புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

Written By:

ரூ.15 லட்சம் பட்ஜெட் மார்க்கெட்டில் இந்தியாவின் தன்னிகரற்ற எம்பிவி ரக கார் மாடல் டொயோட்டா இன்னோவாதான். டிசைன், இடவசதி, சிறப்பம்சங்கள் என அனைத்திலும் மதிப்பான காராக வலம் வருகிறது. 2005ம் ஆண்டு டொயோட்டா குவாலிஸ் காருக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா இன்னோவா துவக்கத்தில் மார்க்கெட்டில் தடுமாறினாலும், தனது சிறப்பம்சங்களால் கொஞ்சம் கொஞ்சமாக இந்திய வாடிக்கையாளர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டது.

அவ்வப்போது சிறிய மாற்றங்களை செய்து புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு வந்த டொயோட்டா இன்னோவா கார், முதல்முறையாக புதிய தலைமுறை காராக முழுமையாக மாற்றம் கண்டிருக்கிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா என்ற பெயரில் இன்று விற்பனைக்கு வர இருக்கும் இந்த காரை சமீபத்தில் கோவாவில் வைத்து மீடியா டிரைவ் நிகழ்ச்சியில் டிரைவ்ஸ்பார்க் டீம் டெஸ்ட் டிரைவ் செய்தது. இந்த காரை ஓட்டியபோது கிடைத்த அனுபவங்கள் மற்றும் சாதக, பாதகங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்

டிசைன்

இதுவரை விற்பனையில் இருந்த டொயோட்டா இன்னோவா காரின் டிசைன் சூப்பர் என்று சொல்ல முடியாவிட்டாலும், குறை சொல்ல முடியாது. ஆனால், அதனையே வேறு புதிய பரிமாணத்தில் கொண்டு சென்றிருப்பதுடன், படு அசத்தலான பிரிமியம் மாடலாக மாற்றபபட்டிருக்கிறது. இதற்காக சில புதிய இத்யாதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ்

புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ்

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் முகப்பை அலங்கரிப்பதிலும், கூடுதல் பாதுகாப்பை வழங்கும் விதத்தில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதாவது, ஒன்று புரொஜெக்டர் மற்றொன்று ஹாலஜன் பல்பு கொண்ட இரட்டை உருளைகளை கொண்ட ஹெட்லைட் கன்சோல் இடம்பெற்று இருக்கிறுத. அதனுடன், பகல் நேர விளக்குகளும் அழகு சேர்க்கிறது. ஹெட்லைட்டுகள் கூர்மையாகவும், மிக கச்சிதமாகவும் காரின் முகப்புடன் பொருந்தியிருப்பதுடன், பார்ப்போரை கவர்ந்திழுக்கிறது.

க்ரில் அமைப்பு

க்ரில் அமைப்பு

காரின் முகப்பின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருக்கும் அறுகோண வடிவ க்ரில் அமைப்பு கவர்கிறது. ஹெட்லைட்டுகளுக்கு இடையில், இரண்டு க்ரோம் பட்டைகளுடன் கூடிய க்ரில் அமைப்பு அசத்தலான தோற்றத்தை தருவதாக அமைந்துள்ளது. வலிமையான தோற்றத்துடன் செதுக்கப்பட்டிருக்கும் பானட் அமைப்பும் நிச்சயம் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் தோற்ற பொலிவை கூட்டும் அம்சம்.

பனி விளக்குகள்

பனி விளக்குகள்

பனி விளக்குகள் கன்சோலில்தான் இன்டிகேட்டர் விளக்குகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. ஆம்பர் இன்டிகேட்டர் விளக்குகளுடன் கூடிய பனி விளக்குகள் அறையும் புதுமையாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறது.

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டை பொறுத்தவரையில், சற்றே பின்புறம் தாழ்வான கூரை அமைப்பு, முக்கோண வடிவிலான டி பில்லர், டெயில் லைட் க்ளஸ்ட்டரிலிருந்து முன்புற வீல் ஆரச் வரை நீளும் ஷோல்டர் லைன், அதற்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வலிமையான பாடி லைன் ஆகியவை முக்கிய மாற்றங்களாக கூறலாம். டாப் வேரியண்ட்டில் 17 இன்ச் அளவுடைய புதிய அலாய் வீல்களும் இன்னோவா வாடிக்கையாளர்களை கவரும் அம்சம்.

இன்டீரியர்

இன்டீரியர்

புத்தம் புதிய இன்டீரியர் அமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்பாடு கண்டிருக்கிறது. உயர்தர பாகங்கள், கண்ணை கவரும் அலங்காரங்கள் மற்றும் சாதனங்கள் புதிய இன்னோவா க்ரிஸ்ட்டாவின் மதிப்பை மனதில் சட்டென தூக்கிப் பிடிப்பதுடன், நிறைவை தந்துவிடுகின்றன.

இன்டீரியர் சிறப்பம்சங்கள்

இன்டீரியர் சிறப்பம்சங்கள்

முப்பரிமாண மீட்டர் கன்சோல், லெதர் உறை மற்றும் மர வேலைப்பாடுடன் கூடிய 4 ஸ்ட்ரோக் ஸ்டீயரிங் வீல், அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய டேஷ்போர்டு அமைப்பு, உயர்தர இருக்கைகள் ஆகியவை, இதனை ஒரு சொகுசு காருக்கு இணையான மாடலாக நினைப்பை ஏற்படுத்துகிறது. பழைய இன்னோவாவைவிட பல படிகள் விஞ்சி நிற்கிறது.

இதர விஷயங்கள்

இதர விஷயங்கள்

தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இயக்குவதற்கு மிக எளிதாக இருக்கிறது. ஏர்கண்டிஷன் சுவிட்சுகளை இயக்குவதும் எளிதாகவே இருக்கிறது.

ஓட்டுனர் இருக்கை

ஓட்டுனர் இருக்கை

காரின் நீள, அகலம் சற்று அதிகரிக்கப்பட்டு உட்புறத்தில் இடவசதி அதிகரிக்கப்பட்டுள்ள்ளது. ஓட்டுனர் இருக்கை அமர்வதற்கு சவுகரியமாகவும், சொகுசாக இருக்கிறது. கால்களுக்கும் நல்ல சப்போர்ட் கிடைப்பதால், நீண்ட தூர பயணத்தின்போதும் அலுப்பு அதிகமிருக்காது. இருக்கை உயரத்தை விருப்பத்திற்கு ஏற்ப கூட்டிக் குறைக்க முடியும்.

இடவசதி

இடவசதி

7 பேர் செல்வதற்கான இடவசதியுடன் வந்தாலும், டொயோட்டா இன்னோவாவின் உரிமையாளர்களில் பெரும்பாலோனோர், ஓட்டுனரை வைத்து காரை இயக்குவதாக டொயோட்டா ஆய்வின் மூலமாக கண்டறிந்துள்ளது. இதற்காக, இரண்டாவது வரிசை இருக்கையில்தான் உரிமையாளர்கள் பெரும்பாலும் அமர்வதாக டொயோட்டா கண்டறிந்துள்ளது. இதற்காக, இன்னோவா க்ரிஸ்ட்டாவின் இரண்டாவது வரிசை இருக்கையை மிகவும் கவனமுடன் சிறப்பாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது. மூன்றாவது இருக்கையின் இடவசதி சற்றே மேம்பட்டிருக்கிறது. இதனால், சவுகரியமான பயணத்துக்கு கியராண்டி.

உயர்தர இருக்கைகள்

உயர்தர இருக்கைகள்

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவில் கொடுக்கப்பட்டிருக்கும் உயர் தர இருக்கைகள், சில சொகுசு ரக செடான் கார்களுடன் போட்டி போடும் வகையில், தரத்திலும், சவுகரியத்தை அளிப்பதிலும் விஞ்சி நிற்கின்றன.

டேபிள் வசதி

டேபிள் வசதி

இரண்டாவது வரிசை இருக்கை பயணிகள் பயன்படுத்த ஏதுவாக இரண்டு மடக்கும் வசதி கொண்ட டேபிள்கள் உள்ளன. லேப்டாப் மற்றும் உணவுகளை வைத்துக் கொள்ள வசதியாக இருக்கும். இது 10 கிலோ எடை தாங்கும் திறன் கொண்டது.

தண்ணீர் பாட்டில்களுக்கு இடவசதி

தண்ணீர் பாட்டில்களுக்கு இடவசதி

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவில் எங்களை வியக்க வைத்த மற்றொரு விஷயம், காரின் உள்ளே ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்களை வைப்பதற்காக 20 பாட்டில் ஹோல்டர்கள் மற்றும் இடவசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் 150 பிஎஸ் பவரையும், 343 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல ஆற்றல் வாய்ந்த 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும். மற்றொரு மாடலாக 174 பிஎஸ் பவரையும், 360 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 2.8 லிட்டர் ஜிடி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும்.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

புதிய 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் 1,500 ஆர்பிஎம் முதல் 2,500 ஆர்பிஎம் வரையில் சிறப்பான டார்க்கை வழங்குகிறது. இதன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மென்மையாக இருப்பதுடன், அதிவேகமாக இயக்கவும் சிறப்பாக இருக்கிறது. மற்றொரு மாடலான 2.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலின் டார்க் டெலிவிரி மிதமாக இருந்தாலும், ஓட்டுனருக்கு மிகுந்த உற்சாகத்தை வழங்கும். 1,200 ஆர்பிஎம் முதல் 3,500 ஆர்பிஎம் வரையில் சிறப்பான செயல்திறனை வெளிக் கொணர்கிறது.

மைலேஜ் விபரம்

மைலேஜ் விபரம்

எமது டெஸ்ட் டிரைவின்போது புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் சராசரியாக லிட்டருக்கு 10 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 11 கிமீ மைலேஜையும் வழங்கியது. இது ஓட்டுதல் முறையை பொறுத்து மாறுபடலாம்.

ஓட்டுதல் தரம்

ஓட்டுதல் தரம்

பழைய இன்னோவாவுடன் ஒப்பிடும்போது ஓட்டுதல் தரம் மேம்பட்டிருக்கிறது. அலுங்கல், குலுங்கல் மேலும் குறைந்திருப்பதுடன், சிறப்பான ஓட்டுதல் தரத்தை வழங்குவதால், நீண்ட தூர பயணங்கள், ஓட்டுனருக்கு உற்சாகத்தையும், சுகமான ஓட்டுதல் அனுபவத்தையும் வழங்கும். குறைவான வேகத்தில் ஸ்டீயரிங் சற்று கடினமாக உணரப்பட்டாலும், அதிவேகத்தில் சிறப்பாகவே இருக்கிறது.

இரண்டு டிரைவிங் ஆப்ஷன்கள்

இரண்டு டிரைவிங் ஆப்ஷன்கள்

இரண்டு டீசல் எஞ்சின் மாடல்களிலும் Eco மற்றும் Power என்ற இருவிதமான டிரைவிங் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இதில், Eco மோடில் வைத்து ஓட்டும்போது, செயல்திறன் குறைவாகவும், அதிக மைலேஜ் தரும் வகையில் எஞ்சின் இயங்குகிறது. பவர் மோடில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகிறது.

கையாளுமை

கையாளுமை

வலுவான சேஸீ அமைப்பு, சிறந்த சஸ்பென்ஷன் அமைப்பு கொண்டதாக வந்துள்ளது. நேராக செல்கையில் நிலைத்தன்மையுடன் சென்றாலும், வளைவுகளில் பழைய இன்னோவா அளவுக்கு நம்பிக்கையான உணர்வை தரவில்லை. ஆக்சிலரேட்டரை குறைத்தோ அல்லது பிரேக்கில் காலை வைத்துக் கொண்டால்தான் திருப்பங்களை சற்று நிம்மதியாக கடக்க முடிகிறது. வளைவுகளில் பாடி ரோல் தெரிகிறது.

இருக்கையை நகர்த்தும் வசதி

இருக்கையை நகர்த்தும் வசதி

முன் வரிசையிலுள்ள பயணி இருக்கையில் யாரும் அமரவில்லையெனில், அதனை பின் வரிசை பயணி எளிதாக முன்னும் பின்னும் நகர்த்த முடியும். இது மிகச்சிறப்பான வசதியாக கூற முடியும். இதனால், இரண்டாவது வரிசையில் அமர்ந்திருப்பவர் கால் வைப்பதற்கான இடவசதியை எளிதாக அதிகரித்துக் கொள்ள முடியும்.

கேபினில் சப்த அளவு

கேபினில் சப்த அளவு

முந்தைய மாடலைவிட புதிய மாடலில் கேபின் நாய்ஸ் வெகுவாக குறைந்திருக்கிறது. குறிப்பாக, நெடுஞ்சாலைகளில் சீரான வேகத்தில் செல்லும்போது அதிர்வுகள் குறைவாக தெரிகிறது. இரண்டில் ஆட்டோமேட்டிக் மாடல் அதிர்வுகள் குறைவு. அதாவது, சமரசம் செய்துக் கொள்ளக்கூடிய அளவில்தான் சப்தமும், அதிர்வுகள் உள்ளன.

முக்கிய வசதிகள்

முக்கிய வசதிகள்

டாப் வேரியண்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், 17 இன்ச் அலாய் வீல்கள், 6 ஸ்பீக்கர்களுடன் கூடிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், 7 ஏர்பேக்குகள் உள்ளிட்டவை கூடுதல் வசதிகளாக இருக்கின்றன.

சாதக அம்சங்கள்

சாதக அம்சங்கள்

  1. பெரிய அளவிலான ஹெட்ரெஸ்ட்டுகள்
  2. எளிதாக இயக்குவதற்கு ஏதுவான கன்ட்ரோல் பட்டன்கள்
  3. ஓட்டுவதற்கு உற்சாகத்தை தரும் ஆட்டோமேட்டிக் மாடல்
  4. அதிக வசதிகள் கொண்ட டாப் வேரியண்ட் அதிக இடவசதி
  5. டாப் வேரியண்ட்டில் 7 எஸ்ஆர்எஸ் ஏர்பேக்குகள் பிற வேரியண்ட்டுகளில் 5 எஸ்ஆர்எஸ் ஏர்பேக்குகள்
  6. தரமான மரம் மற்றும் அலுமினிய அலங்கார வேலைப்பாடுகள்
பாதக அம்சங்கள்

பாதக அம்சங்கள்

  1. மிட் வேரியண்ட்டுகளில் 16 இன்ச் வீல்கள்
  2. இரண்டாவது வரிசையில் மெல்லிய ஆர்ம் ரெஸ்ட்டுகள்
  3. பாடி ரோல் அதிகம் தெரிகிறது
மதிப்பு?

மதிப்பு?

அருமையான டிசைன், பிரிமியம் வசதிகள், தரமான பாகங்கள், சக்திவாய்ந்த டீசல் எஞ்சின்கள், நவீன தொழில்நுட்பங்கள், அதிக பாதுகாப்பு அம்சங்கள் என வழக்கம்போல் வாடிக்கையாளர்களை புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவும் நிச்சயம் வளைக்கும் என நம்பலாம். விலை சில லட்சங்கள் கூடினாலும், அது ஒரு பொருட்டாக இல்லாமல் மதிப்பு மிக்க காராகவே இருக்கும். அதாவது, டாப் வேரியண்ட் ரூ.20 லட்சம் விலையில் வந்தாலும், நிச்சயம் மதிப்பு மிக்க காராகவே இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

டிரைவ்ஸ்பார்க் கருத்து

பழைய இன்னோவா சிறப்பான மாடலாக இருந்தாலும், மாற்றம் இல்லையேல் புதுமையும், புதிதும் இல்லை. அந்த வகையில், புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி மார்க்கெட்டில் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்ட மாடலாக வந்திருக்கிறது. இந்த புதிய மாடல் நிச்சயம் ஒரு ரவுண்டு வரும் என்று கூறுவதற்கான சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.

ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
First Drive: 2016 Toyota Innova Crysta — The INNOVA-tion Continues.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark