ஃபோக்ஸ்வேகன் அமியோ... முன்பதிவிற்கு முன் பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள்!

By Saravana

கடந்த 2007ம் ஆண்டு பஸாத் காருடன் இந்திய மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தொடர்ந்து பீட்டில், ஜெட்டா போன்ற பிரிமியம் ரக கார்களை களமிறக்கியது. அதைத்தொடர்ந்து, இந்திய மார்க்கெட்டின் நாடித்துடிப்பை சற்று தாமதமாகவே உணர்ந்து கொண்ட அந்த நிறுவனம் போலோ, வென்ட்டோ உள்ளிட்ட கார்களை களமிறக்கியதுடன், இந்தியாவிலேயே கார்களை அசெம்பிள் செய்வதற்கான ஆலையையும் திறந்தது. இதுவரை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் கார்கள் அனைத்துமே உலக அளவில் பல நாடுகளில் விற்பனை செய்வதற்கு ஏற்ற பொதுவான அம்சங்களை கொண்ட கார்களாக இருந்தன.

இந்தநிலையில், இந்திய மார்க்கெட்டிற்கென தனித்துவமான அம்சங்கள் பொருந்திய முதல் மாடலாக அமியோ காம்பேக்ட் செடான் காரை அந்த நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. அதிக வர்த்தக வாய்ப்புள்ளதாக கருதப்படும் இந்த செக்மென்ட்டில் தனது முதல் பட்ஜெட் செடான் கார் மாடலாக அமியோவை களமிறக்க இருக்கிறது ஃபோக்ஸ்வேகன். மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட பல ஜாம்பவான் மாடல்களுடன் போட்டி போட தயாராகி இருக்கும் இந்த புதிய கார் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முன்பதிவு துவங்கிவிட்ட நிலையில், இந்த காரை முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் பரிசீலிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே காணலாம்.

 அமியோ தோற்றம்

அமியோ தோற்றம்

தற்போது விற்பனையில் இருக்கும் ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் பூட் ரூம் சேர்க்கப்பட்ட மாடலாகவே இதனை கூறலாம். ஹேட்ச்பேக் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் சொல்லுமளவுக்கு டிசைன் தாத்பரியங்களை கொண்ட போலோவின் காம்பேக்ட் செடான் வெர்ஷன்தான் இந்த அமியோ. போலோ காரின் சாயல்தான். இருந்தாலும் சட்டென கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, சிறிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பின்புற டெயில் லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு எல்லோரையும் கவராது. முகப்பிலும், பக்கவாட்டிலும் இருக்கும் நாகரீக வடிவமைப்பு பின்புறத்தில் இல்லை. ஆனால், ஒட்டுமொத்தத்தில் பெரிய குறைகளை சொல்ல முடியாத வடிவமைப்புடன் கம்பீரமான செடான் மாடலாக இருக்கிறது.

பின்புற அமைப்பு

பின்புற அமைப்பு

பின்புற டெயில் லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு எல்லோரையும் கவராது. முகப்பிலும், பக்கவாட்டிலும் இருக்கும் நாகரீக வடிவமைப்பு பின்புறத்தில் இல்லை. ஆனால், ஒட்டுமொத்தத்தில் பெரிய குறைகளை சொல்ல முடியாத வடிவமைப்புடன் கம்பீரமான செடான் மாடலாக இருக்கிறது.

இன்டீரியர்

இன்டீரியர்

உட்புறம் மிகவும் எளிமையாகவும், தரமான பிளாஸ்டிக் பாகங்களுடன் இருக்கிறது. டச்ஸ்கிரீன் ஆடியோ சிஸ்டம், அடிப்பாகம் தட்டையான ஸ்டீயரிங் வீல் அமைப்பு ஃபோக்ஸ்வேகனின் தனித்துவத்தை எடுத்தியம்புகிறது. இரட்டை வண்ணத்தில் மிளிரும் கச்சாமுச்சா இல்லாத இன்டீரியர் கவர்ச்சியாகவே உள்ளது. இருக்கைகள் தரமானதாகவும், பின்புற இருக்கை போலோவைவிட கால் வைக்கும் இடவசதி கூடுதலாக இருக்கிறது.

வசதிகள்

வசதிகள்

டாப் வேரியண்ட்டில் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேரை சப்போர்ட் செய்யும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், ஸ்டீயரிங் வீலிலேயே ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், குளிரூட்டும் வசதியுடன் க்ளவ் பாக்ஸ், தானியங்கி வைப்பர், க்ரூஸ் கன்ட்ரோல், ரிவர்ஸ் கேமரா போன்ற முக்கிய வசதிகளை அளிக்க உள்ளது. பின்புற பயணிகளுக்கு ரியர் ஏசி வென்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் 75 பிஎஸ் பவரையும், 110 என்எம் டார்க்கையும் அளிக்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 90 பிஎஸ் பவரையும், 230என்எம் டார்க்கையும் அளிக்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டு வருகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும். டீசல் மாடல் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாவும் வருகிறது. இந்த செக்மென்ட்டில் இருக்கும் மாருதி டிசையர், டாடா ஸெஸ்ட் உள்ளிட்ட பிற டீசல் மாடல்கள் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

மைலேஜ்

மைலேஜ்

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 21 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 24.5 கிமீ மைலேஜையும் தரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த தகவல் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் அன்றுதான் உறுதியாகும்.

 பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

தற்போது இந்தியாவின் அபாயகரமான சாலைகளில் ஓட்டுவதற்கு பாதுகாப்பு அம்சங்கள் மிக முக்கியமானதாக பார்க்க வேண்டி இருக்கிறது. அந்த வகையில், ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்களை போன்றே, அமியோ காரும் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற அடிப்படை பாதுகாப்பு வசதிகளை அளிக்கும். அத்துடன், இந்த செக்மென்ட்டில் சிறப்பான கட்டுமானத் தரம் கொண்டதாகவும் இருக்கிறது.

பூட் ரூம்

பூட் ரூம்

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரில் 330 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூம் இடவசதியை கொண்டிருக்கிறது. செக்மென்ட் லீடர் மாருதி டிசையரைவிட இது அதிகமானது. ஆனால், ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸென்ட் கார்களைவிட குறைவானதே.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

போலோ காரைவிட விலை அதிகமாகவே நிர்ணயிக்கப்படும் எனவே,. ரூ.5.75 லட்சம் முதல் ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியாளர்களைவிட விலை சற்று அதிகமாக இருக்கும். இருப்பினும், விலையை அதிகமாக நிர்ணயித்தால், போட்டியாளர்களை வெல்வது மிக சவாலாக இருக்கும். முடிந்தவரை விலையை குறைவாக நிர்ணயிக்க ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

அலசல்

அலசல்

சிறந்த கட்டுமான தரம், நல்ல மைலேஜ், அதிக தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த காராக வருகிறது அமியோ. அதேநேரத்தில், மாருதி, ஹூண்டாய் அளவுக்கு ஃபோக்ஸ்வேகனின் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையும், அதன் சேவையும் திருப்திகரமாக இல்லை. அதேநேரத்தில், ஃபோக்ஸ்வேகன் கார்களின் தரமும், வசதிகளும் நிச்சயம் கவனிக்க வேண்டிய விஷயம்.

தீர்ப்பு

தீர்ப்பு

ஃபோக்ஸ்வேகன் பிராண்டு பிரியம் கொண்டவர்களுக்கு மிக சரியான பட்ஜெட்டில் வரும் மிகச்சிறந்த மாடலாக இருக்கும். பராமரிப்பு செலவையும், சர்வீஸ் சென்டர் எண்ணிக்கையையும் பார்ப்போர் தவிர்க்கலாம். தரமானதாகவும், வசதிகள் நிறைந்ததாகவும், சிறப்பான டிசைன் கொண்ட கார் வேண்டும் என்போர் நிச்சயம் இந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்து திருப்தி ஏற்பட்டால், முன்பதிவு செய்ய தயங்க வேண்டாம்.

Most Read Articles
English summary
Some Important Things To Consider Before You Buy The Volkswagen Ameo.
Story first published: Saturday, June 4, 2016, 11:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X