ரெனோ க்விட் காரின் 1.0லி எஞ்சின் மாடலின் விமர்சனம்!

Written By:

கவர்ச்சிகரமான டிசைன், நவீன வசதிகள், அதிக இடவசதி, குறைவான விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது ரெனோ க்விட். இதன் காரணமாக 1.50 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றதுடன், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரெனோ க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், அந்த காரின் எஸ்யூவி போன்ற கம்பீரமான தோற்றத்திற்கும், அதில் இருந்த 800சிசி எஞ்சினின் செயல்திறனுக்கும் சற்றே ஏமாற்றம் இருந்தது உண்மை.

இந்த குறையை போக்கும் விதத்தில் கூடுதல் சக்திகொண்ட புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் க்விட் காரை சமீபத்தில் அறிமுகம் செய்தது ரெனோ கார் நிறுவனம். இதன்மூலமாக, பட்ஜெட் மார்க்கெட்டில் ரெனோ க்விட் காரின் மதிப்பு இன்னும் கூடியிருக்கிறது. இந்த நிலையில், புதிய ரெனோ க்விட் காரின் 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலில் இருக்கும் மாற்றங்கள் மற்றும் எஞ்சினின் செயல்திறன் உள்ளிட்ட முக்கிய விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

டிசைன்

டிசைன்

மாருதி ஆல்ட்டோ 800 காருக்கும், அதன் 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட ஆல்ட்டோ கே10 மாடலுக்கும் டிசைனில் பல வித்தியாசங்களை கொடுத்து வேறுபடுத்தியிருக்கின்றனர். ஆனால், அதுபோன்று அதிக மாற்றங்களை ரெனோ க்விட் காரின் 800சிசி மாடலுக்கும், 1.0 லிட்டர் மாடலுக்கும் இல்லை. ஆம், வெகு சில வித்தியாசங்களே, அதுவும் கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியும்.

 ரெனோ க்விட் காரின் 1.0லி எஞ்சின் மாடலின் விமர்சனம்!

முகப்பில் குறிப்பிட்டு சொல்லும்படி அதிக வித்தியாசங்கள் இல்லை. பக்கவாட்டில் சைடு மிரர்கள் சற்றே பெரிதாக்கப்பட்டு, பின்புறத்தில் வெளிர் வண்ணப் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோன்று, கதவுகளில் கொடுக்கப்பட்டிருக்கும் டீகெல் ஆகியவைதான் வேறுபடுத்தும் விஷயங்கள். மேலும், 800சிசி காரில் இருக்கும் அதே கலர் ஆப்ஷன்கள்தான் இந்த மாடலிலும் இருக்கிறது.

 ரெனோ க்விட் காரின் 1.0லி எஞ்சின் மாடலின் விமர்சனம்!

உட்புறத்திலும் எந்த மாற்றங்களும் இல்லை. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டச்ஸ்கிரீன் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் வசதி போன்றவை மிக முக்கிய அம்சங்கள் என்பது தெரிந்ததுதான். இந்த செக்மென்ட்டில் சிறப்பான இடவசதி கொண்ட கார் மாடலாகவும் சொல்லலாம்.

எஞ்சின்

எஞ்சின்

அடுத்து நாம் குறிப்பிட்டு தெரிந்து கொள்ள வேண்டியது எஞ்சினை பற்றித்தான். ஆம், ரெனோ க்விட் காரின் 3 சிலிண்டர்கள் கொண்ட 800சிசி எஞ்சினை போர் செய்து 1000சிசி எஞ்சினாக மாற்றியிருக்கின்றனர்.

 ரெனோ க்விட் காரின் 1.0லி எஞ்சின் மாடலின் விமர்சனம்!

ரெனோ க்விட் காரின் 800சிசி எஞ்சின் 53.2 பிஎச்பி பவரையும், 72 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஆனால், புதிய 1.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க்கையும் அளிக்கும் விதத்தில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

செயல்திறன்

செயல்திறன்

இதன்மூலமாக, சிறப்பான செயல்திறன் கொண்ட மாடலாக மாறியிருக்கிறது ரெனோ க்விட். ஆரம்ப நிலையிலேயே சிறப்பான பவரையும், டார்க்கையும் உணர வைக்கிறது இதன் புதிய 1.0 லிட்டர் எஞ்சின். இதனால், நகர்ப்புற பயன்பாட்டுக்கு சிறப்பாக இருப்பதோடு, நெடுஞ்சாலை பயணங்களுக்கும் உகந்த நண்பனாக மாறியிருக்கிறது ரெனோ க்விட் கார்.

 ரெனோ க்விட் காரின் 1.0லி எஞ்சின் மாடலின் விமர்சனம்!

800சிசி மாடலை நெடுஞ்சாலையில் ஓட்டும்போது, ஓவர்டேக் செய்வதற்கு கியரை குறைத்து கவனமாக இருக்க வேண்டியிருந்தது. அந்த பிரச்னையை ஓரளவு குறைத்திருக்கிறது புதிய 1.0 லிட்டர் மாடல். ஆம். அடிக்கடி கியரை குறைத்து காரை வேகமெடுக்கும் அவசியம் குறைந்திருக்கிறது.

 ரெனோ க்விட் காரின் 1.0லி எஞ்சின் மாடலின் விமர்சனம்!

இதன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் விரைவாக கியர் மாற்றுவதற்கு ஏதுவாக இருக்கிறது. 800சிசி மாடலைவிட இதன் கியர் லிவரில் அதிர்வுகளும் குறைந்திருக்கிறது. அதேபோன்று, ஸ்டீயரிங் வீலிலும் அதிர்வுகள் குறைவாக இருக்கிறது.

சப்தம் குறைவு

சப்தம் குறைவு

800சிசி மாடலில் அதிர்வுகள் அதிகம் இருப்பதாக வாடிக்கையாளர்களிடம் ஒரு பேச்சு இருந்தது. அதனை சரிசெய்யும் விதத்தில் இதன் 3 சிலிண்டர் 1.0 லிட்டர் எஞ்சினில் மாறுதல்களை செய்திருப்பதோடு, சப்த தடுப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதனால், முன்பைவிட சப்தம் குறைவான பயணத்தை வழங்குகிறது.

 ரெனோ க்விட் காரின் 1.0லி எஞ்சின் மாடலின் விமர்சனம்!

இதேபோன்று, புதிதாக தயாரிக்கப்படும் 800சிசி ரெனோ க்விட் கார்களிலும் சப்தமும், அதிர்வுகளும் குறைவாக இருக்கும் விதத்தில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, புதிய வாடிக்கையாளர்களுக்கு இது மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

ரெனோ க்விட் காரின் 800சிசி மாடல் லிட்டருக்கு 25.17 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற விஷயமும் அதன் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று.

 ரெனோ க்விட் காரின் 1.0லி எஞ்சின் மாடலின் விமர்சனம்!

இந்த நிலையில், ரெனோ க்விட் காரின் 1.0 லிட்டர் மாடல் லிட்டருக்கு 23.01 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் லிட்டருக்கு 16 கிமீ முதல் 17 கிமீ வரை மைலேஜை எதிர்பார்க்கலாம்.

கையாளுமை

கையாளுமை

இதன் 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் இதன் சஸ்பென்ஷன் அமைப்பு எந்தவொரு சாலையிலும் எளிதாகவும், அச்சமின்றியும் செல்ல உதவுகிறது. இதன் சஸ்பென்ஷன் அமைப்பு அதிக சொகுசாக சவாரியை தருவதுடன, அதிக கிரவுண்ட் கிளிரயன்ஸ் இருந்தாலும் நல்ல கையாளுமையை கொடுக்கிறது.

 ரெனோ க்விட் காரின் 1.0லி எஞ்சின் மாடலின் விமர்சனம்!

ஆனால், இதன் சக்திவாய்ந்த புதிய 1.0 லிட்டர் எஞ்சினுக்கு தக்கவாறு சஸ்பென்ஷனில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. பிரேக்குகளும், டயர்களும் கூட மாற்றங்கள் இல்லை என்பது ஏமாற்றமே. அடுத்து இந்த காரின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் இதன் 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் இடவசதி. பெரிய சைஸ் ஹேட்ச்பேக் கார்களுக்கே இதன் பூட்ரூம் சவால் தரும் விஷயம்.

ஒரேயொரு வேரியண்ட்

ஒரேயொரு வேரியண்ட்

புதிய ரெனோ க்விட் காரின் 1.0 லிட்டர் மாடல் RXT மற்றும் RXT ஆப்ஷனல் ஆகிய இரு வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கிறது. 800சிசி மாடலில் வழங்கப்படும் STD, RXE மற்றும் RXL போன்ற விலை குறைவான வேரியண்ட்டுகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

 ரெனோ க்விட் காரின் 1.0லி எஞ்சின் மாடலின் விமர்சனம்!

RXT டாப் வேரியண்ட்டில் நவீன வசதிகள் இருந்தாலும், ஓட்டுனருக்கான ஏர்பேக் மட்டும் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. டாப் வேரியண்ட்டில் கூட ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் டியூவல் ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகள் ஆப்ஷனலாக கூட இல்லை என்பதும் பெரும் குறையாக இருக்கிறது.

விலை வித்தியாசம்

விலை வித்தியாசம்

அதிக மாற்றங்களையும், கூடுதல் வசதிகளையும் சேர்த்து விலையை கூட்டுவதற்கு ரெனோ விரும்பவில்லை என்பது தெரிகிறது. புதிய வாடிக்கையாளர்களை கவர்வதற்காக விலையை மிக கவனமாக நிர்ணயித்துள்ளது ரெனோ கார் நிறுவனம். ஆம், 800சிசி மாடலுக்கும் 1.0 லிட்டர் மாடலுக்கும் மிக குறைவான விலை வித்தியாசமே.

 ரெனோ க்விட் காரின் 1.0லி எஞ்சின் மாடலின் விமர்சனம்!

சென்னையில் ரெனோ க்விட் காரின் 800சிசி RXT வேரியண்ட் ரூ.4.46 லட்சம் விலையிலும், 1.0 லிட்டர் மாடலின் RXT வேரியண்ட் ரூ.4.72 லட்சம் ஆன்ரோடு விலையிலும் கிடைக்கிறது. எனவே, விலையில் பெரிய வித்தியாசம் இல்லை.

எமது அபிப்ராயம்

எமது அபிப்ராயம்

ரெனோ க்விட் காரின் 800சிசி மாடலைப் போன்றே, 1.0 லிட்டர் மாடலும் கொடுக்கும் பணத்திற்கு நிறைவான அம்சங்களை கொண்டுள்ளது. அதேநேரத்தில், தற்போது மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் மட்டும் வந்துள்ளது. ஆனால், இதன் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு வரும்போது, இந்த மாடலுக்கான மதிப்பும், வரவேற்பும் கூடும் என்று எதிர்பார்க்கலாம்.

English summary
Renault Kwid 1.0 Review. Read in Tamil.
Story first published: Tuesday, October 18, 2016, 12:25 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos