மகளிர் தின ஸ்பெஷல்: பெண்களுக்கு ஏற்ற டாப் 10 கார்கள்!

Written By:

இன்று சர்வதேச மகளிர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பெண்களை போற்றும் இந்த தினத்தில், இன்று குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆண்களுக்கு நிகரான பணிகளை கையிலெடுத்து செவ்வனே செய்து வரும் பெண்களுக்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாழ்த்துகளை தெரிவிக்கிறது.

கல்லூரி, அலுவலகம், குழந்தைகளை பள்ளியில் விடுவது என றெக்கை கட்டி பறந்து வரும் பெண்கள் அடுத்தவரை எதிர்பாராமல் சுலபமாக சென்று வருவதற்கு இன்று அவர்களுக்கென தனி வாகனம் இருப்பது அவசியமாகியுள்ளது. இருசக்கர வாகனங்கள் எளிதான போக்குவரத்து சாதனமாக இருந்தாலும், அவர்களுக்கான சமூக பாதுகாப்பு குறைந்துள்ள இந்த நேரத்தில் கார் என்பது அவர்களுக்கு ஓரளவு சிறந்த பாதுகாப்பை தரும் போக்குவரத்து சாதனமாக இருக்கும்.

இதை கருத்தில்கொண்டு பெண்கள் எளிதாக ஓட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும் சிறந்த ஆட்டோமேட்டிக் கார்களின் விபரங்களை ஸ்லைடரில் வழங்கியிருக்கிறோம். அவரவர் பட்ஜெட், விருப்பத்திற்கு ஏதுவான அனைத்து பிராண்டுகளில் பெண்களுக்கு பொருத்தமான புதிய கார் மாடல்களின் விபரங்களை தொகுத்து வழங்கியிருக்கிறோம். இது அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என நம்புகிறோம்.

 01. டாடா நானோ ஜென்எக்ஸ் ஏஎம்டி

01. டாடா நானோ ஜென்எக்ஸ் ஏஎம்டி

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு க்ளட்ச் பெடல் தொல்லை இல்லாத ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. குறைவான விலையில் கிடைக்கும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட கார் மாடலும் நானோ என்பது மனதில் வையுங்கள். லிட்டருக்கு 21.9 கிமீ மைலேஜ் தருவதும் நகர்ப்புற பெண் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பானதே. பவர் ஸ்டீயரிங், மியூசிக் சிஸ்டம், சார்ஜர் போன்ற வசதிகளும் இருக்கிறது. சென்னையில் ரூ.3.50 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

02. மாருதி ஆல்ட்டோ கே10 ஏஎம்டி

02. மாருதி ஆல்ட்டோ கே10 ஏஎம்டி

மாருதி ஆல்ட்டோ கே10 காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் எல்லா விதத்தலும் சிறப்பான சாய்ஸ் என்று கூறலாம். 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் இதன் ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் லிட்டருக்கு 24.07 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. சிறப்பான வசதிகளுடன் மாருதியின் வலுவான சர்வீஸ் நெட்வொர்க் வசதி, குறைவான பராமரிப்பு செலவு, சரியான விலை போன்றவை இதனை முன்னிறுத்தும் அம்சங்கள். பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ் மற்றும் டாப் வேரியண்ட்டில் ஆப்ஷனலாக ஏர்பேக் போன்றவை இருக்கின்றன. சென்னையில் ரூ.4.78 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

 03. மாருதி செலிரியோ

03. மாருதி செலிரியோ

டிசைன், வசதிகள், மைலேஜ் என அனைத்திலும் நிறைவை தரும் மாடல். 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் இணைக்கப்பட்டிருக்கம் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. லிட்டருக்கு 23.01 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மாடல் விற்பனையிலும் கலக்கி வருகிறது. அத்துடன் மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் குறைவான பராமரிப்பு செலவீனம் இதற்கு வலுசேர்க்கின்றது. சென்னையில் ரூ.5.25 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

04. ஹோண்டா பிரியோ

04. ஹோண்டா பிரியோ

பெண்களை கவரும் மாடல்களில் ஒன்று. சிறப்பான இடவசதி, நகர்ப்புற சாலை,நெடுஞ்சாலை இரண்டிற்கும் சிறந்த மாடல். சிலருக்கு டிசைன்தான் குறையாக தெரிந்தாலும், ஹோண்டாவி பிராண்டின் நம்பகத்தன்மை இதற்கு பெரும் பலம். இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கிறது. லிட்டருக்கு 18.9 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் இதன் ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.7.40 லட்சத்தை ஒட்டிய ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது. மைலேஜ் குறைவு, பராமரிப்பு செலவு கூடுதல் என்பது குறையாக இருந்தாலும், ஹோண்டா பிரியர்களுக்கும், சிறப்பான சாய்ஸ்.

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

சிறப்பான டிசைன், ஏராளமான வசதிகள், சிறந்த மறுவிற்பனை மதிப்பு, அதிக எரிபொருள் சிக்கனம் என கண்ணை மூடிக் கொண்டு வாங்கக்கூடிய மாடல். இதன் பெட்ரோல் மாடல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் கிடைக்கிறது. இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. லிட்டருக்கு 16.95 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் ரூ.7.32 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

06. ஃபோர்டு ஃபிகோ சிவிடி

06. ஃபோர்டு ஃபிகோ சிவிடி

புதிய தலைமுறை ஃபிகோ கார் வசதிகளிலும், தொழில்நுட்பத்திலும் தற்போதைய நிலையில் ஓர் சிறப்பான மாடல். கையாளுமை, மைலேஜ், விலை என அனைத்திலும் பொருத்தமாக இருக்கும். இந்த காரின் பவர் டெலிவிரியும் சிறப்பாக இருப்பதால், ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும். இந்த காரில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. லிட்டருக்கு 17 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த காரை கணவன், மனைவி என இருவரும் ஓட்டுவதற்கு ஏதுவானதாக இருக்கும். தினசரி பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, நீண்ட தூர பயணங்களுக்கும் சிறப்பானது. சென்னையில் ரூ.8 லட்சத்தையொட்டிய ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

07. நிசான் மைக்ரா எக்ஸ்- ஷிஃப்ட்

07. நிசான் மைக்ரா எக்ஸ்- ஷிஃப்ட்

சிறப்பான டிசைன், வசதிகள், அதிக மைலேஜ் ஆகியவற்றுடன் சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட நிசான் மைக்ராவும் பெண்களுக்கு ஏற்ற சிறப்பான மாடல்களில் ஒன்று. இந்த காரில் இருக்கும் இந்த கார் லிட்டருக்கு 18.44 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் ரூ.7.28 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

08. மாருதி பலேனோ சிவிடி

08. மாருதி பலேனோ சிவிடி

கொஞ்சம் பிரிமியம் ஹேட்ச்பேக் மாடலை விரும்பும் பெண்களுக்கு மாருதி பலேனோ சிவிடி மாடல் சிறப்பாக இருக்கும். சரியான விலை, அதிக மைலேஜ் தரும் நம்பகமான எஞ்சின், டிசைன், வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்திலும் தன்னிறைவை தருகிறது. இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 21.4 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. ரூ.7.92 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

09. ஹோண்டா ஜாஸ் சிவிடி

09. ஹோண்டா ஜாஸ் சிவிடி

டிசைன், வசதிகள், இடவசதியில், நம்பகமான ஹோண்டா எஞ்சின் போன்ற பல வலுவான காரணங்கள் கொண்ட ஹோண்டா ஜாஸ் காரின் சிவிடி மாடல் பேடில் ஷிஃப்ட் வசதியுடன் வருகிறது. எனவே, இரு பாலருக்கும் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும். இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட சிவிடி மாடல் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் ரூ.8.19 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

10. ஹோண்டா சிட்டி சிவிடி

10. ஹோண்டா சிட்டி சிவிடி

பிரிமியம் கார் மாடலை விரும்பும் பெண்களுக்கு ஹோண்டா சிட்டி சிறந்த சாய்ஸாக இருக்கும். டிசைன், தரம், வசதிகள், எரிபொருள் சிக்கனம், மறு விற்பனை மதிப்பு என அனைத்திலும் சிறந்த மாடல். இந்த காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாடல் லிட்டருக்கு 18 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் ரூ.11.23 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

இன்னொரு சாய்ஸ்

இன்னொரு சாய்ஸ்

மார்க்கெட்டின் சமீபத்திய சூப்பர் டூப்பர் ஹிட் மாடலான ரெனோ க்விட் கார் டிசைன், வசதிகள், மைலேஜ் என அனைத்திலும் சிறப்பாக இருப்பதோடு, விலையும் குறைவான மாடல். ஆனால், தற்போது மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக மட்டுமே கிடைக்கிறது. அதேநேரத்தில், புதிய 1.0 லிட்டர் எஞ்சினுடன் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதை நினைவில் வைக்கவும்.

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

இலகுவான பவர் ஸ்டீயரிங், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், வசதிகள், பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையில் ரூ.12 லட்சத்திற்குள் விலை கொண்ட பெண்கள் ஓட்டுவதற்கு ஏற்ற புதிய கார் மாடல்களை தேர்ந்தெடுத்து இங்கே வழங்கியிருக்கிறோம். இந்த பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு மாடல்களுமே ஒவ்வொரு விதத்தில் சிறந்தவை. எனவே, தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு அமையும்.

 

English summary
Top 10 Best Cars For Women.
Story first published: Tuesday, March 8, 2016, 13:16 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more