அரண்மனையே தோற்றுவிடும் சொகுசு வசதி நிறைந்த கார்! டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் -ரிவியூ!

டொயோட்டா இன்னோவா கா் இந்தியாவில் பிரபலமான பிரிமியம் எம்பிவி காராகும். இந்த கார் கடந்த 2005ம் ஆண்டு முதன்முறையாக குவாலீஸ் காருக்கு மாற்றாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பொழுது முதல் இந்த காரை மக்கள் விரும்பத் துவங்கிவிட்டனர். குடும்பத்தினருடன் பயணிக்க ஏற்றகாராக இருந்ததால் இந்த காரை ஏராளமானோர் வாங்கி குவித்தனர். 2005ல் துவங்கிய பயணம் இன்று வரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு டொயோட்டா நிறுவனம் தனது இன்னோவா காரை முழுமையாக அப்டேட்ட செய்து இன்னோவா க்ரைஸ்டா என்ற பெயரில் வெளியிட்டது. இந்த காரின் டிசைன் அப்டேட், சொகுசு வசதி, என எல்லாம் மக்கள் எதிர்பார்த்ததை விட ஒரு படி மேலே இருந்ததால் மக்கள் ஏராளமானோர் இந்த காரை விரும்பி வாங்கத் துவங்கிவிட்டனர். முக்கியமாக இந்த காரின் டீசல் வேரியன்ட் நல்ல மைலேஜ் கொடுத்தால் பலருக்கு இது ஃபேவரைட் காராக மாறிவிட்டது.

அரண்மனையே தோற்றுவிடும் சொகுசு வசதி நிறைந்த கார்! டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் -ரிவியூ!

தற்போது நாம் 2022ல் இருக்கிறோம், க்ரைஸ்டா கார் வந்து 6 ஆண்டுகள் ஆகிறது, இன்னோவா முதன் முறையாக அறிமுகமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் டொயோட்டா நிறுவனம் தனது இன்னோவா காருக்கான புதிய அவதாரத்தை எடுக்க முடிவு செய்தது. இதையடுத்து டொயோட்டா உருவாக்கி தயாரிப்பு தான் இன்னோவா ஹைகிராஸ் கார். பிரிமியம் ஃபேமிலி கார், எஸ்யூவி டிசைன் மற்றும் ஸ்போர்ட்டியர் லுக், முக்கியமாக ஹைபிரிட் இன்ஜின் செட்டப்கள் கொண்டு அதிக மைலேஜ் கொடுக்கும் காராக உருமாறி அறிமுகமாகியுள்ளது.

புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் மீதான மக்களின் எதிர்பார்ப்பு என்ன? அதை எல்லாம் இந்த கார் பூர்த்தி செய்துள்ளதா? இந்த காரையும் மக்கள் விரும்புவார்களா? இந்த கார் ஓட்டி பார்க்க எப்படி இருக்கிறது இப்படியான பல கேள்விகளுடன் நாங்கள் பெங்களூருவில் இந்த காரை டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை டெஸ்ட் டிரைவ் செய்தோம். இந்த காரின் ரிவியூவை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

அரண்மனையே தோற்றுவிடும் சொகுசு வசதி நிறைந்த கார்! டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் -ரிவியூ!

வெளிப்புற டிசைன்

டொயோட்டா இன்னோவா காரின் வடிவமைப்பை பொருத்தவரை இதுவரை ஒரு முழுமையான எம்பிவி காருக்கான வடிவமைப்பையே கொண்டிருந்தது. எம்பிவி காரில் எந்தெந்த விஷயங்கள் எந்தெந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்தந்த இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் சமீப காலமாக மக்கள் மத்தியில் எஸ்யூவி காரின் டிசைன் பிரபலமாகி வருவதால், இந்த ஹைகிராஸ் காரை டிசைன் செய்தவர்கள் எஸ்யூவி காரின் டிசைனை இதில் புகுத்தியுள்ளனர்.

இந்த காரின் முகப்பு பக்கத்தில் பெரிய ஹெக்ஸாகேனல் கிரில் அதைச் சுற்றி க்ரோம் பட்டை கொடுக்கப்பட்டுள்ளது. கிரிலின் பக்கவாட்டில் ஹெட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 3 எல்இடி லைட்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் பானட் பகுதியில் சில பல்ஜான டிசைன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.இது காருக்கு ஒரு எஸ்யூவி காருக்கான லுக்கை கொடுக்கிறது.

அரண்மனையே தோற்றுவிடும் சொகுசு வசதி நிறைந்த கார்! டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் -ரிவியூ!

இதன் முகப்பு பக்க பம்பர் பகுதியில் முக்கோண வடிவிலான டிசைன் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இது இரண்டு பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது. இதில் டர்ன் இன்டிகேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.இதுபோக ஏர் டேம் செக்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இது இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஃபாக் லைட்கள் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய இன்னோவா ஹைகிராஸ் காரின் பக்கவாட்டு பகுதியைப் பொருத்தவரை பெரிய வீல் ஆர்ச்கள் பொருத்தப்பட்டுள்ளது. 225/50 R18 டயர்களுடன் 18 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காருக்கான மஸ்குலர் லுக்கிற்காக முகப்பு பகுதியிலிருந்து பின்பகுதி வரை ஒரு டிசைன் லைன் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் பின்பக்க செக்ஷனை பொருத்தவரை பெரிய ஸ்டிரப் க்ரோம் உடன் இணைக்கப்பட்ட எல்இடி டெயில்லைட் கொடுக்கப்பட்டுள்ளது. இது போக ரூஃப் ஸ்பாய்லரிலும் பிரேக் லைட் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்க கதவு பவர் டோராக வழங்கப்பட்டுள்ளது. இந்த கதவைத் திறக்க இனி சிரமப்படத் தேவையில்லை. ஒரு பட்டனை அழுத்தினால் தானாகத் திறக்கும்.

உட்கட்டமைப்பு மற்றும் அம்சங்கள்

டொயோட்டா நிறுவனம் எப்பொழுதும் தனது இன்னோவா காரை மார்கெட்டிலேயே சிறந்த உட்கட்டமைப்பு கொண்ட காராக உருவாக்கும். இதை ஹைகிராஸ் காரிலும் விடாமல் சிறப்பான உட்கட்டமைப்பு வசதியுடன் இருக்கிறது.

இதன் முகப்பு பகுதியில் மல்டி லேயர் டேஷ் போர்டு வழங்கப்பட்டுள்ளது. இது சாஃப்ட் டச் மெட்டிரியல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டின் மத்திய பகுதியில் பெரிய 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இது போக மல்டி ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், மற்றும் உயரமாகப் பொருத்தப்பட்ட கியர் லிவர் ஆகியன இடம் பெற்றுள்ளன.

இதில் முக்கியமான டிசைன் முன்பக்க பயணிகள் சீட் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள வயர்லெஸ் போன் சார்ஜர் தான். கிளவ் பாக்ஸிற்கு மேலே சார்ஜிங் பேட் வழங்கப்பட்டுள்ளது. டிரைவருக்கு பெரிய ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பின் 7 இன்ச் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இது டிரைவருக்கு ஹைபிரிட் குறித்த தகவல்கள் உள்ளிட்ட ஏராளமான தகவல்களைக் காட்டுகிறது.

டேஷ்போர்டு மற்றும் கேட்ஜெட்கள் எல்லாம் பெரிய அப்டேட்களை பெற்றுள்ள நிலையில் இன்னோவோ ஹைகிராஸ் கார் ஒரு பிரிமியம் எஸ்யூவி கார் என்பதால் அதற்கு தகுந்தார் போல அதன் கேபனும் வழங்கப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் வேரியன்டான ZX வேரியின்டில் டார்க் செஸ்ட்நட் ஆர்ட் அப்ஹோல்சரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது காருக்கு ஒரு லக்ஸரி உணர்வை கொடுக்கிறது.

இந்த காரின் முகப்பு பக்க சீட்கள் வெண்டிலேட்டட் சீட்களாக வழங்கப்பட்டுள்ளன. இது போக டிரைவருக்கு 8-வே பவர் அட்ஜெஸ்மென்ட் மற்றும் மெமரி ஃபங்ஷன் கொண்ட சீட்களாக வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் இரண்டாம் வரிசை சீட் மிகவும் முக்கியமானது. இந்த காரில் பவர்டு ஓட்டோமேன் ஃபங்சன் இருக்கிறது. இதில் பெரிய கேப்டன் சீட் மாதிரியான சீட்வழங்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் ஸ்டிரெட்ச் செய்து கொள்ளலாம்.

இதில் சாய்ந்து கொண்டு பெரிய பானரோமிக் சன் ரூஃப் வழியாக உலகத்தை ரசிக்கலாம் அதுவும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் செய்யக்கூடிய இன்ஃபோடெயின்மெண்டில் இதை ரசிக்க முடியும். இந்த இன்ஃபோடெயின்மெண்ட் 8 ஸ்பீக்கர் 1 சப் ஊஃப்பர் கொண்ட ஜேபிஎல் ஆடியோ சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது வரிசை சீட்டும் ஒன்றும் குறை சொல்லுவதற்கு இல்லை. நீண்ட தூரம் பயணம் செய்தாலும் இந்த சீட்டில் அமர்ந்திருப்பவர்களுக்கு மிகப்பெரிய அசௌகரியம் ஒன்றும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

இந்த இன்னோவா ஹைகிராஸ் காரில் உள்ள அம்சங்களைப் பொருத்தவரை இதில் மல்டிபிள் சார்ஜிங் போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்க சன் ஷேடு, எலெக்ட்ரோக்ரோமிக் ஐஆர்விஎம், பவர்டு டெயில் கேட், மல்டி ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், பின்பக்க ப்ளோயருக்கான ஆட்டோமெட்டிக் கண்ட்ரோல், 65க்கும் அதிகமான அம்சங்களைக் கொண்ட டொயோட்டா ஐ-கனெக்ட் கனெக்டெட் கார் சிஸ்டம், ரிமோட் ஏசி கண்ட்ரோல், இன்னீஷியன் ஸ்டார்/ ஸ்டாப், ரிமோட் டோர் அன்லாக் என ஏராளமான வசதிகள் இதில் இருக்கிறது. இதை ஸ்மார்ட் போன் அல்லது ஸ்மார்ட் வாட்ச் மூலமே கண்ட்ரோல் செய்ய முடியும்.

இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரை 6 ஏர்பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக வெஹிகில் ஸ்டெபிலிட்டி கண்டரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, முன் மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது. இது போக டொயோட்டாவின் சேஃப்ட் சென்ஸ் சூட் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் டைனமிக் ரேடார் கைடட் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் ட்ரேஸ் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் ப்ரீ கோலிஷன் வார்னிங் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது.

டிரைவிங் இம்பிரஷன்

இந்த டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் மொத்தம் 2 விதமான இன்ஜின் ஆப்ஷன்களுடன்வருகிறது. வழக்கமான 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின். இது 172 பிஎச்பி பவரையும், 205 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.இந்த இன்ஜின் சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு முன்பக்க வீல் உடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த இன்ஜின் அப்ஷன் என்பது 2.0 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 150 பிஎச்பி பவரையும், 187 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். எலெக்ட்ரிக் மோட்டார் 111 பிஎச்பி பவரையும் 206 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது இ-சிவிடி கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. டொயோட்டா இந்த ஹைபிரிட் இன்ஜின் செட்டப் மொத்தம் 186 எச்பி பவரை மட்டுமே வெளிப்படுத்தும் அளவிற்கு லிமிட் செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் புதிய இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் காரை ஓட்டிப்பார்த்தோம். இந்த காரின் மோனோகோக்யூ செட்டப் முற்றிலும் புதுமையானது. இது இதற்கு முந்தைய வெர்ஷனை விட லைட்டானது. இதனால் இந்த கார் ஸ்மூத்தாக வேகம் எடுக்க முடிகிறது. சுலபமாக 100 கி.மீ வேகத்திற்கு மேல் ஓட்டி செல்ல முடிகிறது. இதில் சாஃப்ட் சஸ்பென்சன் செட்டப் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ள மேடுகளை அதிகமாக கேபினிற்குள் கடத்தவில்லை. நீண்ட தூர பயணத்திற்கு சுகமான அனுபவத்தைக் கொடுக்கும். கேபின் உள்ளே கொஞ்சம் கூட சத்தம் வராத அளவிற்கு இதன் NVH அளவு இருக்கிறது.

இந்த இன்னோவா ஹைகிராஸ் காரை பொருத்தவரை இதில் குறைந்த எடை கொண்ட மோனோக்யூ ஃபிரேம் மற்றும் சாஃப்டான சஸ்பென்சன் செட்டப் ஆகிய விஷயங்கள் இருப்பதால் காரில் பாடி ரோல் அதிகமாக இருக்கிறது. வேகமாக சென்று திரும்பும் போது பாடி ரோல் அதிகமாக ஃபீல் ஆகிறது. இந்த காரில் ரீஜென் சிறப்பாக இருக்கிறது. இது பெடல் ஸ்விஃப்டர் மூலம் கண்ட்ரோல் செய்யும்படி இருக்கிறது. இது போக முக்கியமாக இந்த காரில் அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக் இருப்பதால் பிரேக் பிடித்தவுடன் உடனியடியாக கார் ரெஸ்பான்ட் செய்கிறது.

இறுதித்தீர்ப்பு

புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் பிரிமியம் எம்பவி காருக்கான விஷயங்களை மட்டும் கொண்டிருக்கவில்லை. இந்த காரில் உள்ள ஹைபிரிட் சிஸ்டத்தால் இன்னோவேட்டிவ்வாகவும், சொகுசு வசதி நிறைந்த காராகவும் இருக்கிறது. இந்த கார் தற்போது வளர்ந்துவரும் ஹைபிரிட் காலத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான காராக இருக்கும். இன்னோவா க்ரைஸ்டா காரை போல இந்த காரையும் மக்கள் விரும்பி வாங்குவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota hybrid car Innova hycross review
Story first published: Tuesday, December 6, 2022, 14:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X