2017 ஸ்கோடா ஆக்டேவியா காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Written By:

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ கார் நிறுவனத்தின் மிகவுமம் பிரபலமான மாடல் ஸ்கோடா ஆக்டேவியா. இதுவரை 6 மில்லியன் கார்கள் உலக அளவில் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. 2001ம் ஆண்டு அறிமுகமான ஸ்கோடா ஆக்டேவியா கார் சந்தைப் போட்டிக்கும், வாடிக்கையாளர் எதிர்பார்ப்புக்கும் தக்கபடி, வடிவமைப்பிலும், வசதிகளிலும் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

2001ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் தலைமுறை மாடல் 9 ஆண்டுகளுக்கு பின்னர் மேம்படுத்தப்பட்டு 2010ம் ஆண்டில் புதிய தலைமுறை மாடலாக வெளியிடப்பட்டது. அடுத்து, தற்போது விற்பனையில் இருக்கும் மூன்றாம் தலைமுறை மாடல் 2013ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

 2017 ஸ்கோடா ஆக்டேவியா காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த நிலையில், போட்டியாளர்களின் நெருக்கடி, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக, மூன்றாம் தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் கூடுதல் அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது. இந்த காரை அண்மையில் டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. அதில், இந்த புதிய காரில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள், கூடுதல் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

டிசைன்

டிசைன்

2017 ஆண்டு மாடலாக வெளியிடப்பட்டிருக்கும் புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் முகப்பு டிசைனில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. பளபளப்பு மிக்க கருப்பு வண்ண க்ரில் அமைப்பு, புதிய பானட் அமைப்பு, பிளவுபட்ட வடிவமைப்பிலான ஹெட்லைட்டுகள் முக்கிய மாற்றங்கள்.

Recommended Video - Watch Now!
2017 Maruti Suzuki Baleno Alpha Automatic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
 2017 ஸ்கோடா ஆக்டேவியா காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

க்வாட் அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஹெட்லைட்டில் க்ரில் அமைப்புடன் நெருங்கி காணப்படுவது ஹை பீம் ஹெட்லைட், பக்கவாட்டில் இருப்பது லோ பீம் ஹெட்லைட் என தனித்தனியாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய பம்பர் அமைப்பும், எல்இடி பனி விளக்குகளும் குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றன. வளைவுகளில் திரும்பும்போது பனி விளக்குகள் கார்னரிங் விளக்குகளாகவும் செயல்படுவது சிறப்பு.

 2017 ஸ்கோடா ஆக்டேவியா காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டு டிசைனில் அதிக மாற்றங்கள் இல்லை. பக்கவாட்டில் இருக்கும் கேரக்டர் பாடி லைன் ஹெட்லைட்டுகளும், டெயில் லைட்டுகளையும் இணைக்கும் விதமாக காட்சி தருகிறது. 16 இன்ச் அலாய் வீல்களும், 205/55 ஆர்16 குட்இயர் டயர்களும் காரின் வசீகரத்தை உயர்த்துகின்றன.

 2017 ஸ்கோடா ஆக்டேவியா காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புறத்தில் புதிய சி வடிவிலான எல்இடி டெயில் லைட்டுகள் வசீகரிக்கின்றன. பம்பர் டிசைனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும், பின்புற அகலமும் கூடியிருக்கிறது.

பூட் ரூம்

பூட் ரூம்

ஸ்கோடா ஆக்டேவியா காரின் 590 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்டமான பொருட்கள் வைப்பதற்கான இடவசதி இருக்கிறது. பொருட்களை எளிதாக வைத்து எடுக்க வசதியாக இதன் பூட் ரூம் மூடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. பின்புற இருக்கையை 60க்கு 40 என்ற விகிதத்தில் மடக்கி வைக்க முடியும். அவ்வாறு மடக்கும்போது 1,580 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை பெற முடியும்.

 இன்டீரியர்

இன்டீரியர்

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் பீஜ் மற்றும் கருப்பு வண்ணத்திலான இரட்டை வண்ணக் கலவை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மிகச் சிறப்பான, சொகுசான லெதர் இருக்கைகளும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். இருக்கைகளில் இரட்டை தையல்களும் சிறப்பாக இருக்கிறது. விருப்பத்தின்பேரில் உடனடியாக மாற்றிக் கொள்வதற்கான மெமரியுடன் கூடிய ஓட்டுனர் இருக்கை உள்ளது.

 2017 ஸ்கோடா ஆக்டேவியா காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புற இருக்கைகள் மிக தாராளமான இடவசதியை கொண்டுள்ளன. போதுமான அளவு ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் இடவசதி இருக்கிறது. பின் இருக்கை பயணிகளுக்கு வசதியாக இரண்டு யுஎஸ்பி சார்ஜர்கள் மற்றும் ரியர் ஏசி வென்ட்டும் உள்ளது.

 2017 ஸ்கோடா ஆக்டேவியா காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் 10 வண்ணங்களில் மாறும் சிறப்பு கொண்ட ஆம்பியன் லைட்டுகளும், அதற்கு ஏதுவாக அலுமினிய தகடுகளும் பதிக்கப்பட்டுள்ளன.

 2017 ஸ்கோடா ஆக்டேவியா காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் 8 இன்ச் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சென்டர் கன்சோலில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனை இணைப்பதற்கான வசதி, சேட்டிலைட் நேவிகேஷனுடன் இந்த தொடுதிரை சாதனம் இயக்குவதற்கு மிகச் சிறப்பாக இருக்கிறது.

 2017 ஸ்கோடா ஆக்டேவியா காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கட்டுப்படுத்துவதற்கான வசதியும் உண்டு.

 2017 ஸ்கோடா ஆக்டேவியா காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மழை வருவதை சென்சார் மூலமாக கண்டு கொண்டு தானாக மூடிக் கொள்ளும் சன்ரூஃப், டியூவல் ஸோன் ஏர் கண்டிஷன் சிஸ்டம், புதிய ஸ்டீயரிங் வீல், குளிர்ச்சியை வழங்கும் க்ளவ் பாக்ஸ், படில் விளக்குகள், கீ லெஸ் என்ட்ரி உள்ளிட்டவையும் இருக்கின்றன.

 2017 ஸ்கோடா ஆக்டேவியா காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஓட்டுனர் துணையில்லாமல் தானியங்கி முறையில் கார் பார்க்கிங் செய்து கொள்ளும் புதிய வசதி ஸ்கோடா ஆக்டேவியா காரில் இடம்பெற்றிருக்கிறது. கியர் லிவருக்கு முன்னால் இருக்கும் சுவிட்ச் மூலமாக, தானியங்கி பார்க்கிங் வசதியை தேர்வு செய்யலாம். இந்த காரின் மிக மிக முக்கியமான வசதியாக இதனை கூறலாம்.

 2017 ஸ்கோடா ஆக்டேவியா காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஸ்கோடா ஆக்டேவியா கார் இரண்டு பெட்ரோல் எஞ்சின்கள் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த காரின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 21 கிமீ மைலேஜையும், டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 19.5 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2017 ஸ்கோடா ஆக்டேவியா காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரின் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் லிட்டருக்கு 16.7 கிமீ மைலேஜ் கொடுக்கும்.

 2017 ஸ்கோடா ஆக்டேவியா காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரின் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் லிட்டருக்கு 15.1 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 1.8 லிட்டர் பெட்ரோல் மாடலையே நாம் டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

 2017 ஸ்கோடா ஆக்டேவியா காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த பெட்ரோல் எஞ்சின் 1,250 ஆர்பிஎம் என்ற அளவிலேயே அதிகபட்ச டார்க் திறனை வெளிப்படுத்த துவங்குகிறது. நடுத்தர வேகத்தில் இந்த எஞ்சின் மிகச் சிறப்பான பவர் டெலிவிரியை வழங்குகிறது. 5,000 ஆர்பிஎம் வரை டார்க் திறனை பெற முடிகிறது. டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதி மூலமாக கியர்களை மேனுவலாக மாற்றம் செய்யும் வசதி இருக்கிறது.

 2017 ஸ்கோடா ஆக்டேவியா காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஸ்கோடா ஆக்டேவியா காரின் 1.8 லிட்டர் பெட்ரோல் மாடலின் ரியர் ஆக்சில் 30 மிமீ அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. நடுத்தர வேகம் வரை அதிக நிலைத்தன்மையை உணர முடிகிறது. அதேநேரத்தில், இந்த காரில் மென்மையான சஸ்பென்ஷன் அமைப்பு சொகுசான பயணத்தை வழங்கினாலும், அதிவேகத்தில் சற்று அலை நிலையில் செல்வது போன்ற உணர்வை தருகிறது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் 8 ஏர்பேக்குகள், பிரேக் பவரை சரியான விகிதத்தில் பிரித்தனுப்பும் இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அதிக நிலைத்தன்மையுடன் கார் செல்ல உதவி செய்யும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எஞ்சின் பவரை தேவைக்கு ஏற்ப வழங்கும் எலக்ட்ரானிக் டிஃபரென்ஷியல் லாக், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஓட்டுனர் அயர்ந்து போவதை கண்டறிந்து எச்சரிக்கும் வசதி போன்றவை மிகச் சிறந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட காராக கூற முடிகிறது.

 2017 ஸ்கோடா ஆக்டேவியா காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஒருவேளை, பொருட்கள் அல்லது வாகனங்களுடன் மோதும் நிலை ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து தவிர்ப்பதற்கான, மல்டி கொலிஷன் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது. மேலும், மோதல் நிகழ்ந்தால், எஞ்சினுக்கு எரிபொருள் செல்வதை நிறுத்தும் வசதியும் உள்ளது.

 2017 ஸ்கோடா ஆக்டேவியா காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் ரூ.15.49 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து ரூ.22.89 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. போட்டியாளர்களான டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் கார் ரூ.14,88 லட்சம் முதல் ரூ.18.67 லட்சம் வரையிலான விலையிலும், ஹூண்டாய் எலான்ட்ரா கார் ரூ.12.48 லட்சம் விலையில் இருந்து ரூ.18.46 லட்சம் விலையிலும் கிடைக்கின்றன. இந்த செக்மென்ட்டில் மிகவும் பிரிமியமான அம்சங்கள் பொருந்திய மாடல் ஸ்கோடா ஆக்டேவியா காராக இருக்கிறது.

தீர்ப்பு

தீர்ப்பு

ஸ்கோடா கார்களுக்கு உரிய வலுவான கட்டுமானத்தை இந்த காரிலும் உணர முடிகிறது. வழக்கமான ஸ்கோடா கார்களிலிருந்து சற்று வேறுபட்ட ஹெட்லைட் உள்ளிட்ட அம்சங்களை பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், ஆட்டோமேட்டிக் பார்க்கிங் வசதி, அதிக பாதுகாப்பு வசதிகள் போட்டியாளர்களிடமிருந்து இந்த காரின் மதிப்பை உயர்த்துகின்றன.

எடிட்டர் கருத்து

எடிட்டர் கருத்து

புதுப்பொலிவு பெற்றிருக்கும் ஸ்கோடா ஆக்டேவியா காரின் புதிய முகமும், நவீன பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளும் கவனத்தை ஈர்க்கின்றன. மென்மையான சஸ்பென்ஷன் அமைப்பு மூலமாக மிக சொகுசான பயணத்தை பெற முடிகிறது. நேர் போட்டியாளர்கள் மட்டுமின்றி, எஸ்யூவி கார்களால் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் எக்ஸிக்யூட்டிவ் செடான் ரகத்தில் வந்திருக்கும் ஸ்கோடா ஆக்டேவியா கார் நிச்சயம் வாடிக்கையாளர்களின் கவன்ததை பெறும் என்று நம்பலாம்.

தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம்

  • 1895ம் ஆண்டு துவங்கப்பட்ட ஸ்கோடா நிறுவனம் முதலில் சைக்கிள் தயாரிப்பில்தான் ஈடுபட்டு வந்தது.
  • 1899ம் ஆண்டு மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் இறங்கியபோது, ஸ்கோடா நிறுவனர்களான வாக்லேவ் லாரென்ட் மற்றும் வாக்லேவ் க்ளமென்ட் ஆகியோர் நிறுவனத்தின் பெயரை லாரின் அண்ட் க்ளமென்ட் அண்ட் கோ என்று மாற்றினர்.
  • 1905ம் ஆண்டு பைஸன் ஸ்கோடோவ்கா கோ எனஅற நிறுவனத்துடன் இணைந்து லாரின் அண்ட் க்ளமென்ட் நிறுவனம் கார் தயாரிப்பில் ஈடுபட்டது. 1925ம் ஆண்டில் ஸ்கோடா என்று பெயரிடப்பட்டது.
  • 1959ம் ஆண்டு முதல் 1971ம் ஆண்டு வரை ஸ்கோடா ஆக்டேவியா பிராண்டில் முதல் கார் விற்பனையில் இருந்தது. ஸ்கோடா நிறுவனம் தயாரித்த 8வது கார் மாடல் ஸ்கோடா ஆக்டேவியா என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • கடந்த 1996ம் ஆண்டு ஸ்கோடா நிறுவனம் ஆக்டேவியா கார் பெயருக்கு மீண்டும் உயிர் கொடுத்தது.
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
The facelifted Octavia revealed in January in the Austrian capital of Vienna has now entered the country after a rather intensive session at the automotive plastic surgical table. So what all has changed on the Octavia and if it's worth the premium Skoda charges?
Story first published: Saturday, July 29, 2017, 16:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark