செல்டோஸ், கிரெட்டாவிற்கு சவால்... கோதாவில் இறங்க தயாராகும் ஸ்கோடா குஷாக்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்தியர்கள் எஸ்யூவி கார்களை அதிகம் விரும்புகின்றனர். இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் எஸ்யூவி காரை சொந்தமாக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உள்ளது. கார் நிறுவனங்கள் இதனை நன்றாக புரிந்து வைத்துள்ளன. எனவே எஸ்யூவி செக்மெண்ட்டில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போதைய நிலையில் கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட எஸ்யூவிகள் மிகவும் பிரபலமாக உள்ளன.

கியா, ஹூண்டாய் நிறுவனங்களை போல், ஸ்கோடா நிறுவனமும் இந்திய சந்தையை நன்றாக புரிந்து வைத்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற தயாரிப்புகளை ஸ்கோடா தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் குஷாக் எஸ்யூவியை வரும் ஜூன் 28ம் தேதி ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த எஸ்யூவியை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இந்த காரை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

செல்டோஸ், கிரெட்டாவிற்கு சவால்... கோதாவில் இறங்க தயாராகும் ஸ்கோடா குஷாக்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

டிசைன்

டிசைனை பொறுத்தவரை, ஸ்கோடா நிறுவனத்தின் ஜீன் குஷாக் எஸ்யூவியிலும் தெரிகிறது. இந்த காரின் முன்பகுதியில் ஸ்கோடா நிறுவனத்திற்கே உரித்தான பட்டர்பிளை க்ரில் அமைப்பு கம்பீரமாக வீற்றுள்ளது. இதன் பக்கவாட்டில் இருபுறமும் எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப்பிற்கு கீழே பம்பரில் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. முன் பக்க பம்பர் இந்த எஸ்யூவிக்கு கம்பீரமான நிலைப்பாட்டை தருகிறது.

செல்டோஸ், கிரெட்டாவிற்கு சவால்... கோதாவில் இறங்க தயாராகும் ஸ்கோடா குஷாக்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரை, 17 இன்ச் ட்யூயல் டோன் அலாய் வீல்கள் ஒருவரின் கவனத்தை உடனடியாக ஈர்த்து விடும். டோர் ஹேண்டில்களும் கூட இரட்டை வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டிருப்பது காருக்கு கூடுதல் கவர்ச்சியை சேர்க்கிறது. மேலும் இந்த காரில் இன்டிகேட்டருடன் கூடிய ட்யூயல் டோன் ஓஆர்விஎம் வழங்கப்பட்டுள்ளது.

செல்டோஸ், கிரெட்டாவிற்கு சவால்... கோதாவில் இறங்க தயாராகும் ஸ்கோடா குஷாக்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

பின் பகுதியை பொறுத்தவரை ஸ்பிளிட் டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இரண்டு பக்கங்களிலும் வழங்கப்பட்டுள்ள ரெஃப்லெக்டர்களை க்ரோம் பட்டை ஒன்று இணைக்கிறது. ஸ்கோடா நிறுவனத்தின் இந்தியா 2.0 யுக்தியின் கீழ் வெளிவரவுள்ள முதல் தயாரிப்பு குஷாக். அதற்கேற்ப இந்த காரின் டிசைன் கவர்ச்சிகரமாக உள்ளது. எதிர்காலத்தில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கோடா கார்களிலும் இந்த டிசைன் மொழியை எதிர்பார்க்கலாம்.

செல்டோஸ், கிரெட்டாவிற்கு சவால்... கோதாவில் இறங்க தயாராகும் ஸ்கோடா குஷாக்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்டீரியர்

இனி காரின் உள்ளே செல்வோம். இங்கே ட்யூயல் டோன் இன்டீரியர் வழங்கப்பட்டுள்ளது. பிளாக் மற்றும் க்ரே ஆகிய இரண்டு வண்ணங்கள் இன்டீரியரில் வழங்கப்பட்டுள்ளன. டேஷ்போர்டின் மைய பகுதியில் 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா பிளே ஆப், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் உடன் இணைத்து கொள்ள முடியும். மேலும் வயர்லெஸ் ஸ்மார்ட்லிங்க் கனெக்டிவிட்டி வசதியும் உள்ளது. இந்த டச்ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை பயன்படுத்துவது நன்றாக உள்ளது. அத்துடன் கார் ஓட்டி கொண்டிருக்கும்போது, ஸ்டியரிங் வீலில் உள்ள பட்டன்கள் மூலமும் இதனை கட்டுப்படுத்தலாம். அதே நேரத்தில் 6 ஸ்கோடா சவுண்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் சப்வூஃபரின் ஒலி தரமும் நன்றாக உள்ளது. இந்த காரில் அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. ரேஞ்ச், வெளிப்புற வெப்பநிலை ஆகியவை உள்பட பல்வேறு தகவல்களை இது வழங்குகிறது.

செல்டோஸ், கிரெட்டாவிற்கு சவால்... கோதாவில் இறங்க தயாராகும் ஸ்கோடா குஷாக்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு கீழாக சென்டர் ஏசி வெண்ட்களும், அதற்கு கீழாக க்ளைமேட் கண்ட்ரோலுக்கான கண்ட்ரோல்களும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் வசதியையும் ஸ்கோடா குஷாக் பெற்றுள்ளது. மேலும் ரியர் ஏசி வெண்ட்களையும், அதற்கு கீழ் செல்போன்களை சார்ஜ் செய்வதற்கு வசதியாக 2 யூஎஸ்பி போர்ட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் கப் ஹோல்டர்கள் உடன் மடிக்க கூடிய ஆர்ம்ரெஸ்ட்டும் வழங்கப்பட்டுள்ளது.

செல்டோஸ், கிரெட்டாவிற்கு சவால்... கோதாவில் இறங்க தயாராகும் ஸ்கோடா குஷாக்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

சௌகரியம், நடைமுறை பயன்பாடு & பூட் ஸ்பேஸ்

ஸ்கோடா கார்களில் எப்போதும் இருக்கைகள் சௌகரியமாக இருக்கும். இந்த விஷயத்தில் குஷாக்கிலும் எந்த வித்தியாசமும் இல்லை. முன் பக்க இருக்கைளில் இடுப்பு மற்றும் தொடைக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. பெரிய வளைவுகளில் திரும்பும்போதும் கூட, டிரைவர் மற்றும் முன் பக்க பாசஞ்சரை இருக்கைகள் கெட்டியாக பிடித்து கொள்கின்றன. முன் பக்க இருக்கைகளில் வென்டிலேட்டட் மற்றும் கூல்டு வசதிகள் உள்ளன.

செல்டோஸ், கிரெட்டாவிற்கு சவால்... கோதாவில் இறங்க தயாராகும் ஸ்கோடா குஷாக்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே நேரத்தில் பின் வரிசை இருக்கைகளும் சௌகரியமாக உள்ளன. இங்கே போதுமான அளவிற்கு ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் உள்ளது. அத்துடன் இந்த காரில் எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இது கேபினை காற்றோட்டமாக வைத்திருப்பதுடன், விசாலமான உணர்வையும் தருகிறது.

Dimensions Skoda Kushaq
Length 4,225mm
Width 1,760mm
Height 1,612mm
Wheelbase 2,651mm
Boot Space 385-litres
Ground Clearance 188mm
செல்டோஸ், கிரெட்டாவிற்கு சவால்... கோதாவில் இறங்க தயாராகும் ஸ்கோடா குஷாக்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்ஜின் செயல்திறன் & ஓட்டுதல் அனுபவம்

இந்திய சந்தையில் இரண்டு இன்ஜின் தேர்வுகள் உடன் ஸ்கோடா குஷாக் கிடைக்கும். அவை இரண்டுமே டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆகும். விலை குறைந்த மாடல்களில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினும், விலை உயர்ந்த வேரியண்ட்களில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினும் வழங்கப்பட்டுள்ளது.

இதில், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 147.5 பிஎச்பி பவரையும், 3,500 ஆர்பிஎம்மில் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

மறுபக்கம் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 5,500 ஆர்பிஎம்மில் 114 பிஎச்பி பவரையும், 1,750 ஆர்பிஎம்மில் 175 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த வேரியண்ட்டைதான் நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

செல்டோஸ், கிரெட்டாவிற்கு சவால்... கோதாவில் இறங்க தயாராகும் ஸ்கோடா குஷாக்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இது சிறிய இன்ஜின் என்பதால் செயல்திறனில் எங்களுக்கு ஆரம்பத்தில் சந்தேகம் இருந்தது. ஆனால் நாங்கள் நினைத்தது தவறாகி விட்டது. ஆரம்பத்தில் பவர் டெலிவரி ஸ்மூத்-ஆக உள்ளது. ஆனால் 2,200 ஆர்பிஎம்மிற்கு பிறகு பவர் டெலிவரியில் எழுச்சி ஏற்படுகிறது.

இந்த காரின் 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் ஆக்டேவியாவில் இருந்து பெறப்பட்டதாகும். ஸ்டியரிங் வீலின் ரெஸ்பான்ஸ் மிகவும் சிறப்பாக உள்ளது. குறைவான வேகத்தில் ஸ்டியரிங் வீல் இலகுவாக உள்ளது. ஆனால் வேகமாக செல்லும்போது ஸ்டியரிங் சிஸ்டம் போதுமான அளவிற்கு இறுக்கம் பெறுகிறது.

அதேபோல் இந்த காரின் கையாளுமையும் சிறப்பாக உள்ளது. இந்த எஸ்யூவி கார்னர்களை எளிதாக எதிர்கொண்டாலும், பாடி ரோலை உணர முடிகிறது. எனினும் பிரேக்குகள் சிறப்பாக செயலாற்றுகின்றன. எந்த வேகத்தில் சென்றாலும் காரை உடனடியாக நிறுத்த முடிகிறது. இந்த காரின் முன் பகுதியில் டிஸ்க் பிரேக்குகளும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங் நன்றாக இருக்கிறது என்றாலும், பின் பகுதியிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டிருக்கலாம்.

எரிபொருள் சிக்கனத்தை பொறுத்தவரை நகர பகுதிகளில் எங்களுக்கு ஒரு லிட்டருக்கு 8.5 கிலோ மீட்டர் முதல் 11.6 கிலோ மீட்டர் வரையிலான மைலேஜ் கிடைத்தது. ஆனால் நெடுஞ்சாலையில் எங்களால் மைலேஜை சோதிக்க முடியவில்லை. என்றாலும் ஒரு லிட்டருக்கு 14 கிலோ மீட்டர் முதல் 16 கிலோ மீட்டர் வரையிலான மைலேஜ் கிடைக்கும் என நினைக்கிறோம்.

செல்டோஸ், கிரெட்டாவிற்கு சவால்... கோதாவில் இறங்க தயாராகும் ஸ்கோடா குஷாக்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

பாதுகாப்பு வசதிகள்

இந்த செக்மெண்ட்டில் மிகவும் பாதுகாப்பான கார்களில் ஸ்கோடா குஷாக்கும் ஒன்றாகும். மற்ற ஸ்கோடா கார்களை போலவே, குஷாக்கிலும் பாதுகாப்பு வசதிகள் நிரம்பியுள்ளன.

ஸ்கோடா குஷாக் பாதுகாப்பு வசதிகள்

  • ஏபிஎஸ் மற்றும் இபிடி
  • எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்
  • 6 ஏர்பேக்குகள்
  • ரியர் பார்க்கிங் கேமரா
  • வேரியண்ட்கள், வண்ண தேர்வுகள் மற்றும் விலை

    இந்திய சந்தையில் ஸ்கோடா குஷாக் மூன்று ட்ரிம்களில் விற்பனை செய்யப்படும்.

    ஸ்கோடா குஷாக் வேரியண்ட்கள்

    • ஆக்டிவ்
    • ஆம்பிஷன்
    • ஸ்டைல்
    • ஸ்கோடா குஷாக் வண்ண தேர்வுகள்

      • டொராண்டோ ரெட் மெட்டாலிக்
      • கேண்டி ஒயிட்
      • கார்பன் ஸ்டீல் மெட்டாலிக்
      • ஹனி ஆரஞ்ச் மெட்டாலிக்
      • நாங்கள் ஓட்டியது கேண்டி ஒயிட் மாடல் ஆகும். எனினும் டொராண்டோ ரெட் மெட்டாலிக் மற்றும் ஹனி ஆரஞ்ச் மெட்டாலிக் ஆகிய வண்ண தேர்வுகள் இன்னும் கவர்ச்சியாக இருக்கும் என நாங்கள் நினைக்கிறோம்.

        ஸ்கோடா குஷாக் விலை

        ஸ்கோடா குஷாக் காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் ஜூன் 28ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது விலை அறிவிக்கப்படும். எனினும் 10 லட்ச ரூபாய் முதல் 14 லட்ச ரூபாய் வரையிலான விலையில் ஸ்கோடா குஷாக் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

        போட்டியாளர்கள்

        நாங்கள் மேலே குறிப்பிட்டபடி மிகவும் சவால் நிறைந்த செக்மெண்ட்டில் ஸ்கோடா குஷாக் நுழைகிறது. ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகியவைதான், ஸ்கோடா குஷாக்கின் முக்கியமான போட்டியாளர்கள் ஆகும்.

        Specifications SKoda Kushaq Hyundai Creta Kia Seltos
        Engine 1.0-litre Turbo Petrol / 1.5-litre Turbo Petrol 1.5-litre Petrol / 1.5-litre Turbo-Diesel / 1.4-litre Turbo-Petrol 1.5-litre Petrol / 1.5-litre Turbo-Diesel / 1.4-litre Turbo Petrol
        Power 114bhp / 147.5bhp 113.4bhp / 113.4bhp / 140bhp 113.4bhp / 113.4bhp / 140bhp
        Torque 175Nm / 250Nm 144Nm / 250Nm / 242.2Nm 144Nm / 250Nm / 242.2Nm
        Transmission 6-Speed Manual / 6-Speed Automatic / 7-Speed DSG 6-Speed Manual / iVT / 6-Speed Automatic / 7-Speed DCT 6-Speed Manual / CVT / 6-Speed iMT / 6-Speed Automatic / 7-Speed DCT
        Prices To Be Announced Rs 9.99 lakh to Rs 17.70 lakh Rs 9.95 lakh to Rs 17.65 lakh
        செல்டோஸ், கிரெட்டாவிற்கு சவால்... கோதாவில் இறங்க தயாராகும் ஸ்கோடா குஷாக்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

        டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

        ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்களில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆனால் ஸ்கோடா குஷாக்கின் கட்டுமான தரம் சிறப்பாக இருப்பதுடன், இது இன்னும் பிரீமியமாகவும் இருக்கும். மேலும் இந்த கார் ஓட்டுவதற்கும் நன்றாக உள்ளது. பயணமும் சௌகரியமாக இருக்கிறது. எனவே போட்டியாளர்களை விட மிக சிறந்த தேர்வாகவே ஸ்கோடா குஷாக் உள்ளது. விலை நிர்ணயம் மட்டும் சரியாக இருந்தால், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப்-10 கார்களின் பட்டியலில் ஸ்கோடா குஷாக் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Kushaq First Drive Review: Design, Engine, Performance, Price And More. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X