19ஆண்டுகளாக மக்கள் மனம் கவரும் ஸ்கோடா சூப்பர்ப்! இப்போது கண் கவர் புதிய ஸ்டைலில்! ரோடு டெஸ்ட் ரிவியூ

2001ம் ஆண்டில் இருந்து இந்தியர்களின் மனதைக் கவர்ந்து வரும் ஸ்கோடா சூப்பர்ப் தற்போது பதிய ஸ்டைல் மற்றும் அம்சங்களுடன் இந்தியாவில் புதுமுக அறிமுகத்தைக் கண்டிருக்கின்றது. இக்காரின் ஃபெர்பார்மென்ஸ் மற்றும் இயக்கம் பற்றிய சோதனை விமர்சனத்தை இந்த பதிவில் காணலாம்.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

சிசெக் நாட்டின் (Czech), மிலாட் போலெஸ்லாவா (Mladá Boleslava) பகுதியை மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்கோடா நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த சூப்பர்ப் (Superb) செடான் ரக காரை புதுமுக அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கார் 2001ம் ஆண்டில் இருந்து இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. இந்த நிலையிலேயே புதிய மனம் கவர் ஸ்டைல் மற்றும் அம்சங்களுடன் இக்கார்புது அறிமுகத்தை இந்தியாவில் தற்போது பெற்றிருக்கின்றது. பல ஆண்டுகளைக் கடந்து தற்போது புதிய தலைமுறையை இக்கார் பெற்றிருப்பதால், இந்தியர்கள் மத்தியில் கூடுதல் ஆவலைத் தூண்ட ஆரம்பித்துள்ளது.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

தற்போது வரை வாகன ஆர்வலர்கள் மத்தியில் ஸ்கோடா சூப்பர்ப் காரின் முதல் தலைமுறை மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு அக்காரின் லோவ்-ஸ்லங் கேங்ஸ்டர் தோற்றமே முக்கிய காரணமாக ஆகும். ஆனால், இந்த தோற்றத்திற்கு மிகுந்த டஃப் கொடுக்கின்ற வகையில் தற்போதைய மூன்றாம் தலைமுறை சூப்பர்ப் செடான் காட்சியளிக்கின்றது. இந்த கார் எல்&கே மற்றும் ஸ்போர்ட்லைன் ஆகிய ட்ரிம்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

இதில், நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு விமர்சனம் செய்வதற்காக ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டையே ஸ்கோடா நிர்வாகம் ஒப்படைத்தது. இதைத்தொடர்ந்து, ஓரிரு நாட்கள் நமது நிரூபர்கள் அக்கார்குறித்து பல்வேறு தகவல்களை அலசி ஆராய்ந்தனர். இதனடிப்படையில் சூப்பர்ப் செடான் கார் பற்றி கிடைத்த தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

டிசைன் மற்றும் ஸ்டைல்:

முதலில் இக்காரின் வெளிப்புற தோற்றத்தைப் பற்றி பார்த்துவிடலாம். ஏனெனில், காரின் மிகுந்த கவர்ச்சியான தோற்றத்திற்கு இதன் வெளிப்புறத்தில் செய்யப்பட்டுள்ள வேலைகளே முக்கிய காரணமாக இருக்கின்றது. எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட சூப்பர்ப் ஓர் நீல நிற காராகும். இதனை 'ரேஸ் ப்ளூ' என ஸ்கோடா குறிப்பிடுகின்றது. முழுமையாக நீல நிறத்தில் காட்சியளிக்கும் இக்காருக்கு, ஆங்காங்கே கருப்பு நிற அவுட்லைன்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

குறிப்பாக, காரின் முன் பக்க கிரில், இதற்கு கீழே இருக்கும் பம்பர் உள்ளிட்டவை கருப்பு நிறத்திலேயே காட்சியளிக்கின்றன. இதுமட்டுமின்றி, சில இடங்களில் குரோம் பூச்சுக் கொண்ட அணிகலன்கள் இக்காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதாவது, முகப்பு பகுதியில் இருக்கும் ஸ்கோடா 'லோகோ' மற்றும் பின் பக்கத்தில் ஒட்டப்பட்டிருக்கும் 'ஸ்போர்ட்லைன்' எனும் உள்ளிட்டவை குரோம் பூச்சில் காணப்படுகின்றது.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

இதுமட்டுமின்றி காருக்கு ஸ்போர்ட்டி தோற்றத்தைச் சேர்க்கும் விதமாக ஸ்லீக் வடிவத்திலான எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது ஸ்கோடா நிறுவனத்தின் கார்களுக்கே உரித்தான கிரிஸ்டல் வடிவத்தில் கண்களைக் கவரும் வகையில் காட்சியளிக்கின்றது.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

இதேபோன்று, பனி மின் விளக்கும்கூட எல்இடி தரத்திலேயேக் காணப்படுகின்றது. ஆனால், திருப்பத்தை குறியீடு செய்யும் இன்டிகேட்டர்களுக்கு ஹாலோஜன் தர மின் விளக்குகளே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும், இந்த அணிகலன்கள் அனைத்தும் ஒன்று ஸ்கோடா சூப்பர்ப் காருக்கு அட்டகாசமான தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது. குறிப்பாக, காரின் முகப்பு பகுதிக்கு மிகவும் ஷார்ப்பான தோற்றத்தை இவை வழங்குகின்றன.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

பக்கவாட்டு பகுதி; காரின் முகப்பு பகுதிக்கு எப்படி அதிக கவனம் கொடுக்கப்பட்டிருக்கின்றதோ அதேபோன்று பக்கவாட்டு பகுதிக்கும் கூடுதல் கவனத்தை வழங்கியிருக்கின்றது ஸ்கோடா. பின்னால் வரும் வாகனங்களைக் காண்பதற்கு உதவும் கண்ணாடிகளுக்கு கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, ஜன்னல் கண்ணாடிகளைச் சுற்றிலும் கருப்பு நிற அவுட்லைன்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

ஆனால், இதன் பல-ஸ்போக்குகள் கொண்ட வீலுக்கு சாம்பல் நிறப் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. இது 17 இன்ச் அளவைக் கொண்டது ஆகும். ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் இக்கார் காட்சியளிக்கும்போது 19 இன்ச் அளவுள்ள ஸ்போக்ஸ் வீல்களுடன் காட்சியளித்திருந்தது. இருப்பினும் 2 இன்ச் குறைந்த அளவுடைய தற்போதை வீல் சூப்பர்ப் காருக்கு அட்டகாசமான தோற்றத்தை வழங்க தவறவில்லை. தற்போது காருக்கு 164மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டிருக்கின்றது.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

காரின் பின் பகுதி; அதிகபட்ச கருப்பு நிற அணிகலன்கல் காரின் பின் பகுதியில்தான் இடம்பெற்றிருக்கின்றன. இதற்கு நிறுவனத்தின் 'ஸ்கோடா' எனும் பெயரே முக்கிய சான்றாக இருக்கின்றது. இதன் எழுத்துகள் அனைத்தும் சமூக இடைவெளிவிட்டு நிற்கும் மனிதர்களைப் போன்று தள்ளி நின்று கருப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன. இதேபோன்று சூப்பர் உள்ளிட்ட எனும் மாடலைக் குறிக்கும் எழுத்துக்களும்கூட கருப்பு வண்ணத்திலேயே இருக்கின்றன.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

அதேசமயம், சில குரோம் பூச்சுக் கொண்ட அக்ஸெண்டுகள் காரின் ஸ்டாப் லைட்டுகளுக்கு மத்தியில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது, இந்த மின் விளக்குகளைத் தனியாக ரசிக்க உதவும் வகையில் காட்சியளிக்கின்றது. இதுபோன்று பல்வேறு அம்சங்கள் காருக்கு கூடுதல் கவர்ச்சியான தோற்றம் சேர்க்கும் விதாக இக்காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

காரின் உட்பகுதி மற்றும் அம்சங்கள்:

ஸ்கோடா சூப்பர்ப் காரின் வெளிப்பகுதியில் எவ்வாறு கருப்பு நிறம் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கின்றனவோ, அதேபோன்று, உட்புறத்திலும் பல்வேறு கூறுகள் கருப்பு வண்ணத்தில்தான் காட்சியளிக்கின்றன. குறிப்பாக இருக்கைகள் அனைத்தும் சுத்தமான கருப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன. இதேபோன்று, டேஷ்போர்டு மற்றும் ரூஃப் உள்ளிட்டவையும் கருப்பு நிறத்திலேயே உள்ளன.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

எனவே, காரின் பெரும்பாலான பாகங்கள் கருப்பு வண்ணத்தில் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. அதேசமயம், சில இடங்களில் சிவப்பு நிற அக்ஸெண்டுகள் ஸ்போர்ட் லுக்கை வழங்கும் விதமாக சேர்க்கப்பட்டிருப்பதையும் பார்க்க முடிகின்றது.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

இருக்கைகள், ஸ்கோடா சூப்பர்ப் காரின் இருக்கைகள் பற்றி பார்ப்போமேயானால், இக்காரில் ஒட்டுமொத்தமாக ஐவர் பயணிக்கின்ற வகையில் இருக்கைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. முன் பக்கத்தில் இருவர் அமரக்கூடிய இருக்கையும், பின் பக்கத்தில் மூவர் அமரக்கூடிய இருக்கையும் வழங்கப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளில் எந்த எழுத்துப் பொறிப்பும் செய்யப்படவில்லை.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

முன் மற்றும் பின் பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கும் இருக்கைகள் அனைத்தும் மிகவும் சொகுசான மற்றும் அதிக வசதிகளைகக் கொண்டவையாக இருக்கின்றன. குறிப்பாக டிரைவருக்கு வழங்கப்பட்டிருக்கும் இருக்கையில் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இருக்கையை அட்ஜெஸ்ட் செய்துக்கொள்ளக்கூடிய பொத்தான் மற்றும் ட்யூனர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை, இருக்கை அமைப்பை செட் செய்ய மற்றும் உடனுக்குடன் மாற்றிக் கொள்ள உதவும்.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

மேலும், இவை பக்கெட் அமைப்புடைய இருக்கைகள் என்பதால் கூடுதல் சொகுசான அனுபவத்தை முன்னிருக்கையாளர்களால் அனுபவிக்க முடியும். இந்த இருக்கை அமைப்பானது ஸ்போர்ட்லைன் மற்றும் எல்&கே வேரியண்டுகளில் மாற்றத்துடன் காணப்படுகின்றது. அதாவது, எல்&கே வேரியண்டில் காற்றோட்டத்தை உறுதிப்படுத்தக்கூடிய இருக்கைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஸ்போர்ட்லைன் வேரியண்டில் அது இடம்பெறவில்லை.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

பின்னிருக்கையை தேவைப்பட்டால் இருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய இருக்கைகளாக மாற்றிக் கொள்ள முடியும். அவ்வாறு மாற்றிக் கொள்ளும் பட்சத்தில் சிறு பட்டனை அழுத்தி இரு பயணிகளுக்கும் தேவையான ஹார்ம் ரெஸ்ட்களை ஆக்டிவேட் செய்ய முடியும். மேலும், சொகுசாக பயணிக்கவும் முடியும். இத்துடன், அனைத்து பயணிகளுக்குமான ஹெட்ரெஸ்டுகள் இருக்கைகளில் வழங்கப்பட்டிருக்கின்றன.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

மேலும், பின்னிருக்கையாளர்களுக்கு என தனி ஏசி வெண்டுகள் மற்றும் சீதோஷ்ன நிலையை மாற்றிக் கொள்ளும் கன்ட்ரோல்கள் உள்ளிட்டவையும் தனியாக வழங்கப்பட்டிருக்கின்றன. காற்றோட்டமான இருக்கை அமைப்பைப் போலவே ஸ்போர்ட்லைன் வேரியண்டில் மற்றுமொரு அம்சமும் வழங்கப்படவில்லை. 'பாஸ்' மோட் பொத்தான்கள், இதன் மூலம் முன்பக்க பயணியின் இருக்கையை டிரைவரால் கட்டுப்படுத்த முடியும்.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

தொழில்நுட்ப அம்சம்; இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் காரின் முன் பக்கத்தின் மையப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. இது பல்வேறு தகவல்களை வழங்கக்கூடியது ஆகும். இதில், ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. மேலும், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டமும் பிரீமியம் அம்சமாக இக்காரில் வழங்கப்பட்டுள்ளது.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

இவற்றைக் காட்டிலும் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய அம்சமாக இக்காரில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ் இருக்கின்றது. இது செடான் காரை கூடுதல் ஸ்போர்ட் திறனுக்கு உயர்த்தும் வகையில் காணப்படுகின்றது. இதில், வழங்கப்பட்டிருக்கும் பன்முக செட்டிங்குகள் இதற்கு உறுதுணையாக இருக்கின்றன.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

இதேபோன்று இக்காரில் வழங்கப்பட்டிருக்கும் மன நிலையை மாற்றும் மின் விளக்குகளும் அதிக கவரக்கூடிய விஷயத்தைக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இதன் நிறத்தை மாற்றும்போது க்ளஸ்டரில் ஒளிரும் பின்னொளியும் மனநிலை மின் விளக்கின் நிறத்திற்கு ஏற்ப மாறிவிடுகின்றது. எனவே, நிச்சயம் இது அசௌகரியமான மூடைக்கூட சிறந்த மூடாக மாற்ற உதவும் என நம்பப்படுகின்றது.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

ஸ்டியரிங் வீல்; ஸ்போர்ட்லைன் வேரியண்டில் ஃபிளாட்-பாட்டம் கொண்ட ஸ்டியரிங் வீல் காணப்படுகின்றது. இது லெதர் உறையால் போற்றப்பட்ட ஸ்டியரிங் ஆகும். இதில், கணிசமான கன்ட்ரோல்களை ஸ்கோடா வழங்குகின்றது. குறிப்பாக, மின் விளக்கு, ஹார்ன், ஆடியோ கன்ட்ரோல் உள்ளிட்ட கன்ட்ரோல்கள் அதில் காணப்படுகின்றன. இத்துடன், சாலையில் அதிக கவனத்தைச் செலுத்த ஏதுவாக இன்ஃபோடெயின்மென் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரின் கன்ட்ரோல்களும் ஸ்டியரிங் வீல்களிலேயே பொருத்தப்பட்டிருக்கின்றன.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

எஞ்ஜின் மற்றும் ஹேண்ட்லிங்:

எமது நிரூபர்கள் பயன்படுத்திய ஸ்போர்ட்லைன் சூப்பர்ப் வேரியண்டில் 2.0 லிட்டர் டர்போசார்ஜட் டிஎஸ்ஐ எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 188 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டதாகும். இதில் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இக்காரில் கூடுதல் டிரைவிங் மோட்கள் வழங்கப்படாதது ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

டி மற்றும் எஸ் ஆகிய வழக்கமான மோட்களைத் தவிர வேறெந்த மோட்களையும் இதன் கியரில் பார்க்க முடியவில்லை. இருப்பினும், இந்த எஞ்ஜின் அதிக திறனை வெளிப்படுத்தும் மோட்டாராக இருக்கின்றது. இதனை மேனுவல் மோடுக்கு மாற்றும்போது உங்களால் கூடுதல் அதிகபட்ச கன்ட்ரோல்களைப் பெற முடியும். மேலும், சிறந்த ஸ்மூத்தான ஷிஃப்ட்களை உறுதிப்படுத்த ஃபேட்டில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது, எஸ் மோடில் மிக சிறப்பாக பணி புரிகின்றது.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

திறன் வெளிப்பாடும் மிகவும் அட்டகாசமாக இருப்பதாக எங்கள் குழுவினர் கூறுகின்றனர். நீங்கள் ஸ்மூத்தாக செல்ல விரும்பினால், ஆக்சலரேட்டர் பெடலை மிகவும் லேசாக அழுத்தினால் போதும். இதுவே பிற கார்களை முந்திச் செல்ல வேண்டும் என விரும்பினால், லேசாக ஒரு அழுத்து அழுத்தினால் போதும் உங்களையே இருக்கையுடன் பின்னோக்கி தள்ளுகின்ற வகையில் அது அதிக வேகத்தில் பறக்கும்.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

சஸ்பென்ஷன்; சூப்பர்ப் காரில் சூப்பரான சஸ்பென்ஷன் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது, மிகவும் மிருதுவமான பயண அனுபவத்தை வழங்குகின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இந்த காரில் பயணிக்கும்போது லக்சூரி கார்களில் பயணிப்பதைப் போன்ற அனுபவத்தை ஏற்படுத்தும். ஸ்போர்ட்லைன் மற்றும் எல்&கே வேரியண்டுகளில் இது வித்தியாசமானதாக காணப்படுகின்றது.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

அதாவது, எல்&கே வேரியண்டில் அனைத்து சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்ட சஸ்பென்ஷனும், ஸ்போர்ட்லைன் வேரியண்டில் அதிக கரடு முரடான சாலைகளைக் கையாளக்கூடிய வகையில் சற்று ஸ்டிப்பான சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும், இவை எந்த நிலையிலும் அசௌகரியமான உணர்வுகளை வழங்கும் வகையில் இல்லை. இதையே எங்களின் விமர்சனத்தின் ஆய்வும் உறுதிச் செய்கின்றது.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

குறிப்பாக, அதிக பள்ளம்-மேடுகள் நிறைந்த சாலைகளில் பயணித்தபோதுகூட எங்களுக்கு லேசான சிரமத்தைக்கூட இக்கார் வழங்கவில்லை. எந்தவொரு பெரிய இடையூறான அனுபவமும் உட்பகுதியில் ஏற்படவில்லை. இதேபோன்று, வெளிப்புற இரைச்சலும் பெரியளவில் காரின் உட்பகுதியில் கேட்கவில்லை. ஆகையால், மிகவும் சொகுசான மற்றும் அமைதியான பயணத்தை ஸ்கோடா சூப்பர்ப் காரில் நம்மால் பெற முடியும் என்பது தெளிவாக தெரிகின்றது.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

மைலேஜ் விபரங்கள்;

ஸ்கோடா சூப்பர்ப் காரில் 66 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் நிரப்பும் தொட்டி இடம்பெற்றிருக்கின்றது. இதை முழுமையாக நிரப்பினால் நிச்சயம் 550 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும். அதாவது, நகரப்புறம் அல்லாத சாலையில் வைத்து இயக்கினால் சுமார் 14 கிமீ முதல் 16 கிமீ வரை மைலேஜை வழங்கும். அதேசமயம், நகரத்தின் உட்பகுதியில் வைத்து காரை இயக்கும் போது வெறும் 10 கிமீ மட்டுமே அது மைலேஜ் வழங்கும்.

19 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஸ்கோடா சூப்பர்ப்... இப்போ இந்த கார் எப்படி இருக்கு... சோதனை விமர்சனம்...

மேற்கூறிய மைலேஜ் விபரமானது ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்லைன் வேரியண்டுடையது ஆகும். இக்கார், இந்தியாவில் ரூ. 29.99 லட்சங்கள் என்ற விலையில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கேற்ற அதிக சொகுசு மற்றும் பிரீமியம் அம்சங்களை இந்த கார் வாரி வழங்குகின்றது. எனவேதான், எங்களின் மதிப்பீட்டில் இந்த காருக்கு ஐந்திற்கு 4 1/2 நட்சத்திரங்களை ரேட்டிங்காக வழங்கியிருக்கின்றோம்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Superb Sportline Road Test Review: One Of The Best Looking Luxury Sedans In The Market. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X