பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் அதிக சக்திவாய்ந்த மாடல்களைகோவை ஜெயெம் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துடன் இணைந்து டாடா மோட்டார்ஸ் உருவாக்கியது. இந்த கூட்டணியில் உருவாக்கப்பட்ட டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இந்த பவர்ஃபுல் மாடல்களை அண்மையில் டிரைவ்ஸ்பார்க் டீம் டெஸ்ட் டிரைவ் செய்தது. அதன் அனுபவத்தை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

டிசைன்

சாதாரண டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களிலிருந்து வேறுபடும் விதத்தில் சில கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் கவர்ச்சிகர அம்சங்கள் டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்களில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. முன்புறத்தில் புதிய க்ரில் அமைப்பு, ஜேடிபி பேட்ஜ் பொருத்தப்பட்டு இருப்பது சிறப்பாக இருக்கிறது. இரட்டை சேம்பர் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், புதிய பனி விளக்குகள் மற்றும் பெரிய ஏர்டேம் அமைப்பு ஆகியவையும் முக்கிய மாற்றங்கள்.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

பானட் ஸ்கூப்

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களின் பானட்டில் ஸ்கூப் கொடுக்கப்பட்டு இருப்பதும் இதனை பெர்ஃபார்மென்ஸ் மாடல்கள் என்பதை எளிதாக கண்டறிய உதவுகிறது.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

பக்கவாட்டு டிசைன்

இரண்டு கார்களிலுமே புதிய 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருப்பது பிரிமீயம் மாடலாக காட்சி தருகின்றன. சைடு மிரர்களில் பிரத்யேக வண்ணம் தீட்டப்பட்டு பளிச்சென தெரிகிறது. கூரை மற்றும் ரூஃப் ஸ்பாய்லரில் பளபளப்பான கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு இருப்பது அசத்தல்.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

பின்புறத்தில் கிளியர் லென்ஸ் கொண்ட எல்இடி விளக்குகள் கொண்ட டெயில் லைட் க்ளஸ்ட்டர் மதிப்பை கூட்டும் விஷயம். ஜேடிபி பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், இரட்டைக் குழல் சைலென்சர்கள் இந்த கார்களின் முக்கிய அம்சமாக இருக்கின்றன.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

இன்டீரியர்

இரண்டு புதிய ஜேடிபி மாடல்களிலுமே கருப்பு வண்ண இன்டீரீயர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏசி வென்ட்டுகளை சுற்றிலும் சிவப்பு வண்ண அலங்கார வேலைப்பாடுகள் உட்புறத்தை பிரிமீயமாக காட்டுகிறது. அதேபோன்று, இருக்கைகளிலும் சிவப்பு வண்ணத் தையல் வேலைப்பாடுகளும், மிதியடிகளில் ஜேடிபி லோகோ இடம்பெற்று இருப்பதும் சிறப்பு. இந்த கார்கள் பெர்ஃபார்மென்ஸ் மாடல்கள் என்பதை உட்புறத்திலும் உணர்த்தும் விதத்தில், அலுமினியம் பெடல்கள் இடம்பெற்றுள்ளன.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களின் விலை உயர்ந்த மாடலில் கனெக்ட் நெக்ஸ்ட் நுட்பத்துடன் இயங்கும் ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. 5.0 அங்குல தொடுதிரை மூலமாக பல்வேறு வசதிகளை கட்டுப்படுத்த முடியும். ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். ஸ்டீயரிங் வீல் மூலமாக ஆடியோ சிஸ்டத்தையும், வாய்ஸ் கமாண்ட் வசதிகளையும் கட்டுப்படுத்த முடியும்.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

ஆடியோ சிஸ்டம்

டாடா டியாகோ காரின் ஆடியோ சிஸ்டம் மிகச் சிறப்பாக இருப்பதாக ஏற்கனவே அளித்த டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டில் சொல்லியிருந்தோம். அதேபோன்று, இந்த இரண்டு கார்களிலுமே இடம்பெற்றிருக்கம் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் ஆடியோ சிஸ்டம் மிகச் சிறந்த ஒலிதரத்தை வழங்குகின்றன.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

பூட்ரூம்

இந்த இரண்டு கார்களிலும் பூட்ரூம் கொள்திறனில் மாற்றங்கல் எதுவும் இல்லை. டாடா டியாகோ ஜேடிபி காரில் 242 லிட்டர் கொள்திறன் கொண்ட இடவசதி கொண்ட பூட் ரூம் பகுதியும், டிகோர் ஜேடிபி மாடலில் 419 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியும் உள்ளன.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

இடவசதி

பொதுவாக டாடா கார்கள் இடவசதியில் சிறப்பாக இருக்கும். அந்த வகையில், இந்த இரண்டு கார்களுமே இடவசதியில் சிறப்பாக இருக்கின்றன. இருக்கைகள் சவுகரியமாகவும், கால்களுக்கு நல்ல சப்போர்ட் தரும் விதத்திலும் உள்ளன. ஓட்டுனர் இருக்கையும் மிக சவுகரியமான உணர்வையும், வெளிப்புறத்தை பார்க்க சிறப்பாகவும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

டாடா டிகோர் ஜேடிபி காரின் வீல் பேஸ் 50 மிமீ அதிகரிக்கப்பட்டு இருப்பதால், பின்புற இருக்கையின் இடவசதி மேம்பட்டுள்ளது. கால் வைப்பதற்கு அதிக இடவசதியை உணர முடிந்தது. இந்த கார் வாடிக்கையாளரை நிச்சயம் கவரும் என நம்பலாம்.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

டாடா டியாகோ ஜேடிபி காரில் வழக்கமான லிவர் மூலமாக பூட் ரூம் மூடியை திறக்கும் வசதி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், டிகோர் ஜேடிபி மாடலில் எலெக்ட்ரிக் பூட் ரூம் ரிலீஸ் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டில் இருக்கும் பட்டன் மூலமாக எளிதாக திறக்கலாம்.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

எனினும், காரின் செயல்திறனை அதிகரித்துக் கொள்வதற்காக டேஷ்போர்டில் இருக்கும் ஸ்போர்ட் மோடு பட்டன் அருகிலேயே இந்த பூட் ரிலீஸ் பட்டன இருப்பது சமயத்தில் தவறுதலாக கை பட்டுவிட்டால் பூட் ரூம் திறந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கும். டியாகோ ஜேடிபி காரில் மேனுவல் ஏசி கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையில், டிகோர் ஜேடிபி மாடலில் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் உள்ளது.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

எஞ்சின்

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்களில் முக்கிய விஷயமாக பார்க்கப்படுவது, அதிசக்திவாய்ந்த புதிய எஞ்சின்தான். ஆம். இந்த காரில் இருக்கும் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 112 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

இந்த எஞ்சின் சாதாரணமாக 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்தில் இருந்தன. இதனை டர்போசார்ஜர் துணையுடன் 112 பிஎச்பி பவரை அளிக்கும் விதத்தில் கோவை ஜெயெம் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் ட்யூனிங் செய்துள்ளது.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

இந்த இரண்டு கார்களிலுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. சிறப்பான ஆக்சிலரேஷனை வழங்கும் விதத்தில் எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டிருப்பதை காரை கிளப்பியது முதலே உணர முடிகிறு. இந்த கார்கள் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 10 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை வாய்ந்ததாக இருக்கின்றன. மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும் விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

இந்த கார்களில் கொடுக்கப்பட்டு இருக்கும் சிட்டி மற்றும் ஸ்போர்ட் என்ற இரண்டு டிரைவிங் மோடுகள் மூலமாக காரின் எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ள முடியும். டேஷ்போர்டில் இருக்கும் பட்டன் மூலமாக டிரைவிங் மோடுகளை விருப்பப்படி மாற்ற முடியும். ஸ்போர்ட் மோடில் வைத்து பிக்கப் சிறப்பாக இருப்பதுடன், ஆக்சிலரேட்டரை கொடுக்க கொடுக்க எஞ்சின் தனது முழு திறனை காட்டி சிட்டாய் பறக்கிறது.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

சிட்டி மோடில் வைத்து ஓட்டும்போது டார்க் திறன் அதிகபட்சமாக 115 என்எம் என்ற அளவில் இருக்கும். இதனால், அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கான வழிவகையாக இருக்கிறது. எஞ்சின் 2,500 ஆர்பிஎம் என்ற அளவை தாண்டும்போது செயல்திறனை முழுமையாக உணர முடிகிறது. மிட்ரேஞ்சிலும் சிறப்பான டார்க் திறனை வெளிப்படுத்துவதும் சிறப்பானதாக இருக்கிறது.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

காரின் செயல்திறன் சிறப்பாக இருப்பதற்கு ஏற்ப, புதிய ஏர் இன்டேக் மற்றும் இரட்டை புகைப்போக்கி குழல் அமைப்பு ஆகியவற்றின் மூலமாக அலாதியான புகைப்போக்கி சப்தம் பெர்ஃபார்மென்ஸ் கார் பிரியர்களை மதிமயங்க செய்யும் என்பதில் ஐயமில்லை.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

டர்போசார்ஜர் மிட்ரேஞ்சில் அருமையாக துணைபுரிகிறது. இதனால், அதற்கு தக்கவாறு குறைவான கியர் ரேஷியோ கொண்ட 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் துல்லியமான கியர் மாற்றத்தை தருவதால், ஓட்டுவதற்கு உற்சாகமான அனுபவத்தை கொடுக்கிறது. அத்துடன், ஆக்சிலரேட்டரை விட்டு திரும்ப கொடுக்கும்போது வரும் அந்த அற்புதமான சப்தம் கார் பிரியர்களின் எதிர்பார்ப்புக்கு தீணி போடும் விஷயமாக இருக்கும்.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

இந்த சக்திவாய்ந்த எஞ்சினுக்கு தாக்குப் பிடிக்கும் விதத்தில் சஸ்பென்ஷன் இறுக்கமாக மாற்றம் செய்யப்பட்டு இருப்பதுடன், கிரவுண்ட் கிளியரன்ஸ் 4 மிமீ குறைக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் அகலமான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், கையாளுமை அருமையாக இருப்பதுடன், அதிக தரைப்பிடிப்புடன் செல்வதால், அச்சமின்றி ஓட்ட முடிகிறது.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

வளைவுகள் மற்றும் பள்ளம் மேடுகளை இந்த கார்களின் டயர்களும், சஸ்பென்ஷனும் எளிதாக எதிர்கொள்கின்றன. டியாகோ ஜேடிபி மாடல் சற்று குலுங்கல் அதிகம் இருந்தாலும், டிகோர் மாடல் அதிக வீல் பேஸ் கொண்டிருப்பதால், குலுக்கல் குறைவாக இருக்கிறது.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

ஸ்டீயரிங் சிஸ்டம் துல்லியமாக இருப்பதால், வளைவுகளில் பாடி ரோல் என்பதை கட்டுப்படுத்த முடிகிறது. மேலும், எந்த சாலைகளிலும் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை தருவதில் இதன் ஸ்டீயரிங் சிஸ்டத்திற்கும் முக்கிய பங்கு இருப்பதாக கூறலாம்.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

மைலேஜ்

செயல்திறன் வாய்ந்த கார்களில் மைலேஜை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது. இருப்பினும், இந்த இரண்டு கார்களும் சாதாரண மாடல்களைவிட 35 கிலோ கூடுதல் எடை கொண்டதாக இருக்கின்றன. எமது டெஸ்ட் டிரைவின்போது இரண்டு கார்களுமே சராசரியாக லிட்டருக்கு 15 கிமீ மைலேஜ் தந்தது.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

பாதுகாப்பு வசதிகள்

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதியுடன் வந்திருக்கும் முதல் டாடா கார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. வளைவுகளை பாதுகாப்பாக கடப்பதற்கு இது உதவுகிறது.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

வண்ணங்கள்

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்கள் பெர்ரி ரெட் மற்றும் பியர்ல்எசென்ட் ஒயிட் ஆகிய இரண்டு வண்ணங்களில் மட்டுமே கிடைக்கின்றன. இரண்டு வண்ணங்களிலுமே கருப்பு வண்ண கூரை கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

Engine 1,199cc, Turbocharged Petrol
No. Of Cylinders 3-Cylinder
Max Power 112.44 @5,000RPM
Max Torque 150Nm @2,000-4,000RPM
Transmission 5-Speed Manual
Ground Clearance 166mm
Fuel Tank Capacity 35L
0-100km/h 10 seconds
Top Speed 160km/h
பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

விலை விபரம்

டாடா டியாகோ ஜேடிபி கார் ரூ.6.39 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டாடா டிகோர் ஜேடிபி கார் ரூ.7.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதன் போட்டியாளர்களைவிட அதிக சக்திவாய்ந்த மாடலாகவும், சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் மாடல்களாகவும் கூற முடியும்.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

போட்டியாளர்கள்

டாடா டியாகோ ஜேடிபி கார் மாடலானது மாருதி பலேனோ ஆர்எஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ ஜேடி டிஎஸ்ஐ மற்றும் ஃபியட் அபார்த் புன்ட்டோ மாடல்களுடன் போட்டி போடும். விலை அடிப்படையில் நேரடி போட்டியாளர் இல்லை.

Model Displacement / No. Of Cylinders Power/Torque (BHP/NM) Starting Price
Maruti Suzuki Baleno RS 998cc / 3-Cylinder 101/150 8.45 lakh
Volkswagen Polo GT TSI 1,198cc / 4-Cylinder 103/175 9.40 lakh
Abarth Punto 1,368cc / 4-Cylinder 145/212 10.23 lakh
Tata Tiago JTP 1,199cc / 3-cylinder 112/150 6.39 lakh
பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

தீர்ப்பு

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் தோற்றம், செயல்திறன், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் விலை அடிப்படையில் மிகச் சிறந்த தேர்வாக இருக்கின்றன. அதிக செயல்திறனை விரும்பும் கார் பிரியர்களுக்கு மிகச் சிறந்த சாய்ஸாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், நாடுமுழுவதும் உள்ள மொத்தம் 30 டீலர்கள் வழியாகவே மட்டுமே இந்த கார்கள் விற்பனைக்கு கிடைக்கும் என்பதும், விற்பனைக்கு பிந்தைய சேவை தயக்கத்தை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது.

பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

சிறப்புத் தகவல்கள்

  • டாடா மோட்டார்ஸ் நிறுவனமும், கோவையை சேர்ந்த ஜெயெம் ஆட்டோமோட்டிவ் நிறுவனமும் இணைந்து ஜெயெம் டாடா ஸ்பெஷல் வெஹிக்கிள்ஸ் (JTSV) என்ற பெயரில் புதிய நிறுவனத்தை கடந்த ஆண்டு துவங்கின.
  • இந்த கூட்டணி தயாரித்த முதல் மாடல்களாக டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் வெளிவந்துள்ளன.
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார் மாடல்களை கோவை ஜெயெம் ஆட்டோமோட்டிவ் நிறுவனம்தான் சோதனைகளை செய்து கொடுத்து வருகிறது. எனவே, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் நீண்ட கால வர்த்தக உறவை பேணி வருகிறது. அதற்கு முன்னர் மஹிந்திரா உள்ளிட்ட பல ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறது.

Tamil
English summary
Tata launched the Tiago JTP and Tigor JTP at an ex-showroom price of Rs 6.39 lakh and Rs 7.49 lakh respectively. We drive both cars and here are our impressions.
Story first published: Saturday, November 10, 2018, 14:33 [IST]
 
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more