புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எஸ்யூவி கார்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு இருப்பதன் காரணமாக, பல புதிய வரவுகள் இந்த மார்க்கெட்டில் குவிந்து வருகின்றன. அந்த வகையில், செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனமும், தனது முதல் 7 சீட்டர் எஸ்யூவி மாடலை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

கோடியாக் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புத்தம் புதிய எஸ்யூவி மாடல் அண்மையில் இந்தியாவிலும் தடம் பதித்தது. இந்த எஸ்யூவியை டிரைவ்ஸ்பார்க் டீம் அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்தது. அப்போது, இந்த எஸ்யூவியை ஓட்டிய அனுபவத்தின் அடிப்படையில் சாதக, பாதகங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த எஸ்யூவி 4,697மிமீ நீளம், 1,882மிமீ அகலம் மற்றும் 1,665மிமீ உயரம் கொண்டதாக இருக்கிறது. பாரம் ஏற்றாத நிலையில், இந்த எஸ்யூவி 188மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டதாக இருக்கிறது. எனவே, போட்டியாளர்களுக்கு சவால் தரும் அளவுகளுடன் கர்ஜிக்கிறது.

Recommended Video

Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன்புறத்தில் ஸ்கோடா நிறுவனத்தின் பாரம்பரிய பட்டாம்பூச்சி வடிவ க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. சுற்றிலும் க்ரோம் கம்பி மூலமாக க்ரில் அமைப்பு தனித்துவப்படுத்தப்பட்டு இருப்பது சிறப்பு. க்ரில் அமைப்பின் இருபுறத்திலும் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. எல்இடி பகல்நேர விளக்குகள் மிக நுட்பமாகவும், அழகாகவும் இருக்கிறது. பம்பரில் எல்இடி பனி விளக்குகள் இருக்கின்றன.

வலிமையான பானட் அமைப்பும், காரின் முகப்பு அகலத்துக்கு இணையான ஏர் டேம் ஆகியவை எஸ்யூவி காருக்கு உரிய கம்பீரத்தை பெற்றுத் தருகின்றன.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன்புறத்தில் ஹெட்லைட்டில் இருந்து டெயில் லைட்டுகளை இணைக்கும் விதமாக வலிமையான பாடி லைன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் சதுர வடிவ வீல் ஆர்ச்சுகள் கம்பீரத்தை கூட்டுகின்றன.

இந்த காரில் 18 அங்குல சக்கரங்களில் 235/55 ஆர்18 அளவுடைய டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்திய சாலை நிலைகளுக்கு 18 அங்குல சக்கரங்கள் சிறப்பானதாக இருக்கும்.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் பின்புறத்தில் சி வடிவ எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் பல கோணங்களில் இணைக்கப்பட்ட இழை போன்று முப்பரிமாண தோற்றத்தை தரும் ஒளிரும் அமைப்பு ஆகியவை தனித்துவமாக இருக்கிறது. பின்புறமும் மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புற கதவை திறப்பதற்கு விசேஷ வசதி இந்த காரில் உள்ளது. பின்புற பம்பருக்கு கீழே காலை அசைத்தால், பின்புற கதவு திறந்து கொள்ளும். மூன்று வரிசை இருக்கை அமைப்புடைய, இந்த காரில் 270 லிட்டர் பூட்ரூம் இடவசதி இருக்கிறது.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அதேநேரத்தில், மூன்றாவது வரிசை இருக்கையை மடக்கினால், பூட் ரூம் கொள்திறனை 630 லிட்டர் வரையிலும், இரண்டாவது, மூன்றாவது வரிசை இருக்கைகளை மடக்கினால், அதிகபட்சமாக 2,005 லிட்டர் கொள்திறன் கொண்ட இடவசதியையும் பெற முடியும்.

இன்டீரியர்

இன்டீரியர்

கருப்பு மற்றும் அடர் சாம்பல் வண்ண இன்டீரியர் மிகவும் பிரிமியமாக இருக்கிறது. உட்புறத்தில் சிறப்பான இடவசதியை உணர முடிகிறது. டேஷ்போர்டு, சென்டர் கன்சோல், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவற்றின் டிசைன் மிகவும் சிறப்பாக இருக்கிறது.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன்புறத்தில் உள்ள இரண்டு இருக்கைகளின் உயரத்தை மாற்றுவதற்கான எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதி உள்ளது. லம்பார் சப்போர்ட் இருப்பதால், ஓட்டுனரின் உயரம் ஒரு பிரச்னையாக இல்லாமல், இருக்கையை அட்ஜெஸ்ட் செய்து கொண்டு சாலையை தெளிவாக பார்த்து ஓட்ட உதவிபுரிகிறது. மேலும், நீண்ட தூரம் ஓட்டும்போது முதுகு வலி ஏற்படுவதும் குறையும்.

முன்புற அமைப்பு சிறப்பாக இருப்பதால், ஓட்டுனருக்கு சாலையை தெளிவாக பார்த்து ஓட்ட சிறப்பாக இருக்கிறது. ஆனால், வலிமையான சி பில்லர் காரணமாக பின்புறத்தை பார்த்து ஓட்டும்போது சற்று சிரமம் இருக்கிறது. மூன்றாவது இருக்கையிலும் பயணிகள் அமரும்போது இன்னும் சிரமமாக இருக்கிறது. பக்கவாட்டில் உள்ள ரியர் வியூ மிரர்களை வைத்தே சமாளிக்க வேண்டும்.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இரண்டாவது இருக்கையில் மூன்று பேர் அமர்ந்து செல்லலாம். கால் வைப்பதற்கு போதிய இடவசதி இருப்பதுடன், தலையும் இடிக்காத வண்ணம் கூரை அமைப்பு இருக்கிறது. டிரான்ஸ்மிஷன் அமைப்பு தாழ்வாக அமைக்கப்பட்டு இருப்பதால், நடுவில் அமருபவருக்கு பிரச்னை இல்லை. இருக்கைகளும் சாய்வதற்கு சிறப்பாக இருக்கிறது.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மூன்றாவது வரிசை இருக்கையில் ஏறி, அமர்வதற்குள் ஜிம்னாஸ்டிக் செய்வது போன்ற உணர்வை தருகிறது. மூன்றாவது வரிசை இருக்கை பெரியவர்கள் அமர்வது கடினம். சிறியவர்களுக்கு மட்டுமே ஏற்றதாக இருக்கும். இரண்டாவது வரிசை இருக்கையை 18 செமீ வரை முன்னால் தள்ளிக்கொண்டால் கால் வைப்பதற்கு ஓரளவு இடவசதி கிடைக்கிறது.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனை இணைப்பதற்கான மிரர்லிங்க் வசதி, சேட்டிலைட் நேவிகேஷன், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உள்ளிட்ட சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் வசதியும் உண்டு.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் 12 ஸ்பீக்கர்கள் கொண்ட 750W கான்டன் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. மிக தரமான ஒலியை வழங்குகிறது. மேலும், பின்புற இருக்கைகளில் உள்ள பயணிகளுடன் ஓட்டுனர் பேசுவதற்கான மைக் செட் வசதியும் இந்த ஆடியோ சிஸ்டத்தில் உள்ளது.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில், பெரிய அளவுடைய பானோரமிக் சன்ரூஃப் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் போதிய அளவு ஸ்டோரேஜ் வசதிகளும் உள்ளன. இரண்டு க்ளவ் பாக்ஸ்கள் உண்டு. அதில் ஒன்று, குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்களை வைப்பதற்கான குளிர்ச்சியூட்டும் வசதி கொண்டது.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் 10 விதமான வண்ணங்களில் ஒளிரும் ஆம்பியன்ட் லைட் செட்டிங் உள்ளது. மூன்று 12V சார்ஜிங் பாயிண்ட்டுகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் போர்ட் இணைப்புகளும் உள்ளன.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கதவுகளில் பிளாஸ்டிக் பம்பர்கள் கொடுக்கப்பட்டிருப்பதால், கதவுகள் மூடும்போது பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை தவிர்க்கும். முன்புற கதவில் குடைகள் வைப்பதற்கு இடவசதி உள்ளது. கதவுகளில் குப்பைகளை வைப்பதற்கான வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது. ஹெட்ரெஸ்ட்டுகளின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் தாங்கிகள் மூலமாக தூங்கும்போது தலை அந்த பக்கம் இந்த பக்கம் உருளுவதை தவிர்க்கும்.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் த்ரீ ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், பார்க்கிங் கேமராக்கள் மற்றும் சென்சார்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோமேட்டிக் பார்க்கிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் மற்றும் ஆட்டோமேட்டிக் வைப்பர்களும் உள்ளன.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் 9 ஏர்பேக்குகள், ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எலக்ட்ரானிக் டிபரன்ஷியல் லாக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கனட்ரோல், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், மல்டி கொலிஷன் பிரேக்கிங் சிஸ்டம் என எண்ணற்ற பாதுகாப்பு வசதிகளுடன் வந்துள்ளது. ஓட்டுனர் அயர்வதை கண்டறிந்து எச்சரிக்கும் வசதி, ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட் வசதியும் உண்டு.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 340 என்எம் டார்க் திறனையும் வழங்்கும். 7 ஸ்பீடு டிஜிஎஸ் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 16.25 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் ஈக்கோ, நார்மல், ஸ்போர்ட், இன்டிவிஜூவல் மற்றும் ஸ்நோ என பல்வேறு விதங்களில் காரின் இயக்க நிலைகளை மாற்றும் வசதி உள்ளது. இதன்மூலமாக, எஞ்சின், கியர்பாக்ஸ், க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் எஞ்சின் செயல்திறன் ஆரம்ப மற்றும் நடுத்தர நிலைகளில் மிக சீராகவும், அதிவிரைவாகவும் இருக்கிறது. அதேநேரத்தில், ஓவர்டேக் செய்யும்போது கியரை குறைத்தாக வேண்டியிருப்பது சற்று ஏமாற்றம். இதன் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மிக சிறப்பாகவும், கியர் மாற்றம் நடப்பதை உணர முடியாத வகையிலும் மிகச் சிறப்பாக உள்ளது.

ஸ்போர்ட் மோடில் வைத்து ஓட்டும்போது காரின் செயல்திறன் மிக உட்பட்ச நிலையை காட்டுகிறது. போக்குவரத்து நெரிசல்களில் ஓட்டும்போது நார்மல் மோடில் வைத்து இயக்கும்போது சிறப்பாக இருக்கிறது.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் போர்க் வார்னர் ஆன் டிமான்ட் 4 வீல் டிரைவ் சிஸ்டம் இருக்கிறது. வழக்கமாக எஞ்சின் பவர் முன்புற சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. தேவைப்படும்பட்சத்தில், பின்புற சக்கரங்களுக்கு எஞ்சின் பவர் பிரித்தனுப்பப்படும்.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி மோனோகாக் சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. எனவே, வளைவுகளில் திரும்பும்போது மிகச் சிறப்பான நிலைத்தன்மையையும், கையாளுமையையும் வழங்குகிறது. பாடி ரோல் மிக குறைவாக இருக்கிறது. இதன் சஸ்பென்ஷன்அமைப்பும் மிக சொகுசான சவாரியை வழங்குகிறது.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி பார்ப்பதற்கு 7 சீட்டர் எஸ்யூவி மாடலாக பிரம்மாண்டமாக இருந்தாலும், ஓட்டும்போது அதிக க்ரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட செடான் காரை ஓட்டுவது போன்ற உணர்வை தருகிறது. அதேநேரத்தில், எஸ்யூவி கார்களுக்குரிய பார்வை திறனை வழங்கும் ஓட்டுனர் இருக்கை, சொகுசு வசதிகள், கம்பீரம் ஆகியவை இதற்கு எஸ்யூவி அந்தஸ்தை பெற்றுத் தருகிறது.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பிரம்மாண்டமான 7 சீட்டர் எஸ்யூவிகளில் மிகவும் தனித்துவமான டிசைன், சொகுசு வசதிகள் போன்றவை இந்த காருக்கு தனி வாடிக்கையாளர்கள் வட்டத்தை ஏற்படுத்தி கொடுக்கும். ஆனால், விலை, ஒரே ஒரு வேரியண்ட்டில் வந்திருப்பது போன்றவை வாடிக்கையாளர் தேர்வுக்கு இடைஞ்சலாக இருக்கும் காரணங்கள்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda #review
English summary
First Drive: Skoda Kodiaq Review - The Big Bear You’ll Want To Invite Home
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X