4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்தியாவில் 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்படும் கார்களுக்கான வரிச்சலுகையை பயன்படுத்தி, பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்களை சில நிறுவனங்கள் களமிறக்கின. அவை எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டடை சேர்ந்த ரெனோ நிறுவனம் இந்தியர்களின் நாடித்துடிப்பை சரியாக பிடித்து பார்த்து அறிமுகம் செய்த க்விட் காருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதே வழியில் இப்போது புதிய ரெனோ ட்ரைபர் என்ற மினி எம்பிவி காரை களமிறக்கி உள்ளது. இந்த காரை கோவாவில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். இதன் சாதக, பாதகங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அசத்தும் டிசைன்

முதல் பார்வையிலேயே டிசைனில் கவர்ந்து இழுக்கிறது ரெனோ ட்ரைபர். 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட மினி எம்பிவி கார் என்பதைவிட, ஒரு சாதாரண எம்பிவி கார் போன்ற தோற்றத்தை பெற்றிருக்கிறது.

4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வெளிப்புற அம்சங்கள்

ரெனோ நிறுவனத்தின் க்விட் கார் உருவாக்கப்பட்ட அதே சிஎம்எஃப்-ஏ பிளாட்ஃபார்மில்தான் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த கார் புதிய ரெனோ ட்ரைபர் முற்றிலும் புதிய டிசைன் தாத்பரியங்களுடன் வெளிப்புறத் தோற்றம் மிக வசீகரமாக உள்ளது. இந்த விலையில் மிகவும் பிரிமீயமாக உள்ளது.

4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன்புற அமைப்பு

முன்புபறத்தில் மிக வசீகரமாக இருப்பது அழகான க்ரில் அமைப்பு. மூன்று க்ரோம் கம்பிகள் மீது க்ரோம் வில்லைகள் பொருத்தப்பட்ட க்ரில் அமைப்பு இரண்டு ஹெட்லைட் க்ளஸ்ட்டருடன் இணைந்து நிற்கிறது. இந்த காரில் இண்டிகேட்டர்களுடன் இணைந்த புரொஜெக்டர் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் இடம்பெற்றுள்ளன.

முன்புற பம்பர் மிக வலிமையாக இருப்பதுடன் ஸ்கிட் பிளேட்டுடன் இந்த காரின் கம்பீரத்திற்கு வலு சேர்க்கிறது. முன்புற பம்பரில் எல்இடி பகல்நேர விளக்குகளும் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், சில்வர் அலங்கார அக்சஸெரீகளும் வசீகரிக்கிறது.

4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டில் செவ்வக வடிவிலான தோற்றத்தை இந்த கார் பெற்றிருக்கிறது. பெரிய ஜன்னல்கள், வீல் ஆர்ச்சுகள் இதன் வசீகரத்தை அதிகரிக்கின்றன. கதவுகளின் கீழ்பாகத்தில் கிளாடிங் சட்டங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் 15 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. காரின் தோற்றத்திற்கு மிக சரியான அளவில் இதன் சக்கரங்கள் பொருந்தி போவது மிக முக்கிய அம்சமாக கூறலாம்.

4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புற டிசைன்

ரெனோ ட்ரைபர் எம்பிவி காரின் பின்புறத் தோற்றமும் மிகச் சிறப்பானதாக இருக்கிறது. அழகாக வடிவமைக்கப்பட்ட டெயில் லைட்டுகள், ரூஃப் ஸ்பாய்லர், கருப்பு வண்ண பம்பர், ஸ்கிட் பிளேட் ஆகியவை இந்த காரை மிக பிரிமீயமாக காட்டுகிறது. மொத்தத்தில் இதன் டிசைன் குறை சொல்ல முடியாத அளவில், எல்லோரையும் வசீகரிக்கும் விதத்தில் இருக்கிறது.

Most Read: ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்!

4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்டீரியர்

வெளிப்புறத்தை போலவே உட்புறமும் மிக பிரிமீயமாக இருக்கிறது. கருப்பு - பீஜ் வண்ணத்திலான இரட்டை வண்ண இன்டீரியர் அமைப்பு, டேஷ்போர்டு மற்றும் கதவுகளில் மிருதுவான பிளாஸ்டிக் பாகங்கள் போன்றவை விலை உயர்ந்த கார் போல காட்டுகிறது. க்விட் போன்றே இந்த காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் இல்லை என்பது குறையாக உள்ளது.

4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சென்டர் கன்சோல்

8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்திற்கு கீழாக க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டத்திற்கான கட்டுப்பாட்டு சுவிட்சுகள், ரோட்டரி நாப் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. புஷ் பட்டன் ஸ்டார்ட் - ஸ்டாப் வசதிக்கான பட்டன் ஏசி கன்ட்ரோல் அமைப்புக்கு கீழே கொடுக்கப்பட்டு இருப்பது சற்று உறுத்தலாக தெரிகிறது.

Most Read: அதிர்ஷ்டம் இல்லாத பெண்ணின் அவசியமான கண்டுபிடிப்பு... கார் விண்டுஷீல்டு வைப்பர்கள் எப்படி உருவானது?

4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ரெனோ ட்ரைபர் காரின் உட்புறம் அதிக இடவசதியை பெற்றிருப்பது போன்று தோற்றமளிக்கிறது. பெரிய ஜன்னல்கள், வெளிர் நிறத்திலான இருக்கை கவர்கள் மற்றும் உட்புறம், ஆகியவை அதிக இடவசதி கொண்ட கார் போல தோற்றத்தை தருகிறது. முன்புற இருக்கைகள் வசதியாக தெரிகிறது.

4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்வரிசை இருக்கைகள்

இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகள் போதுமான இடவசதியை அளிக்கின்றன. பயணிகளுக்கு போதுமான அளவில் ஹெட்ரூம், லெக்ரூம் இடவசதியை அளிப்பதுதான் இதன் மேஜிக். இதற்காக, ரெனோ கார் நிறுவனத்தின் பொறியாளர்கள் அதிக உழைப்பை வழங்கி இருப்பதை இருக்கையின் இடவசதியை வைத்து உணர்ந்து கொள்ள முடிகிறது.

அதே நேரத்தில், இடவசதிக்காக இருக்கைகள் தடிமன் குறைவாக இருப்பதால், அதிக சொகுசாக இல்லை என்பதுடன், தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கவில்லை. இது இன்னமும் சிறப்பாக இருந்திருக்கலாம். தனித்தனி ஏசி வென்ட்டுகள் இருப்பது சிறப்பான விஷயம்.

Most Read: யாரு சொன்னது போலீஸ் பெண்களை மடக்க மாட்டங்கனு... உச்சபட்ச அபராதத்தை பெறும் முதல் பெண்...?

4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மூன்றாவது வரிசை இருக்கை

மூன்றாவது வரிசை இருக்கையானது போதுமான இடவசதியை அளிக்கிறது. இருப்பினும், சிறியவர்கள் பயன்படுத்துவதுதான் சிறந்ததாக இருக்கும். மேலும், பெரிய ஜன்னல்கள், தனி ஏசி வென்ட்டுகள் மற்றும் வண்ணத் தேர்வுகள் மூன்றாவது வரிசை இருக்கை பயணிகளுக்கு அலுப்பில்லாத பயணத்தை வழங்கும். மொபைல் சார்ஜரும் தனியாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, இதனை 4 மீட்டருக்குள் உருவாக்கப்பட்ட உண்மையான 7 சீட்டர் மேஜிக் காராக கூறலாம்.

4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இருக்கைகளை கழற்றும் வசதி

மூன்றாவது வரிசை இருக்கைகளை மிக எளிதாக கழற்றி மாட்டும் வசதி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு இருக்கை அல்லது இரண்டு இருக்கைகளையும் தனித்தனியாக கழற்றி மாட்டும் வசதி உள்ளது. இதன்மூலமாக, பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை வெகுவாக அதிகரித்துக் கொள்ள முடியும்.

4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பூட் ரூம் இடவசதி

சாதாரணமாக 84 லிட்டர் பூட்ரூம் இடவசதிதான் உள்ளது. ஆனால், மூன்றாவது வரிசையை இருக்கைகளை கழற்றினால் 625 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை பெற முடியும். இந்த விலை ரக கார்களில் மிக அதிக இடவசியை அளிக்கும். இரண்டாவது வரிசையில் உள்ள இருக்கைகளை 60:40 என்ற விகிதத்தில் மடக்கி வைக்க முடியும். இதன்மூலமாக, 1,000 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை பெறும் வாய்ப்பை வழங்குகிறது.

4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சொகுசு அம்சங்கள்

இந்த காரில் முதல் வரிசை இருக்கைகள் மிக சொகுசாக இருக்கின்றன. தொடைகளுக்கும் நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. இரண்டாவது வரிசை இருக்கைகளில் தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் இல்லையென்றாலும், சாய்மான வசதி அளிக்கப்படுவது மிக முக்கிய வசதியாக இருக்கிறது.

4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
Length (mm) 3990
Width (mm) 1739
Height (mm) 1643
Wheelbase (mm) 2636
Ground Clearance (mm) 182
Boot Space (litres) 84*
4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வேரியண்ட்டுகள், முக்கிய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு

புதிய ரெனோ ட்ரைபர் கார் ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் ஆகிய 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதில், விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் கிடைக்கும் முக்கிய வசதிகளை கீழே பார்க்கலாம்.

 • புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள்
 • எல்இடி பகல்நேர விளக்குகள்
 • எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள்
 • எல்இடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்
 • எலெக்ட்ரிக் டெயில்கேட் ஓபனிங் சிஸ்டம்
 • பகலிரவு அட்ஜெஸ்ட் வசதியுடன் உட்புற ரியர் வியூ மிரர்
 • புஷ் பட்டன் ஸ்டார்ட் - ஸ்டாப் வசதி
 • இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கு தனித்தனி ஏசி வென்ட்டுகள்
 • ஓட்டுனர் பக்க ஜன்னல் கண்ணாடிக்கு ஆட்டோ அப்-டவுன் வசதி
 • 3டி ஸ்பேஸர் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி
 • ஸ்மார்ட் அக்செஸ் கார்டு
 • மூன்று வரிசை இருக்கைகளுக்கும் 12 வோல்ட் சார்ஜிங் பாயிண்ட்
 • 8.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
 • ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளுக்கான சப்போர்ட்
4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த காரின் டாப் வேரியண்ட்டில் 4 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், லோடு லிமிட்டர் மற்றும் ப்ரீடென்ஷனர் வசதியுடன் சீட்பெல்ட்டுகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், பாதசாரிகளுக்கான விசேஷ பாதுகாப்பு தொழில்நுட்பம், குறிப்பிட்ட வேகத்தில் தானாக கதவுகள் பூட்டும் வசதி, விபத்தின்போது தானாக கதவுகள் திறக்கும் வசதி, ரியர் வியூ கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின் விபரம்

ரெனோ ட்ரைபர் கார் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது. இந்த மூன்று சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 70 பிஎச்பி பவரையும், 92 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின் செயல்திறன்

முழுமையாக பாரம் ஏற்றும்போது, இந்த 7 சீட்டர் காருக்கு 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் போதுமானதாக இருக்காது. ஆரம்ப நிலையில் போதுமான செயல்திறனை வெளிப்படுத்தவில்லை. ஆனால், 3,000 ஆர்பிஎம் என்ற அளவை தாண்டும்போது போதுமான செயல்திறனை வெளிக்கொணருகிறது. அதேநேரத்தில், இது மூன்று சிலிண்டர் எஞ்சின் என்பதால், அதிர்வுகள் அதிகம் உணர முடிகிறது. இதன் எஞ்சினில் பெரிதாக எதிர்பார்க்க முடியாது என்பதே யதார்த்தம்.

4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கியர்பாக்ஸ்

இந்த காரில் இருக்கும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கியர் மாற்றத்தின்போது சிறிய அதிர்வுகளை காட்டுகிறது. மேலும், எஞ்சினை குறிப்பிட்ட செயல்திறனில் வைப்பதற்கும் அடிக்கடி கியர்மாற்றமும் தேவைப்படுகிறது. இந்த காரில் விரைவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது.

4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கையாளுமை

ரெனோ ட்ரைபர் கார் கையாளுமையில் மிகச் சிறப்பான மாடலாக இருக்கிறது. குறிப்பாக, இதன் ஸ்டீயரிங் சிஸ்டம் மிக இலகுவாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும், குறுகலான சாலைகளிலும் எளிதாக ஓட்ட துணை புரிகிறது.

நெடுஞ்சாலை பயணத்தின்போதும் ஸ்டீயரிங் வீல் சிறப்பாக இருக்கிறது. ஆனால், அதிவேகத்தில் இதன் ஸ்டீயரிங் சிஸ்டத்தின் செயல்பாடு எதிர்பார்த்த அளவு இல்லை. ஆனால், நடுத்தர வேகம் வரை இதன் ஸ்டீயரிங் அற்புதமான உணர்வை தருகிறது. இதன் சஸ்பென்ஷன் சிஸ்டமும் சிறப்பாக இருக்கிறது. அவசர சமயத்திலும் இதன் பிரேக் சிஸ்டத்தின் செயல்பாடு மெச்சத்தக்க வகையில் இருப்பது சிறப்பு.

4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரின் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் இதர விபரங்களை அட்டவணையில் காணலாம்.

Engine 1.0-litre petrol
Power (bhp) 70
Torque (Nm) 92
Transmission 5MT
4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

விலை, போட்டியாளர்கள்

புதிய ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி காரின் பேஸ் வேரியண்ட் ரூ.4.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டாப் வேரியண்ட் ரூ.6.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டட்சன் கோ ப்ளஸ் மற்றும் மாருதி எர்டிகா ஆகிய இரண்டு கார்களுக்குமான போட்டியாளராக பார்க்க முடியும். ஆனால், விலை மற்றும் நடைமுறை பயன்பாட்டில் ஹேட்ச்பேக் கார் சந்தையை குறிவைத்து இந்த கார் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

போட்டியாளர்களுடன் ஒப்பீடு

இந்தியாவில் ரெனோ ட்ரைபர் காரின் முக்கிய போட்டியாளர்களுடனான விரிவான ஒப்பீட்டு பார்வையை கீழே உள்ள அட்டவணை மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

Specifications/Model Renault Triber Datsun GO+ Maruti Suzuki Ertiga
Engine 1.0-litre Petrol 1.2-litre Petrol 1.5-litre Petrol (BS-VI)
Power (bhp) 70 67 104
Torque (Nm) 92 104 138
Transmission 5MT 5MT 5MT/4AT
Starting Price* Rs 4.95 Lakh Rs 3.86 Lakh Rs 7.55 Lakh
4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிரைவ்ஸ்பார்க் கருத்து

இந்திய மார்க்கெட்டில் க்விட் கார் மூலமாக புதிய டிசைன் கொள்கைக்கு வித்திட்ட ரெனோ நிறுவனம் தற்போது ட்ரைபர் கார் மூலமாக மீண்டும் ஒரு புதிய சந்தையை உருவாக்க முனைந்துள்ளது. இடவசதி, விலை, எரிபொருள் சிக்கனம், வசதிகள் என அனைத்திலும் சிறப்பாக இருக்கிறது ரெனோ ட்ரைபர். எஞ்சின் செயல்திறன் போதுமானதாக இல்லை என்ற குறை இருக்கிறது.

இருப்பினும், கொடுக்கும் பணத்திற்கு மிக மதிப்புவாய்ந்த மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. ஹேட்ச்பேக் கார்களில் குழந்தைகளை வைத்துக் கொண்டு நெருக்கடியாக பயணிக்கும் வாய்ப்பை அதே பட்ஜெட்டில் வந்துள்ள இந்த கார் நிச்சயம் போக்கும். எர்டிகா உள்ளிட்ட எம்பிவி கார்களைவிட இதனை ஹேட்ச்பேக் கார்களுக்கு சிறந்த மாற்றாக கூறலாம்.

Most Read Articles

Tamil
மேலும்... #ரினால்ட் #renault
English summary
The Renault Triber looks and feels premium and is available with a host of options, both inside and out. However, the real question is how does the compact-MPV feel like to drive on the bustling Indian streets? We recently got a chance to get behind the wheel of the new compact-MPV and drive it in the scenic state of Goa.Let's find out.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more