புதிய டொயோட்டா யாரிஸ் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்திய மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் யாரிஸ் செடான் காருடன் டொயோட்டா நிறுவனம் களமிறங்க உள்ளது. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சியாஸ் போன்ற ஜாம்பவான்கள் உள்ள இந்த மார்க்கெட்டில் போ

By Saravana Rajan

இந்திய மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் யாரிஸ் செடான் காருடன் டொயோட்டா நிறுவனம் களமிறங்க உள்ளது. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சியாஸ் போன்ற ஜாம்பவான்கள் உள்ள இந்த மார்க்கெட்டில் போட்டியாளர்களை எதிர்கொள்ளும் விதத்தில் யாரிஸ் காரை டொயோட்டா உருவாக்கி இருக்கிறதா? என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

ஐரோப்பா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் டொயோட்டா யாரிஸ் கார் விற்பனையில் இருக்கிறது. உலக அளவில் டீசல் கார்களுக்கான மவுசு குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் இந்த கார் பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

டொயோட்டா நிறுவனத்தின் புதிய டிசைன் கொள்கையின்படி, முகப்பு பம்பரில் பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகளுக்கு இடையே டொயாோட்டா பிராண்டு லட்சினை பொருத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல எல்லோரையும் சட்டென கவரும் விதத்தில் இல்லை. எனினும், பெரிய குறையாகவும் எடுத்துக் கொள்ள முடியாது.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

டொயோட்டா யாரிஸ் காரில் முகப்பில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகளுடன் இணைந்தாற்போல், எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பானட்டில் மிகச் சிறப்பாக இயைந்து போயிருப்பதுடன், பக்கவாட்டிலும் நீள்வது காரின் வசீகரத்தை கூட்டுகிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

டொயோட்டா யாரிஸ் காரின் பக்கவாட்டில் காரின் முறுக்கலான பாடி லைன்கள் வசீகரத்தை கூட்டுகின்றன. ஆனால், கார் பிரம்மாண்டமாக தெரிந்தாலும், 15 அங்குல அலாய் சக்கரங்கள், காரின் பிரம்மாண்டத்திற்கு வலு சேர்க்கவில்லை. அளவு சிறியதாக தெரிவது ஏமாற்றம்.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

முகப்பு, பக்கவாட்டை விட பின்புற டிசைன் சிறப்பாக இருக்கிறது. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. பம்பர் அமைப்பும் வலிமையாக இருப்பது காரின் அழகுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது.

இன்டீரியர்:

இன்டீரியர்:

டொயோட்டா யாரிஸ் காரில் மிக முக்கிய அம்சமே, காருக்குள் ஏறியதுமே சற்று விசாலமான உணர்வை தருகிறது. அதேபோன்று, வடிவமைப்பும் மிக நேர்த்தியாக அமைந்துள்ளது.

இரட்டை வண்ண டேஷ்போர்டு அமைப்பு கவர்கிறது. சென்டர் கன்சோலின் இருபுறத்திலும் வலிமையான சில்வர் தகடுகள் பதிக்கப்பட்டு இருப்பது அழகு சேர்க்கிறது. சென்டர் கன்சோலில் இருக்கும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் பட்டன்கள் மெல்லிய விளக்குகள் மூலமாக எளிதாக இயக்கும் வசதியை அளிக்கிறது. மூன்று ஸ்போக்ஸ் கொண்ட ஸ்டீயரிங் வீல், அதிலேயே ஆடியோ கன்ட்ரோல் சுவிட்டுகளும் முக்கிய அம்சங்கள்.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்:

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்:

இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்று இருக்கிறது. இந்த சாதனத்தில் கை அசைவுகள் மூலமாக இயக்கும் வசதியும் இருக்கிறது. பாடல்களை மாற்றுவது, வால்யூமை அதிகரிப்பது, ரேடியோ அலைவரிசை மாற்றுவது உள்ளிட்டவற்றை கை அசைவு மூலமாக செய்ய முடியும். ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் வசதி இல்லை என்பது மற்றொரு குறையாக இருக்கிறது.

கியர்பாக்ஸ் தேர்வுகள்:

கியர்பாக்ஸ் தேர்வுகள்:

மேனுவல் மாடலில் கியர் லிவர் உயர்தர லெதர் உறையுடன் இருப்பது பிடித்து ஓட்டுவதற்கு சிறப்பாக இருக்கிறது. சிவிடி கியர்பாக்ஸ் மாடலிலும் கியர் லிவரில் உயர்த லெதர் உறை, பளபளப்பான சில்வர் தகடு பதிப்புடன் கவர்ச்சியாகவும், பிரிமியம் உணர்வையும் அளிக்கிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த காரின் 3 ஸ்போக்ஸ் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்டீயரிங் வீலில் கருப்பு வண்ண லெதர் உறை கொடுக்கப்பட்டு இருப்பது, கைகளுக்கு போதிய பிடிமானத்தையும், சிறந்த உணர்வையும் தருகிறது. ஆட்டோமேட்டிக் மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதியும் ஸ்டீயரிங் வீலில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்:

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்:

இந்த காரில் அனலாக் மற்றும் டிஜிஸ்ட்டல் திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. டிஜிட்டல் திரையில் நிகழ்நேர மைலேஜ், கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர், ட்ரிப் மீட்டர் மற்றும் வண்டி ஓடிய தூரம் குறித்த தகவல்களை பெறும் வசதியை அளிக்கிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, இடவசதியை கூறலாம். குறிப்பாக, பின் இருக்கை சவுகரியமான உணர்வை அளிக்கிறது. தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் கிடைப்பதால், கால் வலி ஏற்படுவது குறையும். கூரையின் மேற்புறத்தில் பின் இருக்கை பயணிகளுக்கான ரியர் ஏசி வென்ட்டுகள் இடம்பெற்றிருப்பது மற்றொரு சிறப்பு.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

புதிய டொயோட்டா யாரிஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. வேரியபிள் வால்வு டைமிங் இன்டெலிஜென்ஸ்[VVT-i] தொழில்நுட்ப வசதியை பெற்றிருக்கும் இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் தேர்வு செய்யலாம்.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

சாதாரண விவிடி-ஐ தொழில்நுட்பத்தில் இன்டேக் வால்வுகள் திறக்கும் நேரம் மட்டுமே மாறுபடும். டியூவல் விவிடி-ஐ கொண்ட இந்த எஞ்சினில் காற்று, எரிபொருளை எஞ்சின் எரியூட்டும் அறைக்கு உள்ளே அனுப்பும் இன்டேக் வால்வு மற்றும் கழிவை வெளியேற்றும் எக்சாஸ்ட் வால்வுகள் என இரண்டுமே மாறுபடும் வால்வு திறப்பு நேர தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது. இதன்முலமாக, எஞ்சினின் செயல்திறன், மைலேஜ் அதிகரிப்பதோடு, புகை வெளியேற்ற அளவு வெகுவாக குறையும்.புதிய டொயோட்டா யாரிஸ் கார் எஞ்சினின் செயல்திறன் 100 கிமீ வேகம் வரை எதிர்பார்த்த அளவு சிறப்பாக இல்லை. இந்த எஞ்சின் 4,000 முதல் 6,000 ஆர்பிஎம்.,மில் மட்டுமே எதிர்பார்க்கும் அளவுக்கு செயல்திறனை காட்டுகிறது. குறைவான ரேஞ்சில் எஞ்சின் செயல்திறன் சிறப்பாக இல்லாததால், ஓவர்டேக் செய்யும்போது மிக கவனமாக இருக்க வேண்டி உள்ளது.

கியரை குறைத்து சரியான நேரத்தில் திட்டமிட்டு கடக்கும் நிலை உள்ளது. இந்த காரின் செயல்திறன் சுமாராக இருந்தாலும், எஞ்சின் அதிர்வுகள் மற்றும் சப்தம் காருக்குள் குறைவாக இருப்பது சற்று ஆறுதல். சிறப்பான தடுப்பு அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த காரின் மேனுவல் கியர்பாக்ஸ் மிக மென்மையாகவும், குறுகிய நேரத்தில் கியரை மாற்றும் விதத்தில் கியர் ரேஷியோவை பெற்றிருக்கிறது. மறுபுறத்தில் சிவிடி கியர்பாக்ஸ் மிகச் சிறந்த ஓட்டுதல் அனுபவத்தை வங்குகிறது. சிவிடி கியர்பாக்ஸ் எப்போதுமே செயல்திறனில் சற்று மந்தமான உணர்வை அளிக்கும். அவர்களுக்காகவே, இந்த காரில் பேடில் ஷிஃப்ட் வசதி D1- D7 வரையில் 7 விதமான கியர் ஆப்ஷன்களுடன் இருப்பதால், மேனுவல் மோடில் வைத்து காரை இயக்கலாம்.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த காரின் ஸ்டீயரிங் வீல் மிக துல்லியமாகவும், இலகுவாகவும் இருக்கிறது. இந்த காரில் முக்கிய அம்சமாக சிறப்பான சஸ்பென்ஷனை கூறலாம். அனைத்து சாலைகளிலும் சொகுசான பயண அனுபவத்தை வழங்குகிறது. நெடுஞ்சாலை பயணத்தில் கப்பலில் செல்வது போன்று மிதந்து செல்கிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இருக்கிறது. இந்த பிரேக்குகள் சிறப்பான நிறுத்துதல் அனுபவத்தை வழங்குவதால், ஓட்டுனருக்கு நம்பிக்கையான உணர்வை தருகிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் கார் 4 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணங்களில் கிடைக்கும். இந்த காரில் சூப்பர் ஒயிட், பியர்ல் ஒயிட், வைல்டுஃபயர் ரெட், ஃபான்டம் பிரவுன் மற்றும் கிரே ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த காரில் 42 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 17.1 கிமீ மைலேஜையும், சிவிடி மாடல் லிட்டருக்கு 17.8 கிமீ மைலேஜையும் தரும் என அராய் சான்றளித்துள்ளது.

வேரியண்ட் மேனுவல் சிவிடி கியர்பாக்ஸ்
ஜே ₹ 8,75,000 ₹ 9,95,000
ஜி ₹ 10,56,000 ₹ 11,76,000
வி ₹ 11,70,000 ₹ 12,90,000
விஎக்ஸ் ₹ 12,85,000 ₹ 14,07,000

Safety & Key Features

புதிய டொயோட்டா காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் 7 ஏர்பேக்குகள் இடம்பெற்றுள்ளன. இந்த ரகத்தில் முதல்முறையாக பேஸ் மாடலிலேயே 7 ஏர்பேக்குகளை வழங்குகிறது.

இதர முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்:

  • முன்புறம், பக்கவாட்டில், ஓட்டுனர் கால்களுக்கு பாதுகாப்பு தருவதற்கு 7 ஏர்பேக்குகள்
  • அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள்**
  • காரை நிலைத்தன்மையுடன் செலுத்தும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்
  • விபத்தின்போது கார் கதவுகள் தானாக திறந்து கொள்ளும் வசதி*
  • மலைச் சாலைகளில் கார் பின்னோக்கி செல்வதை தடுக்கும் ஹில் ஸ்டார் அசிஸ்ட்***
  • முன்புறத்திலும், பின்புறத்திலும் பார்க்கிங் சென்சார்கள் *
  • ரிவர்ஸ் கேமரா **
  • நெடுஞ்சாலைகளில் ஆக்சிலரேட்டர் கொடுக்காமலேயே கார் செல்வதற்கான க்ரூஸ் கன்ட்ரோல்**
  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் **
  • பிரேக் அசிஸ்ட், இபிடி நுட்பத்துடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்
  • *G, **V, ***VX வேரியணட்டுகளில் மட்டும் இந்த வசதிகள் கிடைக்கும்

    இதர முக்கிய அம்சங்கள்:

    • 60:40 விகிதத்தில் மடக்கும் வசதியை அளிக்கும் பின் இருக்கைகள்
    • 8 விதமான நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை
    • கை அசைவு மூலமாக கட்டுப்படுத்தும் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம்
    • ரூஃப் ஏசி வென்ட்டுகள்
    • ஆம்பியன்ட் லைட்டுகள்
    • இதுதவிர, ஆசிய என்சிஏபி அமைப்பின் க்ராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது..

      மிட்சைஸ் செடான் கார்களின் ஒப்பீட்டு தகவல் அட்டவணை

      பெட்ரோல் (மேனுவல்) சிசி திறன் பிஎச்பி/என்எம் மைலேஜ் (கிமீ/லி)
      டொயோட்டா யாரிஸ் 1496சிசி 106/140 17.1
      ஹோண்டா சிட்டி 1497சிசி 117/145 17.4
      ஹூண்டாய் வெர்னா* 1396சிசி 99/132 17.4
      மாருதி சியாஸ் 1373சிசி 91/130 20.73
      பெட்ரோல் (ஆட்டோமேட்டிக்) சிசி பிஎச்பி/என்எம் மைலேஜ் (கிமீ/லி)
      டொயோட்டா யாரிஸ் 1496சிசி 106/140 17.8
      ஹோண்டா சிட்டி 1497cc 117/145 18
      ஹூண்டாய் வெர்னா 1591cc 121/151 17.1
      மாருதி சியாஸ் 1373cc 91/130 19.12

      *Tஇதில், ஹூண்டாய் வெர்னா கார் 1.4 லிட்டர் மேனுவல் பெட்ரோல் மாடல் தவிர்த்து, 1.6 லிட்டர் மேனுவல் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. .

      புக்கிங் மற்றும் விற்பனைக்கு வரும் விபரம்

      Theடொயோட்டா யாரிஸ் காருக்கு ரூ.50,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யப்படுகிறது. அடுத்த மாதம் 18ந் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

      ஜோபோ குருவில்லா கருத்து...

      ஜோபோ குருவில்லா கருத்து...

      போட்டியாளர்களை விஞ்சும் அளவுக்கு டிசைன் இல்லை. அதேபோன்று, போட்டி மாடல்கள் டீசலில் விற்பனைக்கு கிடைக்கும் நிலையில் பெட்ரோல் மாடலில் மட்டுமே வருவது குறையாக இருக்கிறது. அதேநேரத்தில், அதிக பாதுகாப்பு வசதிகள், சவாலான விலை போன்றவை இந்த காருக்கு வரவேற்பை பெற்றுத் தரலாம்.

      மாடல் மேனுவல் (பெட்ரோல்) ஆட்டோமேட்டிக் (பெட்ரோல்)
      டொயோட்டா யாரிஸ் ₹ 8,75,000 ₹ 9,95,000 (சிவிடி)
      ஹோண்டா சிட்டி ₹ 8,91,000 ₹ 9,95,000 (சிவிடி)
      ஹூண்டாய் வெர்னா ₹ 7,80,000 ₹ 10,56,000 (ஆட்டோமேட்டிக்)
      மாருதி சியாஸ் ₹ 8,04,000 ₹ 9,64,000 (ஆட்டோமேட்டிக்)

      ₹ எக்ஸ்ஷோரூம் விலை.

Most Read Articles
English summary
We drive Toyota's first C-segment (mid-size sedan) offering for India — the Yaris. Does the Yaris tempt buyers away from the Honda City, Hyundai Verna and the Maruti Ciaz? Is it a match or an over-engineered car from Toyota? Let's find out.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X