புதிய டொயோட்டா கேம்ரி காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

உலக அளவில் பல்வேறு நாட்டு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற விருப்பமான செடான் ரக கார் மாடலாக டொயோட்டா கேம்ரி கார் விளங்குகிறது. 1982ம் ஆண்டு முதல் விற்பனையில் இருந்து வரும் டொயோட்டா கேம்ரி 2017ம் ஆண்டு டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது.

2019 டொயோட்டா கேம்ரி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

உலக அளவில் மிக நீண்டகாலமாக விற்பனையில் இருக்கும் டொயோட்டா கேம்ரி கார் தற்போது ஹைப்ரிட் எரிசக்தி நுட்பத்துடன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த காரை ஹைதராபாத்தில் வைத்து எமது டிரைவ்ஸ்பார்க் குழுவினர் டெஸ்ட் டிரைவ் செய்தனர். அப்போது இந்த கார் பற்றிய சாதக, பாதக விஷயங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

 டிசைன்

டிசைன்

ஆரம்பத்தில் காம்பேக்ட் ரக செடான் காராக அறிமுகம் செய்யப்பட்டு, பின்னர் மிட்சைஸ் மாடலாக வந்தது. அதன்பிறகு, அகலமான உடல்கூடு உடைய மாடலாக மாற்றம் செய்யப்பட்டு தற்போது 8வது தலைமுறை மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காருக்கு உலக அளவில் தனி மதிப்பு உண்டு. இந்த காரின் டிசைன் வாடிக்கையாளர்களை எளிதில் கவரும் விதத்தில் மாற்றப்பட்டு இருக்கிறது.

 முகப்பு

முகப்பு

முகப்பு டிசைன் மிக மிரட்டலாக மாற்றப்பட்டு இருக்கிறது. கச்சிதமான ஹெட்லைட், டொயோட்டா லோகோவுடன் பறவை பறப்பது போன்ற வி வடிவிலான க்ரில் அமைப்பு, அதன் கீழே வரி வரியாக கொடுக்கபட்டு இருக்கும் ஏர்டேம் என முற்றிலும் புதிய தோற்றத்திற்கு மாறி இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள் அசத்தலான தோற்றத்தை தருகிறது.

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன்

புதிய டொயோட்டா கேம்ரி காரின் கூரை அமைப்பு முன்புறத்திலிருந்து பின்புற பூட்ரூமை அவசரமில்லாமல் மிக நேர்த்தியாக தாழ்ந்து இணைக்கிறது. அதேபோன்று, ஏ பில்லருக்ககு கீழே துவங்கும் பாடி லைன் பூட் ரூம் வரை செல்கிறது. அதனூடாக க்ரோம் கைப்பிடிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பாடி லைனை ஒட்டி டெயில் லைட் க்ளஸ்ட்டர் பக்கவாட்டில் நீள்கிறது. மேலும், ஜன்னல் கண்ணாடிகளை சுற்றி க்ரோம் பீடிங் இருப்பதும் பிரிமீயம் கார் என்பதை காட்டும் விஷயமாக பார்க்கலாம்.

 பின்புற டிசைன்

பின்புற டிசைன்

புதிய டொயோட்டா கேம்ரி காரின் பின்புற டிசைன் மிக அட்டகாசமாக இருக்கிறது. குறிப்பாக, எல்இடி விளக்குகளுடன் கூடிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் காரின் கவர்ச்சிக்கு வலு சேர்க்கிறது. பூட்லிட் ஸ்பாய்லர், இரண்டு டெயில் லைட் க்ளஸ்ட்டர்களையும் இணைக்கும் க்ரோம் சட்டம், வலிமையான பம்பர் அமைப்பு ஆகியவை இந்த காரின் தோற்றத்திற்கு கூடுதல் கவர்ச்சியையும், மிடுக்கையும் தருகின்றன.

இது ஹைப்ரிட் மாடல் என்பதை தெரிவிக்கும் விதத்தில், டொயோட்டாவின் க்ரோம் பூச்சு லோகோவுடன் நீல வண்ணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இன்டீரியர்

இன்டீரியர்

உட்புறத்தில் சென்றவுடன், இதன் டேஷ்போர்டு அமைப்பு நம்மை வசீகரிக்கிறது. மூன்று பிரிவுகளாக Y வடிவில் டேஷ்போர்டு அமைப்பு வடிவமைக்கப்பட்டு இருப்பது புதுமையாக இருப்பதுடன், பிரிமீயமாக இருக்கிறது. மேல்புறம் முழுவதும் சாஃப்டச் பிளாஸ்டிக்குடன் டேஷ்போர்டு இடம்பெற்றுள்ளது. மூன்று விதமான வண்ணக் கலவையில் காட்சி தருகிறது டேஷ்போர்டு.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

புதிய டொயோட்டா கேம்ரி காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமானது புளுடூத், யுஎஸ்பி, ஆக்ஸ் போர்ட் மூலமாக இணைத்துக் கொள்ள முடியும். வாய்ஸ் கன்ட்ரோல் வசதியும் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார் ப்ளே போன்ற செயலிகளை சப்போர்ட் செய்யாது என்பது பெரிய ஏமாற்றம். எனினும், இயக்குவதற்கு எளிதாக இருப்பது ப்ளஸ் பாயிண்ட்.

 மியூசிக் சிஸ்டம்

மியூசிக் சிஸ்டம்

இந்த காரில் 9 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஜேபிஎல் மியூசிக் சிஸ்டம் இனிமையான அனுபவத்தை தருகிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும்

முன் இருக்கைகள்

முன் இருக்கைகள்

புதிய டொயோட்டா கேம்ரி காரின் முன் இருக்கைகள் மிக தாராள இடவசதியுடன் போதிய பஞ்சு பொதியுடன் சொகுசாக இருக்கின்றன. இருக்கையில் குளிர்ச்சி மற்றும் வெதுவெதுப்பான உணர்வை தரும் வசதியும் இருப்பது முக்கிய அம்சம். ஓட்டுனர் இருக்கையை 10 விதமான நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

பின் இருக்கை

பின் இருக்கை

பின் இருக்கை மிக சிறப்பான இடவசதியை அளிக்கிறது. மேலும், பின் இருக்கையை சாய்த்துக் கொள்ள முடியும் என்பதால், நீண்ட தூர பிராயணங்களை அலுப்பில்லாமல் சென்று வர உதவும். இருக்கையின் கீழே பேட்டரிகள் பொருத்தப்பட்டு இருந்தாலும், இடவசதியிலும், குஷனிலும் சமரசமில்லாமல் பார்த்துக் கொண்டுள்ளது டொயோட்டா. பயணிகளுக்கு போதிய ஹெட்ரூம், லெக் ரூம் இடவசதி உள்ளது.

டச்பேடு கன்ட்ரோல் சிஸ்டம்

டச்பேடு கன்ட்ரோல் சிஸ்டம்

இந்த காரில் 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் உள்ளது. பின் இருக்கையின் ஆர்ம் ரெஸ்ட்டில் டச் பேனல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டச் பேனலை பயன்படுத்தி, க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்தையும், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

2019 டொயோட்டா கேம்ரி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சன்ரூஃப், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி உள்ளிட்ட பல வசதிகளை இந்த கார் பெற்றிருக்கிறது.

பூட்ரூம்

பூட்ரூம்

புதிய டொாயோட்டா கேம்ரி காரில் பெரிய பூட்ரூம் இடவசதி இருப்பது நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவாக அமையும். பெரிய சூட்கேஸுகளை வைப்பதற்கான இடவசதி உள்ளது. பின் இருக்கையை 60: 40 என்ற விகிதத்தில் மடக்கிக் கொள்ள முடியும்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய டொயோட்டா கேம்ரி கார் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் துணையுடன் இயங்கும் ஹைப்ரிட் மாடலாக வந்துள்ளது. இதன் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 175 பிஎச்பி பவரையும், 221 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மின் மோட்டார் 118 பிஎச்பி பவரையுமம், 202 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

அதிகபட்ச பவர்

அதிகபட்ச பவர்

இந்த காரில் 242V நிக்கல்- மெட்டல் ஹைட்ரைடு பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரின் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் இணைந்து அதிகபட்சமாக 215 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் வாய்ந்ததாக டொயோட்டா தெரிவிக்கிறது. சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

கியர்பாக்ஸ்

கியர்பாக்ஸ்

இதன் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. கியர் மாற்றத்தின்போது அதிர்வு சிறிதும் உணர முடியாத அளவு மிக மென்மையாக இருக்கிறது. அதேநேரத்தில், பேடில் ஷிஃப்ட்டில் வைத்து ஓட்டும்போது மேனுவல் கியர் மாற்றத்திற்குண்டான அனுபவத்தை தரவில்லை என்பது ஏமாற்றம். ஆட்டோமேட்டிக் மோடில் செல்வது போன்ற உணர்வையே தருகிறது.

செயல்திறன்

செயல்திறன்

இதன் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் நகர்ப்புறமாகட்டும், நெடுஞ்சாலையாகட்டும் சிறப்பான செயல்திறனை வெளிக்கொணருகிறது. இதனால், உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்குகிறது. மின் மோட்டார் சிறந்த டார்க் திறனை வழங்குவதால் நகர்ப்புறத்தில் அருமையான ஓட்டுதல் அனுபவத்தையும், நெடுஞ்சாலையில் பெட்ரோல் எஞ்சின் தன் பங்கை சிறப்பாக தருவதே காரணம்.

2019 டொயோட்டா கேம்ரி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பழைய பெட்ரோல் கேம்ரி கார்களின் செயல்திறனை விட இப்போது ஹைப்ரிட் மாடலின் செயல்திறன் மிக அருமையாக இருக்கிறது. முக்கிய காரணம், மின் மோட்டார் சிறப்பான டார்க் திறனை வழங்குவதுதான்.

 மைலேஜ்

மைலேஜ்

புதிய டொயோட்டா கேம்ரி காரை நகரச் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வைத்து ஓட்டி பார்த்தோம். அப்போது இந்த ஹைப்ரிட் ரக கார் கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 23 கிமீ வரை மைலேஜ் தந்தது. இந்த பிரம்மாண்ட கார் ஹைப்ரிட் மாடல் என்பதாலேயே இந்த அளவு மைலேஜை வழங்க முடிகிறது.

கையாளுமை

கையாளுமை

புதிய டொயோட்டா கேம்ரி காரின் ஸ்டீயரிங் வீல் மிக துல்லியமாக இருக்கிறது. இதனால், வளைவுகளில் வேகமாக செல்லும்போதும் நம்பிக்கையான உணர்வை தருகிறது. அதேநேரத்தில், மென்மையான சஸ்பென்ஷன் அமைப்பு இருப்பதால் அதிவேகமாக சென்று வளைவுகளில் திருப்பும்போது கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய டொயோட்டா கேம்ரி காரில் 9 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், பிரேக் ஹோல்டு ஃபங்ஷன், நிலைத்தன்மையுடன் செல்வதற்கான வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், தரைப்பிடிப்புடன் செல்வதற்கான டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் என எண்ணற்ற பாதுகாப்பு வசதிகள் உள்ளன. ரியர் பார்க்கிங் கேமரா, சென்சார்கள், பார்க்கிங் அசிஸ்ட் வசதிகளும் உள்ளன.

கவர்ந்த விஷயங்கள்

கவர்ந்த விஷயங்கள்

  • கவர்ச்சிகரமான புதிய டிசைன்
  • அதிக மைலேஜ்
  • சிறந்த பாதுாப்பு வசதிகள்
  • உற்சாகத்தை தரும் ஓட்டுதல் தரம்
ஏமாற்றமான விஷயங்கள்

ஏமாற்றமான விஷயங்கள்

  • ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே செயலிகளை சப்போர்ட் செய்யாது
  • கச்சாமுச்சா என தெரியும் கட்டுப்பாட்டு பொத்தான்கள்
டிரைவ்ஸ்பார்க் கருத்து

டிரைவ்ஸ்பார்க் கருத்து

அட்டகாசமான டிசைன், சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள், அதிக மைலேஜ் ஆகியவற்றுடன் குறைவான மாசு உமிழும் தன்மை கொண்ட மாடலாக வந்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம். ஓட்டுபவர் மற்றும் உடன் பயணிப்பவர்களுக்கும் உற்சாகமான பயண அனுபவத்தை வழங்கும் மாடலாக வந்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த சொகுசான கார் மாடலை வாங்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

போட்டியாளர்

போட்டியாளர்

புதிய டொயோட்டா கேம்ரி கார் ரூ.36.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு ஹோண்டா அக்கார்டு ஹைப்ரிட் கார் நேரடி போட்டியாக இருக்கிறது. இந்த கார் ரூ.43.21 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய டொயோட்டா கேம்ரியின் வருகை ஹோண்டா அக்கார்டு ஹைப்ரிட் காருக்கு பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா
English summary
Toyota claims the new Camry is more driver-focused than ever and its aggressive looks support the claim. So is the new Toyota Camry everything it promises it will be or is it a step too off the beaten path from the Japanese carmaker? We got behind the wheel of the new 8th-gen Toyota Camry in the City of Nizams, Hyderabad, to find the answers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more