ரெனோ க்விட் 1.0லி ஏஎம்டி Vs மாருதி ஆல்ட்டோ கே10 ஏஎம்டி: ஒப்பீடு

By Saravana

சில மாதங்களுக்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ க்விட் கார் மார்க்கெட்டில் பெரும் ஹிட்டடித்துள்ளது. இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் ரெனோ க்விட் காரை முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், ரெனோ க்விட் காருக்கான வரவேற்பை தக்க வைக்கும் விதத்தில் 1.0 லிட்டர் எஞ்சின் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட ரெனோ க்விட் காரின் புதிய மாடல்கள் கடந்த மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட ரெனோ க்விட் கார் வாடிக்கையாளர்களின் பேராவலை தூண்டியிருக்கிறது. இந்த புதிய ரெனோ க்விட் காரின் ஏஎம்டி மாடல், விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 கார் மாடலான மாருதி ஆல்ட்டோ கே10 காரின் ஏஎம்டி மாடலுக்கு போட்டியாக வர இருக்கிறது. இந்தநிலையில், சிறப்பம்சங்களின் அடிப்படையில் இரண்டில் எது சிறப்பானது என்பதை கண்டுகொள்ளும் விதமாக இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.

டிசைன்: ரெனோ க்விட்

டிசைன்: ரெனோ க்விட்

ரெனோ க்விட் கார் வெற்றி பெற்றதற்கான முக்கிய காரணம், க்ராஸ்ஓவர் ரகம் போன்ற அதன் சிறப்பான டிசைன்தான். ரெனோ க்விட் காரின் 800சிசி மாடலுக்கும், 1000சிசி மாடலுக்கும் டிசைனில் வித்தியாசங்கள் இல்லை. அதேநேரத்தில், 1.0லிட்டர் எஞ்சின் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் என்பதை குறிப்பிடும் பேட்ஜ்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

டிசைன்: மாருதி ஆல்ட்டோ கே10

டிசைன்: மாருதி ஆல்ட்டோ கே10

மாருதி ஆல்ட்டோ 800சிசி காரைவிட கூடுதல் பிரிமியம் அம்சங்கள் மற்றும் க்ரோம் பூச்சு அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்த டிசைனில் அதிக மாறுதல்கள் இல்லை என்றாலும், சிறிய மாற்றங்களை செய்திருக்கிறது மாருதி. அதேநேரத்தில், டிசைன் என்று வரும்போது மாருதி ஆல்ட்டோ கே10 காரைவிட ரெனோ க்விட் காரின் டிசைன்தான் மனதில் இடம்பிடிக்கிறது.

எஞ்சின்: ரெனோ க்விட்

எஞ்சின்: ரெனோ க்விட்

ரெனோ க்விட் காரில் இடம்பெற்றிருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 77 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. இந்த ஏஎம்டி கியர்பாக்ஸை, ரெனோ நிறுவனத்தின் ஃபார்முலா ஒன் கார் தயாரிப்பு நிபுணர்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். (இந்த மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் வருகிறது.)

எஞ்சின்: மாருதி ஆல்ட்டோ கே10

எஞ்சின்: மாருதி ஆல்ட்டோ கே10

மாருதி ஆல்ட்டோ கே10 காரில் இடம்பெற்றிருக்கும் 1.0 லிட்டர் கே-நெக்ஸ்ட் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த எஞ்சின் சிறந்த செயல்திறனை வழங்கும் என ஏற்கனவே பெயர் பெற்றிருக்கிறது. 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. ஆல்ட்டோவைவிட சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் சிறப்பான தொழில்நுட்பத்துடன் வரும் ரெனோ க்விட் கார் அதிக பவர்ஃபுல் மாடலாக இருக்கும் என்பதால், இதிலும் ரெனோ க்விட் முன்னிலை பெறுகிறது.

ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதி

ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதி

மாருதி ஆல்ட்டோ கே10 காரில் கியர் லிவர் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், ரெனோ க்விட் காரின் டேஷ்போர்டில் சிறிய டயல் ஒன்று கியர் மாற்றத்துக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக, வழக்கமாக கியர் லிவர் இருக்கும் இடத்தில் கூடுதல் இடவசதியை அளிக்கிறது ரெனோ க்விட். அத்துடன், மிக எளிமையாக எந்த கியரையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

முக்கிய வசதிகள்: ரெனோ க்விட்

முக்கிய வசதிகள்: ரெனோ க்விட்

ரெனோ க்விட் காரில் டிஜிட்டல் மீட்டர் கன்சோல், க்ரோம் பூச்சு அலங்காரம் செய்யப்பட்ட ஏசி வென்ட்டுகள், 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் வசதி போன்றவை இடம்பெற்றிருக்கும். அதாவது, மிக எளிமையாகவும், நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாகவும் இருக்கிறது ரெனோ க்விட் கார்.

 முக்கிய வசதிகள்: மாருதி ஆல்ட்டோ கே10

முக்கிய வசதிகள்: மாருதி ஆல்ட்டோ கே10

மாருதி ஆல்ட்டோ கே10 காரில் 2 டின் மியூசிக் சிஸ்டம், அனலாக்- டிஜிட்டல் மீட்டர் கன்சோல் போன்றவை இடம்பெற்றிருக்கிறது. இந்த காரில் நேவிகேஷன் சிஸ்டம் வசதி இல்லை என்பதை குறிப்பிட வேண்டும். ஆக மொத்தத்தில் இந்த விஷயத்திலும் ரெனோ க்விட்தான் முன்னிலை பெறுகிறது.

 பாதுகாப்பு: ரெனோ க்விட்

பாதுகாப்பு: ரெனோ க்விட்

தற்போது விற்பனையில் உள்ள 800சிசி ரெனோ க்விட் காரில் டிரைவருக்கான ஏர்பேக் மட்டும் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லை. ஆனால், 1.0 லிட்டர் ரெனோ க்விட் காரில் டியூவல் ஏர்பேக்குகளும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு: மாருதி ஆல்ட்டோ கே10

பாதுகாப்பு: மாருதி ஆல்ட்டோ கே10

மாருதி ஆல்ட்டோ கே10 ஏஎம்டி மாடலில் ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு அமலுக்கு வர இருக்கும் புதிய விதிமுறைகளின்படி, ஏர்பேக், ஏபிஎஸ் சிஸ்டம் விரைவி்ல் சேர்க்கப்படும் வாய்ப்புள்ளது.

பூட் ரூம்

பூட் ரூம்

மாருதி ஆல்ட்டோ கே10 காரில் 177 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான பூட்ரூம் இடவசதி உள்ளது. ஆனால், ரெனோ க்விட் காரில் 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் உள்ளது.

கிரவுண்ட் கிளிரயன்ஸ்

கிரவுண்ட் கிளிரயன்ஸ்

மாருதி ஆல்ட்டோ கே10 கார் 160 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டது. ஆனால், ரெனோ க்விட் கார் 180மிமீ தரை இடைவெளியுடன் இந்திய சாலை நிலைகளை எளிதில் கையாளும் விதமாக அமைந்துள்ளது.

விலை ஒப்பீடு

விலை ஒப்பீடு

மாருதி ஆல்ட்டோ கே10 ஏஎம்டி மாடல் ரூ.4.06 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரெனோ க்விட் காரின் ஏஎம்டி மாடல் ரூ.3.75 லட்சம் முதல் ரூ.4.0 லட்சத்திற்குள் எதிர்பார்க்கப்படுகிறது.

 எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமான மாருதி ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குகின்றன. நம்பகத்தன்மை, மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் மையங்களின் நெட்வொர்க், குறைவான பராமரிப்பு போன்றவை ஆல்ட்டோ கே10 ஏஎம்டி மாடலுக்கு பக்கபலமாக உள்ளன. குறைவான சர்வீஸ் மையங்களின் நெட்வொர்க், உதிரிபாகங்கள் சப்ளை, நம்பகத்தன்மை போன்ற சில குறைபாடுகள் இருந்தாலும், டிசைன், வசதிகள், ஸ்மார்ட் டயல் கியர் ஷிஃப்ட், இடவசதி, பூட் ரூம் என பல விதங்களில் மனதில் நிறைகிறது ரெனோ க்விட் ஏஎம்டி மாடல். குடும்பஸ்தர்கள், மாருதி ஆல்ட்டோ கே10 காரை விரும்பினாலும், இளைஞர்கள் மத்தியில் ரெனோ க்விட்டுககு அதிக வரவேற்பு கிடைக்கும். விலையை மட்டும் சரியாக நிர்ணயித்துவிட்டால், விற்பனைக்கு வரும்போது நிச்சயம் பெரிய வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது.

Most Read Articles
English summary
Faceoff: Renault Kwid 1.0 AMT Vs Maruti Suzuki Alto K10 AMT Comparison
Story first published: Wednesday, March 9, 2016, 13:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X