ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போட்டியாளர்... ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி ரிவியூ!

இந்தியர்களான நமக்கு எஸ்யூவி கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள எஸ்யூவி கார்கள் இதற்கு சாட்சியாக உள்ளன. இந்திய சந்தையில் மைக்ரோ எஸ்யூவிக்கள் முதல் பெரிய ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்கள் வரை அனைத்து வகையான எஸ்யூவி கார்களும் கிடைக்கின்றன. பிரீமியம் எஸ்யூவிக்கள் கூட இங்கே கிடைக்கிறது. எனினும் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள எஸ்யூவி செக்மெண்ட் என்றால், நிச்சயமாக அது மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்தான். இந்த செக்மெண்ட்டில் பலத்த போட்டி காணப்படுகிறது.

இந்த சூழலில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் தனது டைகுன் எஸ்யூவி மூலமாக மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் நுழைய முடிவு செய்துள்ளது. MQB-AO-IN பிளாட்பார்ம் அடிப்படையில் இந்த எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா 2.0 திட்டத்தின் அடிப்படையில் வெளிவரும் முதல் கார் இதுதான் என்பதும் இந்த எஸ்யூவியின் முக்கியமான சிறப்பம்சமாகும். #HustleModeOn என்ற ஹேஷ்டேக் மூலமாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த எஸ்யூவியை பிரபலப்படுத்தி வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இந்த காரை பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போட்டியாளர்... ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி ரிவியூ!

டிசைன்

முதல் பார்வையிலேயே இது ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார் என்பதை நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியும். முன் பகுதியில் இரண்டு ஸ்லாட்களை கொண்ட க்ரோம் க்ரில் அமைப்பின் மைய பகுதியில், ஃபோக்ஸ்வேகன் லோகோ வீற்றுள்ளது. பிரீமியமாக இருக்க வேண்டும் என்பதற்காக காரை சுற்றிலும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நிறைய க்ரோம் வேலைப்பாடுகளை செய்துள்ளது. குறிப்பாக முன் பகுதியில் க்ரோம் வேலைப்பாடுகள் அதிகமாக காணப்படுகின்றன.

ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போட்டியாளர்... ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி ரிவியூ!

அத்துடன் பனி விளக்குகளுக்கு இடையே க்ரோம் பட்டை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. பனி விளக்குகளை சுற்றி இந்த க்ரோம் பட்டை முடிவடைகிறது. மேலும் முன் பக்க பம்பரில் கருப்பு நிறத்தில் தேன் கூடு வடிவ க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பானெட் மீது லைன்களும் வழங்கப்பட்டுள்ளது. இது காருக்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகிறது. இந்த எஸ்யூவியின் பக்கவாட்டு பகுதியிலும் அதே லைன்களை நம்மால் காண முடிகிறது. இந்த காரின் வீல் ஆர்ச்களும் கூடுதல் கவர்ச்சியை சேர்க்கின்றன. பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரை இந்த எஸ்யூவியின் வீல்கள்தான் ஒருவரின் கவனத்தை ஈர்க்கும் முதல் விஷயமாக இருக்கும். இந்த காரில் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போட்டியாளர்... ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி ரிவியூ!

பின் பகுதியை பொறுத்தவரை பம்பர் முழுமைக்கும் க்ரோம் பட்டை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் டெயில்லேம்ப்கள்தான் இந்த காரை சூப்பர் பிரீமியமாக காட்டுகின்றன. இந்த செக்மெண்ட்டில் ஃபோக்ஸ்வேகன் டைகுனை இது தனித்து தெரிய செய்கிறது. ஒட்டுமொத்தத்தில் இந்த காரின் டிசைன் அமர்க்களப்படுத்துகிறது.

ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போட்டியாளர்... ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி ரிவியூ!

இன்டீரியர்

டிசைனை போல் இந்த காரின் இன்டீரியரும் பிரீமியமாகவே உள்ளது. ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காரின் இன்டீரியரில் பயன்படுத்தப்பட்டுள்ள நிறங்கள் மற்றும் மெட்டீரியல்கள் மிகவும் பிரீமியமாக இருக்கின்றன. டேஷ்போர்டு முழுமைக்கும் வழங்கப்பட்டுள்ள சில்வர் நிற பட்டையும் இன்டீரியருக்கு கூடுதல் கவர்ச்சியை சேர்க்கிறது. டேஷ்போர்டின் மைய பகுதியில் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டேஷ்போர்டின் இரு பக்கமும் ஏசி வெண்ட்களும் வழங்கப்பட்டுள்ளன. டச் ஸ்க்ரீனுக்கு அப்படியே கீழாக சென்ட்ரல் ஏசி வெண்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரில் ஃபோக்ஸ்வேகன் ப்ளே உள்பட பல்வேறு வசதிகளுடன் 10 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதியும் இடம்பெற்றுள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போட்டியாளர்... ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி ரிவியூ!

இந்த காரின் டாப் வேரியண்ட்டில் 8 இன்ச் டிஎஃப்டி ஸ்க்ரீன் உடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. வேகம், சராசரி வேகம், சராசரி எரிபொருள் சிக்கனம், ஓடோமீட்டர், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் பயணம் செய்யலாம் என்பது உள்பட பல்வேறு தகவல்களை இது வழங்குகிறது.

ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போட்டியாளர்... ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி ரிவியூ!

இந்த காரின் ஸ்டியரிங் வீல் பயன்படுத்துவதற்கு நன்றாக உள்ளது. இதில், இன்போடெயின்மெண்ட் ஸ்க்ரீனை கட்டுப்படுத்துவதற்கான கண்ட்ரோல்களும், க்ரூஸ் கண்ட்ரோல் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ட்யூயல்-டோன் இருக்கைகள் உடன் ஃபோக்ஸ்வேகன் டைகுன் வருகிறது. இதன் முன் இருக்கைகளில் வெண்டிலேட்டட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதியையும் பெற்றிருப்பது இந்த எஸ்யூவியின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். அத்துடன் பின் இருக்கை பயணிகளுக்கு ஏசி வெண்ட்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போட்டியாளர்... ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி ரிவியூ!

சௌகரியம், நடைமுறை பயன்பாடு மற்றும் பூட் ஸ்பேஸ்

பொதுவாக ஃபோக்ஸ்வேகன் கார்கள் பயணிகளுக்கு மிகவும் சௌகரியமாக இருக்கும். டைகுன் எஸ்யூவியும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இந்த காரின் இருக்கைகள் ஸ்போர்ட்டியாக காட்சியளிக்கவில்லை. அதற்கு பதிலாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இருக்கைகளை சௌகரியமாகவும், சொகுசாகவும் வழங்கியுள்ளது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் முன் இருக்கைகளில் வென்டிலேட்டட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

முன் இருக்கைகளில் டிரைவர் மற்றும் பயணிக்கு, இடுப்பு மற்றும் தொடைக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. பின் இருக்கைகளில் இதை விட அதிகமான சௌகரியம் கிடைக்கிறது. லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் மிகவும் சிறப்பாக உள்ளன.

ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போட்டியாளர்... ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி ரிவியூ!

பின் இருக்கை பயணிகளுக்கு மடித்து வைத்து கொள்ள கூடிய சென்டர் ஆர்ம்ரெஸ்ட் கப் ஹோல்டர்கள் உடன் வழங்கப்பட்டுள்ளது. பின் இருக்கை பயணிகளுக்கு என பிரத்யேகமாக ஏசி வெண்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏசி வெண்ட்களுக்கு கீழே, செல்போன்களை சார்ஜ் செய்து கொள்வதற்கு வசதியாக 2 டைப்-சி சார்ஜிங் போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போட்டியாளர்... ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி ரிவியூ!

ஒட்டுமொத்தத்தில் இந்த காரின் கேபின் விசாலமாக உள்ளது. அத்துடன் எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதியும் வழங்கப்பட்டுள்ளதால், கேபின் காற்றோட்டமாகவும் இருக்கிறது.

Dimensions Volkswagen Taigun
Length 4,221mm
Width 1,760mm
Height 1,612mm
Wheelbase 2,651mm
Boot Space 385-litres
Ground Clearance 205mm
ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போட்டியாளர்... ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி ரிவியூ!

இன்ஜின் செயல்திறன் மற்றும் ஓட்டுதல் அனுபவம்

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காரில் 2 டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் ஒன்றாகும். மற்றொன்று 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் ஆகும். நாங்கள் ஓட்டியது 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல் ஆகும். இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 1.5 லிட்டர் இன்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும். மறுபக்கம் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் தேர்வுகளுடன் இந்த இன்ஜின் கிடைக்கும்.

சரி, இனி 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் எங்களுக்கு வழங்கிய அனுபவங்களுக்கு நேராக செல்லலாம். ஆரம்பத்தில் பவர் டெலிவரி சீராக உள்ளது. ஆனால் மிட்-ரேஞ்ச் மற்றும் ஹை-ரேஞ்ஜில் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அதேபோல் கியர் பாக்ஸூம் மிக சிறப்பாக உள்ளது. கியர்களை மாற்றுவது மிக வேகமாக நடைபெறுகிறது.

ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போட்டியாளர்... ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி ரிவியூ!

S மற்றும் D மோடுகள் உடன் கியர்பாக்ஸ் வருகிறது. D மோடில் இந்த கார் கியர்களை கணிசமான வேகத்தில் மாற்றுகிறது. இந்த மோடில் இன்ஜின் அதிகமாக ரெவ் ஆவதில்லை என்பதால், எரிபொருள் நுகர்வு குறைவாக இருக்கிறது. ஆனால் இந்த கார் பிரேத்யேகமான டிரைவிங் மோடுகள் எதையும் பெறவில்லை.

அதே சமயம் இது எஸ்யூவி என்பதால், கொஞ்சம் பாடி ரோல் இருக்கிறது. ஆனால் இந்த செக்மெண்ட்டில் உள்ள மற்ற கார்கள் அளவிற்கு பாடி ரோல் இல்லை. அதே நேரத்தில் இந்த எஸ்யூவி, குண்டும், குழியுமான சாலைகளை மிக எளிதாக எதிர்கொள்கிறது. பிரேக்கிங்கை பொறுத்தவரை முன் பகுதியில் டிஸ்க் பிரேக்குகளும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரின் என்விஹெச் லெவல்கள் சிறப்பாக உள்ளன. வெளிப்புற சத்தம் கொஞ்சம் மட்டுமே கேபினுக்கு உள்ளே கேட்கிறது. ஆனால் 4,200 ஆர்பிஎம்மை கடந்த பிறகு, இன்ஜின் சத்தத்தை கேபினில் கேட்க முடிகிறது. மற்றபடி இந்த கார் ஸ்மூத் ஆகவும், அமைதியாகவும் பயணிக்கிறது.

ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போட்டியாளர்... ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி ரிவியூ!

ஆனால் இந்த கார் எங்களிடம் சிறிது நேரம் மட்டுமே இருந்த காரணத்தால், எங்களால் மைலேஜை முழுமையாக சோதிக்க முடியவில்லை. ஆனால் நாங்கள் நகர பகுதிகளிலும், நெடுஞ்சாலைகளிலும் இந்த காரை ஓட்டி பார்த்தோம். அப்போது எம்ஐடி ஸ்க்ரீன், லிட்டருக்கு 8.4 முதல் 10.2 கிலோ மீட்டர் வரையிலான நிகழ் நேர எரிபொருள் சிக்கனத்தை காட்டியது. ஆனால் இந்த காரை நாங்கள் விரைவில் முழுமையாக டெஸ்ட் டிரைவ் செய்வோம். அப்போது நடைமுறை பயன்பாட்டில் இந்த கார் எவ்வளவு மைலேஜ் வழங்குகிறது? என்பதை உங்களுக்கு சரியாக தெரிவிக்கிறோம்.

ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போட்டியாளர்... ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி ரிவியூ!

பாதுகாப்பு மற்றும் முக்கியமான வசதிகள்

பொதுவாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பாதுகாப்பு வசதிகளை அதிகமாக வழங்கும். ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே டைகுன் காரிலும் பாதுகாப்பு வசதிகள் நிரம்பியுள்ளன. பாதுகாப்பு வசதிகளுடன், உங்கள் சௌகரியத்திற்கு தேவையான மற்ற முக்கியமான வசதிகளையும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் பெற்றுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் பாதுகாப்பு வசதிகள்

  • எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்
  • பார்க் டிஸ்டன்ஸ் கண்ட்ரோல் & ரியர் வியூ கேமரா
  • ஹில் ஹோல்டு கண்ட்ரோல்
  • 6 ஏர்பேக்குகள் (டாப் மாடலான ஜிடி வேரியண்ட்டில்)
  • இபிடி உடன் ஏபிஎஸ்
  • ஃபோக்ஸ்வேகன் டைகுன் முக்கியமான வசதிகள்

    • ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ
    • எலெக்ட்ரிக் சன்ரூஃப்
    • எல்இடி லைட்கள்
    • ரெட் ஆம்பியண்ட் லைட்டிங்
    • ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போட்டியாளர்... ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி ரிவியூ!

      போட்டியாளர்கள்

      இந்திய சந்தையில் மிகவும் சவால் நிறைந்த ஒரு செக்மெண்ட்டில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் நுழைகிறது. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய கார்களுடன் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போட்டியிடும்.

      Specifications Volkswagen Taigun Skoda Kushaq Hyundai Creta Kia Seltos
      Engine 1.0-litre Turbo Petrol / 1.5-litre Turbo Petrol 1.0-litre Turbo Petrol / 1.5-litre Turbo Petrol 1.5-litre Petrol / 1.5-litre Turbo-Diesel / 1.4-litre Turbo-Petrol 1.5-litre Petrol / 1.5-litre Turbo-Diesel / 1.4-litre Turbo Petrol
      Power 114bhp / 147.5bhp 114bhp / 147.5bhp 113.4bhp / 113.4bhp / 140bhp 113.4bhp / 113.4bhp / 140bhp
      Torque 175Nm / 250Nm 175Nm / 250Nm 144Nm / 250Nm / 242.2Nm 144Nm / 250Nm / 242.2Nm
      Transmission 6-Speed Manual / 6-Speed Automatic / 7-Speed DSG 6-Speed Manual / 6-Speed Automatic / 7-Speed DSG 6-Speed Manual / iVT / 6-Speed Automatic / 7-Speed DCT 6-Speed Manual / CVT / 6-Speed iMT / 6-Speed Automatic / 7-Speed DCT
      Prices To Be Announced Rs 10.49 lakh to Rs 17.59 lakh Rs 9.99 lakh to Rs 17.70 lakh Rs 9.95 lakh to Rs 17.65
      ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போட்டியாளர்... ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி ரிவியூ!

      டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

      இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் வரும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி டைகுன்தான். MQB-AO-IN பிளாட்பார்ம் அடிப்படையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மற்ற கார்களிலும் இந்த பிளாட்பார்ம் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

      இந்த எஸ்யூவி காரின் டிசைன் சிறப்பாக இருப்பதுடன், நிறைய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து அம்சங்களிலும் இந்த எஸ்யூவி பிரீமியமாக உள்ளது. அதேபோல் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் சிறப்பாக உள்ளன. இப்போது அனைத்து கண்களும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மீது உள்ளன. இந்த எஸ்யூவிக்கு என்ன விலையை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நிர்ணயம் செய்யப்போகிறது? என்பதே அதற்கு காரணம். விலை எவ்வளவு? என்ற கேள்விக்கு மட்டுமே இன்னும் விடை கிடைக்கவில்லை.


Most Read Articles
English summary
Volkswagen taigun review design features engine performance driving impressions
Story first published: Monday, August 9, 2021, 9:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X