டாடா ஹெக்ஸா Vs மஹிந்திரா எக்ஸ்யூவி 500... எஸ்யூவி மாடலில் எது ஹீரோ?

By Meena

ஸ்போர்ட் யுடிலிட்டி வெஹிக்கிள் எனப்படும் எஸ்யூவி மாடல்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்ட கார்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப காம்பேக்டாகவும், எம்யூவி அம்சங்களுடனும் சந்தைக்கு வந்து சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றன.

எந்தவிதமான மாறுதல்களுக்கும் உட்படுத்தாமல் பக்கா எஸ்யூவி மாடல்களும் மார்க்கெட்டில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. அத்தகைய மாடல்களில் புதிதாகக் களமிறங்கவுள்ள டாடா ஹெக்ஸாவுக்கும், மஹிந்திரா எக்ஸ்யூவி 500-க்கும் இடையேயதான் நேரடிப் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. அந்த இரு மாடல்களுக்கும் இடையேயான சிறிய ஒப்பீடைப் பார்க்கலாம்....

கார் ஒப்பீடு

டிசைனைப் பொருத்தவரை ஹெக்ஸாவில் நேர்த்தியான வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்யூவி மாடலைப் போன்று வெளிப்புறத் தோற்றம் உள்ளது. அதேவேளையில் எம்யூவி ரகத்தில் உள்ள அம்சங்கள் ஹெக்ஸாவிலும் இருப்பது கூடுதல் சிறப்பு.

டாடா ஏரியாவுடன் ஒப்பிடும்போது முகப்பு விளக்குகள் புதுமையான வடிவமைப்பில் பம்பர் அருகே கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் உள்ள டெய்ல் லேம்ப்கள் பக்கவாட்டில் மாடர்னாக அமைந்துள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500-ஐ எடுத்துக் கொண்டால், அதன் வடிவமைப்பு சீட்டா மாடலைப் போன்றதொரு தோற்றத்தைக் கொடுக்கும். பக்கா எஸ்யூவி மாடல் டிசைனாக இருப்பது சிறப்பு. வீல் ஆர்ச்கள் தடிமனாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

உள்புறத்தைப் பார்க்கும்போது ஹெக்ஸாவில் ப்ரீமியம் லுக் கிடைக்கிறது. இருக்கைகள் மற்றும் டேஷ் போர்டு ஆகியவை லெதர் ஃபினி்ஷ் கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்தவுடன் ஈர்க்கும் வகையிலான நேர்த்தியான இண்டீரியர் டிசைன் ஹெக்ஸாவில் உள்ளது.

எக்ஸ்யூவி 500-இன் உள்புறமானது இரண்டு டோன் வடிவமைப்பாக உள்ளது. அதாவது கருப்பு மற்றும் க்ரே ஆகிய கலர்களில் இண்டீரியர் டிசைன் செய்யப்பட்டுள்ளது. கேபின் அதிக இடவசதியுடன் இருப்பது வண்டியின் ஹைலைட்களில் ஒன்று.

மொத்தமாக டிசைன் அடிப்படையில் அந்த மாடல்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டுமென்றால், இரண்டுமே 10-க்கு 8 மார்க் பெறுகின்றன.

எஞ்சினைப் பொருத்தவரை ஹெக்ஸாவில் 2.2 லிட்டர் வேரிகோர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 154 பிஎச்பி மற்றும் 330 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட எஞ்சின் இது. 6 கியர்கள் உள்ளன. ஆட்டோமேடிக் கியர் வசதியும் உண்டு.

அதே எக்ஸ்யூவி-500 இல் 2.2 லிட்டர் எம்ஹாக் எஞ்சின் உள்ளது. 140 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றும் ஆற்றல் அதில் உள்ளது. மொத்தம் 6 கியர்கள். ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன் உள்ளது.

எஞ்சின் செயல்பாட்டில் ஹெக்ஸா 8 மதிப்பெண்களும், எக்யூவி 500 - 7.5 மதிப்பெண்களும் பெறுகின்றன.

சிறப்பம்சங்களை எடுத்துக் கொண்டால், ஜாகுவார் லேண்ட் ரோவரில் இருப்பதைப் போன்ற டெரெய்ன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் ஹெக்ஸாவிலும் உள்ளது. அதாவது சரிவான பகுதிகளில் பயணம் மேற்கொண்டாலும், அதற்கு தகுந்தவாறு வாகனம் இயங்கும் வசதி.

இதைத் தவிர, 6 ஏர் பேக்-கள், பார்க்கிங் கேமரா, வேகத்துக்கு தகுந்தவாறு கதவுகள் தானாக லாக் ஆகும் வசதி உள்பட பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.

எக்ஸ்யூவி 500-ஐப் பொருத்தவரை, மலைச் சரிவில் பயணிப்பதற்கான கண்ட்ரோல் சிஸ்டம், 6 ஏர் பேக்-கள் ரிவர்ஸ் கியர் கேமரா உள்பட பல்வேறு சிறப்புகள் உள்ளன. சிறப்பம்சங்களில் இரு மாடல்களும் 8 மதிப்பெண்கள் பெறுகின்றன.

விலையை எடுத்துக் கொண்டால் ஹெக்ஸா ரூ.11 லட்சம் - ரூ.16 லட்சம், எக்ஸ்யூவி 500 ரூ.12.23 லட்சம் - 17.31 லட்சமாக உள்ளது (தில்லி எக்ஸ் ஷோ ரூம் விலை).

மொத்தத்தில் எஸ்யூவி மாடலில் எம்யூவி அம்சங்களை விரும்புவர்களுக்கு டாடா ஹெக்ஸா ஒரு சரியான தேர்வு.

எக்ஸ்யூவி 500 வடிவமைப்பில் இருந்து அனைத்து அம்சங்களிலும் பக்கா எஸ்யூவி மாடலாகவே உள்ளது. எனவே அதுவும் வாடிக்கையாளர்களின் மனங்கவர்ந்த மாடல் என்பதில் சந்தேகமில்லை.

Most Read Articles
English summary
True Blue SUV — Comparing The Tata Hexa vs Mahindra XUV500.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X