பாதுகாப்பான பிரீமியம் ஹேட்ச்பேக் இப்போ செம பவர்ஃபுல்... டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் காரான அல்ட்ராஸை, கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஒரு ஆண்டு கடந்துள்ள நிலையில், அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் சக்தி வாய்ந்த ஐ-டர்போ மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது முழுமையாக தயாராகி விட்டது.

டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் ஏற்கனவே இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. சக்தி வாய்ந்த ஐ-டர்போ மாடலின் வருகை அதற்கு கூடுதல் பலம் சேர்க்கும். அத்துடன் டர்போ-பெட்ரோல் மாடல்களுக்கு இந்தியாவில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக்கில், டர்போ-பெட்ரோல் இன்ஜினை அறிமுகம் செய்யும் டாடாவின் நடவடிக்கை, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாகவும் இருக்கும்.

அதே நேரத்தில் அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரில், டர்போ-பெட்ரோல் இன்ஜின் தேர்வை வழங்கியதுடன் மட்டும் டாடா மோட்டார்ஸ் நின்று விடவில்லை. புதிய வசதிகள், உபகரணங்கள் மற்றும் டிரைவிங் மோடுகள் ஆகியவற்றுடன் கனெக்டட் கார் தொழில்நுட்பத்தையும் வழங்கி, போட்டியாளர்களை மிரள வைத்துள்ளது.

டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலை நாங்கள் சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். இந்த புதிய மாடலுடன் எங்களால் குறைவான நேரத்தை மட்டுமே செலவிட முடிந்தது என்றாலும், எங்களை முழுமையாக கவர்ந்து விட்டது. அப்படி இந்த புதிய மாடலில் என்னென்ன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன? ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? என்பது உள்பட அனைத்து தகவல்களையும் இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

பாதுகாப்பான பிரீமியம் ஹேட்ச்பேக் இப்போ செம பவர்ஃபுல்... டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

டிசைன் & ஸ்டைலிங்

எங்களின் டிரைவிங் அனுபவங்களை பார்ப்பதற்கு முன்பாக முதலில் டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வெளிப்புற டிசைன் எப்படி உள்ளது? என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? என்பதை பார்த்து விடலாம். டிசைனில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் ஐ-டர்போ மாடல் கிட்டத்தட்ட அப்படியேதான் உள்ளது. பெரிய அளவிலான மாற்றங்களை இந்த புதிய மாடல் பெறவில்லை.

பூட் லிட்டில் வலது பக்கத்தில் கீழே வழங்கப்பட்டுள்ள ஐ-டர்போ பேட்ஜ் மூலமாக மட்டுமே ஒருவரால், டர்போ-பெட்ரோல் மாடலை, ஸ்டாண்டர்டு மாடலில் இருந்து வேறுபடுத்தி பார்க்க முடியும். அதே சமயம் இந்த புதிய மாடலில் 'ஹார்பர் ப்ளூ' என்ற புதிய வண்ண தேர்வையும் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் ஸ்டைலுக்கு இந்த நிறம் நன்றாக பொருந்துகிறது.

இந்த இரண்டையும் தவிர டிசைனில் பெரிதாக வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலில், டாடா நிறுவனத்தின் 'இம்பேக்ட் 2.0' டிசைன் தத்துவம் தொடர்கிறது. இதன் முன் பகுதியில் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு கீழாக, பம்பரின் மேல் பகுதியில் எல்இடி டிஆர்எல்கள் உடன் ஒருங்கிணைந்த பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. மைய பகுதியில் பெரிய ஏர் இன்டேக் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பான பிரீமியம் ஹேட்ச்பேக் இப்போ செம பவர்ஃபுல்... டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே சமயம் பக்கவாட்டு மற்றும் பின் பகுதிகள் எந்தவிதமான மாற்றங்களும் இல்லாமல் அப்படியே தொடர்கின்றன. அதே 16 இன்ச் ட்யூயல்-டோன் அலாய் வீல்கள், கருப்பு நிற ஓஆர்விஎம்கள் ஆகியவை அப்படியே வழங்கப்பட்டுள்ளன. மேலும் பயணிகள் எளிதாக ஏறி, இறங்கும் வகையில் 90 டிகிரி ஓபனிங் டோர்களும் தொடர்கின்றன.

பாதுகாப்பான பிரீமியம் ஹேட்ச்பேக் இப்போ செம பவர்ஃபுல்... டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

பின் பகுதியை பொறுத்தவரை இரு புறமும் நேர்த்தியான டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு இடையே செய்யப்பட்டுள்ள கருப்பு நிற வேலைப்பாடுகள் கவர்ச்சி சேர்க்கின்றன. பூட் பகுதியின் மையத்தில், க்ரோம் பூச்சுக்கள் உடன் 'அல்ட்ராஸ்' பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேற்கூரையுடன் இணைந்த வகையில், எல்இடி பட்டை உடன் சிறிய ஸ்பாய்லரும் வழங்கப்பட்டுள்ளது. இது காருக்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்குகிறது.

பாதுகாப்பான பிரீமியம் ஹேட்ச்பேக் இப்போ செம பவர்ஃபுல்... டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்திய சந்தையில் கிடைக்கும் ஸ்டைலான பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக டாடா அல்ட்ராஸை குறிப்பிடலாம். புதிய பேட்ஜ் மற்றும் ஹார்பர் ப்ளூ வண்ண தேர்வு சேர்க்கப்பட்டிருப்பதை தவிர, அந்த டிசைன் ஐ-டர்போ மாடலில் அப்படியே தொடர்கிறது.

பாதுகாப்பான பிரீமியம் ஹேட்ச்பேக் இப்போ செம பவர்ஃபுல்... டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்டீரியர், வசதிகள் மற்றும் நடைமுறை பயன்பாடு

இன்டீரியரை பொறுத்தவரையிலும், டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலில் ஒரு சில மாற்றங்களுடன் முந்தைய லே-அவுட் அப்படியேதான் வழங்கப்பட்டுள்ளது. மாற்றங்கள் என பார்த்தால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் புதிதாக கருப்பு-சாம்பல் நிற இன்டீரியர் தீம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டேஷ்போர்டு முந்தைய லே-அவுட்டில் இருந்தாலும், தற்போது சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இருக்கைகளில் புதிய லெதரேட் அப்ஹோல்ட்ரியும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆம்பியண்ட் லைட்டிங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து கேபினுக்கு முன்பை விட பிரீமியமான உணர்வை கொடுக்கின்றன.

மேலும் அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலில் எக்ஸ்பிரஸ் கூல் வசதியையும் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இது கேபினை முன்பை விட 70 சதவீதம் விரைவாக குளிர்ச்சியடைய செய்யும். மியூசிக் சிஸ்டமில் 2 ட்வீட்டர்களை கூடுதலாக இணைத்திருப்பதையும் முக்கியமான மாற்றமாக குறிப்பிடலாம். இதன் மூலம் கேபினுக்கு உள்ளே ஆடியோ தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் டாப் வேரியண்ட்கள் அணிந்து கொள்ளக்கூடிய சாவி உடன் வருகின்றன. வாட்ச் போன்ற இந்த சாவி காருடன் இணைக்கப்பட்ட பிறகு, டோர் ஹேண்டிலுக்கு அருகே இருக்கும்போது லாக்/அன்லாக் செய்வதற்கு உதவுகிறது.

பாதுகாப்பான பிரீமியம் ஹேட்ச்பேக் இப்போ செம பவர்ஃபுல்... டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

எனினும் ஐரா கனெக்டட் கார் டெக்னாலஜியை, அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலில் டாடா நிறுவனம் அறிமுகம் செய்திருப்பதுதான் முக்கியமான ஹைலைட். கனெக்ட் நெக்ஸ்ட் என்ற பிரத்யேக செயலி மூலம் இந்த டெக்னாலஜியை ஸ்மார்ட்போனுடன் இணைத்து கொள்ள முடியும்.

கார் திருடப்பட்டால் அதன் இருப்பிடத்தை கண்டறியும் வசதி, அருகில் இருக்கும் சர்வீஸ் மையங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி என பல்வேறு வசதிகளை ஐரா கனெக்டட் டெக்னாலஜி வழங்கும். அத்துடன் டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வாய்ஸ் கமாண்ட் வசதி உடனும் வருகிறது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் 70க்கும் மேற்பட்ட கட்டளைகளை இது புரிந்து கொள்ளும். ஆங்கிலமும், ஹிந்தியும் கலந்து ஹிங்லீஸில் கமாண்ட் வழங்கினாலும் கூட புரிந்து கொள்ளும் திறன் உடையது.

மேற்கண்ட வசதிகள் தவிர ஸ்டாண்டர்டு மாடலில் உள்ள அனைத்து உபகரணங்களும், ஐ-டர்போ மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. இதில், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ரியர் ஏசி வெண்ட்கள், பல்வேறு கண்ட்ரோல்கள் உடன் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் ஆகியவை அடங்கும்.

புதிய வசதிகள் மற்றும் உபகரணங்களை தவிர்த்து விட்டு பார்த்தால், வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முன் மற்றும் பின் பக்க பயணிகளுக்கு தொடர்ந்து தாராளமான இடவசதி கிடைக்கிறது. முன் பக்க இருக்கைகளில் இடுப்பு மற்றும் தொடைக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. ஓட்டுனருக்கு சௌகரியமான மற்றும் ரிலாக்ஸான டிரைவிங் பொஷிஷன் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான பிரீமியம் ஹேட்ச்பேக் இப்போ செம பவர்ஃபுல்... டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

டாடா அல்ட்ராஸ் அகலமான கார் (அகலம் 1755 மிமீ) என்பது நமக்கு ஏற்கனவே தெரியும். எனவே இட வசதி தாராளமாக உள்ளது. ஆனால் பின் இருக்கைகளில் போதிய ஹெட்ரூம் மற்றும் லெக் ரூம் இல்லாததால், உயரமான பயணிகள் சற்றே அசௌகரியத்தை சந்திக்க நேரிடலாம். பின் இருக்கைகளின் நடுவே மடித்து வைத்து கொள்ளக்கூடிய ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. இது பின் இருக்கை பயணிகளுக்கு கூடுதல் சௌகரியத்தை வழங்குகிறது. 2 பயணிகள் மட்டும் பயணிப்பதாக இருந்தால் பின் இருக்கைகள் மிகவும் சௌகரியமானதாக இருக்கும்.

அதே சமயம் முன்பை போல் அதே அளவு ஸ்டோரேஜ் ஸ்பேஸ்தான் அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இதில், முன் பகுதியில் உள்ள 15 லிட்டர் கூல்டு க்ளவ் பாக்ஸ், நான்கு டோர்களிலும் உள்ள சிறிய இட வசதிகள், நிறைய கப் ஹோல்டர்கள் மற்றும் சென்டர் கன்சோலுக்கு அருகே உள்ள ஸ்டோரேஜ் பகுதி ஆகியவை அடங்குகின்றன.

மேலும் முன்பை போலவே, 345 லிட்டர் பூட் ரூம் இட வசதியைதான் டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடல் பெற்றுள்ளது. ஆனால் இம்முறையும் பின் பக்க இருக்கைகளை மடித்து வைத்து கொள்ளும் வசதி வழங்கப்படவில்லை. ஆனால் முன்பை போலவே பின் பக்க இருக்கைகளை முழுவதுமாக மடித்து வைத்து கொள்ளலாம். இதன் மூலம் தேவைப்படும் சமயங்களில் இட வசதியை அதிகரித்து கொள்ள முடியும்.

பாதுகாப்பான பிரீமியம் ஹேட்ச்பேக் இப்போ செம பவர்ஃபுல்... டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்ஜின் செயல்திறன்

டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலில், 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. டாடா நெக்ஸான் காரில் இருக்கும் அதே இன்ஜின்தான், அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலில், இன்ஜின் உருவாக்கும் பவர் மற்றும் டார்க் திறனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறைத்து ட்யூனிங் செய்துள்ளது.

டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலில் உள்ள 1.2 லிட்டர் மூன்று-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 5500 ஆர்பிஎம்மில் 108 பிஎச்பி பவரையும், 1500-5500 ஆர்பிஎம்மில் 140 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான பிரீமியம் ஹேட்ச்பேக் இப்போ செம பவர்ஃபுல்... டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

முன்பை காட்டிலும் சுறுசுறுப்பாகவும், ஸ்போர்ட்டியாகவும் இருக்கும் உணர்வை டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் நமக்கு உடனடியாக தந்து விடுகிறது. ஆரம்பத்தில் இருந்தே இன்ஜின் நல்ல பவரை வழங்குகிறது. டர்போ-லேக் மிகவும் சிறிய அளவில்தான் உள்ளது.

டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலில், சிட்டி மற்றும் ஸ்போர்ட் என இரண்டு டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. சிட்டி மோடில் பவர் டெலிவரி சீராக உள்ளது. அதே சமயம் ஸ்போர்ட் மோடில் உடனடியாக வித்தியாசத்தை உணர முடிகிறது. ஸ்போர்ட் மோடில் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் ஷார்ப் ஆக உள்ளது. இந்த மோடில் டார்க் டெலிவரி 20 முதல் 30 சதவீதம் அதிகமாக இருக்கும் என டாடா மோட்டார்ஸ் கூறுகிறது.

Engine Specifications

Tata Altroz i-Turbo Petrol Diesel
Displacement 1199cc 1199cc 1497cc
Power 108bhp 84bhp 88bhp
Torque 140Nm 113Nm 200Nm
Transmission 5MT 5MT 5MT
பாதுகாப்பான பிரீமியம் ஹேட்ச்பேக் இப்போ செம பவர்ஃபுல்... டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

சஸ்பென்ஸன் & ஹேண்ட்லிங்

அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் ஸ்டியரிங் மற்றும் சஸ்பென்ஸனில் சிறிய அப்டேட்களை மட்டுமே செய்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் கூறியுள்ளது. எனினும் குறிப்பிடத்தகுந்த வேறுபாடுகள் எதுவும் இல்லை. டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக்கின் ஹேண்ட்லிங் சிறப்பாகவே இருக்கும். ஐ-டர்போ மாடலிலும் அது தொடர்கிறது.

அதேபோல் டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலில் சஸ்பென்ஸன் மற்றும் பிரேக்கிங்கும் நன்றாகவே உள்ளது. குண்டும், குழியுமான சாலைகள் மற்றும் வேகத்தடைகளை ஐ-டர்போ மாடல் எளிதாக எதிர்கொள்கிறது. அத்துடன் பிரேக்கிங்கும் ஷார்ப் ஆக உள்ளது. காரை உடனடியாக நிறுத்தி விட முடிகிறது.

பாதுகாப்பான பிரீமியம் ஹேட்ச்பேக் இப்போ செம பவர்ஃபுல்... டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

வேரியண்ட்கள், வண்ண தேர்வுகள் & விலை

XT, XZ மற்றும் XZ+ என டாப் வேரியண்ட்களில் மட்டுமே டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடல் கிடைக்கும். புதிய ஹார்பர் ப்ளூ, ஹை-ஸ்ட்ரீட் கோல்டு, டவுன்டவுன் ரெட், மிட்டவுன் க்ரே மற்றும் அவென்யூ ஒயிட் ஆகிய வண்ணங்களில் டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலை தேர்வு செய்யலாம்.

இந்திய சந்தையில் ஸ்டாண்டர்டு டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் 5.44 லட்ச ரூபாய் முதல் 9.09 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஐ-டர்போ வேரியண்ட்களுக்கான விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விலை சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என நாங்கள் நினைக்கிறோம். 10 லட்ச ரூபாயை கடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் விலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் ஜனவரி 22ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

பாதுகாப்பான பிரீமியம் ஹேட்ச்பேக் இப்போ செம பவர்ஃபுல்... டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

போட்டியாளர்கள்

புதிய ஹூண்டாய் ஐ20 மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி டிஎஸ்ஐ உள்ளிட்ட கார்களுடன் டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ போட்டியிடும். இந்த இரண்டு கார்களிலும் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

Specification Tata Altroz i-Turbo Hyundai i20 Turbo VW Polo GT TSI
Displacement 1199cc 998cc 998cc
Power 108bhp 118bhp 108bhp
Torque 140Nm 172Nm 175Nm
Transmission 5MT 6iMT / 7DCT 6AT
Starting Price (Ex-Showroom) NA ₹8.80 Lakh ₹9.67 Lakh
பாதுகாப்பான பிரீமியம் ஹேட்ச்பேக் இப்போ செம பவர்ஃபுல்... டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

டாடா அல்ட்ராஸ் ஸ்டாண்டர்டு மாடல் இந்திய சந்தையில் ஏற்கனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விட்டது. தற்போது புதிதாக ஐ-டர்போ மாடல் வரவிருப்பது, டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வை எதிர்பார்த்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும். இதன் சக்தி வாய்ந்த இன்ஜின் அதிக வாடிக்கையாளர்களை கவரலாம். அத்துடன் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா அல்ட்ராஸ் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். டாடா நிறுவனம் சவாலான விலையை நிர்ணயம் செய்தால், வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைப்பது உறுதி.

Most Read Articles
English summary
Tata Altroz i-Turbo Petrol Review (First Drive): Engine Performance, Handling, Features, Variants. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X