5 ஸ்போக் அலாய் வீல்கள் சாலைகளில் காருக்கு சிறந்த க்ரிப்பினை தருகிறது. இந்த வீல்கள் காரின் டிசைனை ஒட்டி இல்லாவிட்டாலும், காருக்கு கம்பீரமான லுக்கினை தருகிறது.காரினை வீல்களுடன் பக்கவாட்டில் இருந்து பார்ப்பதற்க்கு அழகாய் தெரிந்தாலும், காரின் வீல்கள் 30 டிகிரி வெளிய வந்திருப்பதால் பின்னால் இருந்து பார்ப்பதற்க்கு சற்று காரின் அழகை குறைக்கிறது.

ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதன் பூட் ஸ்பேஸ் 558 லிட்டராக வழங்கப்பட்டுள்ளது பின் சீட்டினை 40:20:40 என்ற விகிதத்தில் மடக்கும் பொது கூடுதல் பூட்ஸ்பேஸ் கிடைக்கிறது. மேலும் பூட்டின் கீழே ஸ்பேர் வீல் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக காரில் பொருட்களை பாதுகாப்பாக வைக்க பூட் ஸ்பெஸினை சுற்றிலும் பல கொக்கிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்டிரியர்:

ரேஞ்ச் ரோவர் வெலர் எஸ்யூவி காரின் உள்ளே சென்றதும் அதன் இன்டிரியர் கண்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த காரின் டேஷ் போர்டில் 10 இன்ச் டச் ப்ரோ டுயோ இன்போடைமென்ட் சிஸ்டம் ஒருங்கினைக்கப்பட்டுள்ளது. இன்போடைமென்ட் சிஸ்டத்தின் திரை கிளாஸ்ஸி கோட்டிங் செய்யப்பட்டுள்ளது இதனால் பகல் நேரத்தில் கூட திரை மங்காமல் தெளிவாக தெரிகிறது.

ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதன் டூயல் டிஸ்ப்லே காட்சி மாசுபாடினை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இன்போடைமென்ட் டிஸ்ப்லே கீழே காரின் செயல்பாடுகளுக்கான கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. காரை ஓட்டுபவர் கண்ட்ரோல் சிஸ்டத்தினை இயக்க ரோட்டில் இருந்து பார்வையை அகற்ற வேண்டும். இது காரில் சிறிய குறையாக கருதப்படுகிறது.

ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வெலர் எஸ்யூவி காரின் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்ட்டர் மற்ற போடு நிறுவன எஸ்யூவி கார்களை விட அசத்தலான வடிவமைப்பை பெற்றுள்ளது. இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்ட்டர் முழுமையான டிஜிட்டல் வடிவமைப்புடன் இரட்டை டயல், ஒற்றை டயல் மற்றும் நீட்டிக்கப்பட்ட டயல் என ஆடம்பரமான கிராஃபிக் பரிமாற்றங்களை கொண்டுள்ளது. இது காரின் இன்டிரியரில் கூடுதல் அழகை சேர்க்கிறது.

ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ரேஞ்ச் ரோவர் வெலர் எஸ்யூவி காரின் சீட்கள் பயணிகளுக்கு சொகுசான பயண அனுபவத்தை தருகிறது. இதில் கூடுதல் சிறப்பு அம்சமாக பின் சீட்டில் மசாஜ் சீட்டினை தேர்வு செய்யும் வசதி உள்ளது. இதன் கப் ஹோல்டர் பின்னல் பொருட்களை வைத்து கொள்ள இட வசதி தரப்பட்டுள்ளது. பின் சீட்டில் மூன்று பேர் சவுகரியமாக அமர்ந்து செல்லலாம். ஆனால் நடுவில் அமர்பவருக்கு மட்டும் லெக் ரூம் ஸ்பேஸ் குறைவாக இருப்பதால் சற்று சிரமம் ஏற்படும்.

ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பாதுகாப்பு அம்சங்கள்:

இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக டிரெயின் ரெஸ்பான்ஸ், டார்க் வெக்டரிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், டைனமிக் ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல், ஸ்பீட் சென்சிட்டிவ் ஸ்டேரிங், ஹில் அஸ்சிஸ்ட் கண்ட்ரோல் பார்க்கிங் அஸ்சிஸ்ட், சரவுண்ட் கேமரா போன்ற அட்டகாசமான பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

என்ஜின்:

நமது டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்த ரேஞ்ச் ரோவர் வெலர் எஸ்யூவி காரின் பி250 வேரியண்ட்டின்

சக்திவாய்ந்த நவீன 2.0 லிட்டர் டர்போசார்ஜ் இன்ஜினியம் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 247 பிஎச்பி பவரையும், 365 என்எம் டார்க் திறனையும் வழங்கும் ஆற்றல்மிக்கது.இதில் காரின் 4 வீல்களுக்கும் செயல்திறன் தரக்கூடிய 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் டைனமிக், எக்கோ, கம்போர்ட், மட் ரட்ஸ், கிரேவ் மற்றும் ஸ்னோ என 6 ட்ரிவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வகையான சாலைகளிலும் தடையின்றி சொகுசான பயண அனுபவத்தை பெற முடியும். வேகமாக செல்வதை விட மிதமான வேகத்தில் செல்லும்போது என்ஜினின் செயல்திறன் சிறப்பாக உள்ளது.

ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிரைவிங் அனுபவம்:

ரேஞ்ச் ரோவர் வெலர் எஸ்யூவி கார் மேலே மிதமான வேகத்தில் ஓட்ட சிறந்த காரக உள்ளது. காரினை வேகமாக ஓட்டும்போது காரில் அதிக அளவில் அதிர்வுகள் ஏற்படுகிறது. சாலையில் குறைவான வேகத்தில் முன்னாள் செல்லும் கார்களை முந்தி செல்லும் பொது அசாத்தியமாக முந்தி செல்கிறது. ஆனால் அதிக வேகத்தில் காரில் செல்லும்போது மிகுந்த சிரமம் ஏற்படுகிறது

ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சில சமயங்களில் காரின் டர்போவில் பின்னடைவு ஏற்படுகிறது. காரினை வேகமாக ஓட்டும்போது என்ஜினில் அதிக அளவு சத்தத்தினை கேட்க முடிகிறது. வெலர் எஸ்யூவி கார் நகர புரா சாலைகளுக்கு ஏற்ற காரக உள்ளது ஆனால் ஆஃப் ரோடு எனப்படும் கரடு முரடான சாலைகளில் செல்லும்போது காரினை ஓட்டுவது மிகுந்த சிரமமாக உள்ளது.

ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதன் லெதர் கோட்டிங் செய்யப்பட்ட ஸ்பீட் சென்சிட்டிவ் வசதியினை உள்ளடக்கிய ஸ்டேரிங் வீல் கையாள்வதற்கு சுலபமாக உள்ளது. வளைவுகளில் திரும்பும்போது மட்டும் ஸ்டேரிங்கை கையாள சற்று கடினமாக உள்ளது. குறைவான வேகத்தில் செல்லும் பொது இதன் 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் சிறப்பாக செய்ல்படுகிறது ஆனால் அதிக வேகத்தில் செல்லும்போது கியரில் அதிக உதறல் ஏற்படுகிறது.

ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பெட்ரோல் டேங்கின் அளவு 62.8 லிட்டராக உள்ள வெலர் பி250 கார் நகர்புற சாலகைளில் 10.1 கிமீ மைலேஜ் தருகிறது, மேலும் நெடுஞ்சாலைகளில் 11.1 கிமீ மைலேஜ் தருகிறது. இந்தியாவின் பெட்ரோல் விலையை ஒப்பிட்டு பார்க்கும்போது வெலர் காருக்கு எரிபொருள் பராமரிப்பு கட்டணம் அதிகமாகும் என தெரிகிறது.

ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

தீர்ப்பு:

நமது டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்த லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் வெலர் பி250 எஸ்யூவி வேரியண்ட் இந்திய வியபார சந்தையில் 83.35 லட்சம் ரூபாயில் துவங்கி டாப் வேரியண்ட் 1.17 கோடி ரூபாய் வரை விற்பனையாகிறது. நகரபுற சாலைகள் மற்றும் குறைந்த வேகத்தில் காரினை ஓட்டும் வாடிக்கையாளர்களுக்கு வெலர் எஸ்யூவி சிறந்த தேர்வாக இருக்கும்

ஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

"உலகின் மிக அழகிய கார்" என்ற விருதினை பெற்றுள்ள வெலர் எஸ்யூவி மற்ற போட்டி நிறுவன எஸ்யூவி காரர்களை விட டிசைன் வடிவமைப்பு, இன்டிரியர் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த காரக உள்ளது. இந்த காரில் அதிகவேக செயல்திறனில் சில ஏமாற்றங்கள் உள்ளது இருப்பினும் நகர்ப்புற சாலைகளுக்கு முழுமையாக ஏற்ற எஸ்யூவி காரக லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் வெலர் எஸ்யூவி திகழ்கிறது.

Most Read Articles
மேலும்... #லேண்ட்ரோவர்
English summary
Range Rover Velar P250 Petrol Review: Read in Tamil
Story first published: Saturday, June 1, 2019, 15:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X