அதிக மைலேஜ் தரும் டாப் - 10 டீசல் எஸ்யூவி மாடல்கள்: சிறப்புத் தொகுப்பு

Written By:

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு தெரிந்ததே. எம்பிவி கார்களைவிட எஸ்யூவி மாடல்களுக்கே இந்தியாவில் அதிக வரவேற்பு இருப்பதாக ஹூண்டாய் உயர் அதிகாரிகூட சமீபத்தில் கூறியிருக்கிறார்.

இந்திய சாலை நிலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ற தரை இடைவெளி, இடவசதி, ஹேட்ச்பேக் கார்களுக்கான இணையான மைலேஜ், அனைவருக்கும் ஏற்ற பட்ஜெட்டில் பல எஸ்யூவி மாடல்கள் கிடைப்பது, இந்த செக்மென்ட்டின் வளர்ச்சி நாலு கால் பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இந்தியர்கள் மைலேஜிற்கு முன்னுரிமை அளிப்பது வழக்கம். அந்த வகையில், சொகுசு ரகத்தை தவிர்த்து, அதிக மைலேஜ் தரும் டாப் 10 டீசல் எஸ்யூவி மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

10. மஹிந்திரா டியூவி300

10. மஹிந்திரா டியூவி300

மஹிந்திரா குவான்ட்டோ எதிர்பார்த்த அளவு விற்பனையில் சோபிக்காததையடுத்து, மஹிந்திரா நிறுவனம் களமிறக்கிய கம்பீரமான டிசைன் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி மாடல். இதிலும், 7 பேர் வரை செல்வதற்கான இருக்கை வசதி உள்ளது. கஸ்டமைஸ் ஆப்ஷன்கள் மூலமாக இந்த எஸ்யூவியின் தோற்றத்தை மிக கவர்ச்சியாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

 டியூவி300 மைலேஜ்

டியூவி300 மைலேஜ்

மைலேஜ்: 18.5 கிமீ/லி மஹிந்திரா

நூவோஸ்போர்ட் எஸ்யூவியில் இருக்கும் அதே 1.5 லிட்டர் எம்ஹாக் எஞ்சின்தான் இந்த எஸ்யூவியிலும் இடம்பிடித்துள்ளது. ஆனால், இந்த எஞ்சின் 84 பிஎச்பி பவரையும், 100 பிஎச்பி பவரையும் அளிக்கும் விதத்தில் இரண்டுவிதமான ட்யூனிங்கில் கிடைக்கிறது. மேனுவல் தவிர்த்து, ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் தேர்வு செய்யும் வாய்ப்புள்ளது. சிறப்பான செயல்திறன், அதிக சிறப்பம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருவதுடன், மஹிந்திரா விற்பனையிலும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. ரூ.7.34 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

09. மஹிந்திரா தார்

09. மஹிந்திரா தார்

ஆஃப்ரோடு பிரியர்களின் முதல் விருப்ப தேர்வாக இருந்து வரும் மஹிந்திரா தார் எஸ்யூவியும் எரிபொருள் சிக்கனத்தில் சிறப்பான மாடலாக விளங்குகிறது. மிக குறைவான விலை கொண்ட சிறந்த ஆஃப்ரோடு மாடல். ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், கழற்றி பொருத்தும் வசதி கொண்ட கூரை அமைப்பு, 4 வீல் டிரைவ் சிஸ்டம் போன்றவை இதன் முக்கிய சிறப்புகள்.

தார் மைலேஜ்

தார் மைலேஜ்

மைலேஜ்: 18.06 கிமீ/லி

இந்த மாடல் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 2.6 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கிறது. இதில், 2.6 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடல் சிறப்பான மைலேஜை வழங்குகிறது. இந்த மாடல் லிட்டருக்கு 18.06 கிமீ வரை மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரூ.6.30 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

08. ரெனோ டஸ்ட்டர்

08. ரெனோ டஸ்ட்டர்

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டிற்கு பிள்ளையார் சுழி போட்டு கலக்கிய மாடல். எஸ்யூவி மாடல்கள் மீதான மோகத்தை அதிகரிக்க வைத்த ரெனோ டஸ்ட்டர் தற்போது புதுப்பொலிவுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோன்று, இன்டீரியர் மாற்றங்களையும் பெற்றிருப்பதோடு, தற்போது ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது. சிறப்பான இடவசதி, பொருட்களுக்கான இடவசதி, செயல்திறன் மிக்க எஞ்சின் என அனைத்து விதத்திலும் நிறைவான எஸ்யூவி.

டஸ்ட்டர் மைலேஜ்

டஸ்ட்டர் மைலேஜ்

மைலேஜ்: 19.87 கிமீ/லி

டஸ்ட்டர் எஸ்யூவி 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்டதாகவும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் 84 பிஎச்பி மற்றும் 108 பிஎச்பி பவரை வழங்கும் விதத்தில் இரண்டு மாடல்களிலும் கிடைக்கிறது. இதில், 84 பிஎச்பி பவரை வழங்கும் டீசல் மாடல் லிட்டருக்கு 19.87 கிமீ மைலேஜை தருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய டஸ்ட்டர் எஸ்யூவி ரூ.9.40 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

07. நிசான் டெரானோ

07. நிசான் டெரானோ

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ரீபேட்ஜ் மாடலாக வந்த நிசான் டெரானோ தனக்கென தனி வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது. டஸ்ட்டரை விட பிரிமியம் அம்சங்களை சிலவற்றை சேர்த்துக் கொண்டு வசீகரித்து வருகிறது.

டெரானோ மைலேஜ்

டெரானோ மைலேஜ்

மைலேஜ்: 20.45 கிமீ/லி

ரெனோ டஸ்ட்டரில் இடம்பெற்றிருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த எஸ்யூவியிலும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், கூடுதல் மைலேஜ் தரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ரூ.9.99 லட்சம் விலையிலிருந்து கிடைக்கிறது. ஒப்பந்தப்படி, ரெனோ டஸ்ட்டரைவிட கூடுதல் விலை வைக்க வேண்டிய கட்டாயம். அதனை வாடிக்கையாளர் தலையில் சுமத்தியது இந்த மாடலுக்கான பின்னடைவாக இருக்கிறது.

 06. ஹூண்டாய் க்ரெட்டா

06. ஹூண்டாய் க்ரெட்டா

இந்தியாவின் சூப்பர் டூப்பர் ஹிட் எஸ்யூவி மாடலாக வலம் வருகிறது. அசத்தலான டிசைன், எஞ்சின் ஆப்ஷன்கள், வசதிகள், பாதுகாப்பு, இடவசதி என அனைத்திலும் திருப்தியை தரும் மாடல். குறிப்பாக, இதன் டிசைன் இந்திய வாடிக்கையாளர்களை சுண்டி இழுத்து வருகிறது.

க்ரெட்டா மைலேஜ்

க்ரெட்டா மைலேஜ்

மைலேஜ்: 21.38 கிமீ/லி

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி பெட்ரோல் மாடல் தவிர்த்து, 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் லிட்டருக்கு 21.38 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. ரூ.10.05 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

05. ஹோண்டா பிஆர்வி

05. ஹோண்டா பிஆர்வி

முழுமையான 7 சீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக வந்திருக்கிறது. அதிக கிரவுண்ட் கிளிரயன்ஸ், சிறப்பம்சங்கள், ஆட்டோமேட்டிக் மாடல் இந்த எஸ்யூவியின் மதிப்பை உயர்த்துகின்றன.

பிஆர்வி மைலேஜ்

பிஆர்வி மைலேஜ்

மைலேஜ்: 21.9 கிமீ/லி

ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியின் டீசல் மாடலில் 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்க வல்ல 1.5 லிட்டர் எஞ்சின் உள்ளது. ரூ.9.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

04. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

04. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

4 மீட்டர் நீளத்துக்குள் வடிவமைக்கப்பட்ட அசத்தலான எஸ்யூவி மாடல் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட். இன்றைக்கும் வாடிக்கையாளர் தேர்வில் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. வெளித்தோற்றம், உட்புற வடிவமைப்பு, வசதிகள், தொழில்நுட்பம், எஞ்சின் ஆப்ஷன்கள் என அனைத்திலும் அசத்துகிறது.

 ஈக்கோஸ்போர்ட் மைலேஜ்

ஈக்கோஸ்போர்ட் மைலேஜ்

மைலேஜ்: 22.3 கிமீ/லி

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடல் லிட்டருக்கு 22.3 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 98.59 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. டீசல் மாடல் ரூ.7.4 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

 03. மாருதி எஸ் க்ராஸ்

03. மாருதி எஸ் க்ராஸ்

ஹூண்டாய் க்ரெட்டாவின் வருகையால் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மாருதி எஸ் க்ராஸ் கார் வழக்கம் போல சிறப்பான மைலேஜ் தரும் மாருதி காராக தன்னை முன்னிறுத்துகிறது. அதிக இடவசதி, வசதிகள், நம்பகமான எஞ்சின் போன்றவை இதற்கு வலு சேர்க்கும் அம்சங்கள். போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது டிசைன் மைனஸ் பாயிண்ட்டாக அமைந்துவிட்டது.

எஸ் க்ராஸ் மைலேஜ்

எஸ் க்ராஸ் மைலேஜ்

மைலேஜ்: 23.65 கிமீ/லி

மாருதி எஸ் க்ராஸ் கார் 1.3 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் லிட்டருக்கு 23.65 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. ரூ.8.4 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

02. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

02. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

ஹூண்டாய் க்ரெட்டாவால் ஏற்பட்ட நெருக்கடியை போக்குவதற்கு மாருதி களமிறக்கிய மினி எஸ்யூவி மாடல். எதிர்பார்த்தது போலவே, இன்றைய தேதியில் 55,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த மினி எஸ்யூவி மாடல் போட்டியாளர்களை பல விதத்தில் விஞ்சி நிற்கிறது. குறிப்பாக, விலை, டிசைன், மாருதியின் வலுவான சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவை முக்கிமானவை.

பிரெஸ்ஸா மைலேஜ்

பிரெஸ்ஸா மைலேஜ்

மைலேஜ்: 24.3 கிமீ/லி

இந்த எஸ்யூவி 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடலில் மட்டுமே கிடைக்கிறது. ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையாக அதிக மைலேஜ் என்பதும், குறைவான விலையும் இந்த காருக்கு அதிக வரவேற்பு கிடைத்திருப்பதற்கான முக்கிய காரணங்கள். ரூ.7.10 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

01. மஹிந்திரா கேயூவி100

01. மஹிந்திரா கேயூவி100

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் டீசல் எஸ்யூவி என்ற பெருமையை மஹிந்திரா கேயூவி100 பெறுகிறது. இது மினி எஸ்யூவி மாடலாக இருந்தாலும் 6 பேர் செல்வதற்கான இருக்கை வசதியை கொண்டிருப்பது இதன் முக்கிய சிறப்பு. மேலும், புத்தம் புதிய எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

கேயூவி100 மைலேஜ்

கேயூவி100 மைலேஜ்

மைலேஜ்: 25.3 கிமீ/லி

கேயூவி100 எஸ்யூவியில் இருக்கும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 77 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. அத்துடன், அதிக மைலேஜ், விலை குறைவான எஸ்யூவி மாடல் என்பது இதற்கு வலு சேர்க்கும் அம்சங்கள். அதேநேரத்தில், இதன் டிசைன் அனைவரையும் கவரும் என்று கூற முடியாது. ரூ.5.48 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து இதன் டீசல் மாடல் கிடைக்கிறது.

அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் - 8 டீசல் கார்கள்!

அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் - 8 டீசல் கார்கள்!

 

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark