டாடா சஃபாரி ஸ்ட்ராம் Vs மஹிந்திரா எக்ஸ்யூவி500: ஒப்பீடு

Written By:

நம் நாட்டின் எஸ்யூவி தயாரிப்பில் மிக பிரபலமான இரு இந்திய நிறுவனங்கள் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா. இந்த இரு நிறுவனங்களின் மிக பிரபலமான தயாரிப்புகள் டாடா சஃபாரி ஸ்ட்ராம் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500. இவை இரண்டும் விலை, சிறப்பம்சங்கள், வடிவம் என பல விதத்திலும் நேருக்கு நேர் மோதுகின்றன.

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது கூடுதல் சக்தி கொண்டதாக சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியின் எஞ்சின் மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

கூடுதல் சக்தியுடன் வந்திருக்கும் டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி தற்போது தனது நேர் எதிர் போட்டியாளராக விளங்கும், மஹிந்திரா எக்ஸ்யூவி500வுடன் சீண்டி பார்க்கும் விதத்திலேயே இந்த மாறுதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில், டாடா சஃபாரி ஸ்ட்ராம் வேரிகோர் 400 மாடலுடன், சில மாதங்களுக்கு முன் மேம்படுத்தப்பட்டு வந்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஃபேஸ்லிஃப்ட் மாடலுடன் சிறப்பம்சங்கள் அடிப்படையில் ஒப்பீடு செய்து காணலாம். இரு மாடல்களின் டாப் வேரியண்ட்டுகளின் அடிப்படையில் இந்த ஒப்பீடு அமைந்துள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

  • டாடா சஃபாரி ஸ்ட்ராம் வேரிகோர் 400 VX 4X4: Rs. 14.59 லட்சம்.
  • மஹிந்திரா எக்ஸ்யூவி500 W10 AWD: Rs. 15.99 லட்சம்.

[குறிப்பு: டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்]

டிசைன்: டாடா சஃபாரி ஸ்ட்ராம்

டிசைன்: டாடா சஃபாரி ஸ்ட்ராம்

கம்பீரமான தோற்றத்தை கொண்ட மாடல் டாடா சஃபாரி ஸ்ட்ராம். மேம்படுத்தப்பட்ட சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியில் முன்புற க்ரில் அமைப்பில் மட்டும் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கிறது. உட்புறத்தில் கச்சாமுச்சா என்றில்லாமல், மிக எளிமையான தோற்றத்தை கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் லேண்ட்ரோவர் எஸ்யூவிகளின் டிசைன் தாக்கங்கள் தெரிகிறது. அதிக மாற்றங்கள் தெரியவில்லை என்பதால், பழைய சஃபாரியை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. தோற்றம் புதிதாக இல்லை.

டிசைன்: மஹிந்திரா எக்ஸ்யூவி500

டிசைன்: மஹிந்திரா எக்ஸ்யூவி500

நவநாகரீகமான, மிடுக்கான தோற்றத்தை கொண்ட மாடல் மஹிந்திரா எக்ஸ்யூவி500. சந்தை நெருக்கடியை போக்கும் விதத்தில், டிசைனில் மாறுதல்களுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு வந்தது. முன்புற க்ரில் அமைப்பு, பனி விளக்குகள், பம்பர் என அனைத்திலும் புதுப் பொலிவு கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்டிரியரும் மிக கவர்ச்சியாக இருக்கிறது. டிசைனை பொறுத்தவரை டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியை விட, மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிதான் கவர்ச்சியாக இருக்கிறது.

எஞ்சின் ஒப்பீடு: டாடா சஃபாரி ஸ்ட்ராம்

எஞ்சின் ஒப்பீடு: டாடா சஃபாரி ஸ்ட்ராம்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் வேரிகோர் 400 மாடலின் முக்கிய மாற்றம், எஞ்சின் கூடுதல் சக்தி கொண்டதாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த எஸ்யூவியில், டர்போசார்ஜர்கள் துணையுடன் இயங்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும்,400 என்எம் டார்க்கையும் அளிக்க வல்லது. இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைந்து ஆற்றலை சக்கரங்களுக்கு வழங்குகிறது. மேலும், 2 வீல் டிரைவிலிருந்து கார் செல்லும்போதே, 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் மாற்றுவதற்கான ஷிஃப்ட் ஆன் ப்ளை என்ற 4 வீல் டிரைவ் சிஸ்டம் இருக்கிறது.

எஞ்சின்: மஹிந்திரா எக்ஸ்யூவி500

எஞ்சின்: மஹிந்திரா எக்ஸ்யூவி500

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியை போன்றே, மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியிலும் டர்போசார்ஜர் துணையுடன் இயங்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 330 என்எம் டார்க்கையும் வழங்கும். ஆனால், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் மட்டுமின்றி, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இதன் சிறப்பு. ஆனால், எஞ்சின் வெளிப்படுத்தும் சக்தியை வைத்து பார்க்கும்போது, டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியே விஞ்சுகிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேண்டுவோர் மஹிந்திரா எக்ஸ்யூவி500 விட்டால் வேறு வழியில்லை.

மைலேஜ் ஒப்பீடு

மைலேஜ் ஒப்பீடு

டாடா சஃபாரி ஸ்ட்ராம் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல் லிட்டருக்கு 13.9 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மஹந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி லிட்டருக்கு 16 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. மைலேஜில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியே முன்னிலை பெறுகிறது. நடைமுறையிலும் இதனை எதிர்பார்க்கலாம்.

வசதிகள்: டாடா சஃபாரி ஸ்ட்ராம்

வசதிகள்: டாடா சஃபாரி ஸ்ட்ராம்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியில் ஹார்மன் நிறுவனம் வழங்கும் 6 ஸ்பீக்கர்கள் கொண்ட கனெக்ட்நெக்ஸ்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. வேகத்திற்கு தக்கவாறு வால்யூம் கன்ட்ரோல் அட்ஜெஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் டிஸ்ப்ளே, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், கருப்பு நிற இன்டிரியர், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், ப்ளிப் கீ, மேனுவலாக இருக்கை உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி, கப் ஹோல்டர்கள் போன்றவை குறிப்பிடத்தக்கதாக கூறலாம்.

வசதிகள்: மஹிந்திரா எக்ஸ்யூவி500

வசதிகள்: மஹிந்திரா எக்ஸ்யூவி500

மஹிந்திரா நிறுவனம் வசதிகளை வாரி வழங்குவதில் கொடை வள்ளல். அதற்கு இந்த எஸ்யூவியும் ஓர் உதாரணம். சன்ரூஃப், இருக்கையின் உயரத்தை எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் முறையில் கூட்டிக் குறைக்கும் வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரிவர்ஸ் கேமரா, புஷ் பட்டன் ஸ்டார்ட், விரயமாகும் பிரேக் ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி பேட்டரியில் சேமிக்கும் தொழில்நுட்பம், க்ரூஸ் கன்ட்ரோல், நேவிகேஷன் வசதியுடன் கூடிய 2 டின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் மற்றும் பகல்நேர விளக்குள் என்று பெரிய பட்டியல் நீள்கிறது. வசதிகள் என்றாலே மஹிந்திரா எக்ஸ்யூவி500 எனும் அளவுக்கு ஏராளமான வசதிகள். இந்த விஷயத்திலும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியே முன்னிலை பெறுகிறது.

பாதுகாப்பு: டாடா சஃபாரி ஸ்ட்ராம்

பாதுகாப்பு: டாடா சஃபாரி ஸ்ட்ராம்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியில் ஓட்டுனர் மற்றும் முன்புற பயணிக்கான டியூவல் ஏர்பேக்ஸ், விபத்துக்களின்போது எஞ்சினுக்கு எரிபொருள் சப்ளையை தானியங்கி முறையில் நிறுத்தும் வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், அனைத்து சக்கரங்களுக்கும் சரியான விகிதத்தில் பிரேக் பவரை செலுத்தும் இபிடி மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பக்கவாட்டு மோதல்களை தாங்கிக் கொள்வதற்கான உறுதியான உடல் கூடு அமைப்பு போன்றவை இருக்கின்றன.

பாதுகாப்பு: மஹிந்திரா எக்ஸ்யூவி500

பாதுகாப்பு: மஹிந்திரா எக்ஸ்யூவி500

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சரிவான மலைப்பாதையில் கார் பின்னோக்கி அல்லது முன்னோக்கி நகர்வதை தடுக்கும் ஹில்ஹோல்டு மற்றும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. தவிரவும், கார் வழக்குவதை தவிர்க்கும் டிராக்ஷன் கன்ட்ரோல், அதிக நிலைத்தன்மையுடன் செல்வதற்கான ஸ்டெபிளிட்டி புரோகிராம், பிரேக் அசிஸ்ட் போன்ற பல பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கிறது. சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியைவிட மஹிந்திரா எக்ஸ்யூவி500 பாதுகாப்பு விஷயத்திலும் விஞ்சுகிறது.

தீர்ப்பு

தீர்ப்பு

டாடா சஃபாரி ஸ்ட்ராம் ஓர் சிறப்பான ஆஃப்ரோடு எஸ்யூவி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், கொடுக்கும் பணத்திற்கு மதிப்புமிக்கதாக பார்க்கும்போது, வசதிகள், பாதுகாப்பு, மைலேஜ், டிசைன் என்று அனைத்து விஷயங்களிலும் மஹிந்திரா எக்ஸ்யூவி500தான் சிறப்பானதாக இருக்கும்.

 

English summary
The Tata Safari was a good product for Tata Motors, which showcased that the company has a very capable SUV that meets practicality, with comfort. For Mahindra, the XUV was such a product, since it offered so much more comfort, for a very affordable price.let's see how the top spec variants compare with each other in terms of pricing, design, engine specification, features, and safety.
Story first published: Friday, December 11, 2015, 18:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more