டாப் என்ட்ரி லெவல் செடான் கார்கள் - எது பெஸ்ட்?

By Saravana

4 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட கார்களுக்கு வரியை மத்திய அரசு உயர்த்தி நாள் முதல் காம்பெக்ட் செடான் கார்களின் வரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மிக கவர்ச்சிகரமான ஆரம்ப விலைகளில் கிடைக்கும் இந்த செடான் கார்கள் வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது.

மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் போன்ற கார்களின் விற்பனை மேலும் பல நிறுவனங்களை இந்த மார்க்கெட்டிற்குள் வலுக்கட்டாயமாக இழுத்து வந்து தள்ள முயற்சித்து வருகிறது. விற்பனையில் இருக்கும் மாடல்களுக்கு பதிலாக புதிய மாடல்களை 4 மீட்டருக்கும் குறைவாக இருக்கும் வகையில் பல நிறுவனங்கள் டிசைன் செய்து அறிமுகம் செய்து வருகின்றன. 4 மீட்டருக்கும் குறைவான கார்கள் மட்டுமின்றி, இந்த என்ட்ரி லெவல் செடான் கார் மார்க்கெட்டில் கிடைக்கும் முக்கிய செடான் கார்கள் பற்றிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 செவர்லே செயில் செடான்

செவர்லே செயில் செடான்

சாதகங்கள்: செயில் யுவா காரின் செடான் வெர்ஷன். தோற்றத்தில் சிறப்பான இந்த கார் மிகவும் தாராள இடவசதி கொண்டது. சிறப்பான ஓட்டுதல் தரம், நிறைவான வசதிகளுடன் கிடைக்கிறது.

பாதகங்கள்: கவர்ச்சியற்ற இன்டிரியர், பின்புற இருக்கையில் 3 பேர் சவுகரியமாக அமர இயலாது.

செயில் செடான்

செயில் செடான்

விலை: ரூ.5.11 லட்சம்

மைலேஜ்:

பெட்ரோல்: 18.2 கிமீ/லி

டீசல்: 22 கிமீ/லி

செயில் செடான் முழு விபரம்

ஃபோர்டு கிளாசிக்

ஃபோர்டு கிளாசிக்

சாதகங்கள்: கையாளுமை சிறப்பான இந்த கார் ஓட்டுதலிலும், இடவசதியிலும் நிறைவை கொடுக்கும். ஒட்டுமொத்தத்தில் சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் கொண்ட கார்.

பாதகங்கள்: பழமையான டிசைன், டாப் வேரியண்ட்டை தவிர மற்ற வேரியண்ட்டுகளில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லை.

ஃபோர்டு கிளாசிக்

ஃபோர்டு கிளாசிக்

விலை: ரூ.5.64 லட்சம்

மைலேஜ்

பெட்ரோல் 13.9 கிமீ/லி

டீசல் 20 கிமீ/லி

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ்

சாதகங்கள்: மார்க்கெட்டில் தற்போது அதிக மைலேஜ் தரும் கார் ஹோண்டா அமேஸ்தான். லிட்டருக்கு 25.8 கிமீ மைலேஜ் தருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மாருதி டிசையரைவிட பின்புற இருக்கையில் மிக தாராள இடவசதியை கொண்டுள்ளது. இந்த செக்மென்ட்டில் மிக அதிக பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூம் கொண்ட கார் மாடலும் இதுவே. இதுபோன்ற பல சாதகமான அம்சங்களுடன் ஹோண்டா பிராண்டு மதிப்பும் அமேஸுக்கு மிக பக்கபலமாக இருக்கிறது. ஸ்மூத்தான கியர் பாக்ஸ், இலகு ஸ்டீயரிங் ஆகியவை நகர்ப்புறம், நெடுஞ்சாலை என இரண்டிற்கும் சிறப்பாக பொருந்துகிறது அமேஸ். தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற என்ட்ரி லெவல் மாடல்.

பாதகங்கள்: சுமாரான டேஷ்போர்டு டிசைன், அதிக அதிர்வுகள் கொண்ட டீசல் எஞ்சின், அதிவேகத்தில் சரியான ரெஸ்பான்ஸ் இல்லாத இலகு ஸ்டீயரிங்.

 ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ்

விலை: ரூ.5.05 லட்சம்

மைலேஜ்

பெட்ரோல்: 18 கிமீலி

டீசல்: 25.8 கிமீலி

மாருதி டிசையர்

மாருதி டிசையர்

சாதகங்கள்: அதிக எரிபொருள் சிக்கனம், சிறந்த ஓட்டுதல் தரத்தை வழங்குகிறது. நகர்ப்புறத்தில் எளிதான கையாளுமை கொண்ட மாடல். மாருதியின் சிறந்த சர்வீஸ் சேவையும் இந்த காருக்கு உற்ற பலமாகும். ஆட்டோமேட்டிக் மாடலிலும் கிடைக்கிறது. நம்பகமான கார் மாடல்.

பாதகங்கள்: ஒட்ட வைத்தது போன்ற கவர்ச்சியற்ற பின்புற டிசைன், அமேஸ், எட்டியோஸ், கிளாசிக் அளவுக்கு இடவசதி இல்லாதது, நெடுஞ்சாலையில் கைகொடுக்காத பிரேக் சிஸ்டம் போன்றவை குறையாக இருக்கிறது.

மாருதி ஸ்விஃப்ட் டிசையர்

மாருதி ஸ்விஃப்ட் டிசையர்

விலை: ரூ.4.92 லட்சம்

மைலேஜ்

பெட்ரோல்: 19 கிமீ/லி

டீசல்: 23.4 கிமீ/லி

 டொயோட்டா எட்டியோஸ்

டொயோட்டா எட்டியோஸ்

சாதகங்கள்: சிறப்பான ஓட்டுதல் தரம், சிறந்த 5 பேர் அமர்வதற்கான இடவசதி, அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட டீசல் எஞ்சின்.

பாதகங்கள்: நெடுஞ்சாலையில் பெர்ஃபார்மென்ஸ் இல்லாத எஞ்சின், போட்டியாளர்களை ஒப்பிடும்போது சிறந்த கையாளுமை இல்லாதது, மோசமான கிளட்ச், கவர்ச்சியற்ற டிசைன்.

 டொயோட்டா எட்டியோஸ்

டொயோட்டா எட்டியோஸ்

விலை: ரூ.5.49 லட்சம்

மைலேஜ்

பெட்ரோல்: 16.78 கிமீ/லி

டீசல்: 23.59 கிமீ/லி

 டாடா இண்டிகோ இசிஎஸ்

டாடா இண்டிகோ இசிஎஸ்

சாதகங்கள்: சிறந்த பட்ஜெட் செடான் கார். டாப் வேரியண்ட் கூட போட்டியாளர்களைவிட குறைவான விலையில் கிடைக்கிறது.

பாதகங்கள்: மென்மையான சஸ்பென்ஷன் உள்ளதால் பாடி ரோல் அதிகம். பிட் அண்ட் பினிஷ் மோசம். குறிப்பாக, கேபின் தரமும், பினிஷிங்கும் சரியாக இல்லை.

டாடா இண்டிகோ இசிஎஸ்

டாடா இண்டிகோ இசிஎஸ்

விலை: ரூ.4.99 லட்சம்

மைலேஜ்

பெட்ரோல்: 14 கிமீ/லி

டீசல்(பிஎஸ்-4): 25 கிமீ/லி

மஹிந்திரா வெரிட்டோ

மஹிந்திரா வெரிட்டோ

சாதகங்கள்: ரெனோ லோகனின் ரீபேட் மாடல். அதிக எரிபொருள் சிக்கனம் தரும் எஞ்சின், இடவசதி.

பாதகங்கள்: மோசமான கிளட்ச், கவர்ச்சியற்ற தோற்றம்.

டாடா மான்ஸா

டாடா மான்ஸா

சாதகங்கள்: இந்த செக்மென்ட்டில் சொகுசான கார். மைலேஜ், இடவசதியிலும் குறையில்லை.

பாதகங்கள்: டாடாவின் மோசமான சர்வீஸ், தோற்றம்.

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

குறைவான விலையில் செடான் வாங்க விரும்புவோர்க்கு டாடா இண்டிகோ இசிஎஸ் தக்க மாடல். கையாளுமை சிறப்பான மாடலை வேண்டுவோர்க்கு ஃபோர்டு கிளாசிக் சிறந்த சாய்ஸ். சரியான விலை, மைலேஜ், சொகுசை விரும்புவோர்க்கு ஹோண்டா அமேஸ் பெஸ்ட் மாடலாக பரிந்துரைக்கலாம்.

Most Read Articles
English summary
The tax hike introduced by the government for cars longer than 4 meters resulted in the creation of an entirely new segment in India. Sub-4 meter or compact sedans. These are entry level sedans available for less than INR 10 lakhs fully loaded and extremely attractive starting prices.
Story first published: Monday, November 18, 2013, 15:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X