டாடா நானோ Vs மாருதி ஆல்ட்டோ 800 : முக்கிய அம்சங்கள் ஒப்பீடு

Written By:

நடுத்தர வர்க்கத்தினரின் கார் வாங்கும் ஆசையை நிறைவேற்றும் மாடல்கள் டாடா நானோ மற்றும் மாருதி ஆல்ட்டோ 800. இந்த இரு கார்களும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப சிறப்பம்சங்களை கொண்டவை.

இந்த நிலையில், குறைவான பட்ஜெட்டில் கார் வாங்குவது பற்றி யோசித்துக் கொண்டிருப்பவர்களின் தேர்வு பட்டியலில் இரு கார்களுக்கும் நிச்சயம் இடம் உண்டு. இதில், எதை தேர்வு செய்வது என்ற குழப்பம் எல்லோருக்கும் ஏற்படுவது இயல்பு.

நானோ காரை விட ஆல்ட்டோ 800 கார் விலை சற்று கூடுதல் விலை இருப்பதால், என் பட்ஜெட்டுக்கு ஒத்து வருமா என்று குழப்பத்தில் இருப்போருக்கு தெளிவு கொடுக்கும் விதத்தில் இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.

பேஸ் மாடல்களின் விலை

பேஸ் மாடல்களின் விலை

டாடா நானோ: ரூ.2.04 லட்சம்

மாருதி ஆல்ட்டோ 800: ரூ.2.46 லட்சம்

[டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை]

 டிசைன்

டிசைன்

இரு கார்களும் சிறப்பான டிசைன் கொண்ட மாடல்களாக கூற முடியாது. இருப்பினும், டாடா நானோவுடன் ஒப்பிடும்போது மாருதி ஆல்ட்டோ 800 கார் டிசைன் சிறப்பானதாக இருக்கிறது. டாடா நானோ காரில் தயாரிப்பு செலவீனத்தை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட டிசைன் யுக்திகள் காரணமாக இந்த காரின் டிசைன் சிறப்பாக அமையவில்லை.

எஞ்சின்

எஞ்சின்

டாடா நானோ காரில் 2 சிலிண்டர்கள் கொண்ட 624சிசி எம்பிஎஃப்ஐ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 37 பிஎச்பி பவரையும், 51 என்எம் டார்க்கையும் வழங்கும். நானோ கார் 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. அதேநேரத்தில், ஆல்ட்டோ 800 காரில் 48 பிஎச்பி பவரையும், 69 என்எம் டார்க்கையும் வழங்கும் 796சிசி பெட்ரோல் எஞ்சின் உள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

அராய் சான்றுபடி, டாடா நானோ கார் லிட்டருக்கு 25.4 கிமீ மைலேஜையும், மாருதி ஆல்ட்டோ 800 கார் லிட்டருக்கு 22.74 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் இரு கார்களுமே மைலேஜுக்கு பெயர் போனவை. இந்த விஷயத்தில் சிறிது கூடுதல் மைலேஜுடன் நானோ முன்னிலை பெறுகிறது. இரு கார்களும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் வகைகளில் கிடைக்கிறது.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

டாடா நானோ கார் 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸையும், மாருதி ஆல்ட்டோ 800 கார் 160மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸும் கொண்டுள்ளன. இரு கார்களிலுமே 12 இன்ச் சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 வசதிகள்

வசதிகள்

டாப் வேரியண்ட்டில் ஏசி, பவர் ஸ்டீயரிங் போன்ற அடிப்படை வசதிகள் இரு கார்களிலுமே வழங்கப்படுகின்றன. நானோ காரில் சென்ட்ரல் லாக்கிங், மீதமிருக்கும் எரிபொருள் அளவு, மியூசிக் சிஸ்டம், பனி விளக்குகள், முன்புறம் பவர் விண்டோஸ் போன்ற வசதிகள் உள்ளன. மாருதி ஆல்ட்டோ 800 காரில் 2 டின் மியூசிக் சிஸ்டம், கீ லெஸ் சென்ட்ரல் லாக்கிங், சீட் பாக்கெட்டுகள், 4 ஸ்பீக்கர்கள், பவர் விண்டோஸ் போன்ற வசதிகள் உள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

மாருதி ஆல்ட்டோ 800 காரில் ஓட்டுனருக்கான ஏர்பேக் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. நானோவில் ஏர்பேக் கிடையாது. இரு மாடல்களிலும் சீட் பெல்ட் எச்சரிக்கை வசதி உள்ளது. இவை தவிர்த்து குறிப்பிடத்தக்க நவீன பாதுகாப்பு வசதிகள் இரு மாடல்களிலும் இல்லை.

 டாடா நானோ

டாடா நானோ

நிறைகள்

இரண்டு கார்களில் டாடா நானோ கார் சிறப்பான இடவசதியை அளிக்கும். குறிப்பாக, ஹெட்ரூம் சிறப்பாக இருப்பதன் காரணமாக, உயரமானவர்களுக்கும் ஏதுவானது. சிறப்பான மைலேஜ், குறைவான விலை கொண்ட மாடல்.

குறைகள்

கவராத டிசைன், 80 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான போதிய இடவசதி இல்லை, அதிர்வுகள் அதிகம் கொண்ட எஞ்சின் போன்றவை நானோவின் முக்கிய குறைகள். குறைவான கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க், பானட்டிற்குள் பெட்ரோல் டேங்க் மூடி இருப்பதால் ஒவ்வொரு முறையும் பானட்டை திறந்து பெட்ரோல் நிரப்ப வேண்டும். இதுபோன்ற நடைமுறை பிரச்னைகள் நானோ காரில் உள்ளது.

மாருதி ஆல்ட்டோ 800

மாருதி ஆல்ட்டோ 800

நிறைகள்

பட்ஜெட் விலையில் சிறந்த மாடல், நம்பகமான பெட்ரோல் எஞ்சின், குறைவான பராமரிப்பு செலவு, ஓட்டுனருக்கான ஏர்பேக், மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் மையங்களின் கட்டமைப்பு போன்றவை வலு சேர்க்கின்றன.

குறைகள்

இடவசதி குறைவு, போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை.

எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

இரு கார்களையும் ஒட்டுமொத்தமாக ஒப்பிட்டு பார்க்கையில், மாருதி ஆல்ட்டோ 800 கார் அனைத்திலும் சிறப்பானது.நகர்ப்புற பயன்பாட்டுக்கு மட்டுமின்றி, அவ்வப்போது நெடுஞ்சாலை பயணங்களையும் சமாளிக்கும். மறு விற்பனை மதிப்பிலும் மாருதி ஆல்ட்டோ 800 கார்தான் சிறந்தது. எனவே, சற்று விலை கூடுதலானாலும் மாருதி ஆல்ட்டோ 800 காரை வாங்குவதே புத்திசாலித்தனமாக இருக்கும்.

 
English summary
Let’s take a look at these two entry level hatches, and put them on a real world test.
Story first published: Tuesday, April 21, 2015, 15:34 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark