மிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்தியாவில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்திய சந்தையில் தற்போது மிகவும் பிரபலமான கார் செக்மெண்ட்டாக இது உருவெடுத்துள்ளது. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும், இந்த செக்மெண்ட்டில் தொடர்ச்சியாக கார்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வரிசையில் ரெனால்ட் நிறுவனமும் கைகர் மூலம் இறுதியாக காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் நுழைந்துள்ளது.

ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பேஸ் வேரியண்ட்டின் விலை 5.45 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் டாப் மாடலான ஆர்எக்ஸ்இஸட் எக்ஸ்-ட்ரானிக் சிவிடி வேரியண்ட்டின் விலை 9.55 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த காம்பேக்ட் எஸ்யூவிக்கு தற்போது நாடு முழுவதும் முன்பதிவு ஏற்கப்படுகிறது. 11 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மிக சவாலான விலையில் விற்பனைக்கு வந்துள்ள ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவியை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. பல்வேறு விதங்களில் இந்த கார் எங்களை கவர்ந்தது. எங்களது முழுமையான டெஸ்ட் டிரைவ் அனுபவங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

வெளிப்புறம் & டிசைன்

ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவியின் முன் பகுதியில் முழு எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் லோ-பீமுக்காக இரண்டு, ஹை-பீமுக்காக ஒன்று என மூன்று பீம் போடுகளும் இடம்பெற்றுள்ளன. ஹெட்லைட்கள் சிறப்பான வெளிச்சத்தை வழங்கி தங்களது பணியை மிக சிறப்பாக செய்கின்றன. ஹெட்லைட் க்ளஸ்ட்டருக்கு மேலாக பகல் நேர விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்குள் ஹாலோஜன் பல்புகளுடன் டர்ன் இன்டிகேட்டர்கள் இடம்பெற்றுள்ளன.

மிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே சமயம் ரெனால்ட் கைகர் காரின் முன் பக்க பம்பர் ஸ்போர்ட்டியாக தோற்றமளிக்கிறது. க்ரில் மற்றும் அதன் மைய பகுதியில் பெரிதாக வழங்கப்பட்டுள்ள ரெனால்ட் லோகோ ஆகியவற்றில் க்ரோம் பூச்சுக்களை காண முடிகிறது. அதேபோல் இந்த காரின் ஹூட்டில் இடம்பெற்றுள்ள லைன்கள் மற்றும் மடிப்புகள், காருக்கு கூடுதல் கவர்ச்சியை சேர்க்கின்றன. ஒட்டுமொத்தத்தில் ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவியின் முன் பகுதி கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அப்படியே பக்கவாட்டு பகுதிக்கு வந்தால், இங்கே மல்டிஸ்போக் ட்யூயல்-டோன் 16 இன்ச் அலாய் வீல்கள்தான் உங்களின் கவனத்தை ஈர்க்கும் முதல் விஷயமாக இருக்கும். இந்த காரில் சியட் செக்யூராடிரைவ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் முன் பக்க ஃபெண்டரின் பக்கவாட்டில், இருபுறமும் க்ரோம் பூச்சுக்களுடன் ஆர்எக்ஸ்இஸட் பேட்ஜ் இடம்பெற்றுள்ளது.

மிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரை பெரிய அளவில் பாடி லைன்கள் மற்றும் மடிப்புகள் இல்லை. எனினும் கருப்பு நிற க்ளாடிங், காருக்கு சற்றே பருமனான தோற்றத்தை வழங்குகிறது. டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக எங்களுக்கு வழங்கப்பட்ட கார் காஸ்பியன் ப்ளூ வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது. அதன் மேற்கூரை மற்றும் பில்லர்களுக்கு கருப்பு வண்ணம் வழங்கப்பட்டிருந்தது. அதே சமயம் ரூஃப் ரெயில்கள் மற்றும் பின் பகுதியில் சுறா துடுப்பு ஆன்டெனா ஆகியவற்றையும் ரெனால்ட் கைகர் பெற்றுள்ளது.

மிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

பின் பகுதியை பொறுத்தவரை, 'C' வடிவ டெயில்லைட் யூனிட்கள் உங்களை நிச்சயமாக கவரும். அதே சமயம் மைய பகுதியில் கைகர் பேட்ஜூம், பூட் பகுதியின் இருபுறமும் ரெனால்ட் மற்றும் டர்போ பேட்ஜ்களும் வழங்கப்பட்டுள்ளன.

மிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அத்துடன் பின் பக்க லோகோவின் மைய பகுதியில் ரியர்வியூ கேமரா வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பார்க்கிங் சென்சார்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நெருக்கடியான பகுதிகளிலும் பார்க்கிங் செய்வது எளிமையாக இருக்கும். மேலும் ஸ்பிளிட் ரியர் ஸ்பாய்லரையும் இந்த கார் பெற்றுள்ளது. இது காரின் பின் பகுதியை இன்னும் கவர்ச்சியாக காட்டுகிறது.

மிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்டீரியர் & வசதிகள்

இனி காரின் உள்ளே செல்வோம். இங்கே தாராளமான இடவசதி கொண்ட கேபின் நம்மை வரவேற்கிறது. இந்த காரின் டேஷ்போர்டு நல்ல தரமான பிளாஸ்டிக் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டோர் பேனல்கள் தவிர வேறு எங்கும் சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் பயன்படுத்தப்படவில்லை. டேஷ்போர்டின் மைய பகுதியில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த டச்ஸ்க்ரீன் பயன்படுத்துவதற்கு நன்றாக உள்ளது.

மிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு அப்படியே கீழாக க்ளைமேட் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கீழாக உங்கள் செல்போன்களை சார்ஜ் செய்து கொள்வதற்கான வயர்லெஸ் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேகமாக ஆன்/ஆஃப் ஸ்விட்ச் உள்ளது.

அதே சமயம் இந்த காரின் ஸ்டியரிங் வீல் பிடித்து ஓட்டுவதற்கு நன்றாக இருக்கிறது. மேலும் ஸ்டியரிங் வீலில் வழங்கப்பட்டுள்ள கண்ட்ரோல்களை பயன்படுத்துவதும் எளிமையாக உள்ளது. இதன் இடது பக்கம் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கான கண்ட்ரோல்களும், வலது பக்கம் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கான கண்ட்ரோல்களும் வழங்கப்பட்டுள்ளன.

மிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை பொறுத்தவரை, ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி 7 இன்ச் முழு டிஜிட்டல் க்ளஸ்ட்டரை பெற்றுள்ளது. டிரைவிங் மோடுக்கு ஏற்ப க்ளஸ்ட்டர் தன்னை மாற்றி கொள்ளும் என்பது கூடுதல் சிறப்பம்சம். அதாவது ஈக்கோ மோடில் பச்சை நிறத்திற்கும், நார்மல் மோடில் நீல நிறத்திற்கும், ஸ்போர்ட் மோடில் சிகப்பு நிறத்திற்கும் மாறி கொள்ளும்.

மிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இருக்கைகளை பொறுத்தவரை, ஓட்டுனருக்கு மட்டுமே இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் முன் பகுதியில் உள்ள இரண்டு இருக்கைகளும் குறை சொல்ல முடியாத அளவிற்கு சௌகரியமாக உள்ளன.

மிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

பின் பகுதி இருக்கைகளும் சௌகரியமாகதான் உள்ளன. ஆனால் கீழ் தொடைக்கு போதிய அளவிற்கு சப்போர்ட் இல்லை. எனினும் ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் போதுமான அளவிற்கு உள்ளது. ரெனால்ட் கைகர் காரில், உயரமான 5 பயணிகள் எளிதாக அமர்ந்து பயணம் செய்ய முடியும். மேலும் தரை பரப்பு தட்டையாக உள்ளதால், நடுவில் அமரும் பயணிக்கும் சௌகரியமான பயணம் கிடைக்கும். பின் பகுதியிலும் ஏசி வெண்ட்கள் வழங்கப்பட்டிருப்பதுடன், 12-volt சார்ஜிங் சாக்கெட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

மிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அத்துடன் ரெனால்ட் கைகர் காரில் 405 லிட்டர் பூட் ரூம் இடவசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அளவுடைய ஒரு காருக்கு இது போதுமானதுதான். இதில், 4 பயணிகளின் லக்கேஜ்களை எளிதாக வைக்க முடியும். இன்னும் இட வசதி தேவைப்பட்டால், பின் இருக்கைகளை மடித்து வைத்து கொள்ள முடியும். 60:40 ஸ்பிளிட் வசதியை பின் இருக்கைகள் பெற்றுள்ளன. இதன் மூலம் பூட் ஸ்பேஸை அதிகரித்து கொள்ள முடியும்.

மிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்ஜின் & ஹேண்ட்லிங்

ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

மிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

மறுபக்கம் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தது டர்போ பெட்ரோல் மேனுவல் வேரியண்ட் ஆகும். இந்த மாடல் எங்களை வெகுவாக கவர்ந்தது.

மிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

எனினும் பவர் டெலிவரி சீராக இல்லை. ஆக்ஸலரேட்டரை மெதுவாக கொடுக்கும்போது கார் பூப்போல மென்மையாக செல்கிறது. எனினும் ஆக்ஸலரேட்டரை தரைக்கு மிதித்து வேகம் எடுக்கும்போது, ஆரம்பத்தில் சிறிய பின்னடைவை உணர முடிகிறது. ஆனால் அதன்பின் அனைத்து சக்தியும் திடீரென ஒரே நேரத்தில் வருகிறது. பவர் டெலிவரி சீராக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதே சமயம் டார்க் ஸ்டீர் குறிப்பிட்ட அளவில் இருப்பதால், ஸ்டியரிங் வீலை கெட்டியாக பிடித்து கொள்வதும் அவசியமாக உள்ளது. இல்லாவிட்டால் கார் ஒரு பக்கமாக செல்லக்கூடும்.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் ரெனால்ட் கைகர் காரில், ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மொத்தம் மூன்று டிரைவிங் மோடுகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் எந்த மோடில் காரை ஓட்டுகிறீர்களோ? அதற்கு ஏற்ப ஸ்டியரிங் சிஸ்டம் மற்றும் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் மாறுகிறது.

மிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

ஈக்கோ மோடில், ஸ்டியரிங் வீல் மிகவும் இலகுவாக உள்ளது. த்ராட்டில் ரெஸ்பான்ஸ் அவ்வளவு சிறப்பாக இல்லை. எனினும் அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கு இந்த மோடு துணை நிற்கும். அதே சமயம் ஸ்போர்ட் மோடில், ஸ்டியரிங் சிஸ்டம் இறுக்கம் அடைகிறது. எனவே நம்பிக்கையுடன் ஓட்ட முடிகிறது. அத்துடன் த்ராட்டில் ரெஸ்பான்சும் நன்றாக உள்ளதால், காரை உற்சாகமாக செலுத்த முடிகிறது. அதுவே நீங்கள் நகர பகுதிகளில் காரை ஓட்டுகிறீர்கள் என்றால், நாங்கள் உங்களுக்கு நார்மல் மோடை பரிந்துரைப்போம். இந்த மோடில் இரண்டும் சமநிலையில் உள்ளது.

மிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே சமயம் ரெனால்ட் கைகர் காரில், சிறிய அளவில் பாடி ரோல் உள்ளது. இந்த காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 205 மிமீ. இதனை சிறப்பான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் என கூறலாம். மோசமான சாலைகளிலும் காரை ஓட்டி செல்வதற்கு ஏதுவாக இருக்கும். ஆனால் ரெனால்ட் கைகர் கார் எங்களிடம் சில மணி நேரங்கள் மட்டுமே இருந்ததால், எங்களால் மைலேஜை சரியாக கூற முடியவில்லை.

மிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது ரெனால்ட் கைகர் காரின் மிகப்பெரிய பலம். இந்திய சந்தையில் ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் க்ரூஸர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய கார்களுடன் ரெனால்ட் கைகர் போட்டியிடும்.

ரெனால்ட் கைகரின் டிசைன் நன்றாக இருப்பதுடன், ஓட்டுவதற்கும் சிறப்பாக உள்ளது. அத்துடன் தாராளமான இட வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்ஜின் ரீஃபைன்மெண்ட் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததும், சன்ரூஃப் வழங்கப்படாததும் சிறிய குறைகளாக தெரிகின்றன. அதேபோல் சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் அதிகளவில் பயன்படுத்தப்படாததும் ஒரு குறைதான். மற்றபடி குறைவான விலையில் ஒரு காம்பேக்ட் எஸ்யூவி காரை எதிர்பார்ப்பவர்களுக்கு ரெனால்ட் கைகர் சிறந்த தேர்வாக இருக்கும்.

Most Read Articles

English summary
Renault Kiger Compact SUV First Drive Review: Design, Features, Engine Performance, Handling. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X