டிரைவ் இன் பீச்சில் டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் காருடன் ஒரு அதகளம்!

Written By:

ஹேட்ச்பேக் கார்களில் கூடுதல் ஆக்சஸெரீகளை போட்டு கிராஸ்ஓவர் மாடல்களாக மாற்றி வெளியிடும் பேஷன் சில ஆண்டுகளாக நம் நாட்டு மார்க்கெட்டில் இருந்து வருகிறது. அவ்வாறு வெளியிடப்பட்ட மாடல்களில், ஓரளவு விற்பனையை பதிவு செய்து வரும் மாடல் டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ். டொயோட்டா லிவா காரின் அடிப்படையில் கிராஸ்ஓவர் மாடலாக மேம்படுத்தப்பட்ட இந்த காரை சமீபத்தில் பயணக் கட்டுரை செய்திக்காக டொயோட்டா நிறுவனம் டிரைவ்ஸ்பார்க் டீமிற்கு வழங்கியது.

கார் கைக்கு வந்தவுடன், அந்த காரை எடுத்துச் செல்வதற்கான இடத்தை தேர்வு செய்கையில், சட்டென மனதில் வந்தது கேரளாவில் உள்ள முழப்பிளங்காட் கடற்கரைதான். அந்த இடத்தை ஏன் தேர்வு செய்தோம், டெஸ்ட் டிரைவின்போது டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் காரின் செயல்பாடுகள் எவ்விதம் இருக்கின்றன என்பது குறித்த பல சுவாரஸ்யத் தகவல்களுடன், காரையும் பற்றி அலசித் தருகிறது இந்த செய்தித் தொகுப்பு.

சினிமா உந்துதல்...

சினிமா உந்துதல்...

2005ம் ஆண்டு வெளிவந்த 'The World's Fastest Indian' என்ற சினிமாவை பார்த்ததிலிருந்து கடற்கரையில் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்ற வேட்கை தனலாக மனதில் தகித்துக் கொண்டிருந்தது. அந்த சினிமாவிற்கும், கேரளாவில் உள்ள முழப்பிளங்காட் கடற்கரைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பது தெரிகிறது.

நிஜ ஹீரோ

நிஜ ஹீரோ

ஆம், சம்பந்தம் இருக்கிறது. அந்த சினிமாவின் கதை ஒரு நிஜ ரேஸ் வீரரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது. அந்த ஜாம்பவான் பெயர் பர்ட் முன்ரோ. நியூஸிலாந்து நாட்டை சேர்ந்த இவர் கடற்கரையில்தான் மோட்டார்சைக்கிள் பந்தயங்களில் கலந்து கொண்டு பல சாதனைகளை படைத்தார்.

Recommended Video - Watch Now!
Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
இந்தியரா?

இந்தியரா?

அமெரிக்காவை சேர்ந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஸ்கவுட் மோட்டார்சைக்கிளையே முன்ரோ பயன்படுத்தினார். அந்த மோட்டார்சைக்கிளை அதிவேகத்தில் ஓட்டிய பைக் ரேஸரை பற்றிய படம்தான் அது. அதனால்தான், அது அதிவேக இந்தியன் என்று பொருள்படும்படி பெயரிடப்பட்டது.

கடற்கரை ரேஸ்

கடற்கரை ரேஸ்

தனது சொந்த ஊரிலுள்ள கடற்கரையில் தனது இந்தியன் மோட்டார்சைக்கிள்களை ரேஸ் ஓட்டி அசத்தினார் முன்ரோ. சக போட்டியாளர்களைவிட சற்று வயதான இவர் என்ன செய்துவிட போகிறார் என்று ஏளனம் செய்த இளம் பைக் ரேஸர்களை தனது அசாத்திய திறமையால் பின்னால் ஓடி வரச் செய்தார் முன்ரோ.

சவால்கள்...

சவால்கள்...

இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிளின் எஞ்சினில் சுயமாகவே மாற்றங்களை செய்து ரேஸ் ஓட்டினார். மேலும், அலைபாயும் கடற்கரை மணலில் ரேஸ் ஓட்டுவது சவால்கள் நிறைந்தது. அதனை வென்றதால்தான், அவருக்கு பின்னாளில் பெரும் ரசிகர் கூட்டம் உருவாகியது.

ஃபேவரிட் இடம்

ஃபேவரிட் இடம்

நியூஸிலாந்து நாட்டின் சவுத்லேண்ட் பகுதியில் இருக்கும் ஒரட்டி என்ற 26 கிமீ தூரமுடைய கடற்கரையில்தான் முன்ரோவுக்கு பேவரிட் இடம். அங்குதான் தனது மோட்டார்சைக்கிளை ஓட்டி பார்த்து ஆய்வுகளை செய்வார். அதன்பிறகு, 1967ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள போனிவில் உப்பு படுகை பிரதேசத்தில் உலகின் அதிவேக சாதனையை படைத்தார். அவரது நினைவாக இன்றும் மோட்டார்ஸ்போர்ட்ஸ் பந்தயங்கள் அங்கு நடத்தப்பட்டு வருகின்றன.

டிரைவ் இன் பீச்

டிரைவ் இன் பீச்

அந்த சினிமாவில் கடற்கரையில் ரேஸ் ஓட்டுவது போன்ற காட்சிகள் எம் மனதிலும், அதுபோன்று ஓட்ட வேண்டும் என்ற வேட்கையை ஏற்படுத்தி, தனலாக அனன்று கொண்டிருந்தது. அவ்வாறு, இந்தியாவில் வாகனங்களை ஓட்டுவதற்கான டிரைவ் இன் கடற்கரை இருக்கிறதா என்று தெரிய முற்பட்டபோது, கேரளாவில் உள்ள முழப்பிளங்காட் கடற்கரை குறித்த விபரம் தெரிந்தது.

சிறந்த பீச்

சிறந்த பீச்

உலகின் 6 சிறந்த டிரைவ் இன் கடற்கரைகளில் இதுவும் ஒன்று. இந்தியாவின் ஒரே டிரைவ் இன் பீச் என்ற பெருமையும் இதற்கு உண்டு. ஏனெனில், சற்று கெட்டியான மணற்பரப்பை கொண்ட கடற்கரையாக இது இருக்கிறது. எனவே, இங்கு வாகனங்களை ஓட்டி மகிழ கார் பிரியர்கள் இங்கு வருகின்றனர்.

நல்ல சாய்ஸ்...

நல்ல சாய்ஸ்...

அலைகள் சீறிச் செல்லும் கடற்கரையில் செல்வதற்கு அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார் அவசியம். அதற்கு, 175மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 89 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் போன்றவை டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் காரை நம்பிக்கையுடன் எடுத்துச் செல்வதற்கு முக்கிய காரணங்கள்.

சிட்டிக்கு பெஸ்ட்...

சிட்டிக்கு பெஸ்ட்...

முதலில் பெங்களூரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் இயக்கினோம். இதன் ஸ்டீயரிங் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பும், எஞ்சின் பவர் டெலிவிரியும் சிறப்பாக இருந்தது. டர்னிங் ரேடியஸும் குறைவாக தெரிகிறது. இதனால், காரை கையாள்வதும், பார்க்கிங் செய்வதும் மிக எளிதாக தோன்றியது.

பாடி ரோல்

பாடி ரோல்

பெங்களூர் சாலைகளிலிருந்து விடுபட்டு, மைசூர் நெடுஞ்சாலையை பிடித்து வயநாடு நோக்கி விரட்டினோம். நேராக செல்கையில் சிறப்பான ஸ்திரத்தன்மையுடன் செல்கிறது. ஓட்டுதல் தரமும் நன்றாகவே இருந்ததால், பயண அலுப்பே இல்லாதது போன்ற உணர்வு.

 ஆளை கண்டு மயங்காதே

ஆளை கண்டு மயங்காதே

தோற்றத்தை பார்த்து சரி, ஒரு மைல்டு ஆஃப்ரோடு அடிக்கலாம் என்று காரை கரடு முரடான சாலைகளில் விட்டோம். ஆனால், 4 வீல் டிரைவ், ஸ்திரமான சஸ்பென்ஷன் போன்ற அம்சங்கள் இல்லாததால், இது ஆஃப்ரோடு சாகசங்களுக்கு சரிபட்டு வராது. மிக கவனமாகவே கையாள வேண்டும். முழுமையான ஆஃப்ரோடு காரை வாங்க விரும்புபவர்களுக்கு இது ஏற்றதல்ல.

மைலேஜ்

மைலேஜ்

400 கிமீ பயணத்திற்கு பின்னர் ஒருவழியாக முழப்பிளங்காட் கடற்கரையை அடைந்தோம். டிரிப் மீட்டரில் 400 கிமீ தூரம் வந்திருப்பதாக காட்டியது. முழுமையாக ஏசி பயன்படுத்திய நிலையில், இந்த கார் லிட்டருக்கு சராசரியாக 10 கிமீ மைலேஜ் கொடுத்தது.

பரபர...

பரபர...

சூரியன் அஸ்தமன நேரத்தை நெருங்கிய அந்த சாயங்கால வேளையில், அலைபாயும் முழப்பிளங்காட் கடற்கரையை பார்த்தவுடன் மனதுக்குள் பரபரப்பும், ஆவலும் தொற்றிக்கொண்து. உடனடியாக, அடித்துப்பிடித்து கடற்கரையில் டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் காரை விரட்டினோம். அலைகளின் சலசலப்புக்கு அஞ்சாமல், எமது உத்தரவுகளுக்கு உடனுக்குடன் பதில் கொடுத்தது.

அடுத்து...

அடுத்து...

அயராது உழைத்து களைத்த எட்டியோஸ் கிராஸுக்கு அமைதி கொடுப்பதற்காக, அங்கிருந்து கண்ணூர் மாவட்டம், கோலையாடு என்ற இடத்தில் உள்ள செயிண்ட் கார்னிலியஸ் சர்ச்சிற்கு சென்றோம். அங்கு சற்று நேரம், டொயோட்டா கிராஸுக்கு ஓய்வு கொடுத்ததுடன், அங்கு சிறிய போட்டோ ஷுட் ஒன்றையும் எமது போட்டோகிராபர் அபிஜித் நடத்தி முடித்தார். அதில், எட்டியோஸ் கிராஸ் முகப்பில் இருக்கும் வலிமையான கிரில் அமைப்பு, ஸ்கிட் பிளேட் போன்றவை எனக்கு ஓய்வே தேவையில்லை என்று கர்ஜிப்பது போல பிரம்மாண்டமான உணர்வை தந்தது.

பிளாஸ்டிக் கிளாடிங்

பிளாஸ்டிக் கிளாடிங்

எட்டியோஸ் கிராஸ் காருக்கு முரட்டுத் தோற்றத்தை தருவதில், கருப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங்குகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், டைமன்ட் கட் அலாய் வீல்களும் ஒர்த்தான விஷயங்கள்.

இன்டீரியர்

இன்டீரியர்

டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் காரின் இன்டீரியர் மிகச் சிறப்பான இடவசதியை கொண்டுள்ளது. தரமான பிளாஸ்டிக் பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். ஹெட்ரெஸ்ட்டுகள் நீண்ட தூர பயணங்களின்போது அலுப்பில்லாமல் செல்வதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

பூட் ரூம்

பூட் ரூம்

இந்த காரில் 251 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் உள்ளது. கேமரா, லேப்டாப் பேக் மற்றும் உடைகளுக்கான பை போன்றவற்றை வைத்துக் கொள்ள போதுமானதாக இருக்கும். 4 பேருக்கான உடைமைகளை வைத்து எடுத்துச் செல்லலாம்.

நிறைகள்

நிறைகள்

  • அருமையான பெட்ரோல் எஞ்சின்
  • சிறந்த ஏசி
  • சொகுசான இருக்கைகள்
  • இடவசதி
  • ஏழு ஒரு லிட்டர் பாட்டில்களை வைக்க இடவசதி
குறைகள்

குறைகள்

  • மைல்டு ஆஃப்ரோடுக்குகூட ஏற்றதல்ல...
  • சைடு மிரர்களுக்கு எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதி இல்லை
  • வேகத்தை வைத்து கதவுகள் தானாக பூட்டும் வசதி இல்லை
  • டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இல்லை
புதிய அனுபவம்

புதிய அனுபவம்

போக்குவரத்து நெரிசல், வட்டமடிக்கும் மலைச்சாலைகள், நெடுஞ்சாலைகளில் ஓட்டி புளித்துப் போன கண்களுக்கும், கைகளுக்கும் இந்த டிரைவ் இன் பீச்சில் கார் ஓட்டியது நிச்சயம் புதுமையாகவும், த்ரில்லாகவும் இருந்தது. மேலும், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் காராணமாக கார், அலைகளில் பயணிக்கும்போது தடங்கல் இல்லை. எனவே, புதுமையான இடத்தில் கார் டிரைவிங் செய்ய விரும்புவர்களுக்கு இந்த முழப்பிளங்காட் பீச் நிச்சயம் புதிய அனுபவத்தையும், பரவசத்தையும் வழங்கும்.

 

Mundro Images Source

English summary
Toyota Etios Cross — A Crossover Drive To God's Own Country.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark