மாருதி பலேனோ கார் நிறைகளும், குறைகளும்!

By Saravana

கடந்த சில தசாப்தங்களுக்கு முன் தமிழகத்தை சேர்ந்த கார் பிரியர்களுக்கு அம்பாசடரை விட்டால் மாருதி கார்களுடன்தான் பிணைப்பு அதிகம் இருந்தது. ஆனால், வேகமான கால மாற்றங்களால், தொழில் மற்றும் பணி வாய்ப்புகளால் தமிழக வாடிக்கையாளர்களின் வருவாயும், எண்ண ஓட்டமும் மாறின. இதனால், சொகுசு வசதிகள், சக்திவாய்ந்த கார்கள் பக்கம் தமிழக வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது.

அதேநேரத்தில், சரியான விலையில் வரும் சிறந்த தயாரிப்புகளுக்கு தமிழர்கள் எப்போதுமே முன்னுரிமை கொடுக்க தவறியதில்லை. தமிழர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியர்களின் எதிர்பார்ப்புகளும் இப்போது வேகமாக மாறியிருக்கிறது. இதனை மனதில் கொண்டு மாருதி கார் நிறுவனம் புதிய மாடல்களை களமிறக்கி வருகிறது. உதாரணத்திற்கு, தமிழர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அம்சங்களுடன் வந்திருக்கும் கார்களில் ஒன்று மாருதி பலேனோ. இந்த காரை வாங்குவதற்கு திட்டமிட்டிருப்போர் சில விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

01. டிசைன்

01. டிசைன்

ஹூண்டாய் எலைட் ஐ20, ஃபோக்ஸ்வேகன் போலோ, ஹோண்டா ஜாஸ் போன்ற கார்களின் மார்க்கெட்டை குறிவைத்தே இந்த பலேனோ காரை மாருதி களமிறக்கியது. குறைகூற முடியாத சிறப்பான டிசைனை பெற்றிருக்கிறது.

சொல்லிடட்டுமா?

சக போட்டியாளர் ஹூண்டாய் எலைட் ஐ20 காருடன் ஒப்பிடும்போது, பலேனோ டிசைன் பின் தங்குகிறது.

02. இலகு கார்

02. இலகு கார்

பெரும்பாலான ஜப்பானிய தயாரிப்புகள் இலகு எடை கட்டமைப்பு கொண்டதாக இருக்கும். அதிக எரிபொருள் சிக்கனத்தை தருவதற்கு இதுவே காரணம். அந்த வகையில், மாருதி பலேனோ கார் வெறும் 865 கிலோ மட்டுமே எடை கொண்டது. இதனை உறுதிமிக்க பேனல்கள் கொடுக்கப்பட்டிருப்பதாக சொன்னாலும், அது மார்க்கெட்டிங் யுக்தியாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில், 5 லட்ச ரூபாய் காரில் எந்தளவு உறுதிமிக்க ஸ்டீல்கள் பயன்படுத்தப்படும் என்பது சந்தேகமே.

03. இடவசதி

03. இடவசதி

கார் வாங்கும் பலரும் இடவசதிக்கு முக்கியத்துவம் அளிப்பது இயல்பு. இந்த காரின் பின் இருக்கை சிறப்பான இடவசதியை அளிக்கிறது. குறிப்பாக, கால் வைக்கும் இடம் ஸ்விஃப்ட்டைவிட சிறப்பான இடவசதியை கொண்டுள்ளது. இது மனதில் வைக்க வேண்டிய முக்கியமான விஷயம்.

04. நம்பகமான எஞ்சின்

04. நம்பகமான எஞ்சின்

மாருதி ஸ்விஃப்ட், டிசையர் கார்களில் பயன்படுத்தப்படும் அதே பெட்ரோல், டீசல் எஞ்சின்கள்தான் பலேனோ காரிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின்கள் வாடிக்கையாளர்களிடத்தில் நம்பகத்தன்மையை பெற்றவை. எனவே, நம்பிக்கையாக வாங்கக்கூடிய எஞ்சின் ஆப்ஷன்களை பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், எஞ்சின் கவர் இல்லாததால், அதிக வெப்பம் ஏற்படும் சமயங்களில், மின்சார ஒயர்களில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

 05. மைலேஜ்

05. மைலேஜ்

போட்டியாளர்களை மாருதி கார்கள் வெல்வதன் ரகசியம் மைலேஜ்தான். ஆம், மாருதி பலேனோ காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 21.4 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 27.39 கிமீ மைலேஜையும் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 15 கிமீ முதல் 17 கிமீ வரையிலும், டீசல் மாடல் லிட்டருக்கு 20 கிமீ முதல் 22 கிமீ வரையிலும் மைலேஜ் தரும் என நம்பலாம். ஸ்விஃப்ட் காரில் 42 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் இருக்கும் நிலையில், இந்த காரில் 37 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் இருப்பதும் குறையே.

07. வசதிகள்

07. வசதிகள்

மாருதி பலேனோ காரில் வெளிப்புறத்திற்கு தக்கவாறு கேபினில் குளிர்ச்சியை கட்டிக் காட்டும் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி வசதி உள்ளது. அடுத்து, ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேரை சப்போர்ட் செய்யும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இதன்மூலமாக, பொழுதுபோக்கு வசதிகளையும், நேவிகேஷன் வசதியையும் பெற முடியும். பட்டன் மூலமாக எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் புஷ் பட்டன் ஸ்டார்ட், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் போன்ற வசதிகளும் இடம்பெற்றிருக்கின்றன. அதேநேரத்தில், ஆன்டி பின்ச் எனப்படும் கைவிரல்கள் பட்டால் தானாக இறங்கிக் கொள்ளும் கண்ணாடி ஜன்னல்களில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பதாக புகார்கள் எழுகின்றன.

08. பாதுகாப்பு

08. பாதுகாப்பு

அனைத்து சக்கரங்களுக்கும் தேவையான அளவு பிரேக் பவரை செலுத்தும் இபிடி மற்றும் ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள் போன்றவை பேஸ் மாடல்களிலேயே கிடைக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஆன்ட்டி கிளார் கண்ணாடி போன்ற வசதிகளும் டாப் வேரியண்ட்டில் இடம்பெற்று இருக்கின்றன. சில புதிய பலேனோ கார்களில், பிரேக் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக வாடிக்கையாளர் புகார் தெரிவிக்கின்றனர்.

09. பூட்ரூம்

09. பூட்ரூம்

இந்த கார் 339 லிட்டர் பூட் ரூம் இடவசதியை அளிக்கிறது. அதாவது, மாருதி ஸ்விஃப்ட் காரில் பொருட்கள் வைப்பதற்கு 207 லிட்டர் பூட் ரூம் இடவசதியும், மாருதி டிசையர் காம்பேக்ட் செடான் காரில் 316 லிட்டர் பூட் ரூம் இடவசதியும் உள்ள நிலையில், இவை இரண்டையும் விட சிறப்பான இடவசதியை அளிக்கிறது.

10. சபாஷ், சரியான விலை

10. சபாஷ், சரியான விலை

மிக சவாலான விலை என்றுதான் கூற வேண்டும். போட்டியாளர்களைவிட மிக குறைவான விலை கொண்ட பிரிமியம் ஹேட்ச்பேக் மாடல் என்பதாலேயே, இதற்கு அதிக அளவில் முன்பதிவு குவிந்துள்ளது. பெட்ரோல் மாடல் ரூ.6.04 லட்சம் ஆன்ரோடு விலையிலும், டீசல் மாடல் ரூ.7.28 லட்சம் ஆன்ரோடு விலையிலும் கிடைக்கிறது. அதாவது, போட்டி மாடல்களைவிட குறைந்தது ரூ.35,000 குறைவான விலை கொண்டிருப்பதை பார்க்க வேண்டும்.

11. நெக்ஸா அனுபவம்

11. நெக்ஸா அனுபவம்

மாருதி பலேனோ கார் சிறப்பம்சங்களில் முன்னிலை பெறுவதோடு, நெக்ஸா என்ற பிரிமியம் ஷோரூம்கள் வழியாக கிடைப்பது வாடிக்கையாளர்களுக்கு பல புதுவிதமான கார் வாங்கும் அனுபவத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன், நெக்ஸா வாடிக்கையாளர்களுக்கு சிறப்பானதொரு அனுபவம் கிடைப்பதுடன், பிரத்யேகமான மொபைல் அப்ளிகேஷனும் வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும். அதேநேரத்தில், நெக்ஸா ஷோரூம்களில் சிலவற்றின் மீது வாடிக்கையாளர்கள் சமூக வலை தளங்களில் வறுத்தெடுத்ததும் நினைவுக்கு வருகிறது.

எதிர்பார்ப்பு?

எதிர்பார்ப்பு?

மொத்தத்தில் மைலேஜ், விலை, வசதிகள், டிசைன் போன்ற பொதுவான அம்சங்களில் குறைகளைவிட நிறைவான கார்தான் பலேனோ. மைலேஜும் விலையை மட்டும் வைத்து கணித்தால் போதுமா? பாதுகாப்பும், கட்டுமானத்தரமும் வேண்டும் என்பவர்கள் ஃபோக்ஸ்வேகன் போலோவையும், ஃபியட் புன்ட்டோவையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு முடிவெடுங்கள். அத்துடன், ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் கார்களையும் ஒரு டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு முடிவுக்கு வரவும்.

தொடர்புடைய செய்தி

தொடர்புடைய செய்தி

மாருதி கார் ஷோரூம் Vs நெக்ஸா கார் ஷோரூம்: ஒப்பீடு

Most Read Articles
English summary
Think twice before you buy the Maruti Baleno, DriveSpark Inspection Reveals..the truth!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X